"Les Miserables படம் வருஷத்தோட (2012) பெஸ்டு படங்கள்ல ஒண்ணாமே? ஆஸ்கர் நாமினேஷன் வேற?" ஏற்கெனவே பலருக்கும் பரிச்சயமான ஆங்கில இலக்கியங்களில் ஒன்றான விக்டர் ஹியூகோவின் கதைதானே.. டைம் ஒதுக்கி எப்பயாவது பார்ப்போம்.
" Hugh Jackman லீட் கேரக்டரா? ஆஸ்கர் நாமினேஷன் ஒருவழியா சாருக்கு கிடைச்சுருச்சா?.. Russel Crowe, Anne Hathaway, Amanda Seyfried, Helena Bonham Carter, 'டிக்டேட்டர்' புகழ் Sacha Cohen.." நடிகர் பட்டாளமேவா?? அப்ப கண்டிப்பா இப்பயே பார்த்தாகனுமே..
இப்படிப்பட்ட பல யோசனைகளுக்கப்புறம் படத்தை ஒருவழியா தொடங்குறேன்.. முதல் கேரக்டர் வர்றாரு.. வாயைத் தொறக்கறாரு.. எங்கடா டயலாக்? என்ன வசனத்தை பாட்டு மாதிரி படிக்கிறாரு?
ஐயையோ.. அப்ப இது மியூசிக்கல் படமா? castல்லாம் பெருசா செக் பண்ணவன் அதி முக்கியமான genreயை செக் பண்ணாம விட்டேனே (நா எல்லாம் என்னத்த சினிமாவை பார்த்து?...)
'சரி விடு. மியூசிக்கல்னா.. அதுக்கென்ன? மியூசிக்கல் படம் ஒண்ணு வருஷத்தோட பெஸ்டா இருக்கக் கூடாதா??' மூளையின் கேள்விக்கு, எங்கிருந்தோ வந்த மனசாட்சியும் "அதானே" போடவும், 'தொடங்கினதுதான் தொடங்கிட்டோம்.. முடிச்சுருவோமே!'
ஏற்கெனவே Sweeney Todd பார்த்தவன் என்ற வகையில், மியூசிக்கல் படங்கள் எனது ஃபேவரிட் இல்லாவிட்டாலும் கூட ஓரளவுக்கேனும் ஒன்றிப் பார்க்கக் கூடிய கேட்டகரியே.. உங்களுக்கு அப்படிப் பட்ட மியூசிக்கல் படங்கள் பிடிக்காதானால் இப்பவே கிளம்பி ஓடுங்கள்.. நேரம் மிச்சம்! இல்லை இனித்தான் முயன்று பார்க்கனும்னா, இந்தப் படம் உகந்த ஒரு ஸ்டார்ட்! தாராளமா ட்ரை பண்ணுங்க.. ஒரு மியூசிக்கலுக்குத் தேவையான அத்தனை ஐட்டமும் இதில் தெளிவா இருக்கு. இந்தப் படம் பிடிக்காட்டி, வேறு எந்த மியூசிக்கலுமே உங்களுக்கு பிடிக்கப் போவதில்லை என்று தீர்மானமாக நம்பலாம்.. உங்களுக்கு மியூசிக்கல் படம்தான் பிடிக்கும்னா..
வெல், இன்னுமா பார்க்காம இருக்கீங்க??
படத்தின் கதையே Miserable வாழ்க்கை வாழும் மனிதர்களின் கவலைகள்தான்.. சாதாரண பிரெட் துண்டை திருடியதுக்காக 19 வருடம் ஜெயில் வாழ்க்கை வாழும் ஒரு கைதி, தனது மகளை வேறொருவரின் பொறுப்பில் விட்டு வெகுதூரம் கடந்து உழைத்து பணத்தை திருட்டுத்தனமாக மகளுக்கு அனுப்பும் தாய், கொடுமைக்கார குடும்பத்தில் வளர்ந்து வரும் அவளது மகள், எதேச்சதிகார ஆட்சியில் நசுங்கி அதற்கெதிராக குரல்கொடுக்கும் புரட்சி மனப்பாங்குடைய பிரெஞ்சு மக்கள்.. இப்படிப்பட்ட பாவப்பட்ட ஜீவன்களின் வாழ்க்கையை லிங்க் பண்ணுவதே கதை... ஆக்சுவலி படத்தோட வீக் அம்சங்களில் கதையும் ஒன்று. அதையும் சொல்லிட்டா படம் பிடிக்காமலே போயிடும். அதுனால, ஏற்கெனவே நாவல் வாசிக்காதவர்கள் முடிந்தவரை ஃபிரெஷ்ஷா படம் பாருங்க. இல்லை வேணும்னு அடம்பிடிச்சா விக்கிப்பீடியாவை நாடுங்க!
ஸோ, நம்ம நேரடியா பிளஸ் - மைனஸ்களுக்கு போயிடுவோம்!
படத்துக்கு மிகப் பெரிய அஸ்திவாரமே நடிப்புத்தான்! இந்த மாதிரிப் படங்களில் நடிப்பது மகா சிரமமான விஷயம்.. சும்மா யோசிச்சுப் பாருங்க.. முகத்தில் எக்ஸ்பிரேஷனையும், உடம்புல மேனரிசத்தையும், வாயுல நடிப்புல காட்டவேண்டிய எமோஷனைக் கலந்து பாடிக்கொண்டே நடிக்கனும்! (பாடும் போது சிரிப்பு வராமல் இருப்பதே பெரிய விஷயம்!) Hugh Jackman என்றைக்கும் இல்லாத அளவுக்கு கலக்குகிறார்!! ஆரம்பகாட்சிகளில் மொட்டை அளவுக்கு ஹேர்கட்டுடனும், முகத்தை மூடும் தாடியுடனும்.. ஆளே தெரியலை.. பிறகு வயசானதுக்கப்புறம் தான் யூத்தா வர்றாரு.. (மேக்கப் பிராப்ளம்?) சர்ச்சில திருடிட்டு தன்னைத்தானே நொந்துகொள்ளும் சீனிலும், உயிருக்குயிராக வளர்த்த மகளை பிரிந்துசெல்லும் சீனிலும் தேவைக்கும் அதிகமாக நடிப்பில் முதிர்ச்சியைக் காட்டியிருக்கிறார்! Who Am I பாட்டை இவர் பாடும் விதமே தனி!!
Anne Hathaway!!!! இன்னும் எவ்வளவோ ஆச்சரியக் குறிகள் பக்கத்தில் போட்டுக்கிட்டே போகலாம். நான் இவ்வளவு நாளும் ஒரு overacting ஆர்டிஸ்டுன்னுதானே நெனைச்சுக்கிட்டிருந்தேன்.. TDKRல கேட்வுமனா இவங்களை போட்டதில் ஏதொ உறுத்தலாகவே இருந்தது எனக்கு. ஆனா இதுக்கப்புறம் ஒரு வாய் தொறக்கமாட்டேன்.. மூச்!
ஒரு இருபது நிமிஷம் வந்திருப்பாங்களா படத்துல? ஆனாலும் everlasting impression.. முடியை வெட்டிக்கிட்டு, பல்லை புடுங்கிக்கிட்டு, விபச்சாரியா வாழும் I dreamed a dreamed பாட்டை பார்க்கனுமே... சான்ஸ்லெஸ்! Best Supporting Actress கேட்டகரியே இவங்களுக்குத்தான்.. அது எந்த அவார்டா இருந்தாலும்!!
Russel Crowe வழக்கமாகவும், Amanda முந்தைய படங்களை விட பெட்டராகவும், Helena மற்றும் Sacha தங்களுக்குகைவந்தகலையான கேரக்டர்களில் கலாட்டாவான நடிப்பையும் வாரி வழங்கியிருக்கிறார்கள்.. முழு திருப்தி!
இன்னொரு பெரிய பிளஸ் படத்தின் செட் புரொடக்ஷன் டீம், மற்றும் ஒளிப்பதிவு! அன்றைய பிரான்ஸை கதைக்கு ஏற்றபடி கண்முன்னே நிறுத்துகிறார்கள்! அப்புறம், மியூசிக்கல் படத்துக்கு மியூசிக் மைனஸாக முடியுமா என்ன? இதிலும் பின்னியிருக்கிறார்கள்.. அனால் அளவுக்கதிகமான பாடல்கள் ஒரே மெட்டில் அமைந்திருப்பது லைட்டான எரிச்சல்..
படத்தின் இயக்குனர் Kings Speech எடுத்த டாம் ஹுப்பர்.. மியூசிக்கல் ஜோனரில் தைரியமாக இறங்கி சாதித்திருக்கிறார். முன்பாதி விறுவிறுப்பாக நகர்வதற்கு இவரது பங்களிப்பு அதிகமாகத் தோன்றுகிறது..
ஒரே முக்கிய குறை.. படத்தின் நீளம்! ரெண்டரை மணித்தியாலம் இருந்து படம் பார்க்குறதுல்லாம் ஒரு பெரிய மேட்டரை இல்லை! ஆனால் படம் முழுக்க பாடல்களே என்கிற போது, அதுவும் ஒரு வரி வாக்கியத்தை ஏழு வரிப் பாடலாக பாடி முடிக்கும் போது சில சில இடங்களில் ஃபாஸ்டு ஃபோவர்டு செய்வதை தவிர்க்க முடிவதில்லை! ஆனால் கண்டிப்பாக சிறந்த படம்.. வருடத்திலேயே பெஸ்டுகளுக்குள் ஒண்ணு ? Sure..
மியூசிக்கல் படங்களிலேயே பெஸ்டு? ஜஸ்டு மிஸ்டு! :)
* அப்பறம் நெறைய பேருக்கு தெரிஞ்சுருக்கும். நேத்து முடிஞ்ச கோல்டன் குளோப் விருதுகளில் (ஆஸ்கருக்கு அடுத்து முக்கியமான விருது) மியூசிக்கல் பிரிவின் கீழ் போட்டியிட்டு சிறந்த படம், சிறந்த நடிகர் (Hugh Jackman), சிறந்த துணை நடிகை (Anne Hathaway) ஆகிய 3 விருதுகளை வென்றெடுத்துள்ளது!!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 19
இசை =17
கதை+திரைக்கதை = 11
கலை+ஒளிப்பதிவு = 18
இயக்கம் = 16
மொத்தம் = 81% மிக நன்று
ஒருபக்கத்தால ஒரிஜினல் ப்ரிண்ட் ரிலீஸாக மறுபக்கம் உங்க விமர்சனங்கள் ரிலீஸாகிட்டிருக்கு. சூப்பர்!!! கண்டினியு.. நான் 720p ரிப் வந்தப்பறம் தான் பார்க்கணும்.
ReplyDelete//ஒருபக்கத்தால ஒரிஜினல் ப்ரிண்ட் ரிலீஸாக மறுபக்கம் உங்க விமர்சனங்கள் ரிலீஸாகிட்டிருக்கு. //
Deleteநமக்கு இதை தவிர என்ன வேலையிருக்கு.. ஆஸ்கர் படங்களை ஆஸ்கருக்கு முன்னமே பார்க்குற அனுபவம் அலாதியானது. போன வருஷம் நீங்க எல்லாப் படத்தையும் இன்ட்ரொடியூஸ் பண்ணிங்க.. நானு பிஸியாகி ஆஸ்கருக்கு அப்புறம்தான் நெறைய பார்த்தேன். இப்ப உங்க ரிட்டர்னுக்கு வெயிட்டிங்!:)
இந்த மாதிரி படங்கள் நமக்கு ஒத்துவராது பாஸ்
ReplyDeleteபடம் வேற ரெண்டர மணிநேரம்.... தாங்காது.
அப்ப ஸ்கிப்பிக்கோங்க.. :)
Deleteதல, ஊருக்குள்ள நல்ல பிரிண்ட்ல என்னென்ன படங்கள் வந்துருக்குன்னு வர வர உங்க பதிவுகள பாத்துதான் தெரிஞ்சிக்கிறேன் :-) டவுண்லோட் போட்டாச்சு. வளரட்டும் தங்களது கலைப்பணி :-)
ReplyDeleteநன்றி நண்பா!
DeleteChigaco தவிர எந்த ம்யூசிக்கல் ப்டமும் பாத்ததில்லை ஆஸ்கர் நாமிநேஷன் அப்படிங்கறத்துகாகவே பார்த்தாகனும் பாப்போம் :) :).
ReplyDeleteநம்மளும் எப்பயாச்சும் தான் மியூசிக்கல் பக்கம் வர்றது.. :)
DeleteEla-kiri review, if I'm watching a musical it'll definitely be Tim Burton's Pieces. My first musical movie is Sweeny Todd
ReplyDeleteநன்றி நண்பா. எனக்கும் ஃபர்ஸ்ட்டு மியூஸிக்கல் ஸ்வீனிதான்!
Deleteபட போஸ்டரை பார்த்தா, ஆக்சன் படம் பில்டப்பா தெரியுது. இசைப்படம் என்கிறீர்கள். போஸ்டரைப் பார்த்து ஏமாறக்கூடாது! :)
ReplyDeleteஅஃதே அஃதே!!
Delete