அந்த சீன்... ஆரனும், அவனது நண்பனானன வில் என்பவனும் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆரன் வில்லை பார்ட்டிக்கு அழைத்ததோடு வரும்போது அவனது cousin-ஐயும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறான்.. வில்லின் cousin தான் ரேச்சலின் பழைய காதலன்!! அவனால்தான் அன்று பாட்டியில் கலவரமேற்படப்போகிறது. அதுனால தெரிந்தோ, தெரியாமலோ இந்தக் கலவரத்தில் ஆரனுக்கும் பங்கு உண்டுங்கற மாதிரி ஆயிடுச்சு!!
டைம்-மெஷின் எப்படி வேலை செய்கிறதுன்னுல்லாம் தெரிஞ்சு கொண்டதுக்கப்புறம், செவ்வாய் அல்லது புதனன்று ஆரன், தனக்குத் தெரியாமல் அபே Fail-safe Box Aஐ உருவாக்கியிருந்ததை அறிந்து கொள்கிறான்.. இந்த பாக்ஸை உபயோகப்படுத்தி பர்த்டே பார்ட்டியில் நடந்திருக்கக் கூடிய அசம்பாவிதங்களை தடுக்கலாமென யூகிக்கிறான். ஆனால் முதல் அட்டெம்ட் பிழைத்துவிட்டால்..
அன்று ரேச்சலின் பார்ட்டிக்கு இவன் போனபோதும், கச்சிதமாக செயல்பட்டு "பார்ட்டியின் ஹீரோ"ஆக இவனால் முடியவில்லை.. இவன் தான் முழு வாரத்தில் நடந்த எல்லா உரையாடல்களையும் ரெக்காரட் செய்து வைத்திருப்பான்! (அப்போதான் அடுத்த அட்டெம்டிலும் இதே மாதிரி நிகழ்வுகளை கொண்டு செல்லமுடியும்.. யாருக்கும் சந்தேகம் வராது)
இப்போ நிரந்தரமாகவே உலகில் 3 ஆரன்கள் இருக்கிறார்கள் -
ஆரன் ver1.0 - இவன் தான் ஒரிஜினல். இப்போ சொந்த வீட்டிலேயே மேல்-அறையில் அடைபட்டுக்கிடக்கிறான்...(இவனது முணகல் சத்தங்களை தான் காரா எலிகளின் சத்தம் என நினைத்துக் கொண்டாள்.) திங்கட்கிழமை மு.ப5.15ற்கு முதலே இவன் மயக்கமாகிவிட்டதால் இவனுக்கு இன்னும் பாக்ஸினை டைம்-மெஷினாக உபயோகப்படுத்தலாம்னு தெரியாது!!
ஆரன் ver2.0 - hood shirt போட்டுகிட்டிருக்க ஆரன் இவன்தான். எல்லா கலந்துரையாடல்களையும் ரெக்காரட் செய்து கொடுத்தவன். இப்போ paradox குழப்பங்களை தீர்ப்பதற்காக (ஓரே நேரத்தில் ஓரெ இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆரன்கள்) வீட்டை விட்டு ரொம்ப தூரம் போயிருக்கிறான். ஆக்சுவலா படம் முழுக்க கதையை சொல்லிக்கிட்டிருக்கற வாய்ஸ் இவனோடதுதான்!!
3வது ஆரன் பர்த்டே பார்ட்டியில் சொதப்பிய அனுபவத்தை வைத்துகிட்டு இப்போ சரியாக செயல்பட்டு "ஹீரோ"வாகுறான். இப்போ இவருக்கு எதாவது ஆனாலும் கவலையில்லை.. ஏன்னா மனைவி, குழந்தையை பார்த்துக்கறதுக்கு ஒரிஜினல் ஆரன் இருக்கானே.. அதுனாலதான் குடும்பஸ்தனா இருந்தும் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க துணிஞ்சிருக்காரு. அதை அன்னைக்கு அபே கேட்டதுக்கு, ஏதோ பேசி மழுப்பியிருக்காரு.. ரேச்சலோட பழைய காதலன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறான்.. All is Well! (இன்னும் முடியல...)
இந்த அபேver2.0 Fail-Safe Box Aன்னு நினைச்சுகிட்டு, Fail-SafeBox C மூலமாத்தான் திங்கட்கிழமைக்கு காலப்பயணம் செய்து வந்திருக்கிறான். (ஸோ இவன் வந்த டைம் 5.00மணி இல்லை.. 5.30!)
ரொம்ப காலப்பயணம் செய்ததால அபேver2.0, ஆரன்ver3.0 ரெண்டுபோரோட கையழுத்தும் கோணல்மாணலாகுது! சரியா தூங்காம, சாப்பிடாம, ஒருத்தரு மேல ஒருத்தர் சந்தேகப்பட்டுகிட்டு, தங்களோட நகல்களை வேற உருவாக்கி நிரந்தரமாவே உலவ விட்டு வாழ்ந்த வாழ்க்கை போதும்.. இனி காலப்பயணமே வேணாம்னு ரெண்டு பேரும் முடிவு செய்யுறாங்க!
ஆரன்ver3.0 தன்னோட குடும்பத்தின் நல்லதுக்காக பாஸ்போர்ட்டை எடுத்துகிட்டு வெளிநாடு செல்கிறான். அபேver2.0 அங்கேயே தங்கி ஒரிஜினல் அபேயும், ஆரனும் இன்னொரு பாக்ஸை உருவாக்காமல் இருப்பதற்கான முயற்சிகளை எடுக்கிறான்...
கடைசி சீன்.. உலகத்தோட ஏதோ ஒரு மூலையில் ஆரன்ver2.0 பெரிய ரும் அளவு பாக்ஸை உருவாக்கி்க்கொண்டு இருக்கிறான்!! (பிரைமர் பார்ட் 2...??)
அப்பாடி! இன்னொரு விளக்கத் தொடர்பதிவு முடிஞ்சுது.. யாருக்காச்சும் வேற கன்பியூஷன்கள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க.. பொறுமையா வாசிச்சுட்டு தெரிஞ்சா என்னன்னு சொல்றேன்..
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 16
இசை = 14
கதை+திரைக்கதை = 19
கலை+ஒளிப்பதிவு = 16
இயக்கம் = 17
மொத்தம் = 82% சூப்பர்!

THANX TO -
WIKIPEDIA.COM
QNTM.ORG
FRANCISSHANAHAN.COM
கன்பியுஷன் என்னன்னா,
ReplyDeleteபடத்தில் முதலில் காட்டப்படும் அந்த முதலாவது Park-bench சீனில் ஆரன் இயர்போன் அணிந்து கொண்டிருக்கிறான். அப்போ அவன் ஆரன்ver3.0 ஆக இருக்க வேண்டும்.. ஆனால் பிறகு அடுத்த சீனில் அபே அவனிடம், டைம் மெஷினை விளக்கும் போது, ஆரன் அதை குறிப்பாக notepad-ல் எழுதுகிறான். அப்போது அவனது கையெழுத்து கோணல்மாணலாக இல்லை.. அப்படியானால் அவன் இன்னும் காலப்பயணம் எதுவுமே செய்யவில்லையா??
அப்படியிருந்தால் ஒரிஜினல் ஆரனுக்கு NCCA Basketball இயர்போனில் கேட்கும் பழக்கம் இருந்திருக்கிறதா?
*அப்படி ஒரு பழக்கம் இருந்திருந்தால் படத்தில் ஒரிஜினலையும், 3வது ஆரனையும் மாற்றி மாற்றி காட்டுவதாக சீன்கள் இருந்திருக்கலாம்! ஆனால் அவனும் "3வது ஆரன்" என நாம் எடுத்து கொள்வதே குழப்பங்களை கொஞ்சமாவது குறைக்கும் வழியாக இருக்கும்!!
இந்த பதிவுக்கு படங்கள் போடுறதுக்காக தேடிக்கொண்டிருக்கும்போது, ஒரு அசத்தலான ப்ளாக் ஒன்று கையில் கிடைத்தது. முழுக்க, முழுக்க "பிரைமர்" படத்தை மட்டும் பற்றியது.
ReplyDelete54 பதிவுகளில் முழு விளக்கமும் இருக்கிறது போலும். தொடர் பதிவு எழுதிக்கிட்டிருந்த நேரம் கிடைக்காமல், எல்லாம் முடியும் போது கிடைச்சிருக்கு.. எனக்கு அந்த பதிவுகளை வாசிக்கவே பயமாயிருக்கு.
யாருக்காவது பிரைமர் பற்றி அதிகமான ஈடுபாடு இருந்தால் தவறாமல் சென்று படித்து வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்:-
http://theprimeruniverse.blogspot.com
அப்பாடா ... முடிச்சிட்டீங்களா??? சீக்கிரமே ஐந்து பதிவுகளையும் மீண்டும் ஒரே மூச்சில் வாசித்துவிடுகிறேன்.
ReplyDeleteநேரம் ஒதுக்கி தொடர் பதிவிட்டமைக்கு நன்றி...
@ ஹாலிவுட்ரசிகன் - நம்மளுக்கும் ஸேம் "அப்பாடா" தான்!
ReplyDeleteபடம் பார்த்து சில நாட்கள் ஆகிறது..முழுதாக இந்த தொடரை வாசித்துவிட்டு இன்னொரு முறை படத்தை பார்த்திட வேண்டியதுதான்..அப்பதான் நம்ம ஐன்ஸ்டன் மூள வேல செய்யும்..இனிமேல் பிரைமர் படத்தை எங்கு பார்த்தாலும் நீங்கதான் ஞாபகம் வருவீங்க நண்பரே..மீண்டும் சொல்கிறேன் தங்களது இந்த முயற்சி மனதார பாராட்டத்தக்கது..வாழ்த்துக்களோடு என் நன்றிகள்.
ReplyDeleteவிரைவில் ஒரு சிறந்த படைப்பின் விமர்சனத்துடன் தங்களை எதிர்ப்பார்க்கிறேன்.
பாஸ்... உங்களின் இந்த தொடர்பதிவுக்கான மின்னூலை ரெடி பண்ணி விட்டேன். உங்கள் ஈமெயில் முகவரி தாருங்கள்.. அனுப்புகிறேன். ஏதாவது சேர்க்க வேண்டுமென்றால் சொல்லுங்கள் சேர்த்து விடலாம். எனது ஈமெயில் limat22[at]gmail[dot]com
ReplyDelete@ Kumaran - //இனிமேல் பிரைமர் படத்தை எங்கு பார்த்தாலும்
ReplyDeleteநீங்கதான் ஞாபகம் வருவீங்க நண்பரே//
ஆகா.. இது போதும் நண்பா! ரொம்ப குளிருது..
@ லக்கி- அதுக்குள்ள நீங்களே உருவாக்கி முடிச்சுட்டீங்களா!! நம்பவே முடியலை நண்பா.. ரொம்ப நன்றி!
ReplyDeleteஎன் ஈமெயில் - johnnyzashon@gmail.com
எனக்கு எதுவும் சேர்க்க தேவையில்லை.. "மின்நூலாக்கம்"னு உங்க பெயரை சேர்த்திருந்தாதான் எனக்கு திருப்தி!!
பாஸ்... உங்கள் இமெயிலுக்கு மின்னூலை அனுப்பி விட்டேன்.
ReplyDeleteமுழுவதையும் வாசித்து விட்டேன்... இப்போது Downloading.....
ReplyDelete