Saturday, April 7, 2012
War Horse (2011)
புயலுக்கு முன்னர் வரும் நிசப்தத்தை போன்ற ஒரு முன்னிரவில்
போர்க்களம்.. இரண்டு பக்கமும் அகழிகள்.. ஒன்றில் ஆங்கிலப் படைவீரர்கள்.. மற்றையதில் ஜெர்மன் படைவீரர்கள்.. எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் தொடங்கலாம்.. துப்பாக்கி, பீரங்கிகளுடன் தயரான நிலையில்.. இரு அகழிகளையும் பிரிக்கும் அந்தச் சிறு வெளியில் ஒரு முனகல் சத்தம் கேட்கிறது.. ஏதோ ஒன்று அசைகிறது.. அது முட்கம்பியில் மாட்டிக் கிடக்கும் ஒரு குதிரை!
இங்கிலாந்து அகழியிலிருந்து ஒரு இளைஞன் வெளிவருகிறான்.. கையில் வெள்ளைக் கொடி.. ஜேர்மனி அகழியிலிருந்து இன்னொருத்தன் வருகிறான்.. இருவரும் குதிரையைக் காப்பாற்ற மெதுவாக அடிவைத்து முன்னேறுகிறார்கள்.. இரு தரப்பும் சண்டையைத் தொடங்காமல் அமைதியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. எதிரியுடன் கைகோர்த்து இரு இளைஞர்களும் அந்தக் குதிரையை மீட்கிறார்கள்.. touching.. touching.. touching!!
படம் Michael Murpurgo அப்படீங்கிறவரு எழுதிய கதையினைத் தழுவி எடுக்கப்பட்டது... நான் 10ந் தரத்தில் ஆங்கிலம் கற்கும் போது (ரொம்ப முன்னாடீல்லாம் இலல்லீங்க.. சமீபத்துல தான்) readerக்காக இவரு எழுதிய போர்க்கதைகளின் கலெக்ஷன் எங்களுக்கு வாங்கும் படி அறிவுறுத்தப்பட்டது.. விலை கூடுதலாக இருந்ததால் ஆரம்பத்தில் ஒருத்தனைத் தவிர எவனுமே வாங்கவில்லை.. வகுப்பின் ஏகோபித்த எதிர்ப்பினாலோ என்னவோ அந்த புத்தகம் கைவிடப்பட்டு, வேறொரு புத்தகம் வாங்கச் சொன்னார்கள்.. அந்தக் கலெக்ஷனில் இந்தக் கதையும் இருந்திருக்கலாம்.. இப்போ படிக்கனும்போல இருக்கு!!
Separated by war. Tested by battle. Bound by friendship. படத்தோட tag-லைனே கதையை அவ்வளவு அழகாக சொல்லிவிடுகிறது.. அதுக்காக நான் சொல்லாமல்லாம் விடமாட்டேன்..
இங்கிலாந்தின் குக்கிராமமொன்றில் ஏழை விவசாயியொருவனின் மகனான அல்பர்ட் இந்தப் படத்தின் துணை-ஹீரோ... ஓய்வு நேரங்களில் மலைச் சரிவுகளிலும், புல்வெளிகளிலும் நடந்து திரியும் இவனது பார்வையில், ஒரு நாள் கண்ட காட்சி அவனது மனதை அப்படியே ஈர்க்கிறது... அது புதிதாகப் பிறந்த குதிரைக்குட்டியொன்று தன் தாயின் அரவணைப்பின் கீழ் உறங்கும் காட்சி..
(எக்ஸ்கியூஸ் மீ.. குதிரக்குட்டியை அது, இதுன்னுல்லாம் இனிமே கூப்பிடக்கூடாது. ஏன்னா அதுதான் நம்ம படத்தோட ஹீரோ!!)
பந்தயக் குதிரை வகைகளில் ஒன்றைச் சேர்ந்த நம்ம ஹீரோ, ஓடுவதையும், நடப்பதையுமே பார்த்து ரசித்து காலத்தை ஓட்டுறான் இந்த அல்பேர்ட்..
ஊரில் நடந்த குதிரை ஏலத்தில் நம்ம ஹீரோவும் விடப்படுறாரு.. அந்த ஏலத்திற்கு வருகை தந்தோரில் அல்பர்ட்டின் அப்பாவும், அவரது விவசாய நிலத்தின் எஜமானனும் (ஹாரி பாட்டர் ரசிகர்களுக்கு - Professor Lupin ஆக நடித்த David Thewlis) உள்ளடங்குவர்.. திமிர்பிடித்த எஜமானனை அசிங்கப்படுத்தும் பொருட்டு, ஏட்டிக்கு போட்டி போட்டு 30 guniea செலவில் நம்ம குதிரையை வாங்கிடுறாரு அப்பா.. தகுதிக்கு மீறி செலவு செய்தும்.. பந்தையக் குதிரையால் விவசாயத்துக்கு என்ன பயன்?? அதனால அவரோட மனைவி அவரை வன்மையாக கடிந்து கொள்றாங்க..
அவர்களின் மகனான அல்பர்ட்டோ நான் "இந்தக் குதிரைக்கு பயிற்சியளிக்கிறேன்.. இதை விவசாயத்துக்கு ஒத்துழைக்க முடியும்"னு கெஞ்சிக் கூத்தாடி, பயிற்சி வேலைகளில் ஈடுபடுறாரு.. குதிரைக்கு செல்லமா Joey (ஜோயி) பெயரை வைக்குறாரு.. ரெண்டு பேரும் "இணைபிரியாத" நண்பர்களாயிடுறாங்க..
அல்பர்ட் எவ்வளவோ முயற்சி செஞ்சும்... ஜோயி எவ்வளவோ ஒத்துழைச்சும்... சில துரதிருஷ்டவசமாக அப்பாவின் விவசாயம் முன்னேறவேயில்லை.. குடும்பம் வறுமையின் உச்சகட்டத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததால், நடக்கப் போகும் போருக்கான குதிரைகள் கொள்வனவு ஏலத்தில், மகனிடம் எதுவும் கேட்காமலேயே, அதை விற்றுவிடுகிறார்.. அல்பர்ட், ஜோயி மட்டுமன்றி ஒட்டுமொத்த இங்கிலாந்து சமூகத்தையே தலைகீழாகத் தூக்கிப் போடவிருக்கும் இந்தப் போரை அவர்களது நட்பு எப்படி எதிர்கொண்டது என்பதே கதை!!
திரும்பவும் சொல்றேன்.. படத்தோட ஹீரோ ஜோயிதான், அல்பர்ட் இல்லை.. Black Beauty போல குதிரை நினைப்பது இங்கு எமக்கு கேட்கவில்லை.. இருந்தாலும் அதன் perspectiveலேயே கதை போவது தெள்ளத் தெரிகிறது.. அல்பர்ட்டைத் தவிர நிக்கொல்ஸ் என்ற படைத்தளபதி, எமிலி என்ற சின்னப் பொண்னு, டொபதோர்ன் என்ற கறுப்புநிறக் குதிரை எனப் பல்வேறு நட்புக்கள் இந்தக் குதிரைக்கு கிடைக்கிறது.. ஒருவேளை இந்தக் கதையை வாசித்திருந்தால் இவர்களைப் பற்றி நாம் என்ன ஃபீல் பண்ணியிருப்போமோ, அதை படத்தின் மூலமே ஃபீல் பண்ண முடிவது இயக்குனரின் சிறப்பு..
எதிர்பார்த்தது போலவே படத்தில் நம்மை அதிகமாக கவர்வது ஹீரோதான்.. வேகமாக ஓடிப்போய் முட்கம்பியில் மோதுகையுறும் சீனில் எனக்கு இதயம் தானாக படபடத்தது.. அவ்வளவு அந்தக் குதிரையுடன் ஒன்றிப்போயிருந்தேன் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டடேன்.. நீங்களும் உணர்வீர்கள்!
படத்தில் கதாசிரியர் விளக்க முனைந்திருக்கும் இன்னொரு தலைப்பு.. மிருகங்கள் மீதான மனிதர்களின் பார்வை.. போரில் பலியாகும் இளைஞர்களின்துன்பங்களை ஏற்கெனவே பல படங்களில் பார்த்திருப்போம்.. ஆனால் போரில் பங்குகொள்ளும் ஏனைய மிருகங்களைப் பற்றி எவரும் இதுவரை பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.. சுமைதாங்க முடியாமல் பாதிவழியில் படுத்துவிடும் குதிரைகளை கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத் தள்ளுவதும், அல்பேர்ட்டின் அப்பா இந்த குதிரை தனக்கு உபயோகப் படாது எனத் தெரிந்ததும் சுடப் பார்ப்பதும் மனதில் பதியும் சீன்கள்.. (சுட்டாலும், சும்மா போக விட்டாலும் நட்டம் நட்டம்தானே..)
அல்பர்ட்டாக நடித்த ஜெரமியின் குரலில் காற்றின் அழுத்தம் அதிகமாக இருக்கு.. அதை தவிர்த்து வேறு யாரையாவது பேச விட்டிருக்கலாம்..
படத்தில் வரும் இங்கிலாந்துக் கிராமங்கள் கொள்ளை அழகு.. ஒளிப்பதிவாளர் புகுந்து விளையாடியிருக்கிறார்.. Battle சீன்கள் அழுத்தமாக இல்லாதபோதும் கதையின் ஓட்டத்தினை அவை தடுக்காது.. படத்தின் க்ளைமாக்ஸ் சீன் முதலில் சொன்ன சீனை விட இன்னும் டச்சிங்காக இருக்கும்.. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!
6 நாமினேஷன் வரை போயிருந்தும் வெறுங்கையோடு திரும்பியது சின்ன ஏமாற்றம்தான், இருந்தாலும் படம் ஏமாற்றவில்லை.. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 16
கதை+திரைக்கதை = 14
கலை+ஒளிப்பதிவு =17
இயக்கம் = 16
மொத்தம் = 84% சூப்பர்!
Subscribe to:
Post Comments (Atom)
இரவு வணக்கம் நண்பரே..நலமா ?
ReplyDeleteஇப்பொழுது எல்லாம் அடிக்கடி தங்களது எழுத்துக்களை வாசிப்பதில் மகிழ்கிறேன்..ஒரு நல்ல விமர்சகரிடத்திலிருந்து இன்னொரு முத்தான விமர்சனம்.ரசித்தவற்றை தெளிவாக அருமையாக சொல்லிருக்கீங்க நண்பரே.வாழ்த்துக்கள்.
இது நம்ம ஸ்பீல்பெர்க் படமாச்சே..பார்க்காம போவேனா ? இப்பதான் டவுன்லோடு போட ஆரம்பிக்க போறேன்.அதுக்குள்ள உங்க திரைப்பார்வை படம் பார்ப்பதற்கு மேலும் ஒரு உறுதியை வழங்கிவிட்டது..பார்த்துவிட்டு மீண்டும் கருத்திடுகிறேன்.மிக்க நன்றி.
@ Kumaran - இரவு வணக்கம் நண்பா! All iz Well!
ReplyDelete//இப்பொழுது எல்லாம் அடிக்கடி தங்களது எழுத்துக்களை வாசிப்பதில் மகிழ்கிறேன்// மிக்க மகிழ்ச்சி நண்பா!!
நான் ரசித்ததை எழுத்தில் போட முடிந்தாலே பெரிய விஷயம்.. அது உங்களுக்கும் போய்ச் சேர்ந்ததில் இன்னும் பெரிய சந்தோஷம்!!
//போரில் பங்குகொள்ளும் கஏனைய மிருகங்களைப் பற்றி எவரும் இதுவரை பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை..//
ReplyDelete//குதிரையுடன் ஒன்றிப்போயிருந்தேன் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டடேன்..//
Excellent Review....Hats off...அருமையான வரிகள்....படத்தை ரொம்ப அனுபவித்து பார்த்து இருக்கேங்க !! நானும் படம் பார்த்து உள்ளேன், ஆனா உங்க அளவு நான் படத்தை ரசிக்க வில்லை...!! நான் பார்த்த டைமிங் சரி இல்லேன்னு நினைக்குறேன்...
என்னவோ தெரில பாஸ் எனக்கு இந்த படம் பிடிக்கவே இல்ல.. நீங்க நல்லா ரசிச்சு எழுதி இருக்கிங்க,
ReplyDelete84 மார்க் போட்டிருக்கீங்க. நம்ம ஸ்பீல்பெர்க் படம் வேறு. சொல்ல வந்த விஷயமும் நல்லாயிருக்கு. Presentation எப்படியோ தெரியல.
ReplyDeleteரெண்டு மாசத்துக்கு முன்பே டவுன்லோட் பண்ணி இன்னும் ஓரமா தூங்குது.சீக்கிரம் பார்க்கலாம். ஹாலிவுட்ரசிகன்னு என் பேரே வேஸ்ட்டு. பேசாம ஹாலிவுட்சோம்பேறின்னு பேரை மாத்திக்கலாம்னு யோசிக்கிறேன்.
நண்பா...
ReplyDeleteஆரம்பத்தில் ஸ்பீல்பெர்க் பரம் ரசிகன்.
சமீப காலமாக அவரது படங்கள் என்னை பெரிதாக கவரவில்லை.
உங்கள் பதிவு....'உடனே படத்தை பாருடா...முட்டாள்' எனக்கூறுவது போல் பட்டது.
படம் பார்த்து விட்டு...மீண்டும் ஒரு கமெண்ட் போடுகிறேன்.
@ ராஜ் - பாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பா!! படத்தை பார்த்திருக்கிறீர்கள்.. நீங்களும் உங்கள் கருத்தை பதிவிட்டிருக்லாமே.. (உங்களது அடுத்த பதிவு எப்போ?)
ReplyDelete@ αηαη∂ - ஒவ்வொருத்தருக்கும் ரசனை மாறுவது இயல்பே நண்பா!!
@ ஹாலிவுட்ரசிகன் - தாராளமா மார்க் அள்ளிப்போடுவது என் இயல்பே நண்பா.. நீங்கள் போட்டிருந்தால் குறைய சான்ஸ் இருக்கு!
ReplyDeleteநீங்க தொடர்ந்து ஆஸ்கர் படங்களாக எழுதிக்கிட்டிருக்கும் போது (Hugo, The Help) //நானும் The Artist, The Warhorse படங்களை இன்னும் பார்க்கவில்லை. ஒரிஜினல் ப்ரிண்ட் வர்றவரை தான் வெயிட்டிங்.// இப்படி ஒரு கமெண்டை போட்டிருந்தீர்கள்.. ஞாபகம் இருக்கா..? இப்போ நான் போடவா "வார்த்தை தவறிவிட்டாய், ஹாலிவுட்ரசிகா?"ன்னு..:-)
* என்னது இது? அடிக்கடி "பெயரை மாத்தப்போறேன், மாத்தப்போறேன்னு" சொல்றீங்க.. யாருகிட்டையாவது பந்தயம் வைச்சு தோத்துட்டீங்களா??
அப்படி எல்லாம் இல்லைங்க. நிறையப் படங்கள் பார்க்க ஆசை இருந்தாலும் வேலை, ஃப்ரெண்ட்ஸ்னு நேரம் கிடைக்காமல் தள்ளிப் போய்ட்டே இருக்கு. முந்தா நாள் கூட Mission Impossible டவுன்லோட் செய்தேன். இன்னும் பார்க்க ஞாபகம் வரல. எழுத இல்லாட்டியும், படம் பார்க்க சோம்பேறித்தனம் கூடுது.
Deleteஉலகசினிமா ரசிகன் - எனக்கும் ஸ்பீல்பெர்க்கின் டச் விட்டுப் போகின்றதை உணர முடிந்தது நண்பா.
ReplyDeleteSchindler's List மாதிரி ஒரு படத்தை இனிமே எவனாலும் எடுக்க முடியாது.. அதை மையமாக வைத்துக்கிட்டே, ஸ்பீல்பேர்க் இன்னமும் தருவார்னு எதிர்பார்க்கிறோமான்னு தெரியலை.. ஆனாலும் இது அந்த மனிஷருக்கு ரொம்பவே pressure தான்!
War Horse நிச்சயம் பார்க்கக் கூடியதாய் இருக்கும்!!
* //'உடனே படத்தை பாருடா...முட்டாள்'//
ஐயையோ.. ஐ ஆம் பாவம்..
ரெண்டு வாரத்துக்கு முன்புதான் படத்தை பார்த்தேன். இந்த மாதிரி வரலாற்று படம் எடுக்க ஸ்பீல்பெர்க்கால் மட்டுமே முடியும். பகிர்வுக்கு நன்றி சகோதரரே
ReplyDelete@ தடம் மாறிய யாத்திரிகன்- முதலாம் உலகப்போர் கதைக்களமே.. மிகுதி அனைத்தும் கற்பனை.. ஆதலால் இது வரலாற்றுப் படங்களுக்குள் அடங்காது. ஆனால் ஸ்பீல்பெர்க்கின் பங்களிப்பு மறுக்க முடியாததே..
ReplyDeleteகருத்துக்கு நன்றி சகோதரா!! அடிக்கடி வாங்க..
கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதுக்கு ஒரு 80மார்க் கொடுக்கலாம். விமர்சனம் போட்டு சீக்கிரமே பார்க்கப் பண்ணியதற்கு நன்றி JZ.
ReplyDeleteக்ளைமாக்ஸ், கம்பியிலிருந்து மீட்கும் காட்சிகள் டச்சிங்.
Deleteபார்த்தாச்சா.. வெரிகுட். படம் பிடித்திருந்ததில் மிக்க மகிழ்ச்சி!
Delete