BiPolar Disorder ஞாபகமிருக்கிறதா?.. 3 படத்துல தனுஷுக்கு வருமே.. அதே மனநோய்தான். இந்த நோய் தீவிரமடைந்த பின்னர் நோயாளிகள் ஒரே depressed ஆக இருப்பதோடு, அவ்வப்போது வயலண்டாக ஏதாவது பண்ணி வைத்துவிடுவார்கள்! அதைத் தான் தனுஷ் செய்தார்..
ஆனா இந்த நோயின் ஆரம்ப லெவல்களில் நோயாளி படு energeticஆகவும், எப்பயுமே துறுதுறுன்னு எதையாவது செய்து கொண்டும், யோசித்துக்கொண்டும் இருப்பார். அதைத்தான் இங்க Bradley Cooper செய்கிறார்!
Lithium Salts (படத்தின் சில காட்சிகளில் குறிப்பிடப்படும்), மற்றும் தொடர்ச்சியான உடற்பயிற்சி போன்ற சின்னச்சின்ன ட்ரீட்மெண்ட்களாலேயே குணப்படுத்தக்கூடிய வியாதிதான் BiPolar Disorder என்று காட்டுவதாலும், மிக முக்கியமாக கதாநாயகன் கடைசியில் தற்கொலை செய்துகொள்வதாகக் காட்டாததாலும் படத்தை எல்லாரும் மேற்கொண்டு பார்க்கலாம் என்பதை இத்தால் அறிவித்துக் கொள்கிறேன்..
சரி, இப்ப கதை எப்படின்னா, ஹீரோ சில மாத வைத்தியசாலை ட்ரீட்மெண்டுகளுக்குப் பின்னர் (இன்னும் முழுசா குணமாகலை.. ஆனாலும் உக்கிரமா இல்லை) வீட்டுக்கு வர்றாரு.. வந்து பார்த்தா முதல் அதிர்ச்சியாக அவரோட அப்பா வேலையில இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்னு தெரிய வருது.. superstitionகள் மேல அதீத நம்பிக்கை கொண்ட இவரதுது தந்தை, வேலையில்லாததால் நண்பர்களோடு பேஸ்பால் போட்டிகளின் முடிவுகள் பற்றி சூதாடி காலத்தை ஓட்டுறாரு.. அதை விடப் பெரிய அதிர்ச்சியாக ஹீரோவின் மனைவி, அவரோடு வாழப் பிடிக்காமல் வீட்டை விட்டுப் போயிருப்பதும் தெரிகிறது!!
உடற்பயிற்சிகளும், check-upகளுமாக ஹீரோ அலைந்து கொண்டிருக்கும் போது அவரது ஏரியாவில் இருக்கும் tiffany எனும் பெண்ணின் அறிமுகம் கிடைக்கிறது.. இவளுக்கும் ஹீரோ மாதிரித்தான், லைட்டா மனநோய்.. அவர்கள் சகஜமாகக் கலந்துரையாடும் போது tiffanyயின் கணவன் இறந்து விட்டாரெனவும், அவளுக்கு ஹீரோவின் மனைவியான 'நிக்கி'யுடன் நட்பு இருப்பதாகவும் கூறுகிறாள். உடனே ஹீரோ தான் நிக்கியுடன் பேச ஏற்பாடு செய்து தரவேண்டுகிறான்.. 'பதிலுக்கு தன்னுடன் ஒரு டான்ஸ் competitionல் ஆடவேண்டுமென்று' அவள் கண்டிஷன் போடுகிறாள்.. இரண்டு பேரின் கேரக்டரும் எதிரும் புதிருமாக இருப்பதால், அடிக்கடி முட்டிக் கொண்டாலும் தொடர்ந்து அவர்களது நட்பு வளர்கிறது... அப்புறம் என்னாச்சு?? என்பதை பார்த்தறிந்து கொள்க.
மேலே மனநோய் அப்படின்னு சொல்லிக்கிட்டிருந்ததால சோகமான படமோ அப்படீன்னு மனசைத் தளர விட்டுறாதீங்க.. ஸ்டார்டு முதல் எண்டு கார்டு போடுற வரைக்கும் முழு நீள காமெடிப் படம்.. சிம்பிளான, ஜாலியான கதாப்பாத்திரங்கள் மூலம் வாழ்க்கையில் எல்லாமே ஜஸ்ட்-லைக்-தட்டாகக் கடந்து போகும்னு காட்டுகிறார் இயக்குனர் David O Russel.. ஆஸ்கருக்கு நாமினேட் ஆகனும்னா பெரிசா சிக்கலான பிளாட் எதுவும் யோசிக்கத் தேவையில்லை.. 'இத்துனூண்டு கதையும், அதுல உயிரும் இருந்தா போதும்'ங்கறது இவரது வாதம்..
பிராட்லி கூப்பருக்கு நெஜமாவே பைபோலார் டிஸார்டரோன்னு சந்தேகமா இருக்கு.. மனுஷன் முக எக்ஸ்பிரஷன்களில் கலக்குகிறார்.. Tiffanyயாக ஜெனிஃபர் லாரன்ஸ்.. Hunger Gamesல காட்டின பொண்ணுக்கும், இந்தப் பொண்ணுக்கும் இம்மியளவும் ஒற்றுமையேயில்லை.. முகத்தை தவிர! முதல் படத்தில் 'உம்'முன்னு உட்கார்ந்திருந்தவர், இதில் முழு dynamic ரோலில் கிறங்கடிக்கிறார்! ரெண்டு பேரும் மாத்தி மாத்தி நடிப்புல போட்டி போட்டுக் கொண்டாலும் எனக்கு ஜெனிஃபரின் நடிப்பு, பிராட்லியையும் தாண்டிப் பிடிச்சிருந்தது!
ஹீரோவின் செய்கைகளில் '3' படமும், டான்ஸ் பிராக்டீஸ் சீன்களில் 'போடா போடி' படமும் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.. அப்படியிருந்தும் கூட படம் எனக்குப் பிடிச்சிருந்திச்சுன்னாப் பார்த்துக்கோங்களேன்.. படத்தின் வசனங்கள் எல்லாம் சூப்பர்.. சில வசனங்கள் தத்துவத்துக்கும், மொக்கை காமெடிக்கும் நடுவுல ரூட்டு போட்டு வண்டியோட்டுகின்றன. படத்தை இன்ச் இன்ச்சாக ரசிக்க முடியும்!
ஆஸ்கர் ரேஸுல 12 நாமினேஷன்களுடன் "லிங்கன்" படம் சாதனை படைச்சுக்கிட்டிருப்பதா நினைக்கலாம். ஆனால் அசல் சாதனைக்கு சொந்தக்காரன் இந்த "சில்வர் லைனிங்ஸ்" தான்.. ஆஸ்கர் வரலாற்றில் 30 வருஷத்துக்கப்புறம் நடிப்புக்காக கொடுக்கப்படும் 4 கேட்டகரியிலேயுமே நாமினேட் ஆன படம் இதுதானாம்! இதுவரைக்கும் இப்படி நாமினேட் பண்ண படங்கள் எதுவும் நான்கு விருதுகளையுமே தட்டிச் சென்றதில்லை..
அது மட்டுமில்லாமல் 8 வருஷத்துக்கப்புறம், Big 5 எனப்படும் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குனர், திரைக்கதை ஆகிய முக்கிய விருதுகளுக்கும் நாமினேட் பண்ணப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து விருதுகளையும் ஒருமிக்க வென்ற படங்கள் மூன்றே மூன்றுதான்.. ஆக இந்த ரெண்டு ஆப்ஷன்ல எதையாவது இந்தப் படத்தால் சாதிக்க முடிந்தால் (அல்லது ரெண்டையுமே சாதிக்க முடிந்தால்) படம் எங்கேயோ..... போயிரும்!!!
மிஸ் பண்ணிராதீக.. அப்புறம் வருத்தப்படுவீக!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 18
இசை =16
கதை+திரைக்கதை = 15
கலை+ஒளிப்பதிவு = 17
இயக்கம் = 18
மொத்தம் = 84% மிக நன்று

ஆஸ்கார் நாமினஷோன் படங்கள் எல்லாம் பார்க்கிறீங்க போல....
ReplyDeleteநான் இதை சீரியஸ் பட லிஸ்ட்ல வச்சு இருந்தேன் தல...நீங்க சொல்லி தான் காமெடின்னு தெரியுது. கண்டிப்பா பார்க்கணும் தல...
//ஆஸ்கார் நாமினஷோன் படங்கள் எல்லாம் பார்க்கிறீங்க போல....// வேற வேலை நமக்கேது?
Deleteகாமெடிங்கறத விட ஜாலியான லைஃப்ஸ்டைல் என்பது படத்துக்கு மிகப்பொருத்தம்!
என்னோட லிஸ்ட்ல கூட வச்சிருந்தன் பாத்துரன்
ReplyDeleteபாத்துட்டு வந்து கமண்ட் பண்றன்
ஓ.கே நண்பா!
Deleteசென்ஷி.. நல்ல விமர்சனம். என்னை பொறுத்தவரையில் சென்ற வருட படங்களில் யும் தாண்டி சிறந்த படம் இதுதான். ஜென்னிபர் லாரென்ஸ் கலக்கல். அந்த பொண்ணு பிறந்ததுக்கே அதுக்கு ஆஸ்கார் கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் ஒரு யூட்யூப் கமெண்ட் பாத்தேன். 50 பேர் லைக் செய்திருந்தார்கள் 51வதாக நானும் :))
ReplyDeleteநல்ல விமர்சனம். என்னை பொறுத்தவரையில் சென்ற வருட படங்களில் யும் தாண்டி சிறந்த படம் இதுதான். ஜென்னிபர் லாரென்ஸ் கலக்கல். அந்த பொண்ணு பிறந்ததுக்கே அதுக்கு ஆஸ்கார் கொடுக்க வேண்டும் என்று சமீபத்தில் ஒரு யூட்யூப் கமெண்ட் பாத்தேன். 50 பேர் லைக் செய்திருந்தார்கள் 51வதாக நானும் :))
ReplyDeleteகண்டிப்பாக.. அந்தகமெண்டும் சூப்பர்! போற போக்கைப் பார்த்தால் ஜெனி இன்னும் சில வருடங்களிலேயே மெகா ஸ்டாராகப் போகுது போல!!
Deleteநிச்சயம் இந்தப்படம் பார்ப்பேன்.
ReplyDeleteஅதென்ன... ஜென்னிபர்னு பேர் வச்சாலே அழகு வந்திருமா!
உ.ம். ஜெனிபர் லோபஸ், ஜெனிபர் அனிஸ்டன்...Jennifer Beals.
Flash Dance என்ற ஒரே படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
காரணம் ஜெனிபர் பீல்ஸ்.
இந்த ராட்சசியை என்றும் மறக்க முடியாது.
படம் அட்டகாசமான மியுசிக்,டான்ஸ் & ரொமண்டிக் லவ் ஸ்டோரி.
பார்த்து விடுங்கள் ஜே.இஸட்.
கண்டிப்பாக.. பார்க்க முயற்சிக்கிறேன்! வருகைக்கு நன்றி! :)
Deleteபாத்தாச்சு தல சேம் பீலிங் அப்பறம் என்னத்த சொல்ல சூப்பர்
ReplyDeleteஜெனிபர் லாரென்ஸ் ...................ம்ம்ம்
உங்களுக்கும் திருப்தியா?.. சூப்பர்!
Deleteஎன்னை பெருசா இம்ப்ரெஸ் பண்ணாத Hunger Games சிரிஸின் அடுத்தடுத்த பாகங்களையும் ஜெனிக்காக பார்க்கலாம்னு இருக்கேன்!
அப்பறம் zero dark thirty விமர்சனம் விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்...
ReplyDeleteநீங்க பார்த்துட்டீங்களா தல? நான் இன்னும் ZDT, Argo, Lincoln, Amour.. நாலும் பாக்கி! கூடிய சீக்கிரம் பார்க்கிறேன்!
DeleteZDT பாத்தாச்சு நண்பா படம் செமயா இருக்கு என்ன கொஞ்சம் ஸ்லோ
ReplyDeleteஅடுத்த ரொம்ப எதிர்ப்பார்க்குறது Argo
அடச் சே.. இன்னும் நிறைய ஆஸ்கார் நாமினேட்ட் படங்கள் நல்ல ப்ளுரே காப்பி ரிலீஸ் ஆகலியே? இன்னும் எத்தனை நாள் காத்திருக்கவேண்டி வருமோ தெரியல.. XBMC மூலம் ஆன்லைன்ல dvdrip, dvdscr, r5 ரிலீஸ்லாம் stream பண்ணிப் பார்த்துடலாம்.. ஆனாலும் எதுக்கு இரண்டு முறை bandwidth வேஸ்ட் பண்ணனும்னு தான் வெயிட்டிங்.. :(
ReplyDeleteவெயிட் பண்ணித்தான் ஆகனும். :(
Deleteபெப்ரவரி 12தான் சில்வர் லைனிங்ஸ் ப்ளூரோ வரும்.. அதைத் தொடர்ந்து ஏனையவையும் வரலாம்! :)
நல்ல விமர்சனம்
ReplyDeleteநன்றி.
www.padugai.com
Thanks
ஆஸ்கார் படங்களா பார்க்கிறீங்க போல..வெல் நண்பா..தொடர்ந்து பாருங்க..இந்த மாசத்துல வந்த நீங்க எழுதுன எல்லா படங்களும் நல்லாருக்குனு பல ரிவியூஸ் சொல்லுது நண்பா.நீங்களும் நல்லா பண்ணிருக்கீங்க.பார்க்க டிரை பண்றேன்..
ReplyDeleteகண்டிப்பாக நண்பா.. ஆதரவுக்கு நன்றி!!
Deleteபடத்தை நன்றாக அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி தல!
Deleteதல, என்ன ரொம்ப பிஸியோ..?? ரொம்ப நாளா பதிவு ஒன்னும் எழுதல..?? தொடர்ந்து எழுதுங்க தல..அஞ்சு மாச பிரேக் போதும் ..:):)
ReplyDelete