Thursday, May 10, 2012

Ghost Town (2008)

அதாவது, "பேய் இருக்கா? இல்லையா?.... நம்பலாமா? நம்பப்படாதா?..."

இதுக்கு ஏன் பாஸ் இத்தன வாட்டி திரும்புறீங்க.. அதுக்கு அந்த சாமியாரே பரவால்லை போலிருக்கே..
நாமெல்லாம் பேய் மேலயே நம்பிக்கையில்லாமல் பலபல பேய்ப்படங்கள் பார்த்தவங்க.. ஆனாலும் இதுவரைக்கும் பேய்களை மையமா வைச்சு வந்த முழு நீள ஹாலிவுட் காமெடிப் படம் எதுவும் பார்த்ததில்லை. :( கடைசியாக அந்தக் குறையைப் போக்கிக்க இந்தப் படத்தைப் பார்க்கத் தொடங்கினேன்.. உதவியது மட்டுமல்லாமல், வயிறுகுலுங்கச் சிரிக்கவும் வைத்திருக்கிறது!

'பெட்ராம் பின்கஸ்' என்பவர் ஒரு கைதேர்ந்த பல்வைத்தியர். அவரது திறமையில் ஒரு சின்ன குற்றம் கூட கண்டுபிடிக்கமுடியாதுன்னு சக வைத்தியர்களாலேயே புகழப்படுபவர்.. இருந்தாலும் அவர் யாருடனும் சுமுகமாக பழகுவதில்லை.. அதாவது ஒரு unsociable person. எரிந்து விழுவதும், சுயநலமுமே இவரது அடையாளங்கள்!
வயிற்றுவலி காரணமாக அவருக்கு குடற் சிகிச்சையொன்று செய்யும் போது, மரணத்தின் இழை வரை தொட்டுத் திரும்புகிறார்.. உயிர் பிழைத்ததே அதிசயம்! காரணம் வைத்தியசாலை ரிப்போர்ட், இவர் இறந்து விட்டதாக கூறுகிறது.. இட் இஸ் எ மெடிக்கல் மிராக்கிள்!

தெய்வாதீனமாக எழுந்து வரும்  பெட்ராமுக்கு பெரிய அதிர்ச்சி. இப்பொழுது இவரால் பேய்களைப் பார்க்கவும், அவர்களுடன் பேசவும் முடிகிறது.. ஆவிகளின் உலகத்துக்கும், உயிருள்ள மனிதர்களின் உலகத்துக்கும் இடையான ஒரே மீடியம் இவர்தான்!
(சட்டுன்னு sixth sense படம் ஞாபகம் வருமே! அதே பையன் போன்ற ஸ்பெஷாலிட்டி தான் இவருக்கும் வந்து விடுகிறது.. சின்ன வித்தியாசம் என்னவென்றால் இதில் பேய்கள் ரத்தக் கறைகளுடனும், அகோரமாகவும் வராமல்.. casualஆகவும், கோட்சூட் போட்டுக்கிட்டும் வருகின்றன!)

இந்த விஷயம் பேய்களுக்கும் தெரிந்து எல்லா பேயும் இவர் வீட்டில் ஆஜர்.. "நான் செய்யாமல் விட்டவற்றை முடித்து வை.. அப்போ நான் நிம்மதியா பரலோகம் போயிருவேன்".. சக மனிதர்களுடனே ஒழுங்கா பேசாதவரு, ஆவிங்களுக்கா உதவி பண்ணப் போறாரு.. விட்டுக் கலைத்தாலும் ஆவிகள் விடாமல் கலந்து கொண்டேயிருக்கின்றன..

அதில் 'பிராங்' எனும் 30-35 வயது மனிதனின் ஆவி இவரைத் தனிமையில் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுக்கிறது.. "நான் இறந்து விட்டதால் என் மனைவி ஒரு லாயரைக் கட்டிக்கப் போறாள். ஆனா அந்த லாயர் நல்லவன் இல்லை.. அவங்க ரெண்டு பேரையும் நீதான் எப்படியாவது பிரிக்கனும்.. இதை மட்டும் நீ செஞ்சு கொடுத்தி்ட்டா.. உன்னை மத்த ஆவிகள் தொந்தரவே கொடுக்காத மாதிரி நான் பாத்துக்கறேன்!"...  ஆவிகளிடமிருந்து இருந்து தப்பித்தாலே போதும் என்ற மனநிலையில் இருந்த பெட்ராம் அதற்கு சம்மதிக்கிறார்!

கொடுத்த வாக்குறுதியை காப்பாத்தினாரா? மற்றைய ஆவிகளின் வேண்டுகோள்கள் என்னவாச்சு? எனும் மீதிக் கதையை பல காமெடிகளுடன் கலக்கித் தரும் படமே Ghost Town!

படத்தோட ஹீரோ- ரிக்கி ஜெராவிஸ்.. கொஞ்சம் தடித்த, நடுத்தர வயதுள்ள.. டாக்டர் என்று நம்பவைக்கும் முக அமைப்போடு ஒருத்தர். அதிலும் குறிப்பாக பார்த்தவுடனே 'பிறருடன் கலகலப்பாக பழகாதவர்' என்ற ஃபீலிங்கை மனத்தில் கொண்டு வந்து விடுகிறார்.. இவரு உம்முன்னு முகத்தை வைச்சுக்கிட்டு காமெடி பண்ணும் போது, நமக்கு சில வேளைகளில் கடுப்பானாலும் அதையும் தாண்டி சிரிக்கவைக்கும் விதமாக சிச்சுவேஷன்கள் அமைகின்றன.. இத்தனைக்கும் முதல் படம்தான் என்பதே தெரியாத மாதிரி நடிப்பை ரசிக்க முடியுது..
திரைக்கதை முதலில் நகர்வதும், பிறகு விரைவதும் கொஞ்சம் கவனிக்கப் பட்டிருக்க வேண்டும்.. சுமாராவே பண்ணிக்கிட்டிருந்த ஒளிப்பதிவாளரும் பிற்பாதியில் 'sideways' எனும் ஒத்தைப் பாடலில் நமது கவனத்தை ஈர்க்கிறார்.. பல இடங்களில் வசனங்கள் காமெடிக்கு சுவை கூட்டுகின்றன..

என்னதான் காமெடிப் படத்துல லாஜிக் பார்க்க கூடாதுன்னாலும், இங்க நடக்குற அலப்பறையை பார்த்துக்கிட்டு பேந்த பேந்த முழிக்காமல் இருக்க முடியவில்லை..
வாகனம் ஒன்று ஒருவரை மோதி, ஒண்ணரைக் கிலோமீட்டர் தள்ளி பாடி விழுந்த பிறகும், கரெக்டாக போட்டிருக்கும் கோட் மட்டும் நழுவி வண்டி மோதிய இடத்திலேயே லாவகமாக வந்து land பண்ணுமாம்.. (tom and jerry, looney tunes பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இவ்வகையான சீன்கள் ஞாபகமிருக்கக் கூடும்!)
படத்தின் படி, ஒரு ஆவிக்குள்ளால நாம தெரியாம நடந்து போயிட்டோம்னா நமக்குத் தும்மல் வருமாம்.. நம்மாளுங்க கட்டுற கதைகளையும் மீறி தும்மலுக்கு இப்படியொரு லாஜிக்கை கொடுத்த இயக்குனரே.. நீ வாழ்க. இனிமே 'தடிமன், தும்மல்'னு கெடக்குறவனையெல்லாம் டாக்டரிடம் அழைத்துச் செல்லாமல், நேரா பேயோட்டுற பூசாரி முன்னாலதான் நிறுத்தனும்!

5 மாசம் முன்னாலதான் star plusல் Hum Tum Aur Ghostனு ஒரு ஹிந்திப் படத்தின் சில கட்டங்கள் பார்த்ததாக ஞாபகம். ஆவிகளைப் பார்க்க முடியும் ஹீரோ.. அவனிடம் வேண்டுகோள் விடுக்கும் ஆவிகள்.. அதிலும் குறிப்பாக அவன் பின்னாலேயே ஒரு ஆவி அலைவது.. அப்படின்னு பல பொருத்தங்கள் ஞாபகம் வந்தது. அந்த ஹிந்திப் படத்தை முழுசாக பார்க்கவில்லை (பார்க்கவும் முடியாது.. படுமெக்கைப் படமது!)
காப்பியோ.. இன்ஸ்பிரேஷனோ.. கடவுளுக்கே வெளிச்சம்!

பொதுவாகவே இவ்வகைப் படங்கள் எதிர்மறை ரேட்டிங்கை தாண்டவே சிரமப்படும் 'ரொட்டன் டொமேட்டோஸில்', இந்தப் படத்துக்கு கிடைத்திருப்பதோ 85%! இதுல இருந்து என்னா தெரியுது? படம் ஆஹா! ஓஹோ! ரேஞ்சுல இல்லாவிட்டாலும், பார்த்த நிறைய பேருக்கு படம் புடிச்சிருக்கு. ஆங்!.. எனக்கும் புடிச்சிருக்கு... உங்களுக்கு??

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 12
இசை = 14
கதை+திரைக்கதை = 10
கலை+ஒளிப்பதிவு =13
இயக்கம் = 10

மொத்தம் = 59% பரவாயில்லை!

Ghost Town (2008) on IMDb

10 comments:

 1. பார்த்ததில் ஞாபகமிருக்கும் பேய்க்-காமெடி படம் Ghosts of Girlfriends Past தான். படம் மொக்கையானதால் கடுப்பில் அதன் பின் இந்த மாதிரி படமே பார்க்கக்கூடாதுன்னு முடிவெடுத்துட்டு இருந்துட்டேன். நீங்க சொன்னதுக்கப்பறம் இதையும் பார்க்கலாம்னு யோசித்திருக்கேன்.

  ReplyDelete
 2. கேள்வி பட்டதே இல்ல பாஸ்.., Rotten Tomatoes ல மார்க் குடுத்து இருக்குறத பாக்கும் போது நல்லப்படமாய் தெரிகிறது.., பார்க்கனும்.,

  ReplyDelete
 3. @ ஹாலிவுட்ரசிகன் - நீங்க சொல்லும் படம் பற்றி கேள்விப்பட்டதில்லை.. ஒரு படம் மொக்கையானா என்ன? இன்னொன்னை பார்த்து காயத்தை ஆத்துங்கோ!

  @ anand - பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க பாஸ்!

  ReplyDelete
 4. நண்பரே..நலமா ? இனிய மாலை வணக்கம்.
  கொஞ்சம் லேட்டா ஒரு நாள் கடந்துட்டு வரவேண்டியது ஆச்சு..மன்னிச்சுருங்க.

  கதையை படிச்சுட்டி செம்மையா இம்ப்ரஸ் ஆகிட்டேன் நண்பா..உடனே பார்க்க வேண்டும் போல இருக்கிறது..சீக்கிரம் பார்த்திடுவேன்.அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி.

  விமர்சனம்..என்ன சொல்ல இருக்கிறது ? தங்களது ஸ்டைலே தனிதான்..அழகா எளிமையான நடையில் இயல்பாக இருக்கிறது தங்கள் எழுத்துக்கள்.ரொம்ப சிறப்பா அமைந்திருக்கிறது.வாழ்த்துக்கள்.

  எனக்கும் படம் கண்டிப்பா பிடிக்குமென்று நம்புகிறேன்.பார்த்துட்டு விரைவில் இங்கு சொல்கிறேன்.வருகிறேன் நண்பா.

  ReplyDelete
 5. @ குமரன் - நீங்க எப்ப வந்தா என்ன சாரே! கருத்திட்டு ஊக்கமளிக்குறீங்கல்ல.. அதுபோதும்.. ரொம்ப நன்றி!!
  * படம் பிடித்தால்தான் எனக்கும் திருப்தி!

  ReplyDelete
 6. ண்ணா வணக்கம் ணா..... ரொம்ப நாளச்சில்ல பாத்து? எப்டிக்கீற அண்னாத்த? நான் இல்லாமா செம குஜாலாந்திருப்பியே நீயி.... அத்த வுடு மாமே... விமர்சனம் டக்கராந்திச்சுபா.... பின்னிட்ட போ.. நான் இன்னும் படம் பாக்கலே.. ஒரு தபா MC யாண்ட போயி இந்த டிவிடி வாங்கீரணும். படம் சோக்கா இருக்குதுன்னு நீயி சொன்னதுக்கு அப்பாலயும் நான் படம் பாக்காம இருப்பனா? எனக்கென்னமோ இந்த படத்தில என்னோட சுப்பர் ஸ்டார் ஜிம் கார்வி ஆக்டு பண்ணிருந்தா சூப்பராந்திருக்கும் அப்ப்டீன்னு நான் நெனைக்கிறேன், நீயி இன்னா சொல்ரே மாமா?

  ReplyDelete
 7. ஆமாம் மாமே.. அடிக்கடி வந்துட்டு வந்துட்டு காணாம போயிடுறே! 'குஜால்'லாம் இல்ல.. 'பேஜாரா'த்தான் கீது!

  Jim Carrey லீட் ரோல்ல நடிச்சிருக்க முடியாது.. ஏன்னா அதுக்கு குண்டா இருக்கனும்.. முகம் காண்டானா மாதிரியே இருக்கனும்..ஆனா அந்த பேயா நடிச்சிருந்தா, மனுசன் பின்னிப் பெடலெடுத்திருப்பாரு!!

  * கிசோக்!! (அண்ணாமலை "அசோக்" மாதிரி) இன்னைக்கு தேதி... அதை உன் காலண்டர்ல குறிச்சுக்கோ!! இன்னிக்குத்தான் ரியல் மட்ரிட் உலக வரலாற்றில் முதன் முறையாக 100 பாயிண்ட்களுடன் லாலீகாவை முடிச்சு அசுர சாதனை பண்ணப்போகுது!!!!
  HALA MADRID !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. முல்லைத்தீவில ஒரு Project போகுது நண்பா.. அதுல கொஞ்சம் பிசி. அவளவுதான்! உன்ன விட்டுபுட்டு , உன்ன கலாய்க்காம, கலாய்க்கப்படாம நம்மால இருக்க முடியாது நண்பா. சரி அத்த விடு நண்பா! நான் இந்த படம் பாக்கல , அதனால யாரு நடிச்சா நல்ல இருந்திருக்கும் எண்டு என்னால சொல்ல முடியல. காமடி படம் எண்டாலே நம்ம தல ஜிம் பின்னிடுவாரில்ல. அதனால சொன்னன்.

   *அப்புறம் ரியல் மட்ரிட்... யப்பா.. போங்கப்பா செம காமடிப்பா நீங்க...

   Delete
 8. கொடூரமான திரைப்படங்களை விரும்பி பார்க்கும் எனக்கு இந்த படம் கொஞ்சம் வித்யசமனதகவே இருக்கும் நினைக்கிறன். நல்ல விமர்சனம்.
  //////ஒரு ஆவிக்குள்ளால நாம தெரியாம நடந்து போயிட்டோம்னா நமக்குத் தும்மல் வருமாம்../////
  பாஸ், எப்படி எல்லாம் யோசிகரங்க.........

  ReplyDelete
  Replies
  1. //பாஸ், எப்படி எல்லாம் யோசிகரங்க.........//
   இந்தக் கிரியேட்டிவிட்டிதான் அவங்களுக்கும் நம்மாளுங்களுக்கும் இருக்க வித்தியாசம..

   Delete

Related Posts with Thumbnails