Thursday, April 26, 2012

டிம்மும் டெப்பும் - 5

தன்னோட ரெண்டு படங்கள், ஒரு பில்லியன் வசூலைத் தாண்டி விட்டதாலோ என்னவோ.. ஜானிக்கு வித்தியாசமான ஐடியா ஒன்று மனதில் உதித்தது!!
"நாமளே காசு போட்டு படங்களைத் தயாரிக்கத் தொடங்கினால் என்ன?"

முதன் முதலில் இறங்குவதால், பாதுகப்பாக கூட்டுத் தயாரிப்பில் இறங்குவோம்.. அதுவும் நம்ம படத்திலிருந்தே ஆரம்பிப்போம்னு ஜானி முடிவு செய்த படம் தான் 2011ல் ரிலீசான The Rum Diary!.. சொந்தக் காசை காப்பாத்தனுமேங்கறதுக்காக, ஜானி தனது நடிப்பால் படத்தை எவ்வளவோ உயர்த்தி விட்டும், மோசமான இயக்கத்தின் காரணமாக படம் தோல்வியடைந்தது! படம் பட்ஜெட் வெறும் 45 மில்லியனாக இருந்ததால், நல்ல வேளையாக ஜானிக்கு நட்டம் இரண்டரை மில்லியனோடு நிறுத்தப் பட்டுக் கொண்டது!

இருந்தாலும் மனம் தளராத விக்ரமாதித்தனாக, கூட்டுத் தயாரிப்பில் ரெண்டாவது அட்டெம்டு போடுகிறார். இந்த முறை பெரிய பட்ஜெட் படம், ஜானி நடிக்கவில்லை, அத்தோடு நம்பகத் தன்மையான இயக்குனர்.. அந்த இயக்குனரும் கூட்டுத் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்தமையால் படத்தை தோல்வியடைய விடமாட்டார்! அந்தப் படம்...

(நம்புனா நம்புங்க).....     (believe it or not).......     Hugo!

ஆமாங்க.. அந்த 5-ஆஸ்கர் படத்துல ஜானியோட பங்களிப்பு இருந்திச்சு! ஆனா என்ன ப்ராப்ளம்னா.. ஹியூகோ வெற்றி பெற்றாலும்,  துரதிருஷ்டவசமா எதிர்பார்த்த அளவு வசூலிக்கவில்லை.. ஜானிக்கு இந்த முறை வெறும் 2 மில்லியன்களே லாபம்!

Future

இந்த மே மாசம் 11ந்தேதி ரிலீசாகவிருக்கும் Dark Shadows படம் இவர்களது கூட்டணியில் 8வது படமாக அமையப் போகிறது..
இது டிம் பர்ட்டன் இயக்கும் 27வது படமாகவும், ஜானி டெப் நடிக்கும் 54வது படமாகவும் (சரியா டபுள் மடங்கு!!) இருக்கப் போகுது.. ஜானி டெப் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கும் மூன்றாவது படமும் இதுதான்! இது வரைக்கும் வந்த கூட்டணிப் படங்கள் எல்லாமே, ஆஸ்கரில் ஒரு நாமினேஷனாவது (அது இவங்களுக்கு கிடைக்காவிட்டாலும்) போய் வந்திருக்கின்றன.. இந்தப் படமும் Art Direction, Costume Design பிரிவுகளுக்காக ஆஸ்கர் போகும்னு ட்ரெயிலரைப் பார்த்தாலே புரியுது! யாராவது இன்னும் ட்ரெயிலரைப் பார்க்காமல் இருந்தால்..


1966 தொடங்கி 5 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிய dark shadows எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரைக் கொண்டே இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது..
ரத்தக்காட்டேரியாக்கப் பட்டு உயிருடன் புதைக்கப் பட்ட இளைஞனொருவன் 200 வருடங்கள் கழித்து எழுகிறான்.. அதுதான் ஜானி டெப்! (ஹெலனா வழக்கம் போல இதுலயும் இருக்காங்க) மிகுதி என்னவாகுதுன்னு எல்லாரும் தியேட்டரில் பார்த்து தெளிக.. நானே என்னன்னு பார்க்க ஆர்வம் தாங்க முடியாம துடிச்சுகிட்டிருக்கேன்!!
அந்த நாகத் தொடரில் ஹீரோ ரத்தக்காட்டேரியாக  நடித்த Jonathan Frid எனும் 87 வயது முதியவர், இந்தப் படத்திலும் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.. ஆனால் அநியாயமாக படம் ரிலீசாவதற்கு முன்னமே (இந்த ஏப்ரல் 13ந் தேதிதான்) இறந்து போயிருக்கிறாராம்!

இந்தப் படத்துக்காகவும் ஜானி டெப் மாதக்கணக்கில் மெனக்கெட்டிருக்கிறார். green tea-உம், சர்க்கரை குறைந்த பழங்களையும் உண்டு தனது எடையை 63 கிலோவாகக் குறைத்திருக்கிறார்.. ஜானியோட உழைப்பை என்ன சொல்லிப் பாராட்டனும்னே தெரியலை! படத்துலயும் கலக்குவார்னு எதிர்பார்க்கிறேன்..

'"ஹாரர் தீமோடு படம் எடுப்பதுதான் பர்ட்டனோட ஸ்பெஷாலிட்டியே'ன்னு Sleepy Hollow, Sweeny Todd பார்த்த நண்பர்களுக்கு தெரிந்திருக்கும்... ஆனால் அந்த இரண்டு படங்களைப் போலில்லாமல் இதற்கு PG-13 செர்டிஃபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது.. ஸோ, தெறிக்கும் ரத்தம் இல்லாவிட்டாலும்... குடும்பத்துடன் entertainmentக்கு கியாரண்டியாகிறது.. டிம் பர்ட்டனின் இயக்கத்தில் முழுக்க முழுக்க வெளிநாட்டில் (இங்கிலாந்து) படமாக்கப் பட்ட ஒரே படமும் இதுதானாம்..
இந்தப் படமும் சக்சஸ் ஆகும்னே ஆழ்மனது ஆரூடம் சொல்கிறது..

9 வது படமாக எப்போது? எந்தப் படத்தில்? மீண்டும் இவர்கள் இணைவார்கள் என்பது தெரியவில்லை.. இருந்தாலும் 2014ல் ரிலீசாகவிருக்கும் The Addams Family எனும் அனிமேஷன் படத்தில் ஜானி பங்கெடுப்பாரென ஹாலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன..

மார்ட்டின் ஸ்கோர்சீஸ் - லியனார்டோ டிகாப்ரியோ
டேவிட் ஃபின்ச்சர் - பிராட் பிட்
கிறிஸ்டோஃபர் நோலன்- கிறிஸ்டியன் பேல்... இப்படி நிகழ்காலத்திலேயே நிறைய சிறந்த நடிகர்-இயக்குனர் கூட்டணிகள் இருக்கு.. ஆனா இவங்க அளவுக்கு செயல்நோக்கும், சிந்தனையும் ஒத்து வர்ற காம்பினேஷனைப் பார்க்கவே முடியாது.. ஒரே தாய்வயிற்றில் பிறக்காத இரட்டைக் குழந்தைகள்..ரெண்டு பேரும்! இதே மாதிரி ஏனைய சிறந்த கூட்டணிகளைப் பார்க்க இங்கே க்ளிக்குங்க..

கடைசியா என்ன சொல்லி முடிக்கறதுன்னு தெரியலை.. டிம் பர்ட்டனைப் பற்றி ஜானியிடம் கேட்டப்போ அவரு வாயால சொன்ன வார்த்தைகளே உங்களை இறுதிக்குள் அழைத்துச் செல்லட்டும்..

"What more can I say about him? He is a brother, a friend, my godson's father. He is a unique and brave soul, someone that I would go to the ends of the earth for, and I know, full and well, he would do the same for me."

17 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. கலக்கிடீங்க பாஸ் ... Johnny kkum Burton kkum உள்ள நட்பு எந்த அளவுக்கு என்று இந்த ஒரு வரி சாட்சி when he was asked about Tim" He can ask me everything. If he wants me to have sex with an aardvark in one of his next movies, then I will do that" IMDB ye Thunai...

   Delete
  2. பாசமான பயபுள்ளைங்க!

   Delete
 2. முன்னமே சொல்லிருக்கேன்..உண்மையில் நம்புனாலும் நம்புங்க..நான் இந்த கூட்டணியில ஒரு படமும் பார்த்தது இல்ல.இவ்வளவு நாளா சினிமா பாக்குறதுக்கு first time வெட்கப்படுகிறேன், ஆனால், கண்டிப்பா எண்ணி ரெண்டு மாதத்துல மூனு படமாச்சும் பார்க்கல..என் பேரை மாத்திர வேண்டியதுதான்..

  உங்க தொடரையே ஒரு படமா போடலாமோ..வூஸ் நோ.அவ்வளவு செய்திகள், தகவல்கள், விடயங்கள்...தெரிந்துக்கொண்டேன்..தங்களுக்கு என் நன்றிகள்.இந்த டார்க் சேடோஸ் படத்தையும் ரிலீஸ் ஆனதும் பார்த்து விடுறேன்.மீண்டும் நன்றிங்க நண்பரே.

  குறிப்பு : பார்சாவும் மெட்ரிட்டும் கவுந்தாச்சு மாப்பு - எனக்கு செம்மையா வச்சிட்டாங்க ஆப்பு..

  ReplyDelete
  Replies
  1. பாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பா! கண்டிப்பா 'டார்க் சேடோஸ்' பார்க்கனும்..ன்னா?

   * சேர்ஜியோ ரேமோஸ் பெனால்டியில் அடிச்சது எங்கேயோ போகவும், நான் அப்படியே சில நிமிடங்களுக்கு உறைந்தே போய்விட்டேன்.. இந்த அதிர்ச்சி நான் எதிர்பாராததுதான்!!

   Delete
 3. ரொம்ப ஆடாதிங்கன்னு சொன்னா கேட்டீங்களா? இப்போ பாத்தியா பயன் முனீக் வுட்டானா?

  ReplyDelete
  Replies
  1. ஆடுனது நாங்க இல்லை பாஸு...
   நாங்க சரி, பெனால்டி கிக் வரைக்கும் வந்தோம்!
   இந்த Neuer இருக்கானே.. 'கிங்'டா அவன்! கசியஸ் எதிர்க்க இருக்கவே "நான்தான் கோல்கீப்பிங்கோட எதிர்காலமே"ன்னு காட்டிட்டான்!!

   * ஃபைனலுக்கு நான் முனிக் தான் ரூட் பண்றேன்.. நீ??

   Delete
  2. உன்னய கலாய்க்கணும்ன்னு சொல்லல மச்சி, ஆனா என்னய கேட்டா கசியாச விட நொயர் நல்லதொரு கீப்பர்ன்னு சொல்லுவன் மச்சி! இந்த போட்டிய மட்டும் பாத்துப்புட்டு சொல்லல, அவன நான் ரொம்ப காலமா அவதானிச்சிட்டு வாரேன், செம டைமிங் + புத்திசாலித்தனம்!

   நானும் பயன் முனீக் அப்டீன்னு தான் நெனைக்கிறன், ஆனா என்னோட வாய பத்திதான் உனக்கு தெரியுமே!

   Delete
  3. நானுல்லாம் shalke FC ரசிகன்டா.. 2009லயிருந்தே நானும் நோயரை ரசிச்சுக்கிட்டுத்தான் வர்றேன்..

   என்ன கசியஸ்ஸால முந்திமாதிரி சட்டு சட்டுன்னு தாவ முடியிதுல்லலை.. வயசாயிட்டே வருதில்லையா!
   டீமுக்கு கேப்டன் வேற.. கீப் பண்ணுற நேரமே மனசுக்குள்ள பல எண்ணங்கள் ஓடிட்டே இருக்கும்! pressure அதிகம்..

   Delete
 4. நல்லதொரு தொடரை துவக்கி அழகாக முடித்துள்ளீர்கள்.
  நன்றி+வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ஆதரவுக்கு நன்றி, சார்!

   Delete
 5. பாஸ் தொடக்கம் மாதிரியே முடிவும் நல்லா இருக்கு.., ரொம்ப நாள் எழுதுவிங்களோன்னு நினைச்சேன்.. பட் ஒரே ஃப்ளோல முடிச்சிட்டிங்க..

  கங்கிராட்ஸ்..

  ReplyDelete
 6. @ anand - நன்றி பாஸ், டார்க் ஷேடோவ்ஸ் படத்துக்கு சரியா அரை மாசம் முன்னாலயே தொடரை முடிச்சுக்கிட்டேன்.. இதுனால படத்துக்காக உங்களை நீங்களே hype-up பண்ணிக்கலாம்னு நினைக்குறேன்!

  ReplyDelete
 7. செம ஸ்பீடா எழுதி முடிச்சிட்டீங்க. நானெல்லாம் எழுதியிருந்தா Dark Shadows II வர்றப்போ தான் தொடரை முடிச்சிருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வெட்டியா இருக்கவன் எவ்வளவு ஸ்பீடா வேணுன்னாலும் எழுதலாம் பாஸ்!

   Delete
 8. பாஸ்,
  நான் இந்த தொடரின் பார்ட்-3, பார்ட்-4 & பார்ட்-5 இபொழுது தான் படித்து முடித்தேன்...இடையில் வர முடியவில்லை....
  அட்டகாசமான தொடர்... Johnny பற்றியும் Burton பற்றியும் நிறைய அறிந்து கொள்ள முடிந்தது.... உங்களுக்கு சுவாரிசயமாக தொடர் எழுதுவது ரொம்ப ஈசியா வருது...அடுத்து ஒரு தொடர் சீக்கிரமே எதிர்பார்கிறேன்..

  ReplyDelete
 9. @ ராஜ்- தொடர் ஓரளவுக்கேனும் யூஸ்ஃபுல்லாக அமைந்ததில் மகிழ்ச்சி!

  //உங்களுக்கு சுவாரிசயமாக தொடர் எழுதுவது ரொம்ப ஈசியா வருது...அடுத்து ஒரு தொடர் சீக்கிரமே எதிர்பார்கிறேன்..//
  இப்படி உசுப்பேத்தியே எழுதவைக்கலாம்னு நினைக்காதீங்க.. தொடர் எழுதும்போது, டைம் மேனேஜ் பண்ணிக்க கஷ்டம்! நான் ரொம்ப நாளுக்கு தொடர்களை தவிர்த்தே இருக்கப் போறேன்! (சுவாரஸ்யமான டாபிக் ஏதும் மாட்டமாட்டேங்குதுப்பா!..)
  *நீங்க ஏதாவது ட்ரை பண்ணலாமே.. சப்போர்ட்டாக நான் ரெடி!

  ReplyDelete

Related Posts with Thumbnails