Thursday, February 16, 2012

Primer (2004)- 2

ஆரனும், அபேயும் கண்டுபுடிச்ச இந்த மெஷினுக்கு எந்தவொரு பெயரும் வைச்சதா தெரியலை. அவங்க அதை ஒரு டைம்-மெஷினாக உபயோகிப்பதற்காக, ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிய மெஷினாக அதை விரிவாக்கிக் கொள்கிறார்கள். இப்போ விரிவான அந்த மெஷினை அவர்கள் படத்தில், Box என்று குறிப்பிடுவதால் நாமளும் அப்படியே அதை குறிப்பிடப் போகிறோம்..சரி, இப்போ இந்த box எப்படி வேலை செய்கிறது?

இந்த பாக்ஸினுள் நடைபெறும் கால-ஓட்டத்திற்கு A , B என இரண்டு முனைகள் இருக்கின்றன. ABக்கிடையிலான நேர வித்தியாசம் 1 நிமிடம் என எடுத்துக்கொண்டால்
, Aயில் உள்நுழைந்து 1 நிமிட அவகாசத்துக்குப் பின் Aயிலேயே வெளிவரும் ஒரு பொருள் இரட்டையெண் அளவு நிமிடங்களையும், Aயில் உள்நுழைந்து ஒரு நிமிட அவகாசத்துக்குப் பின் Bயில் வெளிவரும் ஒரு பொருள் ஒற்றையெண் அளவு நிமிடங்களையும் கடந்திருக்கும்.

இப்போ இந்த "மேம்படுத்தப்பட்ட" பாக்ஸில், செயல்படுத்தப்படும் (activate) நேரம் A முனையாகவும், செயலிழக்கும் (deactivate) நேரம் Bமுனையாகவும் தொழிற்படுகின்றன..
முதலில், நீங்கள் பாக்ஸை ஆன் செய்து 15 நிமிடங்களில் செயல்படுத்தப்படுமாறு செப்பம் செய்ய வேண்டும் (இப்போது நேரம் 8.30 மணி என்று வைத்துக்கொள்வோம்..). 8.45ற்கு பாக்ஸ் முழுமையாக செயல் படுத்தப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு 6 மணித்தியாலம் எங்கேயாவது ஒரு ஹோட்டல் ரூமில் தங்கிவிட்டு சரியாக பி.ப 2.15 மணிக்குவந்து பாக்ஸை switch-off செய்ய வேண்டும். (சென்ற பதிவில் நாங்கள் பார்த்த side-effect கரணமாக) பாக்ஸ் முழுமையாக செயலிழக்க ஒரு 4 நிமிடங்கள் தாமதமாகும். அந்த கேப்பிற்குள் நீங்கள் பாக்ஸினுள் நுழைய வேண்டும் (இது B முனையாகும்)

அதன் பின்பு, பாக்ஸினுள் 6 மணித்தியாலங்கள் நீங்கள் செலவழிக்கும் போது, நீங்கள் Bமுனையிலிருந்து Aமுனைக்கு கொண்டு செல்லப்படுவீர்கள். அதாவது வெளியுலகில் நீங்கள் 6 மணித்தியாலம் பின்னோக்கி பயணிப்பீர்கள்!.. பாக்ஸிலிருந்து வெளியே வந்தால் நீங்கள் காணப்போவது, அதே தினத்தில் மு.ப 8.45 மணி!!
காலப்பயண முறை - விக்கிபீடியா
இந்த வகை காலப்பயணம், மற்றைய படங்களில் காட்டப்படும் காலப்பயணங்களைக் காட்டிலும் நம்பகத்தன்மையானது.. ஏனென்றால் நீங்கள் பாக்ஸை செயல்படுத்திய காலப்பகுதி மட்டுமே உங்களால் பின்னோக்கிப் பயணிக்க முடியும்.. ஸோ 2012ல் டைம் மெஷினில் ஏறி, ஜுராசிக் காலப்பகுதி வரை சென்று வரும் கட்டுக் கதையெல்லாம் இங்கு முடியாது..
ரெண்டாவது, நீங்களும், உங்களது நகலும் ஒரே நேரத்தில் உலகில் இருக்கப் போகும் காலப்பகுதி 8.45 தொடக்கம் 2.15 வரை மட்டுமே.. (நீங்கள் ஹோட்டல் ரூமில் கிடப்பீர்கள். உங்களது நகல் சுதந்திரமாக சுற்றித்திரிவார்.. இதன்மூலம் இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்வதற்கான நிகழ்தகவு ரொம்பக் குறைவு..) 2.20க்கெல்லாம் நீங்கள் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது!! உங்கள் நகல் தான் இனி நீங்கள்!

இந்த முறையோட பிரதிகூலம் என்னவென்றால், இவற்றை ஒரு நாளிற்காக ஒருதடவை மாத்திரமே உபயோகிக்கலாம். நீங்கள் காலப்பயணம் செய்து நகலாக வெளிவந்தபின் அதே நாள் மாலையில் திரும்ப அதே பாக்ஸிற்குள் புக முடியாது.. காரணம் உங்களது அசல் அதே நேரம் பாக்ஸிற்குள் உட்புகுந்திருப்பாரே!

இந்தப் படத்தோட முக்கியமான கதைக் கரு வெறும் 5 நாட்களுக்குள் நடப்பதாக காட்டப்படுவதால் இனி ஒவ்வொரு நாளிலும் என்ன நடக்கின்றது என்பதை தனித்தனியாக பார்க்கப்போகிறோம்.. அதுமட்டுமன்றி அசல், நகல் குழப்பத்தை தீர்ப்பதற்காக ஒவ்வொருவருக்கும் பக்கத்தில் 0வில் தொடங்கி எண்களை போட்டுக்கொண்டு வருவோம்..

திங்கட்கிழமை

அபே:0 தான் இந்த காலப்பயணத்தின் அடிப்படையை கண்டறிந்து கொண்டதால், அவன் தனக்கென ஒரு பாக்ஸை(Box A) உருவாக்கிக் கொள்கிறான். தன்னோட முதல் காலப்பயண முயற்சி தோல்வியடைந்தால், திரும்ப செல்வதற்காக ஒரு failsafe பாக்ஸையும்(Fail-safe Box A) உருவாக்கிகொள்கிறான்.. Fail-safe Box A திங்கட்கிழமை மு.ப 5.00ற்கும், Box A திங்கட்கிழமை மு.ப 8.45ற்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

6 மணித்தியாலம் ஹோட்டலில் தங்கிவிட்டு, பாக்ஸ் A மூலம் மீளவும் மு.ப 8.30ற்கு வரும் அபே:1, ஆரனை சந்திக்கச்செல்கிறான். ஆரன்:0 இப்போது ஒரு benchல் உட்கார்ந்துகொண்டு, NCCA Basketball-ஐ செவிப்பன்னி மூலம் கேட்டுக்கொண்டிருக்கிறான். அபே அவனுக்கு இந்த பாக்ஸினை டைம்-மெஷினாக உபயோகிப்பது பற்றி விவரித்துக் கூறுகிறான்.. (போன பதிவில் குறிப்பிட்ட பங்கசு, நிறுத்தற்கடிகார பரிசோதனை இரண்டும் இப்பொழுதுதான் இடம்பெறுகின்றன..) ஆரன்:0 ற்கு இன்னும் அபே:1 எதிர்காலத்திலிருந்துதான் வந்திருக்கிறான் என இன்னும் தெரியாது!

2.45ற்கு பாக்ஸ் வைக்கப்பட்டிருந்த storage facilityக்கு வரும் இருவரும், தூரத்திலிருந்து அபே:0 அதற்குள் சென்று பாக்ஸினுள் நுழைவதைப் பார்க்கிறன்றனர். அபே:1 ஆரன்:0இடம் அன்றைய தினம் நடந்ததைக் கூறுகிறான்... (ஆனால் Fail-safe Box A பற்றி தற்போது கூறமாட்டான்.) தான் இந்த காலப்பயணத்தை உபயோகித்து எப்படி பங்கு வியாபாரத்தில் பணம் சம்பாதித்தான் என்பதைப் பற்றியும் கூறுகிறான்.. (பார்க்க விக்கிப்பீடியா படம்)

(தொடரும்..)

10 comments:

  1. பதிவை படிக்க வரும் நண்பர்களுக்கு,
    இந்த விக்கிபீடியா படத்தின் படி நாம பாக்ஸை ஸ்விட்ச்-ஆன் செய்யுற நேரம்தான் A முனை-ங்கற மாதிரி குறிப்பிடுறாங்க.

    ஆனா நல்லா யோசிச்சு பார்த்தா,
    பாக்ஸை ஸ்விட்ச்-ஆன் செய்து, timerஐ செட் பண்ணி, பாக்ஸ் முழுமையாக செயல்படுத்தப்பட்டிருக்கும் நேரமே (கிட்டத்தட்ட 12.15) A முனையாக கொள்ளப்படும்.

    * அப்படி இல்லாவிடில் நீங்க பாக்ஸை ஆன் செய்யுற போதே, அதுக்குள்ளிருந்து உங்க நகல் எழும்பி வர்றதா ஆயிடும். அது கதைப்படி ரொம்பத் தப்பு!!

    ReplyDelete
  2. படம் பார்த்துவிட்டேன் நண்பரே..ஒன்னுமே புரியல...இன்னிக்கு இன்னும் ரெண்டு தடவைகள் பார்த்திடுவேன்..
    பதிவு ஒரு முறையே படித்தேன்..நன்றாக உள்ளது..படம் பார்த்துட்டு வந்து மேலும் இரண்டு முறை படிப்பேன்..

    ரொம்பவும் ஆராய்ந்து திரைப்படத்தை நன்கு புரிந்துக்கொண்டு ஒரு தொடரை போட தொடங்கியுள்ளீர்கள்..தங்களது வெற்றிப் பணி தொடர்ந்திட எனது வாழ்த்துக்கள்...ஆவலை ஒவ்வொரு பதிவிலும் அதிகரிக்கிறீர்கள்..விளக்கங்கள் அருமை..என் நன்றிகள்.

    ReplyDelete
  3. @ Kumaran -
    //பதிவு ஒரு முறையே படித்தேன்..நன்றாக உள்ளது..//
    நன்றி!

    //படம் பார்த்துட்டு வந்து மேலும் இரண்டு முறை படிப்பேன்//
    மிக்க நன்றி!!

    //தங்களது வெற்றிப் பணி தொடர்ந்திட எனது வாழ்த்துக்கள்...//
    அட.. ரொம்ப ரொம்ப நன்றி!!!

    //என் நன்றிகள்.//
    ?????

    ReplyDelete
  4. பதிவைப் படிக்கவில்லை. ஸ்கிப் செய்கிறேன்.

    ஏதோ விரிவாக சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    முதல் பதிவன்றே டவுன்லோட் செய்துவிட்டாலும் இன்னும் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. அவ்வ்வ்வ். இன்றாவது நேரம் கிட்டுகிறதா பார்ப்போம்.

    ReplyDelete
  5. @ ஹாலிவுட்ரசிகன் - பதிவு விதியை மதித்து ஸ்கிப் செய்தமைக்கு நன்றிகள் நண்பா! நீங்கள் படம் பார்ப்பதற்கு விரைவில் நேரம் உண்டாகட்டும்..

    ReplyDelete
  6. நானும் இப்படத்தை பார்த்திருக்கிறேன்.. செம குழப்பம்.. விளக்கமாக சீக்கிரம் எழுதுங்க :))

    ReplyDelete
  7. @ MSK / Saravana - ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்களை இந்தப் பக்கம் பார்க்குறேன்.. விளக்கத்தை சீக்கிரமாக எழுதுகிறேன்..
    ஆமா.. நீங்க ஏன் இன்னும் புதுப் பதிவு ஏதும் எழுதல??

    ReplyDelete
  8. இந்த படத்தோட பேர நிறைய தடவ கேள்வி பட்டு இருக்கேன்.. சீக்கிரமே பாக்கனும் :)

    அப்புறம் பதிவ படிக்கல.., படம் பாத்துட்டு வந்து படிக்கிறேன் :)

    ReplyDelete
  9. படம் பார்க்கும் ஆசிய கிளப்பி விட்டுடிங்க

    ReplyDelete
  10. @ பேநா மூடி - இந்த வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன். படம் பார்த்தபின்பே வந்து படியுங்கள். அதுதான் படத்தோட ஃபீலுக்கு நல்லது!

    @ என் ராஜபாட்டை ராஜா - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete

Related Posts with Thumbnails