"அதிரடி மன்னன்Tom Cruise-ம், கடல் நீலக் 'கண்'ணி Cameron Diaz-ம் சேர்ந்து நடிச்ச படம்டா... வா போயி பார்ப்போம், சுவாரஸ்யமான கதை ஏதாவது இருக்கும்"னு தேடிப்போய் தியேட்டர்களில் பார்ப்பவர்களுக்கு, "April Fool"னு கத்தி அனுப்பலாம்னு இயக்குனர் யோசிச்சு செஞ்ச படம் போலும்... ரெண்டு மாசம் கழிச்சு வந்திருந்தாலும் (ஜுன் 23) ரசிகர்களை முட்டாளாக்கத் தவறவில்லை..
'கதை இருக்கா?'ன்னுல்லாம் கேட்டு அசிங்கப்படுத்தக்கூடாது!
சைமன்-ங்கற அதிபுத்திசாலி இளைஞர் உலகத்திலேயே அதிசக்தி வாய்ந்த பாட்டரியை கண்டு பிடிக்கிறாரு. அதுபேரு Zephyr.. இந்த பாட்டரியை எப்படியாவது தன்வசமாக்கிக்கனும்னு ஸ்பானிஷ் ஆயதவொப்பந்த கும்பல் ஒண்ணு அலையுது.. அதுனால இந்த பாட்டரி அவனுங்க கையில சிக்கக் கூடாதுன்னு சைமன், அதை தனது நண்பனும் CIA உளவாளியுமான ரோய்-கிட்ட கொடுத்துடுறாரு.. இவருதான் நம்ம ஆகஷன் கிங் டாம் குருஸ்!!இது தெரியாம "ரோய் அந்த பேட்டரியை ஸ்பானிஷ் கும்பல்டத்தான் கொடுக்கப்போறாருன்னு நினைச்சுக்கிட்டு ஒட்டுமொத்த CIAவும் ரோயை துரத்துது!
இந்த கதைக்குள் சம்பந்தமேயில்லாமல் அறிமுகமாகிறார் நம்ம ஹீரோயின் ஜுன் (கமரன் டயஸ்)... விமான நிலையத்தில் அவளைத் தற்செயலாக சந்திக்கும் ரோய், பாதுகாப்பு தேடுதலிலிருந்து தப்பிக்க பாட்டரியை ஜுனின் லக்கேஜுக்குள் சாமர்த்தியமாக விழுத்தி, பின்னர் எடுத்துக்குறாரு.. இதை CCTV காமெரா மூலம் அவதானிக்கும் CIA நிறுவனத்தினர் அவளும் ரோயுடன் மிஷனில் இருப்பதாக நினைத்துக் கொள்கின்றனர்.. இந்த மிஸ்டேக்கினால் ஜுனுக்கு ரெண்டு கூட்டத்தாலும் (ஸ்பானிஷ், CIA) ஏற்படக்கூடிய ஆபத்துக்களிலிருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு ரோய் உள்ளாகிறார்
இந்தப் பொறுப்புங்கற பருப்புக்குள்ள, காதலையும் கலந்து கதையை சாம்பாராக்கியிருக்காரு படத்தோட இயக்குனர்!
"கதை இருக்கு... இதுல லாஜிக் எங்க இருக்கு???" இநந்த ஒத்த கேள்வியை உங்கள் மனதில் எழுவதைத் தவிர்த்துக் கொண்டலொழிய படத்தை உங்களால் ரசிக்க முடியாது!! (mind it.. you have been pre-warned..)
டாம் க்ருஸ், கமரன் டயஸ் ரெண்டு பேரோட முகத்துலயும் இளமை மிஸ்ஸிங்! அப்படி இருந்தும் கூட காதல் சீன்கள் ரசிக்க வைக்குதுன்னா பார்த்துக்கோங்களேன்..
படத்துல டாம் க்ரூஸ் இருக்கும்போது ஆக்ஷன் காட்சிகளைப் பற்றி கேட்கவும் வேணுமா! கதை என்ன நடக்குதுன்னு சொல்ல முதல்லயே 3 ஃபைட் சீன் வைக்குறாங்க.. எல்லாம் "கேட்குறவன் கேனையனா இருந்தா..." ரகம்! சின்னவயது ஜாக்கிசான் போல காமெடியிலும் டாம் க்ருஸ் கலக்குகிறார்!
படத்துல ஆகஷன், காதல், காமெடி மூணையும் வைச்சா ஹீரோவை, ஜேம்ஸ்பாண்ட் மாதிரி காட்டலாம்-ங்கற ஹாலிவுட்டோவ வழக்கமான வெற்றி ஃபார்முலா இங்க பாதிதான்வேலை செஞ்சிருக்கு!.. கடைசி சீனில் (க்ளைமாக்ஸ் இல்லை... கடைசி..யாவது சீன்) கமரன் டயஸும் தன் பங்குக்கு கலக்குகிறார்!!
ஓடுற எருமை மாடுகளுக்கு நடுவுல ரெண்டு எருமை மாடுகள் பைக்குல போறது... (படம் இடதுபுறம்!)ரெண்டு பக்கத்தாலயும் ட்ரெயின் வந்து தாண்டிப்போகும் அந்தச்சின்ன கேப்புல பைக் ஓட்டுறது... நாலா பக்கமும் துப்பாக்கிகள் சுட்டுக்கிட்டே இருக்க, சர்வசாதாரணமாக நடந்து போய் ஹீரோயினிடம் காதலைச் சொல்வது... துப்பாக்கியால் சுடப்பட்டு கட்டடத்தின் மேலிருந்து விழுந்த பிறகும், எல்லாரும் 'செத்துட்டான்யா ஹீரோ'ன்னு சந்தோஷப்பட்ட பின்னரும், அடுத்த வாரமே ஏதோ பிக்னிக் போயி வந்த மாதிரி ரீ-என்ட்ரி கொடுக்கிறது...
யப்பா... இந்தக்காட்சிகளுக்கெல்லாம் காப்பிரைட்ஸ் செலவாக கேப்டனிமும், தளபதியிடமும் எவ்வளவு கொடுத்திருப்பாங்களோ??
படம் பார்த்த அமெரிக்க டாம் க்ருஸ் ரசிகர்கள் இந்த மொக்கை கதையாலும், லாஜிக் மீறல்களாலும் கடுப்பாயிருக்க கூடும்.. நாம தமிழ் சினிமாவில் தினமும் பார்க்கும் காமெடிதானே.. எல்லாம் பழகிப் போச்சு!
கடைசியில "ஏப்ரல் ஃபூல்" ஆனதென்னமோ டாம் க்ரூஸும் தயாரிப்பாளரும்தான்! படம் முதல்வார இறுதியில் வசூலித்த 20.4மில்லியன், கடந்த 20 வருடங்களில் ஒரு டாம் க்ரூஸ் படத்துக்கு கிடைத்த ஆகக்குறைந்த வசூலாம்!!
இதுல கொடுமை என்னான்னா இந்தப் படத்தோட இயக்குனர், James Mangold தான் 2013ல் ரிலீசாக இருக்கும், எக்ஸ் மென் சீரீஸோட அடுத்த படத்துக்கும் (The Wolverine) இயக்குனராம்.. பாவம் ஹியு ஜாக்மேன்!
(லாஜிக் பற்றி கேள்வியெழுப்பாமல்) படம் பார்த்துகிட்டிருக்கும் போது சுவாரஸ்யமாகவே ஃபீல் பண்ணுவீர்கள்.. (நான் தலையை கூட திருப்பவேயில்லை).. படம் முடிஞ்சதுக்கப்புறம்தான் "சரி, இதுல என்ன இருக்கு?"ன்னு நினைப்பீர்கள்.. அப்பிடியே படத்தை மறந்தும் போவீர்கள்..
ஆதலால், "இன்றைய பொழுது ஓடாதா?" நினைச்சுகிட்டிருப்பவர்கள், "பாப்கார்ன் இருக்கு படம் இல்லையே?"ன்னு வருத்தப்படுபவர்கள், தமிழ் சினிமாவின் மொக்கைகளையும் தாங்கிய மனவலிமை படைத்தவர்கள், டாம் க்ரூஸ் ரசிகர்கள் பார்க்கலாம்..
உலக சினிமாக்களில் ஊறிப் போனவர்கள், லாஜிக் உள்ள கதையை மாத்திரம் தேடுபவர்கள், அவார்டு வாங்கும் படங்களாக பார்த்துத் தள்ளுபவர்கள், ஏற்கெனவே டவுண்லோடிய சுமை தாங்காமலிருப்பவர்கள் தவிர்க்கலாம்!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 12
இசை = 14
கதை+திரைக்கதை = 09
கலை+ஒளிப்பதிவு =14
இயக்கம் =09
மொத்தம் = 58% பரவாயில்லை!
எத்தன தமிழ் சினிமா பாத்துருப்போம்? இதெல்லாம் நமக்கு ஜுஜுபி ... கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன் பார்த்தது. படம் செம மொக்கை. ஆனால் படம் முடியும் வரைக்கும் அப்படி ஒரு மொக்கை ஃபீல் வராது.
ReplyDelete@ ஹாலிவுட்ரசிகன் - அதேதான் நண்பா! படம் பார்க்கும் போது மொக்கையா இருந்தாலும் ரசிப்பதை தவிர்க்க முடியவி்ல்லை.. ஏனோ அந்த ஃபீல் படம் முடிந்தவுடனே சப்பையாகி விடுகிறது!
ReplyDeleteசெம விமர்சனம் தல....உங்களுக்கு நல்ல சென்ஸ் ஆப் ஹுமர் இருக்கு..ரொம்பவே ரசித்தேன்
ReplyDeleteஎவ்வளவோ விஜய் படம் பார்த்திடோம், இத பார்க்க மாட்டோமா..??
நானும் படம் வந்த புதுசுல 150/- rs அழுது இந்த படத்தை தியேட்டர்ல பார்த்தேன்..
@ ராஜ்- நன்றி பாஸ்! (இவ்வளவு நாளா "பாஸ்" தானே போட்டுகிட்டு இருந்தோம்.. திடீர்னு ஏன் "தல"?)
ReplyDeleteபடத்தை பார்க்குற போது எனக்கு ஞாபகம் வந்த கேரக்டர்கள் 'சுறா' விஜயும், 'ஒஸ்தி' சிம்புவும் தான்.. அந்தளவுக்கு தமிழ் சினிமா நம்ம ரத்தத்துல ஊறியிருக்கு!!
தியேட்டரில் போய்ப் பார்த்திருக்கிறர்கள் என்றால், நீங்கள் டாம் க்ரூஸின் ரசிகர் போல?..
திடீர்னு ஏன் "தல"?...
ReplyDeleteஎல்லாம் ஒரு ப்ளோல வரது தான்....!! எனக்கு நீங்க எந்த ஏஜ் குரூப்ன்னு தெரியல..இல்லாட்டி மச்சின்னு குப்பிடுவேன். !!
நான் 2005ல இன்ஜினியரிங் முடிச்சேன்..!!! நீங்க...
//தியேட்டரில் போய்ப் பார்த்திருக்கிறர்கள் என்றால், நீங்கள் டாம் க்ரூஸின் ரசிகர் போல?..//
தீவிர டாம் க்ரூஸ் வெறியர்ன்னு சொல்லலாம்....!!!
//படத்தை பார்க்குற போது எனக்கு ஞாபகம் வந்த கேரக்டர்கள் 'சுறா' விஜயும், 'ஒஸ்தி' சிம்புவும் தான்//
Why Blood...Same blood....
மீ ஒன்லி 20.. நோ வேலை.. ஜஸ்டு ஸ்டடியிங்! டைம்பாஸ் ப்ளாகிங்!
Deleteஎனக்கும் டாம் க்ரூஸ் பிடிக்கும்.. ஆனா "தீவிர வெறியர்" அளவுக்கு இல்லை
நண்பரே, இந்த படத்தை டவுன்லோடு பண்ண படுத்து தூங்கிகிட்டு இருக்கு..நீங்க மொக்கையினு சொல்லிட்டீங்க..நான் என்னோட சினிமா பயணத்துல நெறைய மொக்கைகள மீட் பண்ணி பழக்கிகிட்டேன்..இதலாம் சாதாரணப்பா,,
ReplyDeleteபடத்தை டாம் குரூஸ் முகத்துக்காக ஒன்னே ஒன்னு தரம் பார்க்கலாமுனு தோனுது..உங்க விமர்சனங்களில் வர வர காமெடி காரம், பொடி, ஸ்வீட்டுனு எல்லா டேஸ்ட்டும் வந்துட்டு போகுது..படிக்க மேலும் சுவையாக உணர முடிகிறது.தொடருங்கள்.
விடைப்பெறுகிறேன் நன்றியோடு.
@ Kumaran - நம்மளே மொக்கையா இருக்கும் போது பார்க்குற படங்களும் அப்படி இருக்குறதால நோ டென்ஷன்!
ReplyDeleteபார்க்லாம்.. தாராளமாக ஒருவாட்டி பார்க்கலாம் நண்பா!
//காமெடி காரம், பொடி, ஸ்வீட்டுனு எல்லா டேஸ்ட்டும் வந்துட்டு போகுது.//
ரொம்ப நன்றி! ஸ்வீட் எடு.. கொண்டாடு!
JZ @
ReplyDeleteமீ ஒன்லி 20.. நோ வேலை.. ஜஸ்டு ஸ்டடியிங்! டைம்பாஸ் ப்ளாகிங்! >>
என்னது உங்களுக்கு 20 தா...நம்ப முடிலியே..நல்ல வேளை நான் இன்னும் அந்த வயச தாண்டல...நிசமா உங்களுக்கு 20 தானா ?
ஹா ஹா ... சின்னப் பசங்க...
Delete@ Kumaran - நான் என்ன இதுவரைக்கும் எனக்கு 46ன்னா சொல்லிக்கிட்டு திரியுறேன்! I'm positively younger than your imagination... as well as mine!!
ReplyDeleteநண்பர் சொல்லிட்டா..நொ மோர் கேள்விகள்..தலையை வணங்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்.46 என்னா 46 பெரிசா..26 கழிச்சா உங்க வயசு வந்துட போகுது..ஹி..ஹீ.
Deleteமீண்டும் நன்றி.
உண்மையை சொல்லனுமுனு நினைக்கிறேன்..இந்த வயதில் கடந்த மூன்று வருடங்களாக தங்களது எழுத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள்.முன்னமே சொல்லிருக்கிறேன், தங்களது இன்செப்ஷன் தொடர் எனது சினிமா ஆர்வத்திற்கு ஒரு காரணமென்று..நான் அது படிக்கும் போதெல்லாம் உங்களுக்கு 25, 26 வயது என, எழுத்தளவில் நல்ல அனுபவம் இருக்கும் என எண்ணிருந்தேன்.தங்களது வளர்ச்சி மென்மேலும் தொடர வேண்டும்.வாழ்த்துக்கள் நண்பரே.
ReplyDelete@ Kumaran - யப்பா... ரெம்ப நன்றி! வயசை வைச்சுகிட்டு ஒருத்தரை பாராட்டுறது தேவையில்லாதது.. நான் improve பண்ண வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கு! (பார்க்க வேண்டிய படங்களும் நிறைய இருக்கு.. :(
ReplyDeleteஆக்சுவலா முகம்தெரியாத நண்பர்கள்-ங்கறதால பெரும்பாலும், அவங்களை பற்றி நினைத்தவுடனே அவர்களது Profile Picதான் ஞாபகத்துக்கு வரும்.. ஸ்பீல்பெர்க் படத்தை பார்த்தவுடனே எதிர்முனையில் இருப்பவர் அனுபவம் கூடியவராகத்தான் எண்ணத்தோன்றும்!
நான் இன்னும் தனுஷ் ஃபோட்டோ தானே வைச்சிருக்கேன்.. (அப்பகூட கண்டுபிடிக்கலையா?)
உங்கள் எழுத்திலும் பாராட்டக்கூடியது எவ்வளவோ இருக்கு. நீங்க அல்பிரட் ஹிட்ச்காக் பற்றி பதிவிட்டதிலிருந்து எழுத்து லெவலே உயர்ந்து போவதை உணர முடிந்தது!
(மன்னிக்கவும்.. உங்களது ஆரம்பகால பதிவுகள் சிலவற்றை நான் இன்னும் வாசிக்கவிலலை.. ஆனால் எல்லா பிளாக்கிலும் முதலாவது பதிவை வாசிக்கும் வழக்கம் உண்டு) நீங்களே உங்கள் முதல் பதிவை வாசித்து பார்த்தால்.. உங்களது முன்னேற்றம் எவ்வளவு பெரியது என்று விளங்கும்)
மீண்டும்... வாழ்த்துக்களுடனான நன்றி சகோ!
என்னது காந்தி செத்துட்டாரா ??
ReplyDeleteஅய்யய்யோ எப்போ?
Deleteஆமா, 'சுனாமி'ன்னு ஏதோ வருதாமே.. அப்பிடீன்னா என்ன?
Deleteபோன ஜென்மத்தின் பாவத்தின் பலனை....
ReplyDeleteஇப்படம் பார்த்து கழித்து விட்டேன்.
டாம் க்ரூசுக்காகவே இப்படம் பார்த்தேன்.
உங்க வயசை பார்த்தா எல்லாமே சின்னப்பசங்க...
உங்கள் வயதில்.... உங்கள் அளவுக்கு...
எனக்கு அறிவு இருந்ததில்லை.
இந்த விஷயத்தில்...
உங்கள் மேல் சற்று பொறாமை எட்டிப்பார்க்கிறது.
ஆனால் உங்களிடம்...குமரனிடம்...கொழந்தயிடம் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இது பதிவுலகின் வரப்பிரசாதம்.
@ உலக சினிமா ரசிகன் -
ReplyDelete//போன ஜென்மத்தின் பாவத்தின் பலனை.... இப்படம் பார்த்து கழித்து விட்டேன்//
அவ்வளவு பவர்ஃபுல்லான படம்!
//உங்கள் வயதில்.... உங்கள் அளவுக்கு...
எனக்கு அறிவு இருந்ததில்லை//
எங்கள் வயதில் உங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையும் பிளாக்கர்கள் இருந்ததில்லை. (ஒருவேளை ப்ளாக்கரே இருந்திருக்காது!)
எங்களுக்கு... நீங்கள் இருக்க பயமேன்!
நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் பல உண்டு சார்!
நன்றி.
மொக்க படம் தான், உத்திகிச்சும் கூட ஆன கண்டிப்பா என்டர்டைன்மேண்டுடன் சந்தோசமா படத்த பார்க்கலாம். நான் ரெண்டு தடவ பார்த்து ரசிச்சேன்.
ReplyDelete@ MuratuSingam - நீண்ட நாள் கழித்தான மீள்வருகைக்கு முதலில் என் வாழ்த்துக்கள்!! கருத்துக்கு நன்றி நண்பா! படம் பொழுதுபோக்கானது என்பதில் துளியும் சந்தேகமில்லை..
ReplyDeleteநண்பா தங்களூக்கு உலக சினிமாவில் விருப்பம் அதிகம் என் நினைக்கிறேன். எனது உற்ற தோழன் ஆங்கலத்தில் உலக சினிமா குறித்து அற்புதமாக தொடர்ந்து எழுதி வருகிறார். நீங்களும் சென்று வாசிக்கலாம், movieretrospect.blogspot.com எனும் முகவரியில். சக உலக சினிமா ஆர்வலர்களுகும் இதனைப் பகிருங்கள்.
ReplyDelete@ வருணன் - நிச்சயமாக, தோழா!
ReplyDeleteசில படங்களை பார்க்க லாஜிக் தேவை இல்லைதான். எனக்கும் இது போன்ற படங்களை பார்க்கத்தான் ஆசை
ReplyDelete@ தடம் மாறிய யாத்திரீகன் - கருத்துக்கு நன்றி நண்பா!
ReplyDelete