Friday, December 28, 2012

Rise of the Guardians (2012)


சில வருடங்களுக்கு முன்பு ட்ரீம்வொர்க்ஸ் எனும் கம்பெனி வெறும் ஜாலிக்கும், காமெடிக்கும் மட்டுமே படங்களை எடுத்துத் தள்ளிக்கொண்டிருந்தது.. எல்லாமே ஒன்-லைனர் கதைகள்.. over the hedge, flushed away, bee movie எல்லாம் அனிமேஷன் பார்க்க கிளாஸாக இருக்குமே தவிர, கிடைக்கும் ஓவரால் ஃபீலை பிக்சாருடன் காம்ப்பேர் பண்ணால் பல மீட்டர்கள் பி்ன்னால் நிற்கும்!

இருந்தாலும் அதிகம் யோசிக்க வைக்காத, காமெடிகள் நிறைந்த படங்கள் குழந்தைகளின் வரவேற்பை அள்ளும் என்பதால் shrek, madagascar, kung fu panda என்று சீரீஸ் ஹிட்டுகள் மூலம் பணத்தில் மிதந்து அனிமேஷன் உலகில் தனது இருப்பையும் தக்கவைத்துக்கொண்டது.. இப்போது போட்டிக்குப் பல நிறுவனங்கள் முளைத்துக் கொண்டே இருப்பதாலும், குறிப்பாக ப்ளூஸ்கையின் ஐஸ்-ஏஜ் சீரிஸ், ரியோ ட்ரீம்வொர்க்ஸுக்கு வசூலில் பூச்சாண்டி காட்டியதாலும், "பேர் சொல்லிக்குற மாதிரி" படங்களைக் கொடுத்து தன் இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் வேலையில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது..
How to train your Dragon, Megamind படங்களைத் தொடர்ந்து ட்ரீம்வொர்க்ஸின் பேர் சொல்லிக் கொள்ளும் படைப்புதான் ரைஸ் ஆஃப் த கார்டியன்ஸ்!

கம்பெனி படத்துக்கு சரியா விளம்பரம் பண்ணவேயில்லை.. இங்க ரிலீசானப்போ தான் இப்படியொரு படம் வருதுன்னே தெரியும்.. தேடிப் பார்த்ததில் தான் ட்ரீம்வொர்க்ஸ் இந்த வருஷத்தோட ரெண்டாவது படமா ரெடி பண்ணியிருக்காங்கன்னு தெரிய வந்திச்சு.. (பிக்சார்தான் பிரேவுக்கு விளம்பரத்துல சொதப்பினாங்கன்னு பார்த்தா நீங்களுமா?..) Talaashக்கு போய், கூட்டத்துல டிக்கெட் கிடைக்காதுன்னு இதுக்கு போனா தியேட்டரே மொத்தம் 13 பேர்தான்.. தொடங்கி ஒரு பத்து நிமிஷத்துலயே ஒரே போர். சும்மா ஒண்ணொன்னா கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகுதே தவிர ஒண்ணுமே இம்ப்ரெஸ் பண்ணலை. அப்புறம் தான் கதை மெல்ல மெல்ல ஸ்க்ரீனுல இறங்குது.
சுருக்க சொல்லனும்னா..

கிறிஸ்துமஸின் தலைவர் Santa Claus, ஈஸ்த்தரின் தலைவன் Easter Bunny, பற்களின் தலைவி Tooth Fairy, கனவுகளின் தலைவன் Sandman.. இவர்கள் நான்கு பேரும்தான் உலகின் பாதுகாவலர்கள்.. குழந்தைகளை நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வைத்திருப்பதுதான் இவர்களது கடமை.. இவர்களுக்கெதிராக இருளின் அரசன் Pitch குழந்தைகளை பயமுறுத்த விளைகிறான்.. இந்த சந்தர்ப்பத்தில் உலகின் ஐந்தாவது பாதுகாவலனாக வெட்டியாகவும், சுட்டித்தனமாகவும் அலைந்து கொண்டிருக்கும் பனியின் தலைவன் Jack Frost இணைந்து கொள்கிறான்.. அப்புறம் "என்னாச்சி?"

காமெடித் தனமாக இருக்கும் கதையை படு சீரியஸாக காட்டியிருப்பதுதான் ட்ரீம்வொர்க்ஸோட வெற்றி! போலார் எக்ஸ்பிரஸ் ஞாபகமிருக்கா.. அந்தப் படம் எமக்கு சொல்லித் தந்த சேதி ஒண்ணுதான்.. Believe, நம்புனா எல்லாமே நிஜமாகும்.. கிட்டத்தட்ட அதே தான் இந்தப் படத்தோட பேஸும். மேலே குறிப்பிட்ட அந்த நான்கு முதன்மை பாதுகாவலர்களையும் நமக்குத் தெரியும்.. அவங்கெல்லாம் நெஜமாவே இருக்காங்கன்னு நம்புறோம்.. (நாமன்னா நாம இல்லை.. சின்னப்புள்ளங்க.. எனிவே me too one) அதுனால எல்லாராலயும் இவங்களை பார்க்க முடியும்! (நேரில் சந்தித்தால்..)
ஆனால் Jack Frostங்கற பெயரை கேள்விப் பட்டிருக்கோமா? எப்பயாவது கதைகள்ல வாசிச்சிருந்தாலும் ஜஸ்ட்-லைக்-தட் மறந்து விட்டுப் போயிருக்கோம்.. மக்கள் அவனை நம்பலை. அதுனால அவன் அவங்க கண்ணுக்கு தெரியமாட்டான்.. இப்படியெல்லாம் சப்-பிளாட்டை உள்ள சேர்த்து திரைக்கதைக்கு சுவைகூட்டியிருக்காங்க.. மேலை குறிப்பிட்ட அந்த ஆரம்ப நிமிடங்களைத் தவிர மீதிப் படம் விறு விறு ஸ்பீட்.. நேரம் போனதே தெரியாது! (நம்மளுக்கு எதுதான் தெரிஞ்சிருக்கு??)

இன்னும் சில வருடங்கள்ல Tooth Fairy அளவுக்கு Jack Frost-உம் குழந்தைகளிடம் பரீட்சயமாயிருந்தால் ஆச்சரியமில்லை! பிட்ச் அசல் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.. வழமையான strictly babies இமேஜை உடைக்கிற மாதிரி படத்தில் ரெண்டு கதாப்பாத்திரங்கள் செத்துப்போகிற சீன்களும் உண்டு. (இந்த தகவலின் மூலம் மூலம் எந்த சஸ்பென்ஸையோ, ட்விஸ்டையோ உடைக்கவில்லை என்பதற்கு உறுதியளிக்கிறேன்..) உங்க வீட்டுக் குழந்தைகளுடன் பார்த்தால் உங்களுக்கு நடுராத்திரியில் வாட்ச்மேன் வேலை பார்க்கவேண்டியும் வரலாம்..
Easter Bunnyக்கு hugh jackman குரல் கொடுத்ததாலோ என்னவோ, அந்தப் பாத்திரம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறது.. பின்னணியிசை அப்பப்போ கவனத்திற்கு வந்து அப்பப்போ காணாமலும் போகிறது..

கிளைமேக்ஸ் மட்டும் இன்னும் பெட்டரா பண்ணயிருந்தா அசத்தலாக வந்திருக்கும்.. ட்ரெயிலரையும், போஸ்டரையும் பார்த்துட்டு "சுமார்" தான்னு முன்கூட்டியே எடை போட்டுராதீங்க.. கொடுத்த காசுக்கு படம் வொர்த்!

ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 17
அனிமேஷன்-17
பின்னணித் தரவுகள்- 16
கதை+திரைக்கதை- 16
இயக்கம்-13

மொத்தம்- 79% சூப்பர்!

Rise of the Guardians (2012) on IMDb

17 comments:

  1. ஆஹா, போனவாரம் இந்தப் படம் போலாம்னு நெனச்சு, கடைசி நேரத்துல டிரைலரப் பாத்துட்டு வேணாம்னு முடிவு பண்ணி போகல :-( இந்த வாரம் போக முடியுதா பாக்கனும்!

    ReplyDelete
    Replies
    1. அந்த டிரைலர் ஒரு சாபம்.. படத்தை ஏதோ வழக்கமான ஹாலிவுட் மசாலா மாதிரித்தான் காட்டும்.. காரணம் அதில் ஜாக் ஃப்ரொஸ்டுக்கான கேரக்டர் எதுவுமே தெரியாது.. படம் பாருங்க.. வித்தியாசம் விளங்கும்!

      Delete
  2. Grrrrrrrrrr you are having all the FUN boss, here in Kandy don't have any good theaters போட்டாலும் ஒழுங்கா போட மாட்டானுவ எக்கச்சக்க எடிடிங் பண்ணி கைமாவாக்கி இருப்பானுவ so need to wait for a BRRIP

    ReplyDelete
    Replies
    1. பொறுமைக்கும் பலன் கிடைக்கும், தல!

      Delete
  3. அப்ப நல்லாருக்கா..பாக்கனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். நீங்கள் சொன்னது போல் இதற்கும் விளம்பரம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சு நண்பா.. முன்பெல்லாம் அனிமேஷன் படங்களை முன்னுக்கு நின்னு பார்த்து விடுவீர்கள்?..
      எல்லா அனிமேஷன் கம்பெனிகளும் நல்ல புதிய முயற்சிகளை தைரியமா விளம்பரம் பண்ணுறதை விட்டுட்டு, சீக்வெல்களுக்கும், ரீ-ரிலீஸுகளுக்கும் விளம்பரத்துக்கு பணத்தை வாரி இறைக்கி்ன்றன.. (ப்ளூஸ்கை, சோனி தவிர)
      படம் ட்ரீம்வொர்க்ஸின் டாப் 5க்குள்ள ஒண்ணு! நிச்சயமா பார்க்கலாம்!

      Delete
  4. பாக்க வேண்டிய லிஸ்‌ட்ல வச்சிருந்தன் பாத்துர வேண்டியது தான்

    ReplyDelete
  5. விமர்சனம் நல்லா தான் இருக்கு..ஆனா இந்த டைப் படங்கள் எனக்கு பிடிக்காது சகோ ;)

    ReplyDelete
    Replies
    1. ஒட்டுமொத்தமா அனிமேஷனே பிடிக்காதா? இல்ல ஃபேன்டஸி அனிமேஷன்களா? :)

      Delete
  6. இந்த மாசத்துல இது ஐந்தாவது விமர்சனம் நண்பா...வளர்க..வாழ்க..தொடர்க...வாழ்த்துக்கள்.
    அனிமேஷன் படங்கள் அவ்வளவா பார்க்குறது இல்ல நண்பா...ஆனா விமர்சனம் வழக்கம் போல சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. //வளர்க..வாழ்க..தொடர்க...வாழ்த்துக்கள்.//
      ஹி..ஹி.. ரொம்ப தேங்க்ஸ்!

      Delete
  7. ஆகா ! அனிமேஷன்.... எங்கே டொரண்ட் லிங்கு? எங்கே டி.வி.டி?

    ReplyDelete
    Replies
    1. ஏன்.. எங்க தியேட்டர்?னு வாயில வராதோ? :)

      Delete
    2. ஹி..ஹி.. அது ரொம்ப செலவாகுமே பாஸ்,...... நாங்கெல்லாம் பச்சத்தணிலயே பலகாரம் சுடுற ஆக்கள்.

      Delete
  8. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா! Wish you the very same!

      Delete

Related Posts with Thumbnails