Tuesday, January 8, 2013

Hitchcock (2012)


ஒருவரது கேரியரில் அவர் செய்த உச்சகட்ட படைப்பே அவரது மாஸ்டர்பீஸ் எனப்படும்! இது புத்தகத்துக்கு உண்டு, சமையலுக்கு உண்டு, கிரிக்கெட் இன்னிங்ஸுக்கு கூட உண்டு! ஆனால் சினிமாவைப் பொறுத்தவரை இதுதான் ஒருவரின் உச்சம் என எந்தப் படைப்பையும் கூறிவிட முடியாது.. வேறொரு கதைக்களனில், திரை யுக்தியில் அமைக்கப்பட்ட படைப்பு, முன்னைய படைப்பிலும் எந்தவிதத்திலும் குறைவாக இருக்காது..
அவரவர் ரசனைக்கேற்ப எது சிறந்த படம் என தேர்ந்தெடுக்கப்படும். ஆகையால் தேவையான அம்சங்கள் அத்தனையையும், எதிர்பார்ப்புக்கு மேல் நிறைவேற்றிவிடும் படத்தை "மாஸ்டர்பீஸ் லெவல் படம்" எனப் பொதுவாகவே கூறிவிடுவது வழக்கம்..
ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை மாஸ்டர்பீஸ் லெவலில் கொடுத்த இயக்குனர்கள் பலர். ஆனால் இவரைப்போல் எண்ணிக்கையில் அதிகம் கொடுத்தவர் யார் உளர்??
அவரே Master of Suspense அல்ஃபிரட் ஹிட்ச்காக் அவர்கள்!!

இறுதிவரை யூகிக்க வைத்து ஏமாற்றும் ட்விஸ்டுகள், பாத்திரத்தை முன்னிறுத்தி, பேக்ரவுண்டை ஸும் அவுட் செய்யும் dolly zoom (தற்பொழுது இது தமிழ்நாட்டில் கணவனால் கழட்டி விடப்படும் மெகாசீரியல் ஹீரோயினிகள் நிர்க்கதியாய் நிற்பதைக் காட்டுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அறிகிறோம்!), close-up வயலன்ஸ் ஷாட்டுக்கள் உள்ளிட்ட எக்கச்சக்கமான சினிமா யுக்திகளை 70களுக்கு முன்னமே அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்..
இவரது 55 ஆண்டுகால கேரியரில் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.. இவரது படங்கள் அதிகம் நான் பார்த்ததில்லை.. ஆனால் ஹிட்ச்காக் வெறியரான குமரன் இவரது படங்கள் பலவற்றைப் பற்றி எழுதியுள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இங்கே கிளிக்கிப் படிக்கலாம்!

இவரது படங்களில் பெஸ்டு எதுன்னு பார்த்தீங்கன்னா.. பலரால் ஒப்புக்கொள்ளப்பட்டது vertigo தான்! 5 தசாப்த காலமாக 'உலகத்தின் சிறந்த படங்கள்' பட்டியலில் முதலிடத்திடத்தில் இருந்த Citizen Kaneஐ பின்தள்ளிவிட்டு, கடந்த வருடம் வேர்டிகோ முதலிடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது!
ஆனால் இவரின் படங்களிலேயே மிகப்பிரபலமானது எதுன்னு பார்த்தா மெகா ஹிட் படமான Psychoதான்! இப் படத்தை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது.. குறிப்பாக அந்தப் படத்தில் வரும் shower sceneஐத் தியேட்டரில் பார்த்தவர்கள் கதறிய கத்தல்களே இன்றும் பல திரில்லர் டைரக்டர்களுக்கு motiveஆக இருந்து வருகிறது.. ஹாலிவுட் வரலாற்றில் பல விதங்களிலும் முன்னோடியாக, மைல் கல்லாக, டிரெண்ட் செட்டராகப் பார்க்கப்பட்டு வரும் இந்தப் படத்தை ஹிட்ச்காக் இயக்கி வரும் காலமே படத்தின் பின்னணி!

முன்னோட்டமே பெருசான மாதிரி தெரிவாதால் டக்குனு மேட்டருக்கு பாய்கிறேன்!
இப்படியெல்லாம் பல பக்கக் கட்டுரைகள் "ஹிட்ச்காக்" எனும் பெயரைக்கேட்டவுடன் மனசிலிருந்து பாய்வதால், இந்தப் படம் அவரது பயோகிராஃபின்னோ, சைக்கோ படத்தின் behid-the-scenesன்னோ நினைத்திட வேண்டாம்! அப்புறம் ஏமாற்றம் கன்ஃபார்ம்!
இவற்றிலிருந்து அப்பப்போ ஊறுகாய் மாதிரித் தொட்டுக்கொண்டாலும், மெயின் சரக்கு ஹிட்ச்காக்கிற்கும், அவரது மனைவிக்கும் "சைக்கோ" படப்பிடிப்பு காலகட்டத்தில் நடந்த உட்பூசல்களே! ஹிட்ச்காக்கின் மனைவி Alma Reville அவரது படங்களில் எடிட்டர், ஸ்க்ரீன் ரைட்டர், உதவி இயக்குனர் உள்ளிட்ட பல வேலைகளைப் பார்த்து ஹிட்ச்காக்கின் வலதுகரமாக செயற்பட்டிருக்கிறார்.. ஆனால் எல்லாப் படங்களுக்குமான பெருமை, பாராட்டுக்கள் அன்னாரைச் சேர்ந்ததேயொழிய அம்மணிக்கு கிட்டேயும் வந்ததில்லை!
"சைக்கோ" ஷுட்டிங் காலகட்டத்தில், முதன்முறையாக ஹிட்ச்காக் அல்லாத படமொன்றில் வேலை செய்து பார்ப்போமே என்று Whitfield எனும் நபருக்கு அவரது ஸ்கிரீன்பிளேயில் உதவி வருகிறார் அல்மா.. இது கள்ளக் கனெக்ஷன் என்று ஹிட்ச்காக் காதில் யாரோ போட்டுக்கொடுக்க, டிராமா ஆரம்பம்!!

மெயின் ஹீரோவாக பழந்தின்று கொட்டை போட்ட Anthony Hopkins! என்னென்னா மேக்கப்போட்டுப் பார்த்திருக்கிறார்கள்.. ஹிட்ச்காக் சாயல் வரவே இல்லை! இருந்தாலும் மர்மமான பார்வை, அட்டென்ஷன் நடை, கீழ் உதடை தொங்கவிட்டுப் பேசுதல் என சின்னச்சின்ன மேனரிசங்கள் மூலம் ஹிட்ச்காக்கை ஞாபகப்படுத்துகிறார்.. இன்னும் நடிப்பை மேம்படுத்தியிருந்தால் ரோலுக்காக பாராட்டப்படிருப்பார்.. படத்தின் உண்மையான வின்னர் அல்மாவாக நடிக்கும் Hellen Mirren! உணர்ச்சி வசத்தோடு பக்கம் பக்கமாக டயலாக் பேசும் கிளைமேக்ஸுக்கு முன்னதான காட்சியில் தினறடிக்கிறார்! இது தவிர படத்தில் இன்னுமொரு ஊறுகாயாய் 'ஷவரில் குளிக்கும் சைக்கோ அழகி' scarlett Johansson!
படத்தின் இன்னொரு ஹீரோவாக, வசனங்கள்.. "Call me Hitch. drop the...." என்பதில் தொடங்கி தொடர்ந்து பல இடங்களில் இம்ப்ரெஸ் பண்ணுகிறார்கள். ஹிட்ச்காக்கின் மெதுவாக pause செய்து செய்து சொற்களை இறக்கும் பாணியும் வசனத்தோடு நன்றாக வொர்க அவுட் ஆகிறது..

இத்தனையும் இருந்தும் படம் பெருசாக எடுபடாமல் போயிருக்கிறது.. காரனம் வீக் ஸ்டோரிலைன்.. பெரிதக திருப்பங்கள் எதுவும் இல்லாமல் மெதுவாகவே நகரும் கதை. டிராமாவிலும் intense குறைவென்பதால், சைக்கோ ஷுட்டிங் தவிர்த்த சில காட்சிகள் போர்! ஆனாலும் 'ஹிட்ச்காக்கின் வாழ்க்கையில் ஒரு பகுதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என்று எழும் ஒரு ஃபீலிங் போதும். படத்தின் முடிவு வரை உங்களைக் கூட்டி வந்துவிடும்!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 14
கதை+திரைக்கதை =09
கலை+ஒளிப்பதிவு =14
இயக்கம் = 13

மொத்தம் = 67% நன்று! 

Hitchcock (2012) on IMDb

29 comments:

  1. ரொம்ப ஆர்வமா எதிர்பார்த்திட்டு இருந்த படம் சுமாரா இருக்குன்னு சொல்லிட்டீங்களே சோ சேட் :( :(..,

    //இவரது படங்கள் அதிகம் நான் பார்த்ததில்லை.. //
    psyco, Dail M for Murder, vertigo இதுல எதாவது ஒன்னுல ஸ்டார்ட் பண்ணுங்க அப்புறம் நீங்களும் ஹிட்சாக் வெறியர் ஆகிடுவிங்க :) :)

    ReplyDelete
    Replies
    1. முழுநீள ஹிட்ச்காக் பயோகிராஃபியாய் இருந்தால் நல்லா வந்திருக்கலாம். இது husband-wife சண்டைங்கறதால potential குறைவு

      நான் முழுசா பார்த்த படங்கள் psychoவும், rope-உம் மட்டும்தான். vertigo முன்பு எப்பயோ கொஞ்ச சீன்ஸ் மட்டும் பார்த்தது. மீதியையும் பார்க்க ட்ரை பண்ணுறேன். கன்ஸிடர் பண்ண தந்தமைக்கு நன்றி! :)

      Delete
    2. சோகமாகி மிஸ் பண்ணிடாதீங்க. சைக்கோ ஷட்டிங் சீன்ஸ் பார்க்க நல்லாயிருக்கும்!

      Delete
  2. ட்ரைலர் பார்த்தேன் தல.. பெருசா என்னை கவரவில்லை...மே பீ ஹிட்ச்காக்கின் பர்சனல் வாழ்கை நமக்கு பரிச்சியம் இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம். நீங்களும் அதே மாதிரி தான் எழுதி இருக்கீங்க..
    என்னோட favourite "Psycho" தான்..

    தல, பதிவு ரீலீஸ் பண்ணும் போது Lables-ல "சினிமா" "சினிமா விமர்சனம்" வார்த்தைகளை add பண்ணுங்க. அப்ப தான் உங்க பதிவு திரைமணம் பகுதியில் போகும். இல்லாட்டி தமிழ்மணத்துல போயிரும்...

    ReplyDelete
    Replies
    1. //என்னோட favourite "Psycho" தான்..// சேம் பின்ச்
      அட்வைஸுக்கு நன்றி நண்பா. அடுத்த தடவையிலிருந்து கடைப்பிடிக்கிறேன்!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஒருவருடைய சொந்த வாழ்க்கை ஒரு நாளும் அத்தனை சுவாரசியமாக இருக்காது என்று யாரோ சொல்லியது தான் ஞாபகம் வருகிறது..

    ReplyDelete
    Replies
    1. யாரு தலைவா சொன்னது? :)

      Delete
  5. ராஜ் சொல்வதை தான் நானும் நினைக்கிறன் ஹிட்ச்காக் வாழ்கை நமக்கு பரிச்சியம் இல்லாதது .அதனால் பெருசாய் சுவாரசியம் இருந்திருக்காது .ஒரு வேலை அமெரிக்க ,இங்கிலாந்த் போன்ற நாடுகளில் படம் எடுபடலாம் .கணவன் மனைவி சண்டை தவிர படத்தில் அவரது திரை வாழ்கையை கொஞ்சம் அதிகம் காட்டி இருந்தால் ஒரு வேலை நன்றாக இருக்குமோ ? ஆனால் சைக்கோ பட நாயகி ஹிட்ச்காக் நிஜ சைகோ தான் என்று சொன்னதாக சம்மேபதில் ஒரு புத்தகத்தில் படித்தேன்.

    ReplyDelete
  6. //கணவன் மனைவி சண்டை தவிர படத்தில் அவரது திரை வாழ்கையை கொஞ்சம் அதிகம் காட்டி இருந்தால் ஒரு வேலை நன்றாக இருக்குமோ ?//
    அதையேதான் நானும் நினைக்கிறேன். ஹிட்ச்காக்கின் முன்னைய படங்களின் மேக்கிங்கையும் கோர்வையாக காட்டியிருக்கலாம். (Aviator படத்தைப் போல)

    //ஆனால் சைக்கோ பட நாயகி ஹிட்ச்காக் நிஜ சைகோ தான் என்று சொன்னதாக சம்மேபதில் ஒரு புத்தகத்தில் படித்தேன்.//
    படத்திலும் அதை ஊர்ஜிதப்படுத்தும் படியான காட்சிகள் உண்டு. முற்றுமுழுதாக சைக்கோ என்று சொல்வதற்கில்லை. ஆனால் குழப்பமான, சமயங்களில் கட்டுப்படுத்த முடியாத மனநிலையுடனேயே ஹிட்ச்காக் இருப்பார்!

    ReplyDelete
  7. சைக்கோ பற்றி என் தாத்தா (அம்மாவின் சித்தப்பா) அவர் காலேஜ் படிக்கும் போது "A" படமென்பதால் மீசை ஒட்டிக்கொண்டு போய் பார்த்த கதையை பல முறை சொல்லியிருக்கிறார். படத்தைப் பார்க்காமலேயே படத்தின் ஒவ்வொரு சீனும் எனக்கு அத்துபிடி. அத்தனை முறை படத்தைப் பற்றி அவர் சிலாகிச்சு சொல்லியிருக்கார் :-) இந்தப் படம் முழுக்க முழுக்க Psycho - Behind the Scenes புதிய அனுபவம் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன், டிரைலரே கொஞ்சம் ஏமாற்றியது; உங்களது விமர்சனமும் அதையே உறுதி செய்கிறது. இருந்தாலும் என்ன, பார்த்து வைப்போம் :-)

    ReplyDelete
    Replies
    1. சும்மா டைம்பாஸுக்கு ஒருவாட்டி இந்தப் படம் பார்க்கலாம். அவ்வளவுதான். அதுக்கு மேல எதிர்பார்த்தா ஏமாற்றம்தான்!

      Delete
  8. Hitchcock நம்மட மாஸ்டர் இயக்குனர்களில் ஒருவர் - நானும் இந்த படத்தோட டீஸர் டிடய்ல்ஸ் பார்த்த போது பெருசா எதிர்பார்க்கவில்லை, இப்ப கூட பார்க்கனும்னு தோணல காரணம் ஹிட்ச்காக் ஒரு லெஜன்ட் அவரது படங்களை பார்த்துதான் அவரை அளவிட முடியும் I've seen his Rear Window, Rope and Psycho. Vertigo and Dial M for Murder are on the watch list.

    ReplyDelete
    Replies
    1. //அவரது படங்களை பார்த்துதான் அவரை அளவிட முடியும்// கரெக்டு. அவரது பர்சனல் வாழ்க்கையெல்லாம் நமக்கென்னத்துக்கு?
      அவரோட மத்தப் படங்களையும் பார்த்துருங்க :)

      Delete
  9. ஏது ஹிட்சாக் ங்கிறது ஒரு டைடர்டர் பேரா? நான் இத்தின நாளா அது ஒரு படம் என்றல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன். வாழ்க...... என் மூளை.. வளர்க என் அறிவு

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான்.. ஊருக்கு ஒரு அறிவாளி வேணுங்கறது! :)

      Delete
  10. சாரி தல... நீயி பதிவு போட்டு மூணு நாள் ஆகிடிச்சு.... நான் அந்த மூணு நாள பெருசா நெட் பக்கம் வரல, நேத்து கூட அவசர அவசரமா பதிவ போட்டுப்புட்டு கெளம்பிட்டேன். கோவிச்சுக்காத என்னா...

    ReplyDelete
    Replies
    1. இத்த போயி நா ஏன் கோவிச்சுக்கின போறேன்?? :)

      Delete
  11. அப்போ எங்க பவர் ஸ்டாரோட மாஸ்டர் பீஸ் எதுவாக இருக்கும்? "தேசிய நெடுஞ்சாலை"? "திருமா?" ஸ்ரீனா?" "ஆனந்த தொல்லை"? " மூலைக்கடை முருகேசன்?" , எல்லாமே மாஸ்டர் பீஸ் தான்ம்பா...

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு படமும் ரிலீஸ் ஆயிருச்சா என்ன? இன்டஸ்ட்ரி தாங்காதும்லே.. டக்குனு பயலை "ஹாலிவுட்"டுக்கு அனுப்பிரோனும்!

      Delete
  12. அப்புறம் உலகமே கொண்டாடும் "சைக்கோ" படத்தை பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இன்னமும் பாக்கவில்லை. எங்கே பாஸ் திருட்டு டி.வி.டி கிடைக்கும்?

    ReplyDelete
    Replies
    1. இங்கேல்லாம் 60களின் படங்களுக்கு திருட்டு டி.வி.டி அடிச்சு நான் கண்டதேயி்ல்லை. இருந்தாலும் ஹிட்ச்காக் கலெக்ஷன்கள் அல்லது கலெக்டர்ஸ் எடிஷன்கள் போடுவார்கள் என்று நினைக்கிறேன்.. எறங்கி தேடித்தான் பார்க்கனும்

      Delete
  13. அப்புறம் சொல்ல மறந்துட்டேன், வழமை போலவே விமர்சனம், மரண மொக்கை, சகிக்கல.. உவ்வே... அப்ப நான் வரட்டா!!

    ReplyDelete
  14. ஹிட்ஷாக் நா ...இத்தாலியின் காந்தி நு சொல்லுவாங்களே அவரபதிய படோமோனு நினைசேன் .

    ReplyDelete
  15. முதலில் என்னோட பெயரையும் பதிவுல குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி..ஹிட்ச்காக் பற்றி எழுதுவதற்கே எனக்கு தகுதி இல்லங்க நண்பா..ஏதோ படம் பார்த்து கதை சொல்லல்-தான் பண்ணிட்டு இருக்கேன்..இன்னமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கேன்..இந்த படம் லிஸ்ட்டுல எப்பயோ சேர்த்துட்டேன்..உங்க விமர்சனம் சூப்பர்..நன்றி/

    ReplyDelete
    Replies
    1. //முதலில் என்னோட பெயரையும் பதிவுல குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி..ஹிட்ச்காக் பற்றி எழுதுவதற்கே எனக்கு தகுதி இல்லங்க நண்பா..//
      இதுக்கு பேரு தான் மக்களே தன்னடக்கம்..
      பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க நண்பா!

      Delete
  16. நல்ல பகிர்வு! நானும் ஒரு காலத்தில் ஹிட்ச்காக் பைத்தியம் பிடித்து தொடர்ந்து 25 படங்களுக்கு மேல் பார்த்தேன் :) தொடர் பதிவு எழுத ஆசைப்பட்டு பாதியில் நிற்கிறது :(

    http://balavin.wordpress.com/category/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%81%e0%ae%aa%e0%ae%b5%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. இப்போதான் போய் வாசிச்நேன். நீங்கள் எழுதும் பாணி உண்மையிலேயே சூப்பர்.. தொடரை கண்டினியு பண்ணி இருக்கலாமேனு தோணுது!!

      Delete

Related Posts with Thumbnails