Friday, April 20, 2012

டிம்மும் டெப்பும் - 3

டிம் என்ன பண்ணிக்கிட்டிருந்தாரு??.....
ரொமான்ஸ் பண்ணிக்கிட்டிருந்தாரு. வேற என்ன பண்ணுவாரு.. ஏன்னா, அதான் வாலிப வயசாச்சே..

ஜானி டெப்புக்கு அப்புறம், டிம் பர்ட்டனோட சேர்ந்து அதிக படம் பண்ணியது யாரு தெரியுமா? Helena Bonham Carter..
Planet of the Apes படத்துக்காக, ஆரி-ங்கற பிரதான பெண் குரங்கா நடிக்க வைப்பதற்கு ஆள் தேடினப்ப, இவங்க பர்ட்டன் கண்ணுல பட்டாங்க. இந்தப் படம் செய்யும் போதுதான் இவங்களுக்குள்ள மெல்லக் காதல் துளிர்த்தது... (அப்போ டிம்முக்கு வயது 45, ஹெலனாவுக்கு 37..)


படம் நல்லா வசூல் எடுத்தாலும், கிரிட்டிக்கலாக தோல்வியடைஞ்சிடுச்சு.. ஆனா இவங்க காதல் வெற்றியடைஞ்சிடுச்சு.. ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணாமலே ஒண்ணா சந்தோசமா வாழுறாங்க.. இவங்களுக்கு 2 குழந்தைகள் வேற இருக்கு.. இப்ப இந்தக் கதையெல்லாம் நமக்கெதுக்கு? மேட்டருக்கு போவோம் வாங்க..
அதுனால அந்தப் படம் தொடங்கி பர்ட்டனோட எல்லாப் படத்துலயும் தொடர்ச்சியா அம்மணி நடிச்சுட்டு வர்றாங்க..

2002ல டிம்மும், டெப்பும் ரெண்டு வேறு முக்கியமான படங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர்.. அவை முறையே Big Fish, Finding Neverland.. ரெண்டு படத்தையும் பார்த்தீங்கனால் உங்களுக்கே ஒரு விஷயம் புரியும்.. ரெண்டுமே "டிம் பர்ட்டன்-ஜானி டெப்" டைப் படங்கள்..
பர்ட்டன் Big Fish படத்தோட ஹீரோவான McGregorஐ தெரிவு செய்யும் போது, ஜானி டெப்போட நடிப்புடன் ஒப்பிட்டு பார்த்துதான் அவரை தெரிவு செய்தாராம்.. இதுக்கு பேசாம ஜானிகிட்டேயே போய் கால்ஷீட் கேட்டிருக்கலாமே.. தவிர்த்ததற்கு காரணம் என்னவோ? (இது நான் குறிப்பிட்ட அந்த சின்ன மனஸ்தாபத்தின் காரணமாகவும் இருக்கலாம்). பற்றாக் குறைக்கு ரெண்டு படமுமே ஒரே டைமில் ரிலீசாவதாக அறிவிக்கப் பட்டன.. அப்படி மட்டும் நடந்திருந்தால் ஏட்டிக்கு, போட்டியாயிருக்கும்.. விவகரம் இன்னும் மோசமாயிருக்கும்.. ஆனால் நடந்ததோ வேறு..


"நெவர்லேண்ட்" எழுத்தாளர் பாரியைப் பற்றிய கதை.. பாரியோட எல்லாப் படைப்புக்கும் உரிமம் கொலம்பியா பிக்சர்ஸிடம்தான் இருந்தது.. அவர்களோட "பீட்டர் பேன்" படம் அதே டைம் ரிலீசாகவிருந்ததால், நெவர்லேண்ட் பட ரிலீசை தள்ளிப் போடச் சொல்லி வி்டார்கள்.. Big Fish 2003ல் ரிலீசாக, Finding Neverland 2004ல் ரிலீசானது.. ரெண்டும் சூப்பர் ஹிட் படங்கள்.. "பிக் ஃபிஷ்" 7 BAFTA நாமினேஷன்கள், ஆஸ்கருக்கு சிறந்த ஒரிஜினல் இசைக்காக மாத்திரம் நாமினேஷன்.. "நெவர்லேண்ட்" 11 BAFTA நாமினேஷன்கள், ஆஸ்கரில் 7 நாமினேஷன்களில் சிறந்த ஒரிஜினல் இசைக்காக மாத்திரம் விருதை தட்டிச்சென்றது!


2005 - Charlie and the Chocolate Factory, Corpse Bride


5 வருட இடைவெளிக்குப் பின் டிம் பர்ட்டன்- ஜானி டெப் நட்புக்கான கான்ட்ராக்ட் புதுப்பிக்கப் பட்டது Charlie and the Chocolate Factory படத்தின் மூலமாக .. (அதாவது ரெண்டு பேரும் ராசியாயிட்டாங்க!) சின்ன வயசுல பர்ட்டனோட ஃபேவரிட் எழுத்தாளர் Roald Dahl தானாம்.. அதுனால இந்தப் படத்துக்கு இவரை கூப்பிட்டவுன் உடனே சம்மதிச்சுட்டாரு.. நம்ம பர்ட்டனைப் பொறுத்தவரை "வில்லி வொன்கா" (படத்தோட பிரதான கதாப்பாத்திரம்) என்பவர் மைக்கல் ஜாக்சன் மாதிரி.. சின்ன வித்தியாசம் என்னன்னா, ஜாக்சனுக்கு சின்னப் பசங்களை புடிக்கும்.. வொன்காவுக்கு பசங்களை கண்டாலே புடிக்காது!!
அதுனாலயோ என்னவோ, ஜானி டெப்புக்கு மைக்கல் ஜாக்சன் மாதிரி (?!) மேக்கப்லாம் போட்டு அனுப்பி வைச்சாரு.. படம் பார்த்தவங்க 'ஜாக் ஸ்பரோவா நடிச்சவனா இவன்?'னு கேட்குமளவுக்கு அடையாளமே தெரியாம மாத்தி விட்டுட்டாரு..

படத்தோட ஹீரோ சார்லி-ங்கற குட்டிப் பையனா யாரைப் போடலாம்னு தேடிக்கிட்டிருந்த போது, ஜானியே முன்வந்து 'நெவர்லேண்ட்' படத்தில் தன்னோடு நடித்த Freddie Highmoreங்கற பையன சிபாரிசு செஞ்சு, ரோலை வாங்கி் கொடுத்தாராம்.. (நெவர்லேண்ட் படத்தோட இறுதி சீன்ல இந்தப் பையனோட நடிப்பை பார்த்து ஜானி டெப்பே அழத் தொடங்கியது வேற கதை!).. இப்படியாக ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் ரிலீசாச்சு..
படம் மெகா ஹிட்! 475 மில்லியன் உலகளாவிய வசூல்.. இனிமே இந்தக் கூட்டணி எந்தப் படம் கொடுத்தாலும் சக்சஸாத்தான் முடியும்-ங்கற நம்பிக்கை தயாரிப்பாளர்களுக்கு கிடைத்தது! ஜானி டெப் லூசா நடிப்பாருன்னு எல்லாருக்கும் தெரியும்.. எந்தளவுக்கு லூசா நடிப்பாருன்னு தெரியாதவங்க வேறெங்கும் தேடாம.. இந்தப் படத்தை மேற்கொண்டு பார்க்கவும்!

அதே வருஷ இறுதியில் அடுத்த காம்பினேஷன் படமான Corpse Bride-உம் வெளியானது. பர்ட்டன் ஏற்கெனவே பல அனிமேஷன் படங்களை தயாரித்திருந்தாலும், முதன் முதலாக ஒரு முழுநீள ஸ்டாப்-மோஷன் அனிமேஷன் படத்தை இயக்கியது இதில்தான்.
தெரியாமல் ஒரு இறந்த பெண்ணை மணந்து கொள்ளும், பயந்தாங்கொள்ளி இளைஞன் அவளது ஆவியுன் படும் பாடுதான் படத்தோட கதை.. ஹீரோவுக்கு ஜானி டெப்பும், ஹீரோயினுக்கு (ஆவி பெண்) ஹெலனா பொன்ஹம் கார்ட்டரும் குரல் கொடுத்திருந்தனர்!
படம் ஹிட்டானதுடன், அந்த வருடத்துக்கான சிறந்த அனிமேஷன் பட ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப் பட்டிருந்தது.. டிம்-டெப் கூட்டணி தொடர்ச்சியான ஹெட்ரிக் வெற்றியை ருசித்தது!

(கூட்டணி தொடரும்..)

12 comments:

 1. கூகிளில் நாம் அறிய வேண்டிய வசதிகள் !

  http://www.mytamilpeople.blogspot.in/2009/10/google-search.html

  ReplyDelete
 2. //படம் பார்த்தவங்க 'ஜாக் ஸ்பரோவா நடிச்சவனா இவன்?'னு கேட்குமளவுக்கு அடையாளமே தெரியாம மாத்தி விட்டுட்டாரு.//

  நிஜமாத் தான் சொல்றேன். இந்தப் படம் வந்த புதிதில் ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தப்போ பார்த்தது. படம் பார்த்து முடித்து கொஞ்ச நாட்களுக்கு பிறகு IMDBயில் படத்தைப் பற்றி ஆராய்ந்தப்போ தான் அது நம்ம ஜாக்னு தெரியும்.

  Corpse Brideஐ என் வாட்ச் லிஸ்டில் வச்சிருக்கேன். பார்த்துடுறேன்.

  ReplyDelete
 3. @ ஹாலிவுட்ரசிகன்- நானும் 2006/7ல (அப்பல்லாம் ஜானியைப் பற்றி தெரிந்திருக்கவில்லை..) இந்தப் படத்தை பார்த்துட்டு டி.வி.டி கவர்ல மேல பார்க்கும்போது தான் ஜானி டெப்-ங்கற பெயரையே வாசிச்சேன்.. ஏதோ க்ளிக்காகி Pirates of the Carribean சேர்ச் பண்ணிப் பார்த்தப்போதான் ரெண்டும் ஒரே ஆள்னு தெரிஞ்சுகிட்டேன்..

  ReplyDelete
 4. இவ்வளவு விஷயங்கள் எங்க பாஸ் கிடைச்சது. இந்த பதிவுகள எழுதறதுக்கு நீங்க நிறைய டைம் எடுத்துனு இருப்பிங்க போல.....அதுவும் இந்த கூட்டணி பதிவு எங்கும் பிரேக் அவாத மாதிரி தொடர்ச்சியான விஷயங்கள் சூப்பர்.

  ReplyDelete
 5. @ MuratuSingam- அதான் முதல் பதிவிலயே சொன்னனே நண்பா.. எல்லாப் புகழும் விக்கிபீடியாவுக்கே.. ஆனா இதுல சிக்கலான வேலை என்னன்னா டெப், டிம் ரெண்டு பேரோட பேஜையும் எடுத்துக்கிட்டு ஒவ்வொரு படமாவும், காஸ்டிங் பண்ண மத்த நடிகர்களையும் பார்த்து கூட்டணிக்கு சம்பந்தமான விஷயங்கள் எங்கங்க இருக்குனு பார்த்து அதை கோர்க்கணும்.. டைமை விடுங்க. எனக்கு இப்படி எழுதுறதுதான் ரொம்பப் புடிச்சிருக்கு!

  ReplyDelete
 6. ////ஜாக்சனுக்கு சின்னப் பசங்களை புடிக்கும்.. வொன்காவுக்கு பசங்களை கண்டாலே புடிக்காது!!////

  ஆனா எனக்கு சின்ன பொண்ணுங்கன்னா தான் ரொம்ப புடிக்கும், என்ன அந்த சின்ன பொண்ணுக்கு ஒரு பதினாறு டூ இருபது வயசு இருந்தா நல்லாயிருக்கும், வேற ஒண்ணுத்துக்குமில்ல , சும்மா ஃபிரண்ஸா பழக தான்.

  ReplyDelete
 7. @ கிஷோகர் - ஆக்சுவலி பாய், அது சின்னப் புள்ளைங்கன்னு வந்திருக்கனும்.. அதை பசங்க-ன்னு மாத்தி எழுதிட்டேன்..

  //என்ன அந்த சின்ன பொண்ணுக்கு ஒரு பதினாறு டூ இருபது வயசு இருந்தா நல்லாயிருக்கும்// இதை ஏன்டா என்கிட்ட வந்து சொல்றே?.. குவார்டியோலாவுக்கு ஃபோன்போட்டு வேண்ணா சொல்லு.. வொர்த்தா இருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. கேட்டேனே! ஆனா அவரு சொன்னாரு, "போயி ஜோஸ் மொரின்கோ கிட்ட கேளு, அவருதான் இந்த ஃபீல்டில ரொம பேமஸுன்னு" சொன்னாரு, யாரோ கிறிஸ்டினாங்கிற ஃபிகர கூட அவருதானாமே ஃபீல்டில எறக்கி விட்டிருக்காரு, அது தான் நீங்க கொஞ்சம் சிபார்சு பண்ணினா நல்லா இருக்கும் நண்பா! நண்பனுக்காக இத்த கூட பண்ணமாட்டியா நீயி?

   Delete
 8. இந்தளவுக்கு அமர்க்களமான ஒரு தொடர் நான் எதிர்ப்பாராதது.அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது,,படிக்க படிக்கவே நல்லாருக்கு..நீங்க இவ்வளவு தூரம் சிரத்தை எடுத்து சிறப்பாக தொடரை கொண்டு செல்வது பாராட்டத்தக்கது நண்பரே..ஆனால், நான் இன்னும் ஸ்லீப்பி ஹோலோ - வே பார்க்கல..வருந்துகிறேன்..வாழ்த்துக்களோடு நன்றி.

  ReplyDelete
 9. @ Kumaran - தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பா!

  ReplyDelete
 10. Tim burton - சில படங்கள் எனக்கு பயங்கர எரிச்சல் ஏற்படுத்தியது உண்டு(ஆனால், Ed wood ரொம்ப பிடித்த படங்களில் ஒன்று).சில சமயங்களில் அலுப்பூட்டும் விதமாக அவரது படங்கள் இருந்தாலும், ஏதாவது ஒரு இடத்தில் நாமும் சிறுவர்களாக மாறுவதை உணர்திருக்கிறேன்.

  Johnny Depp - Blow, Ninth gate, Donnie Brasco, Secret window எனது personal fav's. தனிப்பட்ட முறையில், டிம் பர்டன் டெப்பை ஒருவித stereotypicதனத்தை நோக்கி தள்ளியதாக நான் கருதுகிறேன்.

  ----------

  படிக்க வெகு சுவாரசியமாக எழுதி இருக்கிறீர்கள். அலுப்பு தட்டவே இல்லை. கீப் அப் த குட் வொர்க்.........

  ReplyDelete
 11. @ கொழந்த - உங்கள் தனிப்பட்ட விருப்பம் எதுவானாலும் சரியே.. நீங்கள் குறிப்பிட்ட ஜானி டெப் படங்களெல்லாம் ஒரு mystery / action சார்ந்த படங்களாச்சே (அதாவது ஜானி லூசா நடிக்காத படங்களைத் தான் உங்களுக்கு புடிக்கும்.. இல்லையா?)

  Ninth Gate... ரொம்ப ஆவலோடு பார்த்த ஜானி டெப்பின் படம். ஹும்.. க்ளைமாக்ஸ் மட்டும் ஒழுங்கா இருந்திருக்கலாம்!

  //கீப் அப் த குட் வொர்க்.........// நன்றி, நண்பா!

  ReplyDelete

Related Posts with Thumbnails