உலக அளவில் இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் முகமாக அளிக்கும் விருதுதான் இந்த Liebster Award! விருதைப்பெறுவதற்கான தகமைகள்லாம் ரொம்பவே ஈஸி - 200க்கு குறைவான பாலோவர்ஸ் இருக்கனுமாம்.
விருதை ஏற்றுக்கொண்டவர், அந்த விருதின் படத்தை பிரசுரிப்பதோடு, தனக்கு மிகவும் விருப்பமான இன்னும் 5 இளம்பதிவர்களுக்கும் அதை அளிக்கனுமாம்.
(இங்கதானே சிக்கலே இருக்கு... எனக்கு தெரிந்த இளம்பதிவர்கள் கூட என்னை விட சீனியர்களாகவோ, சிறப்பாக எழுதுபவர்களாகவோ இருக்கிறார்களே!) இது ஒரு பார்வர்டு எஸ்.எம்.எஸ் திட்டத்தைப் போல இருப்பதால், ட்ரென்டை முறியடிக்காமல் நாமும் விருதுகளை வழங்கிடுவோம்!
நான் பார்த்த, வாசிக்கும் பதிவுலக வட்டம் ரொம்ப சிறியதுங்க.. ஸோ நான் விருது வழங்கப்போகிறவர்கள் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்களாகத்தான் இருக்கப்போகிறார்கள்..
விருதுக்கான விதிமுறைகள்-
1. Thank your Liebster Blog Award presenter on your blog
2. Link back to the blogger who awarded/nominated you
3. Copy and paste the blog award to your blog
4. Reveal your top 5 blog picks
5. Drop by your top 5 picks and let them know you chose them by commenting on their blog!
சரி, இதோ என்னோட 5 தெரிவுகள் -
கொழந்தையை இளம் பதிவர்கள் லிஸ்டுல சேர்ப்பதே ரொம்பத் தப்புன்னு நெனைக்குறேன்.. (இருந்தாலும் "கொழந்தை"ங்கற பெயர் இருக்க வரைக்கும் அவரு எப்பவுமே "இளம்" பதிவர்தான்!). மிகவும் ஆழமான கருத்துடைய சினிமாக்கள், இசை பற்றியெல்லாம் எழுதிக் கலக்குவாரு. அவரு ப்ளாக்குல இருக்க என் லிங்க்-ல இருந்து தான் எனக்கு ஒரு decent amount views வருது! எப்படியும் இந்த வருஷம் முடியும்போது 200 பாலோவர்ஸை தாண்டிருவாரு.. ஸோ அதுக்கு முன்னால இந்த விருதை அவருக்கு அளிக்கிறதுல நான் ரொம்ப பெருமைப் படுறேன்!!
லக்கி பதிவுலகத்தை பொறுத்த வரை என்னைவிட ரொம்ப சீனியர். அவரோட browseall.blogspot.com-ல மொத்தம் 248 பாலோவர்ஸ்..( யப்பா!). ஆனாலும் என்ன காரணத்தாலயோ அதை தன்னோட Blogger Profileல இருந்து அதை நீக்கிட்டாரு. அவரோட மத்த சைட்டான லக்கிலிமட்-ல சினிமாவைப் பற்றி மட்டுமில்லாமல், தற்போது ப்ரவுஸ்-ஆல் போன்றே தொழில்நுட்ப பதிவுகளையும் எழுதிவருகிறார்.. அனிமேஷன் படங்களின் தீவிர ரசிகர்களில் ஒருவர்!
Harans -
ஆக்சுவலா நான் முதன்முதலா வாசிச்ச ப்ளாக் இவரோடதுதான். இவரது சைட்டிலிருந்துதான் நான் பதிவுலகத்துக்கே அறிமுகமானேன். எனக்கு விருதளிக்கப்பட்ட இந்த வேளையில் வைத்து இவருக்கு விருதளிப்பதில் மிகுந்த பெருமைப்படுகிறேன்! அப்பப்போதான் எழுதுவாரு.. ஆனாலும் காரசாரமான மேட்டர்களை எழுதி கலக்குவாரு..
சமீபமாத்தான் இவரோட வலைப்பூவைப் பற்றி அறிந்து கொண்டேன். இவர் ஏற்கெனவே நன்கு establish செய்துகொண்ட பதிவர் போலத் தெரிகிறார். எல்லா விடயங்களையும் கலந்து எழுதுகிறார் என்றபோதிலும், பாடல் விமர்சனங்கள் தான் இவரது ஸ்பெஷாலிட்டி எனத் தெரிய வருகிறது. இவர் 157 பாலோவர்களைக் கொண்டுள்ளதால் 200 அடிப்பதற்கு முன் விருது வழங்குவதையிட்டு பெருமையடைகிறேன்..
எனக்கு "முரட்டு சிங்கம்" பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும் அவரோட பதிவுகளை சிறிது வாசித்திருக்கிறேன்.. அவரோட Mystic River விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.. உகண்டாவிலிருந்து எத்தனை பேர் தமிழில் பதிவெழுதுகிறார்கள் என்பது எனக்கு தெரியாது... ஆனாலும் இவர் முயற்சி செய்வது சிறப்பானது! ஹாலிவுட்ரசிகன் தான் விருது வழங்கும் போது இவருக்கு கொடுக்க முடியாது போனமை பற்றிய தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். என்னால் அப்பணி நிறைவேற்றப்பட்டமை குறித்து மகிழ்வடைகிறேன்!!
இத்துடன் நம்ம விருது விழா இனிதே நிறைவேறுகிறது...
* இத்தன நாளா கீழே வாங்காத அவார்ட்ஸுக்கு போட்டோஸ் போட்டு வைச்சிருந்தோம். இன்னைக்கு இருந்து வாங்கினதயே போட முயற்சிப்போம்!
* இத்தன நாளா கீழே வாங்காத அவார்ட்ஸுக்கு போட்டோஸ் போட்டு வைச்சிருந்தோம். இன்னைக்கு இருந்து வாங்கினதயே போட முயற்சிப்போம்!
வணக்கம்,
ReplyDeleteஉங்களுக்கு விருது கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி..அதோடு அந்த ஐந்து பதிவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்ப மாட்டிகிட்டது நான்தான்..ஏனு கேக்குரீங்களா, நீங்களாவது என்னை விட கொஞ்சம் அனுவம் வாய்ந்தவர்..நிறைய பதிவர்களா தெரியும், என்னை பாருங்க..எனக்கு எனக்கு தெரிந்தவர்களை தேடிட்டு இருக்கேன்.இன்னிக்கு ரிலீஸ் பண்ணா பன்னுவேன்.மிக்க நன்றி.
@ Kumaran -
ReplyDeleteவந்ததுக்கு ரொம்ப நன்றி குமரன்! உங்களுக்கு விருது கிடைச்சதுலயும் ரொம்ப சந்தோஷப்படுகின்றேன்..
//நீங்களாவது என்னை விட கொஞ்சம் அனுவம் வாய்ந்தவர்..நிறைய பதிவர்களா தெரியும்//
அட நீங்க வேற.. நான் பாலோ பண்ணுற பதிவர்களையே வாசிக்க எனக்குநேரம் பத்தாம போறதுண்டு.
எங்க லேட்டாயிட்டா நான் கொடுக்க நெனைச்ச இவங்களுக்கு முந்திக்கிட்டு யாராவது கொடுத்துருவாங்களோ? அப்புறம் நம்மளுக்கு யாரைத் தெரியும்-ங்கற பயத்துல தான் வேகவேகமா இந்த பதிவையே எழுதினேன்..
உங்க விழாவுக்கு வெயிட்டிங்..
நண்பா அருமையாக அவர்ட்கள கொடுத்திருந்தீர்கள் !!!!வாழ்துக்கள்
ReplyDeleteஅவார்டுகே அவார்ட் குடுத்த மாதிரி இருக்கு பாஸ்.
ReplyDeleteசாவி யின் தமிழ் சினிமா உலகம்.
மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!
@ சினி பித்தன் - நன்றி!
ReplyDelete@ சாவி - நன்றி!
வாழ்த்துக்கள் நண்பா..
ReplyDeleteஇனிமேலாவது குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு போஸ்ட்டாவது போட முயற்சியுங்கள். உங்கள் ஆரம்பகால பதிவுகளில் இருந்து வரவர நல்ல முதிர்ச்சி தெரியுது (இது இயற்கதான...)
And thnaks a lot JZ....
@ கொழந்த - உங்களுக்கும் தேங்க்ஸ் + வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து படித்து வருபவன் நான். என்னை உங்களுக்கு தெரியாமல் இருந்தாலும், உங்களின் எழுத்துகள் (விமர்சனங்கள்) என்னக்கு நன்கு பரிட்சயம். எனக்கு இந்த பரிசை நீங்கள் வழங்கியதில் ரொம்ப சந்தோசம்.
நன்றி.
@ MuratuSingam - வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே, நானும் உங்கள் எழுத்துக்களை முன்பே படித்திருக்கிறேன்..
ReplyDeleteஉங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!