Monday, April 16, 2012

டிம்மும் டெப்பும் - 1

ஹாய் நண்பர்களே.. ஏதோ கால தேவதைகள் செய்து கொண்டிருக்கும் சதிகளால் புதுசா எந்த ஹாலிவுட் படமும் பார்க்கக் கிட்டவில்லை.. மாறாக விட்டுப்போன பல தமிழ்ப்படங்களை பார்த்துக் கொண்டேன்.. (சமீபத்தில் பார்த்த "தோனி, ஒரு கல் ஒரு கண்ணாடி" போன்ற படங்கள் மிகவும் பிடித்துக் கொண்டன..)
2 வருடமாக வலையுலகில் இருந்து, இப்போதான் உருப்படியாக 6 பி.பி.எம் (posts per month) அளவை தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.. அதுனால அது விட்டுப்போயிடக் கூடாதேன்னு இந்த வெட்டித் தொடர் பதிவை எழுதலாம்னு நினைச்சேன்.. இது மூலமா ஹாலிவுட்டில் எனக்குப் பிடிச்ச ஒரு காம்பினேஷனைப் பற்றி பார்க்கலாம்னு இருக்கேன்!

அதென்ன டிம்மும் டெப்பும்...? Tim Burton-னும், Johnny Depp-பும் அப்படிங்கிறதைத்தான் சுருக்கியிருக்கேன்.
டிம் பர்ட்டன் ஹாலிவுட்டில பேன்டஸி திரைப்படங்கள் எடுப்பதிலே கை தேர்ந்நத ஒருவர்.. ஜானி டெப் விதவிதமா மேக்கப் போட்டுக்கறதுக்கும், காமெடி கலந்த நடிப்புக்கும் பெயர் போன ஒருவர்.. இப்படி இருக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்தா இப்படியொரு சக்சஸ்ஃபுல் கூட்டணி அமையுங்கறதுல சந்தேகமே இருக்கக் கூடாது!!
எல்லாரும் கதைக்குள்ள போவோமா?...

1890கள்..

ஆரம்பகாலங்களில் தான் எடுத்த குறும்படங்கள் வெற்றியளிக்கவே, டிம் பர்ட்டன் தனது முதல் முழுநீளத்திரைப்படமான Luauவை 1982 வெளியிடுறாரு.. படம் படுதோல்வியடைந்தும் மனம் தளராத விக்ரமனாய் மூன்று வருடம் கழித்து Pee-wee's Big Adventure ஐ இயக்க அது ப்ளாக்பஸ்டர் ஹிட்டாவுது.. அதோட முதன்மைக் கதாப்பாத்திரமான "ஹேர்மன்" இன்றளவும் அமெரிக்காவில் பிரபலம்!
தொடர்ந்து இருவருடங்களில் BeetleJuice (1988), Batman (1989) இரு ஹிட்களைக் கொடுத்து, ஹாலிவுட்டின் வளரும் இயக்குனளர்களில் ஒருவராக பிரபலமாயிடுறாரு!

இதற்கு நேர்மாறாக பயணிக்கிறது ஜானியின் கதை.. முதல் இரண்டு படங்களும் மெகா-ஹிட்.. (A Nightmare on Elm Street, Private Resort) ஆனால் இரண்டிலுமே துணைக் கதாப்பாத்திரம்! அதை தொடர்ந்து ரெண்டு தோல்விப்படம்.... 1990ல் முதன் முதலில் ஹீரோவாக நடித்து வெளிவந்த Cry-Babyயும் கமர்சியல் ஃப்ளாப் ஆகிவிட்டது!  இந்தக் காரணங்களால் ஹீரோவாக தன்னைப் பதித்துக் கொள்வதற்கு உகந்த ரோலைத் தேடியலைகிறார்..

1990- Edward Scissorhands

ரெண்டுபேர் கேரியர்லயும் ஹைலைட்டான படம்.. ஜானிக்கு அசத்தலான ஹீரோ ரோல் கிடைத்தது.. படத்தை பார்த்தவர்கள் credits ஓடும்வரை நின்று டிம் பர்ட்டனின் பெயரை அறிந்துவிட்டுச் சென்றார்கள்..
அது சரி எப்படி இந்தக் காம்பினேஷன் தொடங்கிச்சு..? கதை ரெடி, ஹீரோயினும் செலெக்ட் பண்ணியாச்சு.. ஹீரோவா யாரைப் போலாம்னு பர்ட்டன் மண்டையை பிச்சுக்கினு இருந்த சமயம், விநியோகஸ்தர்கள் 20th Century Fox சார்புல, ஒருத்தரை கூட்டிட்டு வந்து இவருதான் உங்க படத்துக்கு பொருத்தமாயிருப்பாருன்னு விடுறாங்க. அவரு....

Tom Cruise! படத்தோட கதையை சுவாரஸ்யமா உட்கார்ந்து கேட்குறாரு.. முடிச்சதுக்கப்புறம், "எது கடைசியில காதல் ஜோடி சேராதா?"ன்னு பல கேள்விகள் கேட்டு, மகிழ்ச்சியான Ending வைச்சாத்தான் நான் நடிப்பேன்னு அதகளம் பண்ணி க்ரூஸ் படத்துல இருந்து விலகிக்கிறார்..
'முதல் டாம் போனா என்ன? ரெண்டாவது டாம் இருக்கானே'ன்னு Tom Hanksஐ அணுக, அவரோ 'The Bonfire of the Vanities' அப்படீங்கற படுதோல்வியடையப் போற ஒரு படத்துக்காக.. சூப்பர் ஹிட்டாகப்போற இந்தப் படத்தை நிராகரிக்கிறார்..

கடைசியா அந்தக் காலத்துல, பிரபலமான 21 Jump Street (இப்போ படமா ரிலீசாயிருக்கே.. அதேதான்!) எனும் நாடகத் தொடரில் குதூகலமான வாலிபனாக நடித்திருந்த ஜானி டெப்பிடம் ஸ்க்ரிப்டை கொடுத்திருக்கிறார்கள்.. ஜானி வாசிச்சுட்டு உணர்ச்சிவசப் பட்டு அழத் தொடங்கிட்டாராம்.. பர்ட்டனுக்கும் ஜானியை புடிச்சுப்போச்சு "வசனங்கள் பேசியே அநுதாபத்தை வரவழைப்பது எப்படீ"ன்னு சார்லி சாப்ளின் படங்களை பார்த்து பழகிக்கிட்டு, ஜானி டெப் Edwardஆக..
வந்தான்... வென்றான்!
படத்தை பற்றிய நம்ம விமர்சனம் படிக்க..


1994- Ed Wood

நாலு வருஷம் கழிச்சு இன்னொரு படம்.. 'உலகின் மிகக் கேவலமான டைரக்டர்' எனும் விருதுவாங்கிய Ed Wood அப்படீங்கிறவரைப் பற்றிய கதை (தொழில்நுட்பப் பிழைகள், ஒத்துவராத ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், பைத்தியக்காரத்தனமான வசனங்கள், கதாப்பாத்திரங்கள், சுத்த சூனியமான கதை... இவற்றைப்போட்டு படம் எடுப்பதில் இவருக்கு நிகர் எவருமேயில்லையாம்!!)..
"இப்படிப்பட்ட படத்துக்கு யாரு ஹீரோவா நடிப்பா?"ங்கற தயக்கத்துல பர்ட்டன் ஜானியை அணுகுகிறார்..

ஜானி டெப்புக்கோ இன்னொரு கவலை.. ஒரே மாதிரியான பாத்திரங்கள் அமைந்ததாலோ, என்னவோ சினிமா, படங்கள் மீதான அவரோட ஆர்வம் குறைஞ்சிருந்திச்சாம்.. பேசாம வேற வேலைய பார்த்துட்டு போவோமான்னு யோசிச்சுக்கிட்டிருந்த வேளையில தான் இந்த ஸ்கிரிப்டை கையில கொடுத்துருக்காரு.. வாசிச்சு பத்தே நிமிஷத்துல ஓ.கே சொல்லிட்டாரு! விரக்தியில் இருந்தவனுக்கு வெனிலா ஐஸ்கிரீம் கொடுத்தா மாதிரி ஜானியோட மூடே மாறிடுச்சு.. இப்ப நாம பார்த்துக்கிட்டிருக்கோமே, ஒரு லாவகமான, அசால்ட்டான, காமெடியான ஜானி டெப்... அதுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்தப் படம்தானாம்.. இது மூலமாத்தான் ஜானிக்கு திரும்பவும் சினிமாமேல இருந்த ஆர்வம் டாப் கியரில் கூடிருச்சு!!
இவர்கள் கூட்டணியில் வந்திருக்கும் ஒரே கறுப்பு-வெள்ளை படம் இதுதான்.. ஒரே 'ப்ளாப்' ஆன படமும் இதுதான்!
நான் இன்னும் பார்க்கலை.. பார்த்த யாராவது இருந்தா எப்படி படம்னு சொல்லிட்டு போங்க!

(எல்லாப் புகழும் விக்கிபீடியாவுக்கே..)

12 comments:

  1. @@ ஏதோ கால தேவதைகள் செய்து கொண்டிருக்கும் சதிகளால் புதுசா எந்த ஹாலிவுட் படமும் பார்க்கக் கிட்டவில்லை.. @@
    அட..இப்படியுமா சதி பண்ணுவாங்க..இருக்கட்டும் இருக்கட்டும் வச்சிக்கிறேன்.

    அட நெக்ஸ்ட்..

    @@ 2 வருடமாக வலையுலகில் இருந்து, இப்போதான் உருப்படியாக 6 பி.பி.எம் (posts per month) அளவை தக்கவைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது..@@
    வாழ்த்துக்கள்//தொடர்ந்து வெற்றியுடன் மலர்க..

    ஜோன்னியோட படங்கள் பார்த்த அளவுக்கு கூட நான் Tim Burton படைப்புகளை பார்த்தது இல்ல..அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன்.சரியா படங்கள் பார்க்க டைம் கிடைக்கல.
    தங்களது எழுத்துக்கள் "இந்தா ரெண்டு மூனு படத்த டவுன்லோடு போட போறியா இல்லியா ? இல்ல உடைச்சுருவேனு" சொல்ற மாதிரி இருக்கு..சரளமான எழுத்து நடை..பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பா.

    ReplyDelete
  2. @ குமரன் - பாராட்டுக்கு நன்றி!
    டிம் பர்ட்டன் படங்கள்ல பாதி ஜானி டெப் கூட சேர்ந்து செஞ்சதுதான்.. நீங்க ஜானி டெப் படங்கள் பார்த்திருக்கறதால, கண்டிப்பா அதுல ஒண்ணு ரெண்டாவது டிம் படங்களும் இருக்கலாம்!
    நானே Ed Wood பார்த்ததில்லீங்கறேன்.. நான் அந்த படத்தை டவுண்லோட சொல்வேனா.. ஆனாலும் இந்தக் கூட்டணியில மொத்தம் 5 out of 7 படங்கள் நம்ம டவுண்லோடுக்கு வொர்த்தா இருக்கும்!!

    ReplyDelete
  3. செம்ம டாபிக் மச்சி. அடுத்து வரப்போகும் Dark Shadowsக்கு பிள்ளையார் சுழி போல தெரியுது. அந்தப் படத்தின் ட்ரெயிலரும் நல்லாயிருந்துச்சு. ஆனா ஒன்னு ... இன்னும் நான் ஜானி டெப்பின் நிறையப் படங்கள் பார்க்கல. நோ டைம் யு ஸீ ... வெரி பிஸி.

    ஆனா நீங்க சொன்னதுக்கப்பறம் பார்க்கணும்னு தோணியிருக்கு. Edward Scissorhands கைவசம் இருக்கு. முதல்ல அதைப் பார்த்துட்டு அப்புறமா மத்ததுல கை வைக்கலாம்.

    ReplyDelete
  4. @ ஹாலிவுட்ரசிகன் - கரெக்டா புரிஞ்சுகிட்டீங்க.. அடுத்த மாசம் படம் ரிலீஸ். அதுக்கு முன்னால இந்த தொடரைப் போட்டா, related topicகாக பயணிப்பதோடு, படத்துக்கான எதிர்பார்ப்புக்களையும் கூட்டலாம்னு நினைச்சேன்!
    முதலாவதுல இருந்தே ஆரம்பிக்குறீங்களா?? ரொம்ப நல்லது!!

    ReplyDelete
  5. Boss...ivanga combination yenaku piduchathu "Sweeney Todd: The Demon Barber of Fleet Street" ..ore ratha kalariya irukkum.... aduthu Dark Shadows.. tralier e pataya kelaputhu...

    ReplyDelete
    Replies
    1. Thanks for visiting KSB, My favourite one is "Charlie and the Chocolate Factory", but i love 'Sweeny Todd' too..

      Delete
  6. நல்ல தொடர் பாஸ்....சுவாரிசியமா இருக்கு..
    Johnny Depp one of my favourite actors...
    நானும் கூட நோலன் பத்தி இது மாதிரி ஒரு தொடர் எழுதலாம்ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்....
    துணைக்கு உங்கள மாதிரி நண்பர்களை அழைக்கலாம்ன்னு நினைச்சேன்.. நீங்களே ஆரம்பிச்சிட்டேங்க....கலக்குங்க...

    ReplyDelete
  7. @ ராஜ் - நன்றி நண்பா! நோலன் பற்றி கண்டிப்பா எழுதுங்க.. காத்திருப்பேன்!

    ReplyDelete
  8. நிறைய மேட்டர் பாஸ், கலக்குறிங்க........

    /////விரக்தியில் இருந்தவனுக்கு வெனிலா ஐஸ்கிரீம் கொடுத்தா மாதிரி ஜானியோட மூடே மாறிடுச்சு.. //////
    ம்ம்.. எப்படி இப்படி எல்லாம் யோசிகிரிங்க..........

    ReplyDelete
  9. @ MuratuSingam - நன்றி பாஸ், அடிப்படி டி.ராஜேந்தரோட ஜோக்ஸ் பார்த்துக்கிட்டிருக்கதாலதான் இப்படி வருதோ? தெரியலை.

    ReplyDelete
  10. neenga ipo edwood parthu irupeenga...enaku tim depp series la romba pidicha padam ed wood thaan, tim thavira vera yarnalum ed wood keli panni thaan eduthuirupanga aana tim ed wood a oru nermaya avaroda intentiona enannanu solli eduthu irundhar...my all time favorite.!!

    ReplyDelete

Related Posts with Thumbnails