Wednesday, April 4, 2012

The Lorax (2012)


வாழ்க்கையிலயே முதல் தடவையா ஓ.சியில படம் பார்க்க டிக்கெட் கிடைச்சு, போய் பார்த்த படத்தை பத்தி எழுதாம விட்ருவேனா?.. "ச்சீ.. இந்த படத்துக்கெல்லாமா போன?"ன்னு உங்கள் மனதில் எழும் எண்ணங்களை அப்படியே அடக்கிக் கொண்டு மேலும் வாசிக்கவும்....

13ந் தேதி வரைக்கும் காத்திருந்தா "Battleship" படம் போயி பார்த்திருக்கலாம். ஆனா ஒரு typical american bullshit-ஐ பார்க்குறதுக்கு பதிலா (இது யூட்யூப் ட்ரெயிலருக்கு கீழே ஒருத்தன் போட்டிருந்த டாப்-கமென்டு) சின்னப்புள்ள படமாவது போயி பார்த்திடுவோமேன்னு முடிவு பண்ணிக்கி்டேன்!
WARNING - இளகிய மனம் படைக்காதவர்கள் இத்துடன் இந்த இடத்தை விட்டு உடனடியாக 'அப்பீட்' ஆகவும்!

Dr. Seuss என்பவர் 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர். இவரது கதைகள் அனைத்துமே 3-10 வயது சின்னப் பிள்ளைகளுக்கான, உரத்து வாசிக்கும் டைப்- கதைகளாக இருக்கும்.. இவர் தனது வாழ்நாளில் 46 சிறுகதைகளை எழுதி Enid Blyton, Roald Dahl வரிசையில் தனக்கென ஓரிடம் பிடித்துக் கொண்டார். நான் இவரோட கதைகளில் ஒன்றே ஒன்று மாத்திரம் (Thidwick) சிறுவயதில் வாசித்திருக்கிறேன்!!

இவரது கதைகளில் How the Grinch Stole Christmas, The Cat in the Hat போன்றவை முன்பே படமாக்கப் பட்டாலும், அனிமேஷன் படமாக வெளியிடும் முயற்சியில் முதலில் இறங்கிய நிறுவனம் நம்ம "ப்ளூஸ்கை ஸ்டூடியோஸ்" தான்.. 2008ல இவர்களது "horton hears a who" அனிமேஷன் படமாக வெளிவந்து ஹிட்டானது.. ஆனால் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் தங்களது வழமையான படங்களுக்கு குறைவாக (ஐஸ் ஏஜ்-ல்லாம் ஒரு மாசத்துக்கு க்யூவுக்குள்ளேயே நுழைய முடியாது, தெரியும்ல...) இருந்ததாலோ என்னவோ அந்தப் பணியை மேற்கொண்டு தொடரவில்லை.. இப்போ வளர்ந்து வரும் அனிமேஷன் கம்பெனியான "இல்லூஷன் என்டர்டெயின்மன்ட்" (அதான் டெஸ்பிகபல் மீ செஞ்சு அசத்தினாங்களே!) இவரோட The Lorax கதைக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.

கதை கேள்விப் பட்டிருக்காதவர்களுக்கு, தமிழ்ல "வீட்டுக்கு ஒரு மரம் நாட்டனும்"னு ஒரு அறிவுரை இருக்கல்லவா.. அதைத்தான் ஆங்கிலத்தில் எடுத்து விட்டிருக்கிறார்கள்! கதையில ஒரு moral இருக்கறப்பவே புரியலையா எவ்வளவு சின்னப்புள்ளத்தனமான படமா இருக்கனும்னு.. இதுக்கு அமெரிக்காவில் சில இடங்களில் எதிர்ப்பு வேறு.. அதாவது "இந்தப் படம் சிறுவர்களை enviromentalist (இதுக்கு "சுற்றாடல்வாதி"ன்னு தமிழ்ல ஏதாவது பெயர் இருக்கா என்ன?) ஆகவேண்டுமென்ற கருத்தை திணிப்பதாகவும், முதலாளித்துவத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாகவும்" சொல்லி கடுப்பேத்துறாங்க..

படம் முழுக்க கலர்ஃபுல் அனிமேஷன்.. Eye Candyன்னு சொல்லுவாங்களே.. அதேதான்! இதனாலேயே சிலருக்கு படம் ஒத்துவராமலும் போகலாம்.. முன்னணிக் கதாப்பாத்திரங்கள் அளவுக்கு, பின்னணித் தரவுகள் கவருவதாக இல்லை என்பது உறுத்துகிறது.. படத்தில் என்னோட ஃபேவரிட் கதாப்பாத்திரங்கள் கரடிகளும், மீன்களும்தான்.. இதுவரை நான் பார்த்திருக்கக் கூடிய அனிமேஷன் கரடிகளிலேயே க்யூட்டான க்ரூப் இந்தப் படத்தில் உள்ளவைதான்.. சிட்டுவேஷனுக்கு மியூசிக் வாசிக்கும் அந்த 3 மீன்களும் சிரிப்புக்கு கியாரண்டி!!

இந்த மாதிரி 10 பக்க புத்தகங்களை படமாக்கும் முயற்சியில் இறங்கினால் முக்கியமான சிக்கலே Time managementதான்... என்னதான் கதையில புது விஷயங்கள் சேர்த்து, ஸ்லோ மோஷன் சீன் வைச்சாலும் ஒரு மணித்தியாலத்தை தண்ட முடியாது... அதுக்காக பிளான் போட்டு 20 நிமிடங்களுக்கு பல பாடல்களைச் சேர்த்து சமாளித்திருக்கிறார்கள். சாதாரணமா பிக்ஸார், ட்ரீம்வொர்க்ஸில் அனைத்து வயதினரையும் கவரவேண்டுமே என மெனக்கெட்டு எடிட் பண்ணி படத்தை எடுப்பார்கள்.. ஆனால் இந்தப் படத்தினை 90% சிறுவர்களை மட்டுமே டார்கெட் பண்ணியிருக்கிறார்கள்.

எதிர்பார்த்தது போல சிறுவர்களிடத்தே படத்துக்கு பெரிய வரவேற்பு! Dr. Seuss-ஐ கெளரவிக்கும் முகமாக அவரது பிறந்த தினமன்று (மார்ச் 2) இந்தப் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.. செஞ்ச முதல் வாரத்திலேயே 70 மில்லியன்!! John Carterஐயும் தாண்டி வசூலில் #1...  அனிமேஷன் படமொன்றுக்கு கிடைத்த 8வது பெரிய வரவேற்பாக தன்னை வரலாற்றில் பதித்துக் கொண்டிருக்கிறது!

மனத்தால் இன்னும் சிறுவர்களாக ஃபீல் பண்ணுபவர்கள், ஃபேமிலியா ஒரு என்டடெயினர் தேடுபவர்கள் படத்தை ட்ரை பண்ணுங்க.. மற்றையவர்கள் டி.வி.டி கிடைத்தால் படத்தை பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க.. அதுவும் இல்லைன்னா, எதுக்கு டைம் வேஸ்டு? ஜுன்ல பிக்சாரின் "brave", ட்ரீம்வொர்க்ஸின் "Madagascar-3" ரெண்டுமே வந்துடும்.. அப்போ அனிமேஷன் கொண்டாட்டத்தில் இணைஞ்சுக்கலாம்!!

ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 15
அனிமேஷன்-15
பின்னணித் தரவுகள்- 09
கதை+திரைக்கதை- 11
இயக்கம்-12

மொத்தம்- 62% நன்று!

The Lorax (2012) on IMDb

12 comments:

 1. // மனத்தால் இன்னும் சிறுவர்களாக ஃபீல் பண்ணுபவர்கள் //

  அங்கிள்ள்ள்ள்...........அப்ப நாங்க தாராளமா பாக்கலாம் போல.....


  ட்ரைலரே பயங்கர கலர்ஃபுல்லா இருந்திச்சு..எப்புடி இருந்தாலும் எங்க ஊர்ல ரிலீஸ் ஆக போறதில்ல...kungfu pandaவே ரிலீஸ் ஆகல,,,இதுல இதேங்க....

  ReplyDelete
 2. நம்ம நாட்டு தலைநகரத்துல ஓடுது. நம்ம ஊர்ல எல்லாம் ஆங்கிலப் படங்களுக்கு சான்ஸே இல்ல.

  டாக்டர் சீயுஸின் Horton Hears A Who மட்டும் பார்த்திருக்கேன். பிக்ஸார் தவிர்த்து எனக்குப் பிடிச்ச ஒரு அனிமேஷன் படம்னு சொல்லலாம்.

  ReplyDelete
 3. @ கொழந்த - பச்சக் கொழந்த! இந்தப் படத்துக்கு கூட PG ரேட்டிங் போட்டிருக்கு தம்பி, தனியால்லாம் நீங்க போகக்கூடாது!! பயந்துருவீங்க..

  @ ஹாலிவுட்ரசிகன் - //நம்ம நாட்டு தலைநகரத்துல//
  நான் மட்டும் என்ன பலாங்கொடலயா இருக்கேன்?
  //பிக்ஸார் தவிர்த்து எனக்குப் பிடிச்ச ஒரு அனிமேஷன் படம்//
  என்ன பாஸ், ட்ரீம்வொர்க்ஸை கண்டுக்காம விட்டுட்டீங்களா?

  ReplyDelete
  Replies
  1. கொழும்புப் பக்கம் வந்தால் மட்டுமே பார்க்கலாம். இல்லாட்டி Bluray-RIP தான்.

   Delete
 4. நான் பாக்கணும்னு நெனக்கற படங்கள் எல்லாத்தையும் எனக்கு முன்னாடியே பாத்துட்டு கடுபேதரிங்களா.. நல்லதுக்கு இல்ல தம்பி :) :)

  ReplyDelete
 5. ஏங்க நான் ஒரு அனிமேஷன் படத்த பார்க்காவே போராடிகிட்டு இருக்கேன்..நீங்க பார்த்ததோடு அல்லாது விமர்சனமா, அதுவும் சிறப்பா போட்டுத்தள்ளூறீங்க..நான் பாவம் இல்லையா..ஹி..ஹீ
  அன்னிக்கே நீங்க வலை பக்கம் வந்து "ஏன் ஒரு அனிமேஷன் படமும் பார்க்கலனு" கேட்டது ஞாபகம் இருக்கு நண்பரே..நீங்க சொன்னதில் ரோஷம் வந்து நாலு படம் பண்ணிட்டேன்,அத முடிச்சிட்டு இந்த படத்தை பார்க்க டிரை பண்றேன்.மிக்க நன்றி.

  ReplyDelete
 6. @ Castro Karthi - அப்படீன்னா நான் நினைக்குற படங்களை இனி நீங்க பார்த்துட்டு வந்து பதிலுக்கு என்னை கடுப்பேத்தலாமே!

  @ Kumaran - //நீங்க சொன்னதில் ரோஷம் வந்து நாலு படம் பண்ணிட்டே//
  இதத்தான் எதிர்பார்த்தேன் நண்பா! அனிமேஷன் படம் பார்க்குறதுன்னாலே டென்ஷன்களுக்கு ஒரு ஹாலிடே மாதிரித்தான்.. அப்படிப் பட்ட விடுமுறைகள் பல உங்களுக்கு கிடைக்க வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 7. நிறைய அனிமேஷன் படங்கள் பாக்காமையே இருக்கு..கடைசியா Rango பாத்தது :((...

  சுமார்ன்னு சொல்லிட்டிங்க பாக்க ட்ரை பன்றேன்..

  ReplyDelete
 8. very nice story thank you for news i am bookmarking my browser thank you my website please visit http://www.kollywoodthendral.in

  ReplyDelete
 9. @ anand - பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க பாஸ்!

  @ Suriya TBA - Thanx for Visiting, I'll go check it!

  ReplyDelete
 10. முன்பு அனிமேஷன் படத்த எல்லாம் பார்க்குறதுக்கு அவ்வளவு இஷ்டம் கிடையாது. நக்கலா பொம்மை படத்த போய் யாரு பார்ப்பா னு சொல்லுவேன். ஒரு சில படம் பார்த்த பிறகு இப்ப எல்லாம் முதல இது மாதிரி படம் எதுனா தெரிய வந்த அத தான் முதல்ல பார்கிறேன். படத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 11. @ MuratuSingam - அனிமேஷனுக்கு மயங்காதவர்கள் யார்தான் உளர்? கருத்துக்கு நன்றி நண்பா!

  ReplyDelete

Related Posts with Thumbnails