இந்த இயக்குனர் "டெரன்ஸ் மலிக்" இருக்கிறாரே.. இவரு ஒரு பயங்கரமான ஆளு. ஒரு டாபிக்கை பற்றி நினைத்ததும் இவரது சிந்தனையில் உதிக்கும் எண்ணங்கள் அனைத்தும் சிறிதும் பிசகாமல் வெள்ளித்திரையில் விழ வேண்டுமாம்.. அப்போதுதான் அவர் திருப்தியடைவாராம். 1970கள்ல உலகத்துல உயிரங்கிகள் தோற்றம் பெற்றது பற்றி "Q"ங்கற பெயரில் ஒரு படத்தை எடுக்கலாம்னு திட்டமிட்டு வைத்திருந்தாராம்.. இந்தப்படம் அதே சாயலைக்கொண்ட, ஆனால் ஒரு சாதாரண குடும்பமொன்றைப் பற்றிய கதை..
அப்பா பெயரு ஓ'ப்ரயன்(Brad Pitt). அவருக்கும், மனைவிக்கும் மொத்தம் 3 ஆண்பிள்ளைகள். படத்தோட ஓப்பனிங் சீன்ல அம்மவுக்கு போன்கால் வருது. 19 வயதே நிரம்பிய அவரது இளையமகன் இறந்து போய் விட்டாராம். விடயத்தை கேட்டவுடன் தாய் உருக்குலைந்து போகிறாள்... இந்தத் துக்க செய்தி கட்டிட நிர்மாணவியலாளராக பணியாற்றும் அப்பாவுக்கும் சிறிது நேரத்தில் கிடைக்கப்பெறுகிறது.
இது நடந்து சில வருடங்கள் கழித்து அவர்களுடைய மூத்த மகன் ஜாக்(Sean Penn) கட்டட வடிவமைப்பாளராக இருக்கிறார். (ப்ராட் பிட்டுக்கு சீன் பென் மகனா? என்னக் கொடுமை சார்! எங்கடா போச்சு உங்க லாஜிக்லாம்?) ஒரு கட்டடத்தின் முன்னால் பச்சைப்பசேலென்றிருக்கும் மரமொன்று நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜாக்கின் மனதில் தனது இளம்பராய நினைவுகள் துளிர்க்கின்றன.
இந்த சீன்வரை எதுவுமே long-continuos shots கிடையாது. திடுக் திடுக்கென்று நகரும் காட்சிகளால் ஆர்வம் தன்னால் எமக்குள்ளும் தொற்றிக் கொள்கிறது!
இனி கிட்டத்தட்ட 20 நிமிடம் வரை விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் மட்டும்தான். பார்ப்பவர்களுக்கு... விருந்து. அனுபவிப்பவர்களுக்கோ... கவிதை!!
எல்லாம் இந்தப் பிரபஞ்சத்தினதும், உயிர்களினதும் தோற்றம் பற்றிய சீன்கள். டிஸ்கவரி சேனலில் கூட நான் இவ்வளவு அழகாக விவரித்துப் பார்த்ததில்லை.. 40 வருஷம் கழிச்சு செய்தாலும், அணுஅணுவா அனுபவிச்சுத்தான் டெரன்ஸ் மலிக் காட்சிகளை செதுக்கியிருக்கிறார்.
கோள்களின் நகர்வும், விண்கற்களும், எரிமலை வெடிப்பும், நீர்வீழ்ச்சிகளும், டைனோசர்களும்... படத்தை மட்டும் 3டி enable பண்ணி போட்டிருந்தாங்கன்னு வைச்சுக்குங்க.. தியேட்டரில் போய் பார்த்திருந்தால்... அப்படியொரு அனுபவத்தை உங்களுக்கு வேறு படங்கள் தருவது ரொம்பக் கடினம்!
யப்பா...இந்தப் படத்தில் இவ்வளவு விஷுவல் எபெக்ட்ஸ் கொட்டிக்கிடக்கிறது என்று சத்தியமாக எனக்கு படம் பார்த்த பின்பு தான் தெரிகிறது. (போய் போஸ்டரைப் பாருங்க.. ஏதோ எதார்த்தமான, சாதாரண படம் மாதிரி இருக்கு!) முன்னமே தெரிந்திருந்தால் கண்டிப்பாக என் ரேட்டிங்கில் டாப் 5ற்குள் போட்டிருப்பேன்!!
கவிதை முடிஞ்சதுக்கப்புறம் ஜாக் பிறப்பதிலிருந்து கதை ஆரம்பிக்குது.. படத்தை பொறுத்த மட்டில் வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாமாம்.
முதலாவது path of grace.. அது அவங்க அம்மா மாதிரி... அன்பா, அவரணைப்பா பார்த்துக்கிட்டு குழந்தைகளுக்கு அவங்களுக்கு விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலான ஒரு உலகைக் காட்டுறது..
ரெண்டாவது path of nature.. அது அவங்க அப்பா மாதிரி... கண்டிப்பா, அதிகாரத்தோட பார்த்துகிட்டு குழந்தைகளை சவால்கள் மிகுந்த வெளி உலகத்துக்கு தயராக்குறது.. இவருக்கு சின்ன வயசுல மியூசிக் மேலதான் ஆர்வம் இருந்திச்சாம். இருந்தாலும் தன்னோட எதிர்காலத்துக்கு ஸ்திரத்தன்மையை கொடுக்க கூடியதா இருந்ததால என்ஜினியர் ஆவுறதுக்கு முடிவெடுத்தாராம். (பாவம்.. நண்பன் படம் பார்க்கலை போல!)
ஒரு கட்டத்துல அப்பா வேலை விஷயமா வெளிநாடு போக குழந்தைகளுக்கு தடையில்லாத சுதந்திரம் கிடைக்குது. இந்த சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதாக எண்ணிக்கொண்டு ஜாக் மிஸ்யூஸ் செய்கிறான்..
இந்தக் குழந்தைகளோட வாழ்க்கை எப்படிப்போகுது? எந்த மாதிரியான வாழ்க்கையை தேர்ந்தெடுப்பாங்க? ங்கறது மீதிக்கதையோடு கதையாகும்..
ப்ராட் பிட், சீன் பென்னெல்லாம் இருக்கும் போது நடிப்பைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? இருந்தாலும் அவ்களையும் தாண்டி ஸ்கோர் பண்ணுவது என்னவோ அம்மாவாக நடித்த Jessica Chastain தான்!
இப்டியொரு கதையில இவ்வளவு பிரம்மாண்டம் காட்டமுடியுமா?? எல்லாம் அந்தக் கேமிரா மேனுக்குத்தான் வெளிச்சம்! விஷுவல் எஃபெக்ட்ஸுக்கு நிகராக இவரும் காமிராவில் ஜாலம் காட்டுகிறார்.
படம் ஒருசில ஆஸ்கர்களை அள்ளும் என நம்புகிறேன்!
இந்தப்பட டி.வி.டி வைத்திருப்பவர்கள், டவுன்லோட் செய்திருப்பவர்கள் கவனத்துக்கு,
படத்தை முழுமையாக அனுபவிக்க ஏதேனும் மாலை வேளையில் முழு ரிலாக்சாக உள்ள போது (தனியாக இருந்தால் இன்னும் நல்லது) பார்க்குமாறு அன்புடன் கேட்கப் படுகிறீர்கள்!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 18
இசை = 16
கதை+திரைக்கதை = 15
கலை+ஒளிப்பதிவு = 19
இயக்கம் = 17
மொத்தம் = 85% சூப்பர்!
என் இனிய இரவு வணக்கம் நண்பரே,
ReplyDeleteஇந்த படம் வெளிவந்த போது, இந்த வருடம் கேன்ஸில் விருது பெற்ற போதே பார்க்க வேண்டும் என்றிருந்தேன்..அப்படியே சில மாதங்களும் கடந்துவிட்டன.இன்னும் பார்க்கவில்லை.உங்கள் விமர்சனம் மீண்டும் என்னை தட்டி எழுப்பிவிட்டது.அழகான வரிகள்.சிறந்த விமர்சனம்.அதுவும் பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க ஏகுவான சூழலை எல்லாம் சொல்லியுள்ளீகள்.அதைதான் பின்பற்ற போகிறேன்.
என் நன்றிகள்.
அய்யய்யோ. இது இவ்வளவு நல்ல படமா? ஒரு மாதத்திற்கு முன்பு படத்தை டவுன்லோடினேன். ஆரம்பத்தில் ஓட்டிப் பார்த்ததில் படத்திற்கு சம்பந்தமேயில்லாமல் இடையில் பூ, மரம், நீர்வீழ்ச்சின்னு காட்டிக் கொண்டிருக்க ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ப்ராட் பிட் படம் என்பதால் பிறகு ஒரு அமைதியான நேரத்தில் பார்ப்போம் என ஒதுக்கிவிட்டேன். மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டீங்க. மிகவும் நன்றி.
ReplyDelete@ Kumaran - நன்றி குமரன். இப்போதுதான் முதன்முதலில் கமென்டில் "இரவு வணக்கம்"னு சொல்லிக் பார்க்கிறேன்..
ReplyDeleteஅதைதான் பின்பற்ற போகிறேன்
என் ஆலோசனையையும் மதித்து, ஏற்றுக்கொண்டீர்கள்.. மீண்டும் நன்றி!!
@ ஹாலிவுட்ரசிகன் - //இது இவ்வளவு நல்ல படமா?//
ReplyDeleteஆல்டைம் பெஸ்ட் வரிசைகள்ல வராதுன்னாலும், போன வருஷத்து படங்கள்லயே செம டச்சோட உருவான படம் இதுவாத்தான் இருக்கனும்.
படத்துல நடிப்பு, இசை தவிர்ந்த மேலதிகமான கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பார்க்கும் ரசிகர்களுக்கு ஏற்ற படம்!
ohh apdiyaa? hav to watch this movie tonight ... thx for ur review.... :) keep it up!
ReplyDeleteவருகைக்கு நன்றி Kolipaiyan!
ReplyDeleteநண்பா ... எனக்கு ஏதோ லிப்ஸ்டர் அவார்ட்ன்னு ஒன்னு கொடுத்தாங்க.அதை உங்களுக்கும் பகிர்ந்திருக்கிறேன். உங்களுக்கு பிடித்த இன்னும் 5 புதிய பதிவர்களுக்கு இதைப் பகிரவும்.
ReplyDeleteமேலதிக விபரங்களுக்கு - http://hollywoodrasigan.blogspot.com/2012/02/liebster-blog-award.html
Sean Penn நடிப்பை பற்றி சொல்லவே வேணாம். கலக்குவாரு. என்கிற தலைப்பே ஆயிரம் உள் அர்த்தங்களை சொல்கிறதே? வைக்கிங் புராணத்தில் வாழ்க்கையை ஒரு மரமாகவும் ஆசைகளை (அந்த மரத்தை சுற்றி வளைக்கும்) பாம்பு ஆகவும் சித்தரித்து இருப்பார்கள். படத்தை பார்க்கத்தூண்டும் தலைப்பு.
ReplyDeleteதமிழ் சினிமா உலகம்
மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!
@ ஹாலிவுட்ரசிகன் - அவார்டுக்கு ரொம்ப நன்றி பாஸ்!!
ReplyDelete@ சாவி - வைக்கிங் தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.. நான் தலைப்புலயும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும்னு நினைக்கவேயில்லை!
நான் படம் பாத்தேன் சூப்பர். அனால் சீன்பென்ன்னின் சகோதரன் தலை எப்படி நெருப்பில் பொசுங்கியது? இனொரு சஹோதரன் எப்படி இறந்தான்? இறுதி காட்சியில் என்ன சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை.. கொஞ்சம் சொல்லுங்கள் JZ.
ReplyDeleteஇன்று படம் பார்த்தபிறகே உங்களின் விமர்சனம் படித்தேன்,உங்களின் கோணங்களிலும்,பார்வைகளிலும் ஒன்றி மறுபடியும் பார்த்த பிறகே படம் புரிந்தது,நன்றி.சிறப்பான பதிவு,வாழ்த்துக்கள்.
ReplyDeleteநானும் பாத்தன் தல படம் கொஞ்சம் குழப்புற மாதிரி இருக்கு
ReplyDeleteநீங்க சொல்லவாறது ஒண்ணுமே புரியல..
ReplyDelete