இதே வேளை டிஸ்னி பிக்சர்ஸ் "பைரேட்ஸ் ஓவ் த கரீபியன்" தொடரோட அடுத்த ரெண்டு பாகங்களையும் எடுப்பதற்காக தொடர்ச்சியாக ரெண்டு வருஷ ஒப்பந்தத்தை போட்டிருந்ததால், ஜானிக்கு கால்ஷீட் பத்தாமல் வேறு எந்தப் படத்தையும் ஏற்க முடியாதிருந்தது.. இருந்தாலும் பொறுமைக்கேற்ற பலன் போல ரெண்டு படமும் வசூலில் அமோக சாதனைகளை நிகழ்த்தின.. குறிப்பாக ரெண்டாவது படம் (Dead Man's Chest) ஜானியோட திரையுலக வாழ்க்கையிலேயே முதன்முறையாக 1 பில்லியன் வசூல் தாண்டி இன்ப அதிர்ச்சி கொடுத்தது! ஜானி டெப்னா யாருன்னு தெரியாத ஹாலிவுட் ரசிகர்களே இருக்க முடியாது என்கிற நிலை வரைக்கும் அவரை உயர்த்தி விட்டது!!
2007 - Sweeney Todd : The Demon Barber of Fleet Street
பர்ட்டனுக்கு சின்னவயசுல பார்த்த மியூசிகல் நாடகங்களிலேயே மிகவும் பிடித்தது 'Sweeney Todd' அப்படீங்கறதுதானாம். ஏன்னா பர்ட்டன் தேடுற "கொலைவெறித்தனம்" அதுல மட்டும் தான் கிடைச்சுது.. 'தன்னோட மனைவியைக் கற்பழித்து, மகளை சிறைப்பிடித்து வைத்திருப்பவர்களை, பல வருஷம் கழித்துப் பழிவாங்கும் barberஇன் கதை!' யை பாடல்களுடன் கோர்த்து செஞ்சதுதான் இந்த நாடகம்... பர்ட்டன் தான் இயக்குனரான காலத்திலிருந்தே (1980களில்) இதை படமாக்குவதற்கு அதன் உரிமையாளர் Sondheim-இடம் அனுமதி கேட்டு வந்திருந்தபோதும், அப்போ இவரை நம்பிக் கொடுக்கவில்லை..இப்போ இசைப் படங்கள் எடுத்து சாதிச்சுட்டு திரும்பவும் அங்கேயே போய் கேட்டிருக்காரு.. அந்த நீண்ட நாள் கனவு நெஜமாச்சு!..
படத்தை இயக்குவோம்னு இறங்கினப்போ, பர்ட்டன் மனசுல பிரதான கதாப்பாத்திரமாக நடிக்க தெரிவு செஞ்சிருந்து (வழக்கம்போல) ஜானியைத்தான்.. அதுனால "பைரேட்ஸ்" முடியுற வரைக்கும் பொறுத்துப் பார்த்திருக்காரு.. 2006 இறுதியில ஜானியோட கால்ஷீட் திறந்திச்சு.. பர்ட்டன் புடிச்சுக்கிட்டாரு!
ஆனா, ஜானியோட வளர்ச்சியைப் பார்த்து எவன் கண்ணு வைச்சானோ தெரியலை.. 2007 ஆரம்பத்திலேயே ஜானியோட பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போனதால ஜானி படத்துல இருந்து இடைவிலகிக்க வேண்டியதாச்சு!!
அதுனால பர்ட்டன், 5 வேறு நடிகர்களை அந்த கதாப்பாத்திரத்துக்காக நடிக்கவைச்சு, யாரும் சரிப்படாம மாத்திக்கிட்டேயிருந்தாரு.. இறுதியில பொண்ணுக்கு சுகமாகி ஜானி திரும்ப, படப்பிடிப்புக்கு மீண்டும் பிள்ளையார் சுழி போடப் பட்டது. படத்துக்காக ஜானி டெப், ரொம்ப மெனக்கெட்டு வாரக் கணக்கில் பிராக்டீஸ் பண்ணி சொந்தக் குரலில் பாடியதோடு, நடிப்பிலும் மிரட்டியிருப்பார்.. நிச்சயம் படம் பார்க்கும் போது மனசுல ஜானி மட்டுமே விஸ்வரூபமாய் நிறைந்திருப்பார்!!
பர்ட்டன் 'ஸ்லீபி ஹொலோ'வுக்குப் பிறகு தன்னோட ட்ரேட்மார்க் ரத்தக்காட்சிகளையும், குரூரத்தையும் படத்துல மியூசிக்கோடு சேர்க்க.. Sondheim நினைச்சு வைத்திருந்ததை விடவும் நேர்த்தியான திரைவடிவமாக Sweeny Todd வெளியானது.. R ரேட்டிங் கிடைத்தும் படம் 152 மில்லியன் வசூலித்து, கூட்டணிக்கு இன்னொரு வெற்றியைத் தேடிக் கொடுத்தது..
ஜானி டெப் தனது நடிப்புக்காக தேசிய விருதையும், கோல்டன் குளோப் விருதையும், சிறந்த வில்லனுக்கான எம்.டீ.வி விருதையும் அள்ளிச் சென்றார்!
படம் பற்றிய நம்ம விமர்சனம் படிக்க..
2010 - Alice in Wonderland
அலிஸ் இன் வொண்டர்லேன்ட் கதை உங்க எல்லாருக்கும் தெரியுமில்லியா?? நீங்க வாசிச்சிருக்கா விட்டாலும் கேள்விப் பட்டாவது இருப்பீங்களே?? அந்தக் கதையில ஆறு வயசுப் பொண்ணா வரும் அலிஸ், 13 வருடங்கள் கழித்து மீண்டும் வொண்டர்லான்டுக்கு போக நேரிட்டால்... அப்படீங்கற கதையை வைச்சு படமா எடுக்கனும்.. பர்ட்டனுக்குத்தான் fantasy கதைகள் அல்வா திங்கற மாதிரியாச்சே! பின்னியெடுத்துட்டார்..இந்தப் படத்தில் The Hatter கதாப் பாத்திரத்துக்காக ஜானி டெப் நடித்தார்.. "பைரேட்ஸ்" சீரீஸ்ல பார்க்க சீரியஸா இருந்துகிட்டு, லூசுத்தனமா உளறி காமெடி பண்ணிக் கிட்டிருந்த இவருக்கு, இங்கே அப்படியே எதிர்மாறான வேலை.. விசித்திரமான மேக்கப்பில் வந்தாலும், மனிதாபிமானமான ஒரு கேரக்டராக கதைக்கனும்! சவாலையும் ஏத்துக்கிட்டு செஞ்சாரு.. ஹெலனா இந்தப் படத்தில் வில்லியாக நடித்து பட்டையக் கிளப்பினார்!.. எனக்கு இந்தப் படத்தின் மீது பெரிய விருப்பு கிடையாது.. ஆனால் பொழுதுபோக்குக்காக ஒரு தடவை பார்க்கலாம்!
பெரும்பாலும் சிறுவர்களையே கவரக்கூடிய இந்தப் படத்தை, சம்மர் சீஸனில் போடாமல் சில பிரச்சனைகள் காரணமாக ஸ்கூல் டைமில் வெளியிட வேண்டி நேரிட்டது.. அதுனால 'இழப்பு எதுவும் ஏற்படாம தவிர்க்க மூணே மாசத்துல டி.வி.டி ரிலீசைப் போட்டுருவோம்'னு டிஸ்னி உத்தியோகத்தர்கள் நினைத்தனர்... ஆனால் எதிர்பாராத ஒன்று நடந்தது!..
'ஜானி டெப்'-ங்கற மந்திரப் பெயருக்காகவே கூட்டம் அலைமோதியது.. அவதார் படம் எழுப்பிய அதிர்வலைகளால் 3டி படம் தேடி அலைந்தவர்கள் எல்லாரும் இந்தப் படத்தை விடாமல் தியேட்டரில் கண்டு கழித்தனர்.. சாதாரண டிஸ்னி படங்களை விட குறைந்த காலமே தியேட்டரில் விடப் பட்டிருந்த போதும், மெகா... ரேஞ்சில் வசூலித்தது! டிம்முக்கு முதல் தடவையாகவும், டெப்புக்கு இரண்டாவது தடவையாகவும் பேர் சொல்லிக் கொள்ளும் ஒரு பில்லியன்-வசூல் படம் கிடைத்தது!! (இப்போ ஆல்-டைம் top grossing லிஸ்டுல, சரியா பத்தாவது இடத்துல இந்தப் படம் இருக்குது..)
(அடுத்த பதிவில் முடியும்..)
இவ்வளவு அருமையான நடிகர் இன்னும் ஒரு ஆஸ்கார் கூட வாங்கலயே? அது தான் எனக்கு ரொம்ப ஃபீலிங்கா இருக்கு.
ReplyDeleteவரிசையா எல்லாப் படம் பத்தியும் சொல்லிட்டீங்களே? வரப்போகும் படம் பற்றி தான் தொடரின் கடைசிப் பதிவா?
ஆமா ... அடுத்த தொடர் என்ன?
@ ஹாலிவுட் ரசிகன் - டிகாப்ரியோ, ஜானி டெப் ரெண்டு பேரும்.. நடிப்பை நிறுத்துறதுக்குள்ள ஒரு ஆஸ்கராவது வாங்கிடனும்-ங்கறது தான் என்னோட ஆவல்!
ReplyDelete//வரப்போகும் படம் பற்றி தான் தொடரின் கடைசிப் பதிவா? //
கரெக்டு.. படத்துக்கு ஒரு ப்ரீவியூ கொடுத்து hype-up பண்ணாம விடமாட்டேன்!!
//ஆமா ... அடுத்த தொடர் என்ன?//
தொடர்ந்து தொடர்தான் எழுதுவேன்னு வாக்குக் கொடுத்திருந்தேனா என்ன? தொடர் எழுத நம்மளுக்கு ஆசைதான்.. டைம் இருக்கனுமே!
படம் பார்க்க முடியலையேங்கற வருத்தத்துல தான் இந்த கூட்டணியை பற்றி ஒரு பதிவு எழுதலாம்னு யோசிச்சேன்.. நிறைய தகவல் கிடைச்சதால அதையே தொடராக்கிக்கிட்டேன்!!
தொடர் முடிஞ்சதுக்கப்புறம் படம்தான்..
தொடர் எழுதணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா அதுக்கு முதல்ல கொஞ்சம் டைம் போகட்டும். இன்னும் எழுத்து, நடைன்னு திருத்த வேண்டியது “என் மொக்கைகள்” நிறைய இருக்கு. 2012 உலகம் அழியாம இருந்தா அப்புறம் பார்க்கலாம்.
Deleteஆனாலும் எழுத ஒரு நல்ல டாபிக் மாட்டுது இல்லயே. அது தான் மெயின் ரீஸன். அவ்வ்வ்
இனிய இரவு வணக்கம் நண்பரே, நலமா ?
ReplyDeleteதொடர்ப்பதிவு மிக்க நன்று..ஒவ்வொரு தகவல்களும் கேள்விப்படாதது..
///// @ ஹாலிவுட் ரசிகன் - டிகாப்ரியோ, ஜானி டெப் ரெண்டு பேரும்.. நடிப்பை நிறுத்துறதுக்குள்ள ஒரு ஆஸ்கராவது வாங்கிடனும்-ங்கறது தான் என்னோட ஆவல்! ////
மிக சரி..நானும் இப்பவாங்குவாங்க அப்புறம் வாங்குவாங்கனு நம்பி, இவர்கள் நடிக்க வந்தும் 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.இவர்கள் இருவரோடு சேர்த்து ஆஸ்கர் வாங்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கும் இன்னொரு நடிகர் ஜிம் கேரி..The Mask (1994) - க்கில் என்னை மகிழ்வித்து, The Truman Show என்ற படத்தில் என்னை கவர்ந்த திறமையான நடிகர்.
நண்பரே, அடுத்து பதிவை எண்ணி ஆவலோடு காத்திருக்கிறேன்..மிக்க நன்றி.
@ Kumaran - //இவர்கள் இருவரோடு சேர்த்து ஆஸ்கர் வாங்க வேண்டும் என்று நான் எதிர்ப்பார்க்கும் இன்னொரு நடிகர் ஜிம் கேரி..//
ReplyDeleteஇவரோட "ட்ருமன் ஷோ" பார்க்கல.. eternal sunshine பார்த்துருக்கேன்.. சிறந்த நடிகர்!
இவரு இந்த வருஷம் எதுவும் நடிக்க மாட்டாரு.. ஜானிக்கும் dark shadowsல பெரிதாக கவர முடியாது..
ஆனா டிகாப்ரியோவுக்கு 3 படம் ரிலீசாக காத்திருக்கு.. அதுல ஒண்ணு குவென்டின் டாரன்டினோவோடது வேற...
கடவுளே.. ஆஸ்கர், ப்ளீஸ்!
உண்மைலேயே நீங்க கிரேட் பாஸ் .... இவ்ளோ பொறுமையா எழுதி இருக்கீங்க ..... yennoda yettavathu arivu yenna solluthunna dark shadows கண்டிப்பா ஹிட் ஆகும் ஏன்னா johnny yoda slang sema comedy ya irukkum...:-)
ReplyDelete@ KSB - டிம்-டெப் கூட்டணிக்கு 'எட்டாவது' படமாச்சே.. உங்க 'எட்டாவது' அறிவு சொன்னா சரி!! படம் ஜெயிப்பது உறுதி..
ReplyDeleteமிஸ்டர் JZ! படம் பாகிறதோட சரி. இந்த காலிவூட் சினிமாவோட பின்னணி பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. ஐ டோண்ட் நோ எனிதிங்க் எபவுட் திஸ் காலிவூட் சினிமா பக்ரவுண்டு. எனக்கு தெரிஞ்சதெல்லாம், ரத்திரி அடிக்கிற ரவுண்டு தான். பட் வண் திங்,,,, ஆனா ஒரு விஷயம். உங்களுக்கே தெரியாத ஒண்ண நான் இப்போ சொல்லப் போறேன். ஐ ஆம் கோயிங் டு டெல் அ மேட்டர் விச் யூ டோண்ட் நோ.... அதாவது ////// 2007 ஆரம்பத்திலேயே ஜானியோட பொண்ணுக்கு உடம்பு சரியில்லாம போனதால ஜானி படத்துல இருந்து இடைவிலகிக்க வேண்டியதாச்சு!! /////// அப்டீன்னு நீங்க சொன்னீங்க இல்லயா? அதுக்கு நெஜமான காரணம் என்ன தெரியுமா? அந்த பொண்ணு சமஞ்சு இருந்தா... யேஸ் ! தட் சைல்ட் வோஸ் ஏஜ் அட்டம்ட். நான் தான் தாய் மாமன் சீர் செய்ரதுக்காக ராஜ்கிரண அனுப்பி வச்சேன். மந்தையில் இருந்து பிரிந்து போன இரண்டு ஆடுகள்.....................
ReplyDeleteஇவன் இப்படித்தான்.. காமெடிங்கற பேருல வதந்தியை பரப்புவான்.. யு டோன்ட் வொரி guys!
Deleteஅதுக்கு illness தான்.. (அப்போ அந்தப் பொண்ணுக்கு ஏழு வயசுதான் வேற!)
உண்மைய சொன்னா என்னய கிறுக்கன் எம்பாங்க...... இவன் பொறாம புடிச்சவன், தனக்கு ஜானி டெப்பு மட்டும் தான் தெரியும் எனக்கு, அவனோட பொண்ணு சமஞ்சது வரைக்கும் தெரியுங்கிற பொறாம.... வேற ஒண்ணுமில்ல......
Deleteஇது எல்லாம் எங்க தலைவன் பவர் ஸ்டாருக்கு ஜிஜீபி.....
ReplyDeleteதனூஸ் வாழ்க ! இளைய தளபதி விஜய் வாழ்க ! சுறா வாழ்க!
ReplyDeleteஇந்த கூடணியோடா தொடர் பதிவுகள படிச்சா பிறகு, இவர்களது திரைப்படங்கள் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது.... வர விருக்கும் திரைப்படத்தையும் சேர்த்து.
ReplyDelete@ MuratuSingam - ஈர்ப்பும், எதிர்பார்ப்பையும் வரவழைப்பதே இதன் நோக்கம்! நன்றி பாஸ்!!
ReplyDeletehii.. Nice Post
ReplyDeleteThanks for sharing