ஒரு படம்னா அது பார்வையாளனை கதையால கவரனும்.. கதை இல்லைன்னா நடிப்பால, இசையால, ஆக்ஷனால எதாலயாவது கவர்ந்துரனும்.. இல்லாட்டி அது சொதப்பல் அட்டெம்ட்!
கதையும் இருக்கு, நடிப்பும் இருக்கு, இசையும் இருக்கு.. ஆனா அது எல்லாத்தையும் தாண்டி 'பாத்திரப் படைப்பால' கவர்ந்திழுத்த ஒரு படம்தான் இது. 'தொண்ணூறுகளின் தொடக்கத்தில், உயர் பள்ளியில் இணையும் 15 வயது மாணவனது freshman வருடத்தையும், அவனுக்கு கிடைக்கும் நட்பு வட்டாரத்தையும்' பற்றி 1999 ல் இதே பெயரில் வெளிவந்த அமெரிக்க நாவலைத் தழுவிய படம்..
இந்த வாட்டி கதைக்குள்ள கொஞ்சம் டீப்பா போவோம்!
சார்ளிக்கு 15 வயசு ஆவுது. தனது ஹை ஸ்கூலில் தனது முதலாவது வருடத்தைப் பற்றி ஏகப்பட்ட பயங்களோடு நுழைகிறான்.. அவற்றில் மிக முக்கியமான பயம்.. ப்ரெண்ட்ஸ்! சார்ளி சாதாரணமாக யாருடனும் இலகுவில் பழகுவதில்லை.. அவனுக்கிருந்த ஒரேயொரு பெஸ்டு ஃப்ரெண்டும் போனவருடம் தற்கொலை செய்துகொண்டான். இப்போ தெரியாத வகுப்பில் எங்கேர்ந்து ஃப்ரெண்ட்ஸை தேடிக்கறதுன்னு ஒரே கவலை. அதே பள்ளியில்தான் அவனது அக்காவும் சீனியராகப் படிக்கிறார். அக்காவின் நண்பர்கள் நிறைய பேரை அவனுக்கு தெரியும்.. இருந்தாலும் ஸ்கூலில் அவனை யாரும் கண்டு கொள்வதேயில்லை!
தானும் தன் பாட்டுமாக தனியாகவே சுத்திக்கொண்டிருந்த இவனுக்கு ஸ்கூல் பேஸ்போல் போட்டியைப் பார்க்கப்போகும்போது இரு சீனியர்களின் அறிமுகம் கிடைக்கிறது.
முதலாவது பாட்ரிக்.. ஸ்கூலின் டாப் குறும்புக்காரன். ரெண்டாவது சாம்.. ஆம்பளையில்லீங்க.. பாட்ரிக்கின் step-sister!
இந்த அறிமுகம் சில நாட்களின் பின் நட்பாக மெல்ல உருவெடுக்கும் தருணத்தில், இவர்கள் டிரக்கில் tunnel ஒன்றிற்குள்ளால் பயணிக்கின்றனர்.. இசைப் பிரியர்களான மூவரும் ட்ரக் ரேடியோவில் தெரியாத பாட்டொன்றை கேட்டுக்கொண்டே கூச்சலிட்டுக்கொண்டு பயணிக்கின்றனர்.. அந்தத் தருணத்தில் சார்ளி தன் வாழ்நாளிலேயே அனுபவித்திராத சந்தோஷத்தை உணர்கிறான்.. அந்த நினைவை என்றென்றும் மீட்டிப்பார்ப்பதற்கு ஏதுவாக அந்த 'தெரியாத பாடலை'த் தேடுகிறான்.. ஆனால் இணைய வசதிகள் பெருகியிருக்காத அந்தக் காலத்தில் அவனது manual முயற்சி பலனளிக்காமல் போகிறது!
சார்ளிக்கு சாமுடனான நெருக்கம் நட்பைத் தாண்டும் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சாமுக்கு ஏற்கெனவே ஒரு சீனியர் பாய்ஃப்ரெண்டாக இருப்பதால் அவளிடம் சொல்லாமல் மறைத்துவிடுகிறான்.. இடையில் இவனது கிளாஸில் படிக்கும் எலிஸபெத் எனும் பெண் இவனைக் காதலிப்பதாக கூற, தீர யோசிச்சு "நம்மளை விரும்புற பொண்ணையே எடுத்துப்போம்"ங்கற முடிவுக்கு வந்துடுறான்! முடிவெடுத்த சில நாட்களிலேயே எலிஸபெத்தின் குடைச்சல்கள் தாங்கமுடியாமல் "எப்படிடா இவளை கழட்டி வுடுறது?" நிலமைக்கும் வந்துடுறான்..
ஒரு நாள் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து truth-or-dare விளையாடுகின்றனர். அப்போது சார்ளிக்கு "இந்த அறையிலிருக்கும் மிக அழகான பெண்ணுக்கு முத்தமிடவேண்டும்" என வருகிறது.. எலிஸபெத் பெருமையோடு கன்னத்தைக் காட்டி காத்திருக்க, சார்ளியோ 'பட்'டுன்னு சாமுக்கு கிஸ் அடிச்சிடுறான். வெடிக்கிறது பிரச்சனை!! எலிஸபெத், சாம், பாட்ரிக் மூன்று பேரும் கோபத்துடன் சார்ளியை விட்டு விலகிச்செல்ல மீண்டும் தனிமைக்கு தள்ளப்படுகிறான்!
இதற்கிடையே சார்ளியின் சின்ன வயதில் நடந்த ஒரு சம்பவமும் அவனை உறுத்திக் கொண்டிருக்கிறது.. சிறுவனாய், தனது அத்தை ஹெலனுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது அந்தக் கார் விபத்துக்குள்ளாவது போன்ற காட்சிகள் அவனது மனதிலே ஓடுகின்றன.. இந்த விபத்திலே இவனது அத்தை இறந்து போயிருக்கிறார்.. இந்த நினைவுகள் வரும்போதெல்லாம் ஏனோ இவனால் தன்னைத்தானே கண்ட்ரோல் பண்ண முடியாமல் போகிறது!
சீனியர்கள் ஸ்கூலை லீவ் பண்ண ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், சார்ளியால் தனது நண்பர்களை சமாதானப்படுத்த முடிந்ததா? சார்ளியின் மனக்குழப்பங்களுக்கு காரணமாகின்ற பிரச்சனை என்ன? என்பதை படம் பார்த்தறியக் கடவது!
சாதாரண டீனேஜ் ஸ்கூல் கலாட்டா படம் என்றில்லாமல் freshman வருடத்தை, ஒரு fresherஇன் மனநிலையிலேயே காட்டி சாதித்திருக்கிறார் இயக்குனர். படத்தின் மிகப்பெரும் பலம் பிரதான மூன்று கதாப்பாத்திரங்களும்தான்.. பெர்ஸி ஜாக்சன் படங்களில் விளையாடிக் கொண்டிருந்த logan lerman இதில் சார்ளியாக மெச்சூரிட்டியை கொண்டுவந்திருக்கிறார்.. கண்டிப்பாக இந்தப் பையனா பெர்ஸி ஜாக்சனா நடிச்சதுன்னு நம்ப முடியாமல் வாயைப் பிளக்கப் போகிறீர்கள்!!

பழைய காலகட்டத்தை பார்வையாளர்களில் ஃபீலுக்கு கொண்டு வருவதற்கு வழமையான கார்கள், காஸ்டியூம் என்பவற்றைத் தாண்டி indies இசையையும் படத்தின் ஒரு அம்சமாகவே எடுத்துச்செல்வது மிகச்சிறப்பு! படம் சார்ளியின் narrationல் செல்வதால் சில வசனங்கள் டாப் கிளாஸ்!
முதலில் பட்டும் படாமலும் தொடங்கி ஸ்லோவாக நகர்ந்தாலும் பிற்பாதியில் படம் உங்களை இருக்கையோடு கட்டிப்போடும்.. அதுக்காக பின்னாடி ரொம்ப ஃபாஸ்டுன்னு சொல்ல வரல.. ஆனா அங்க அந்த ஸ்லோ அருமையா செட் ஆகும்! காட்சி்க்கு காட்சி அனுபவிக்க முடிஞ்சுது! கிளைமேக்ஸ் சின்ன ட்விஸ்டு காத்திருந்தாலும் முடியும் போது ரொம்பவே ஃபீல் குட்! நீங்க என்ன மூடில் இருந்தாலும் சரி.. ஒரு 15 நிமிஷத்துக்கு வர்ற சந்தோஷத்தை அடக்கவே முடியாது! இந்தப் படம் நாஸ்டால்ஜிக் ரசிகர்களுக்கு ஏத்த ட்ரீட்.. ஹாலிவுட்டின் cheesy, clicheத்தனமான டீனேஜ் படங்களுக்கு நடுவே ஒரு நிஜ பொக்கிஷம்! டைம் கெடச்சா கண்டிப்பா பாருங்க!!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 18
கதை+திரைக்கதை = 17
கலை+ஒளிப்பதிவு =16
இயக்கம் = 18
மொத்தம் = 86% சூப்பர்!

இந்த படத்த டவுன்லோட் பண்ணலாம்ன்னு நினைச்சிட்டு இருக்கும் போதே நெட் புட்டுட்டு போய்டுச்சு :). நெட் வந்ததும் இது மற்றும் Beasts of the Southern wild ரெண்டும் டவுன்லோட் பண்ணனும் BSNL காரவுங்க எப்போ மனசு வைப்பாங்களோ தெரில :) ..,
ReplyDeleteசீக்கிரமாவே மனசு வைக்கட்டும்.. படத்தை பார்த்துட்டு உங்களுக்கும் படத்தோட சந்தோஷம் தொத்திக்கிச்சான்னு சொல்லுங்க!
DeleteBRRip வந்துடுச்சா என்ன தேடிப்பாத்தேன் கிடைக்கல... நீங்க டவுன்லோட் பண்ணுன டோரண்ட் லிங்க் இருந்தா கொடுங்க.. :)
Deleteநான் DVDRip தான் நண்பா! BRRip இன்னும் வரலை போலதான் தெரியுது!
Deleteஓகே பாஸ் :).. இப்போதைக்கு டி.வி.டி ரிப் தான் டவுன்லோட் போட்டு இருக்கேன்..,
Deleteடவுன்லோடு போட்டு கண்டிப்பா பார்க்கிறேன் நண்பரே..படத்தை பார்த்த அனுபவம் வரிகளில் நன்கு தெரிகிறது.தொடருங்கள்..நன்றி.
ReplyDeleteநன்றி நண்பா! உங்க பதிவுகளுக்கு வெயிட்டிங்..
Deleteதல நானும் ரொம்ப நாளா உங்க ப்ளாக்க படிச்சிட்டு வாரன் இன்னைக்குதான் கமண்ட் போடுர வாய்ப்பு கிடச்சது (அது ஒன்னுமில்ல சோம்பேறித்தனம் தான்) படத்த பாத்துட்டு வாரன்.
ReplyDeleteநீங்க எழுதுன இன்செப்சன் சீரிஸ் செம கலக்கல்
வாங்க நண்பா.. ரொமப நன்றி. நம்ம தல ஃபோட்டோவையே போட்டுருக்கீங்க! வெரிகுட்!! அடிக்கடி விசிட் பண்ணுங்க. :)
Deleteநண்பா படத்த நேத்துத்தான் பார்க்கக்கிடைச்சது எதிர்ப்பார்த்தளவு படம் இல்லைன்னு தோனுது... நான் பார்த்த நேரம் அப்டியானனாலயோ என்னமோ ஆனால் படத்தில் வரும் இசை ரொம்ப பிடிச்சிருந்தது
Deleteஎமா வட்சன் கண்ணுக்குள்ளே நிக்குரா...
இட்ஸ் ஓ.கே பாஸ்.. இருந்தாலும், நான் எழுதினதை கன்ஸிடர் பண்ணி படத்தை பார்த்தமைக்கு Thanks!! :)
DeleteEmma Watsonவுக்காக படத்த பாத்தே ஆகணும்
ReplyDeleteநானும் படத்தை பார்க்க முதல் காரணம் Emmaதான்!
Delete