Thursday, April 19, 2012

டிம்மும் டெப்பும் - 2

Ed Wood தோல்வியடைந்திருந்த போதிலும், ஜானி டெப்புக்கு வாய்ப்புக்கள் சரளமாக வந்துகொண்டேயிருந்தன.. அடுத்த 5 வருடங்களில் 8 படங்கள் நடித்துக் கொடுத்தார்.. அதிலே மிக முக்கியமான career-turning படம் 'Donnie Brasco'.. இன்னொரு ப்ளாக்பஸ்டர் படம்!
Undercover வேலையில் இறங்கிக் கலக்கிய FBI ஏஜென்டின் கதை.. மாஃபியா, ஆக்ஷன் எல்லாம் ஜானிக்கு புதுசுன்னாலும் தன்னோட திறமையை வெளிப்படுத்தி, எந்தவொரு ரோலிலும் நடிக்கும் திறமை தனக்கு இருக்குன்னு நிரூபிச்சுட்டாரு! ஜானியோட திறமை அவரை ரோமன் பொலான்ஸ்கியோடு சேர்ந்து படம் செய்யும் அளவுக்கு (The Ninth Gate) கூட்டிட்டு போக, ஹாலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நாயகர்களில் ஒருவனாக மாறிப் போனான்..
இவரு கதை இப்படிப் போக அங்கே..

அடுத்து என்ன படம் பண்ணலாம்னு யோசிச்சுக்கிட்டிருந்த டிம் பர்ட்டன், அப்போது Trading Card சீரிஸாக வந்துகொண்டிருந்த Mars Attacks! ஐ மையமாக வைத்து, 1950களின் சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளை நக்கலடித்து காமெடிப் படமாக எடுத்தார்.. இந்தப் படத்துக்காக ஜானி டெப்பை வழக்கம் போல அணுகிய போது, ஜானி டெப் முதன்முறையாக மறுப்புத் தெரிவித்திருந்தான்..
இருந்தாலும் நடாலி போர்ட்மேன் உள்ளடங்கலாக ஒரு நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்டு படத்தை இயக்கினார். இந்தப் படம் 100 மில்லியன் செலவில் தயாரான வேளையில் தான், 75 மில்லியன் செலவில் (அப்போது பிரபலமாயிருக்காத) வில் ஸ்மித் என்பவரை வைச்சு "Independence Day" படமும் தயாராகிக் கொண்டிருந்தது..

ரிசல்டு என்னன்னு சொல்லவா வேணும்?? Independence Day ஜுலையில் ரிலீசாகி 817 மில்லியன் வசூலித்து மெகா...ஹிட்டாக, Mars Attacks போட்ட காசிலும் 1 மில்லியன் அதிகமாக எடுக்கவே தள்ளாடியது.. பற்றாக்குறைக்கு எல்லாரும் Independence Dayயோட spoof வேர்ஷன்தான் மார்ஸ் அட்டாக்ஸ்னு நினைச்சுக் கொண்டதால் படம் தோல்வியைத் தழுவிக்கொண்டது..


1999 - Sleepy Hollow

டிம் பர்ட்டனுக்கு சின்ன வயசுலேர்ந்தே இருட்டு, பயம் போன்றவற்றைப் பற்றி வாசிப்பதில் ரொம்ப விருப்பம்.. இவர் எடுக்கும் பெரும்பாலான படங்களில் மெல்லியதாக ஒரு dark/horror தீம் இழையோடும்.. அது முழுசாக வெளிப்பட்ட படம்தான் இது! தலையில்லாத முண்டமொன்றினால் நிகழ்த்தப்படும் தொடர் கொலைகளைப் பற்றி விசாரிக்க அனுப்பப்படும் கான்ஸ்டபிளுடன் பயணிக்கும் கதை.. இந்த முறை ஜானி சம்மதிச்சுட்டாரு!
நாவலைத் தழுவி எடுத்த படமென்பதால், பர்ட்டனுக்கு வேலை குறைவே.. அதையும் ஒழுங்காக செய்திட்டாரு.. படம் கமர்சியலாகவும், க்ரி்ட்டிக்கலாகவும் படு ஹிட்.. 'சிறந்த கலை'க்கான ஆஸ்கர் விருதும், 2 BAFTA விருதுகளையும் பெற்றுக்கொண்டது.. 90'களின் ஹாரர் படங்கள் பார்க்க விரும்புவோருக்கு ஏற்ற படம்.. டைம் கிடைச்சா பாருங்க..
ரோமன் பொலான்ஸ்கியோட படம் தோல்வியடைஞ்சிருந்தாலும், அதே வருடம் வெளியான இந்தப் படம் வெற்றியளித்ததால் ஜானி டெப்பின் மார்க்கெட்டும் அதிகமாகியது!


2000-2004

" ஜானி டெப் தன்னோட எல்லாப் படத்துலயும், டிம் பர்ட்டனுக்கு ஏற்ற மாதிரியே நடிக்குறாரு"
இப்படி சொன்னது Sleepy Hollow படத்தோட தயாரிப்பாளர் ஸ்கொட் ரூடின்.. இதைப்பத்தி ஜானியிடம் கேட்டப்போ அது உண்மைதான்னு ஒத்துக்கிட்டிருக்காரு.. ஆனா பர்ட்டன் இந்தக் கருத்தை மறுத்திருக்காரு..
ஸ்கொட் என்ன காரணத்துக்காக இந்த டயலாக்கை வுட்டானோ தெரியாது.. ஆனா ரெண்டு பேரோட கூட்டணிக்கும் திருஷ்டி விழுந்தா மாதிரி ஆயிடுச்சு.. டிம்-டெப் சேர்ந்து படம் செய்யாத காலப்பகுதிகளில் மிக நீண்டது இதுதான்.. ரெண்டு பேருக்குள்ளும் ஏதாவது மனஸ்தாபம் இருந்திருக்கலாம்னு நினைக்கிறேன்.. ஆனா அதை உறுதிப்படுத்த முடியாது!

சுமார் ஸ்டாராகவே இருந்த ஜானி டெப்பை, சூப்பர் ஸ்டாராக உயர்த்தி விட்ட படம் 2003ல் வெளி வந்தது... Pirates of the Carribean! இரட்டை வெட்டுத் தாடியும், தள்ளாடும் நடையும், உதட்டோரம் இழுத்துக்கிட்டே பேசும் பேச்சும்... ஜானி டெப்பைத் தவிர எவனையுமே Jack Sparrow கதைப்பாத்திரத்தில் வைச்சுப் பார்க்க முடியாது நம்மளுக்கு.. ஆனா இந்த கதாப்பாத்திரத்தை உருவாக்கினதே இன்னொரு நடிகரை மனசுல வைச்சுக்கிட்டுத்தானாம். அவரு...

Hugh Jackman! இவரு பெயருல இருந்த ஜாக்கைத் தான் தூக்கி பிரதான கதாப்பாத்திரமாக்கி இருக்காங்க.. ஆனா படமாக்குவதில் சின்ன பிரச்சனை. ஜாக்மேனைப் பத்தி அவரது தாய்நாடான அவுஸ்திரேலியாவைத் தவிர ஏனைய நாடுகளில் பெரிதாக தெரியாது.. ஸோ, உலகம் பூராவும் மார்க்கெட்டிங் பண்ணுவது சிரமம்! இதற்காக ஜானியை அணுகியபோது, கதாப்பாத்திரத்தில் ஆர்வம் காட்டி சம்மதிச்சு, பிரபல கிட்டாரிஸ்டான Keith Richards என்பவரின் மேனரிசங்களை பழகிக்கொண்டு நடித்துக் காட்டினாராம்..ஆனா அதை பார்த்துட்டு, அப்போதைய டிஸ்னி பிக்சர்ஸின் CEO 'எயிஸ்னர்' கடுப்பாகிட்டாரு.. 
"இவன் இந்தப் படத்தையே நாசமாக்கிடுவான் போலயிருக்கே..."
ஜானி சிறிதும் அசரவில்லை.. "இதைப் பாரு, நான் இதைத்தான் தேர்ந்தெடுத்தேன்.. நீ என்னோட மத்தப் படங்களை பார்த்திருக்கே.. ஒண்ணு, நம்பி படத்தை கொடு, இல்லைன்னா நான் கெளம்புறேன்"

"ஜானியை நம்பினோர் கைவிடப்படார்னு" படம் ரிலீசானதும் எயிஸ்னர் புரிஞ்சுகிட்டாரு.. 654 மில்லியன் வசூல்!
ஜானி கொடிகட்டிப் பறந்துட்டிருந்த இந்தவேளை டிம் என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு??

15 comments:

  1. இந்தவேளை டிம் என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு?? @@
    என்ன பண்ணிகிட்டிருந்தாறு..சீக்கிரம் சொல்லுங்க,

    Sleepy Hollow - படத்தை நீண்ட நாடகளாக வைத்திருந்தும் இன்னும் பார்க்கவில்லை..விரைவில் பார்க்கிறேன்.ஜோனி டெப் எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர்..சிறப்பான தொடர்..தொடருங்கள்.மிக்க நன்றி.

    ReplyDelete
  2. Johnny Depp நடிப்புல Sleepy Hollow'வும் நல்ல ஹாரர் படம் தான்.

    இதன் தொடர்ச்சியை விரைவில் எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  3. @ Kumaran - சொல்வேன்.. நீங்கதான் 'அக்மார்க்' ஹாரர் ரசிகராயிற்றே.. பார்க்கனும்னு உங்களுக்கு நான் சொல்லவே தேவையில்லை!
    நான் டிகாப்ரியோ ரசிகனாக இருந்தாலும், ஜானியோட படங்களைப் பார்க்கும்போது கிடைக்கும் சுகமே தனி!! ரொம்பப் புடிச்ச நடிகர்..
    வருகைக்கு நன்றி நண்பா!

    @ MuratuSingam - விரைவில் வரும்.. வருகைக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  4. தொடர் நல்ல சுவாரஸ்யமா போகுது. விமர்சனங்களில்லாமல் தொடராக தருவது நல்ல முயற்சி.

    இன்னும் கலக்குங்க JZ. :) :) :)

    ReplyDelete
  5. //ஜானி டெப்பைத் தவிர எவனையுமே Jack Sparrow கதைப்பாத்திரத்தில் வைச்சுப் பார்க்க முடியாது//.. உண்மை உண்மை உண்மை.. நல்லா போய்ட்டு இருக்கு.. Continue..

    ReplyDelete
  6. @ ஹாலிவுட்ரசிகன், Castro Karthi -வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  7. ராப்பகலா கண்முழிச்சு ஆங்கில படங்களை பார்க்க தெரிந்த எனக்கு , அதன் பின்னணி பற்றி அதிகம் தெரியாது தான். ஏதோ சுமாராக தான் தெரியும். உங்களோட பிளாக் பார்க்கிறேன் , அப்படியே கொலிவூட் பாலா பிளாக் பார்த்த அனுபவம். தொடர்ந்து எழுதுங்கள்.

    நண்பா எனக்கு கௌபோஸ் படங்கள் மற்றும் அனிமேசன் படங்கள் என்றால் அலாதி பிரியம். நீங்கள் கொழும்பில் இருப்பத்காக உங்களது சுயவிபரம் சொல்கிறது. அனிமேசன் படங்கள் இலகுவாக கிடைக்கும் கொழும்பில் கௌபோய் படங்கள் இலகுவாக கிடைப்பதில்லை. உங்கலுக்கு ஏதும் இடம் தெரிந்தால் சொல்லலாமே! அது போக இன்னொரு உதவியும் வேண்டும் "3:10 யூமா" , 'ஷேன்" வகையான கைபோய் படங்கள் சிலவற்றை பட்டியலிடுங்களேன். அதாவது எனக்கு பார்பதற்கு சில கைபோய் படங்களை சிபாரி செய்ய்ய முடியுமா? அந்த டிவிடி க்கள் கிடைக்கும் இடம் சொன்னால் பேருதவி!

    ReplyDelete
  8. @ கிஷோகர் - 50வது பதிவுல, 50வது ஃபாலோவராக வந்து இணைந்து கொண்டமைக்கு நன்றி நண்பா!
    நானே மத்தவங்கள்ட வாசிக்கிறதுல இருந்து தான், பல விஷயங்களை அறிந்து கொள்கிறேன்..

    ஆகா.. நான் அனிமேஷன் படங்களின் ரசிகன் தான்.. ஆனால் கெளபோய் படங்கள் மீதான் என் ஈடுபாடு குறைவு.. பார்த்த ரெண்டே ரெண்டு வெஸ்டேர்ன் படங்கள் - true grit, open range.. ரெண்டும் 2000க்கு அப்புறம் வந்தவைங்கறதால, நீங்க எதிர்பார்க்கும் கெளபோயிசம் குறைவு!!

    கொழும்பில் கெளபோய்ப் படங்களை நான் எங்குமே கண்டதில்லை! நீங்க தேவையான படங்களை டவுண்லோட் பண்ணிக்கலாமே..

    நண்பர் ராஜ், நல்லா கெளபோய் படங்கள் பற்றி எழுதுவாரு.. போய்ப் பாருங்க -
    http://hollywoodraj.blogspot.com/2011/12/for-few-dollars-more-1965.html
    http://hollywoodraj.blogspot.com/2012/01/fistful-of-dollars-1964-2.html
    http://hollywoodraj.blogspot.com/2012/02/good-bad-and-ugly-1966-3.html

    ReplyDelete
    Replies
    1. பிரிட்டானியா 50 - 50 யாக நான் வந்தது குறித்து சந்தோசம்! (ஆமா இவரு பெரிய சச்சினு, பதிவிலயும் 50, பாலோவர்ஸ்லயும் 50னு சாதன பண்ணி இருக்காரு, நாங்க பெரிய பி.ஸி.ஸி ஐ, போய் வாழ்த்து சொல்றோம், போங்கடா டேய் #சும்மா வெளையாட்டுக்கு)

      டவுன் லோட் பண்ணுறது கொஞ்சம் பட்ஜட்ல இடிக்குது சார்! ஒரு அவரேஜ் குவாலிட்டி படம் தரவிறக்க வேணும்னா 500 மெகா பைட்ஸ் சரி போயிடும். நான் பாவிக்கிற டயலொக் பிரோட் பாண்ட்ல 500 மெக பைட்ஸ் அப்டீன்றது 600 ரூபாவுக்கு சமம். உங்களுக்கே தெரியும்! ஆனால் மெஜஸ்டிக் சிட்டியில் இந்த அறுநூறு ரூபாவுக்கு நல்ல குவலிட்டி படங்க ள் மூன்று வாங்கலாம். அது தான் இடிக்கிறது.

      அது கூட பரவாயில்லை, இப்போது விடுமுறையில் ஊரில் இருப்பதால் டி.வி யில் உதைபந்தாட்ட போட்டிகளை பார்த்துவிடுகிறேன். ஆனால் மீண்டும் பல்கலைகழகம் ஆரம்பித்தவுடன் கொழும்பு வந்தால் போட்டிகளை பார்பதற்கு இணையமே கதி. இந்த 500 மெக பைட்ஸ் என்பது ஒரு போட்டிக்கான ஒதுக்கீடு. சம்பியன்ஸ் கிண்ண போட்டிகள் சூடு பிடிக்கும் இந்த நேரத்தில் படம் தரவிறக்கி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. (ராஜ தந்திரம்!)

      இருந்தாலும் பரவயில்லை, சில தரவிறக்கும் தளங்கள் சொல்லுங்களேன் ( மீ நோ ஒன்லி 'யூ டொரண்ட்" மற்றும் சில)

      Delete
    2. உங்க ராஜதந்திரம் சரியானதே! மெயின்டெய்ன்..

      தரவிறக்குறதுக்கு நான் நாடுவது piratebay தான்.. ஃபலோட அளவையும், அதுக்கு போட்டிருக்கற கமென்ட்ஸையும் வாசிச்சுட்டாலே புரியும்.. அதை நம்பலாமா? நம்பப் படாதான்னு..

      ஆன்லைனில் பார்ப்பதற்கு வேணும்னா tubeplus.me , solarmovie.com , movie2k.to யூஸ் பண்ணிக்கலாம்..

      Delete
  9. நிறைய புது தகவல்கள்லாம் கொடுக்குறிங்க.., அப்புடியே கண்டினுயூ பண்ணி கலக்குங்க.. அப்புறம் அந்த படம் பேரு Bonnie Brasco இல்ல Donnie Brasco..,

    ReplyDelete
  10. ரொம்ப நல்லா போகுது தொடர்.. தொடருங்கள்..
    கண்டிப்பா "Hugh Jackman" Jack Sparrow கதாபாத்திரத்துக்கு செட் ஆகி இருக்க மாட்டார்...

    ReplyDelete
  11. அடேடே . . .இந்தத் தொடர் நல்லா இருக்கே.. இப்பதான் பார்த்தேன்... அடிச்சி பட்டைய கிளப்புங்க...

    ReplyDelete
  12. @ anand - சுட்டிக் காட்டியமைக்கு நன்றி நண்பா.. திருத்திட்டேன்!

    @ ராஜ் - நன்றி பாஸ்.. ஜாக்மேன் ஒரே இறுக்கமான டைப்.. லூசு மாதிரி டயலாக்லாம் விட்டுகிட்டு திரியனும்னா கண்டிப்பா அவரால முடியாதுதான்! ஜானி தான் King of Versatility ஆச்சே.. அவருக்கு எதுதான் செட்டாகாம போகும்??

    @ வீராசாமி - நன்றி தல.. தங்கள் ஊக்கம் தொடர்ந்தும் தேவை!

    ReplyDelete

Related Posts with Thumbnails