Monday, December 24, 2012

Upside Down (2012)

"அடுத்த வருஷம் ரிலீசாகவிருக்கும் படத்துக்கு இதோ சுடச்சுட விமர்சனம்!!"

அடப்போங்கப்பா நானும் எத்தனை நிமிஷம்தான் தொழில்தர்மம் பார்த்து கன்ட்ரோல் பண்ணுறது! அக்டோபர்ல கனடாவுலயும், அடுத்த வருஷம் மார்ச்சுல யு.எஸ்லயும் ரிலீஸை வைச்சா இப்படித்தான்.. ஃபுல் குவாலிட்டியில இங்கிலீஷ் பிரிண்ட் அதுக்குள்ள வந்திருச்சு! போஸ்டரும், ட்ரெயிலரும் சும்மா கலக்குது! 'பண்ணுறதே illegal, இதுல என்ன unethical?'னு படம் பார்க்கத் தொடங்கிட்டேன்..

"இந்தக்காலத்துப் பயலுங்களுக்கு ஒரிஜினாலிட்டியோட ஒரு படம் எடுக்கத் தெரியுதா பாரு!"ன்னு திட்டிக் கிட்டேயிருக்கும் வாய்களுக்கு வடை வைச்சு அடைக்கும் விதமாக "புதுசு கண்ணா புதுசு" கான்செப்டோட வந்திருக்கும் படம் தான் அப்சைட் டவுன்.. ஆனா 'வடை எவ்வளவு நேரம் நிக்குது?.. கான்செப்ட் எவ்வளவு நேரத்துக்கப்புறம் திக்குது?'னு தெரிஞ்சுக்க கதைக்குள்ள போவோம் வாங்க..

இந்தப் பிரபஞ்சத்தின் ஏதோவொரு "இங்கிலிஷ் தெரிஞ்ச" மூலையில நடக்குது படம். ரெண்டு கோள்கள்.. ரெண்டு வேறு உலகங்கள்.. ஆனா பர்ஜ் துபாய் அளவுதான் ரெண்டுக்கும் இடையிலுள்ள தூரம்!
இங்கதான் physics குழப்பங்களை தவிர்க்குறதுக்காக முன்று ஈர்ப்பு விதிகளை படத்துலயே சொல்லிடுறாங்க.

1) ஒரு உலகத்தில் இருக்கும் மேட்டரை அந்த உலகத்தோட புவியீர்ப்பு விசை மட்டும் தான் ஈர்க்கும்.. ஸோ ஒரு உலகத்துல இருந்து இன்னோர் உலகத்துக்கு பொருட்கள் தானாக விழாது..
2) மீறி மற்றைய உலகத்துக்கு கொண்டு போனா, அந்தப் பொருள் புது உலகத்துல "அன்டி மேட்டர்" ஆகிவிடும். தொடர்ந்தும் அதோட பழைய உலகத்தின் ஈர்ப்புவிசை மாத்திரமே அதன் மீது தொழிற்படும்..
3) அன்டி மேட்டர் ரொம்பநேரத்துக்கு புது உலகத்துல இருந்தா, தீப்பற்றி எரியத்தொடங்கிவிடும்!!

எந்த உலகத்தில இருந்து பார்த்தாலும் மத்த உலகம் நமக்கு மேல் உலகம்தான் என்றாலும், வசதிக்காக ஒன்றை மேல்லோகம் என்றும் இன்னொன்றை கீழ்லோகம் என்றும் பிரிப்போம்.. கீழ்லோகத்துல தான் எண்ணெய் உட்பட இதர வளங்கள் அதிகம்.. இதனால் மேல்லோகத்துக்கு ஏற்படுகின்ற சக்தி நெருக்கடியைத் தீர்க்க ஒரு காலகட்டத்துல ட்ரான்ஸ்வேர்ல்டு என்கிற பெயருல ரெண்டு உலகத்தையும் இணைக்கற மாதிரி பெரிய கட்டடம் ஒன்றைக் கட்டுகிறார்கள்..

மேல்லோகத்தினர் கீழ்லோகத்திடமிருந்து எண்ணையைப் பெற்றுக்கொண்டு, பதிலுக்கு பணத்தையும் வேலைவாய்ப்பையும் (கட்டடத்துக்குள்ளேயே) வழங்க சம்மதிக்கிறார்கள்.. சில வருடங்களில் இதன் தொடர்ச்சியாக மேல்லோகம் முதலாளி வர்க்கமாகவும், கீழ்லோகம் தொழிலாளி வர்க்கமாகவும் மாறிவிடுகின்றது.. ஈர்ப்புவிசைப் பிரச்சனைகளைத் தடுப்பதற்காகவும், பணவர்க்க வித்தியாசத்தை மெயின்டெயின் பண்ணுவதற்காகவும் ஒரு உலகத்திலிருந்து இன்னோர் உலகத்துக்குச் செல்லுதல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகிவிடுகிறது!!

வாரே வாஹ்! அருமையான கான்செப்டைக் கண்டுபுடிச்சுட்டான்டா இயக்குனர்னு யோசிச்சு முடியலை.. பயபுள்ளைக்கு கிரியேட்டிவிட்டி வத்திருச்சு போலருக்கு.. படத்தை ரொமான்ஸ் பக்கம் திருப்பிடுறான்! காலாகாலமா தமிழ்சினிமாவில் பார்த்துவரும் அதேகதைதான்! பணக்கார லோகத்துப் பொண்ணை, பிச்சைக்கார லோகத்துப் பையன் காதலிக்குறான்!! "இது எப்படி வொர்க் அவுட் ஆகும்?"னு படம் பார்த்தறிக!

ஹீரோவும், ஹீரோயினுமாக Jim Sturgess, Kristen Dunst பார்க்க நல்லாயிருந்தாலும் கெமிஸ்ட்ரி முழுசா வொர்க்கவுட் ஆன மாதிரி தெரியலை..
கதை முழுக்க ஒண்ணா, ரெண்டா நெறைய்...ய லாஜிக் மிஸ்டேக்ஸ்! படம் ரொமான்ஸ்தான், "கிஸ்ஸிங் சீனுக்கு வேணா லாஜிக் பாருங்க, சயின்ஸுக்கு வேணாம்"னு சொல்லி வைச்சுட்டு தான் படத்தை எடுத்தருப்பார் போல.. அடுத்த இன்செப்ஷன், சோர்ஸ் கோட், இன் டைம், லூப்பர்னு நெனைச்சுக்கிட்டு போனா பல்புதான்! இதுல ஹீராயின் வரும் பாதி சீன் தலைகீழாவே காட்டப்படுவதால் நாமளும் கிறிஸ்டன் டன்ஸ்டுக்காக வவ்வாலாகிவிட வேண்டியிருக்கிறது..

படத்தை நீங்க முழு மனதோட வெறுக்க முடியாதுன்னா அதுக்கு ஒரே காரணம் விஷுவல் எஃபெக்ட்ஸ் தான்! ஓப்பனிங் கிரெடிட்ஸுடன் இந்த உலகத்தினை விளங்கப்படுத்தும் சீன்களிலேயே தரம் டாப் கிளாஸ்! ஒரு சில காட்சிகளில் "ஙே!" என முழிக்கவைத்தாலும், overallஆக இப்படியொரு சிக்கலான உலகத்தை வடிவமைத்ததில் இவர்களுக்கு பாராட்டுகள் பல! குறிப்பாக அந்த இரு உலகங்களையும் அருகருகில் கொண்டுவரும் மலைப்பகுதி செம! பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல் இருக்கிறது!! கண்டிப்பாக ஆஸ்கர் நாமினேஷன் கிடைக்கும்.. ஆனா என்ன.. அடுத்தவருஷம் தானே யூ.எஸ் ரிலீஸே வருது! ஸோ, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

படம் பெரிசா போரடிக்கவில்லை.. சுவாரஸ்யமாத்தான் போகுது! ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் கண்ணுக்கு விருந்தளிக்கிறது.. ஆனால் மனதையும் மூளையையும் திருப்திப்படுத்த எதுவுமே இல்லாம வெறுமையாயிருக்கிறது.. "கலர் கலரா பலூனை ஊதி வைச்சாலும், வெடிச்சா வெறும் காத்துதான்"னு படம் முடியும் போது புரியும்..
தீவிர சயின்ஸ் ரசிகர்கள் பார்த்தா காண்டாகிவிடும் அபாயங்கள் அதிகம்.. ரொமான்ஸ் ரசிகர்களும், "வித்தியாசமான படம் எதுவாருந்தாலும் பார்ப்போம்" சங்கத்தினரும் மேற்கொண்டு பார்க்கலாம்!!
அப்புறம் "இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!!"

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 11
இசை = 14
கதை+திரைக்கதை =10
கலை+ஒளிப்பதிவு =17
இயக்கம் = 12

மொத்தம் = 64% நன்று!

23 comments:

  1. Replies
    1. கதை கேட்டா தலைசுத்தும்.. படம் பார்த்தா தலைவலிக்கலாம்!

      Delete
  2. விமர்சனம் ஓக்கே..ஆனால் கதைதான் கொஞ்சம் குழப்பதுங்க..ரொமென்ஸ் படம் என்கிறதால கண்டிப்பா பார்ப்பேன்..

    ReplyDelete
    Replies
    1. //ரொமென்ஸ் படம் என்கிறதால கண்டிப்பா பார்ப்பேன்..// காரணம் என்னவோ?? :)
      இது அவ்வளவு பெரிய காதல் கதையும் இல்லை.. சும்மா கான்செப்டைக் காட்டி சீன் போடுறதுக்கு வசதியா ஒரு லவ் ஸ்டோரி.. அவ்வளவுதான்! படம் பார்த்து உங்க கருத்தையும் சொல்லுங்க!

      Delete
  3. ஏற்கனவே ரஷ்ய மொழியில் பார்த்தேன்.. நல்ல ஒளி பதிவு!

    ReplyDelete
    Replies
    1. சயின்ஸ் படங்களுக்கு புரியாத மொழியில பார்த்தா நமக்கு புட்டுக்கும். யூ வெரிகுட்!
      //நல்ல ஒளி பதிவு!//
      agreed!

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. //தீவிர சயின்ஸ் ரசிகர்கள் பார்த்தா காண்டாகிவிடும் அபாயங்கள் அதிகம்//
    அப்படினா படத்தப்பாக்கப்படாது.
    என்ன தல ஒரே மாசத்துல 4 போஸ்ட்டு கலக்குறிங்க போங்க!!!

    ReplyDelete
    Replies
    1. ஐ.. இதுக்கே கண்ணு வைச்சிரக்கூடாது.. படிப்படியா போஸ்டு போட்டு முன்னேறனும்! ஆங்!
      ரிட்டர்ன் விசிட்டுகள் கொடுப்பதற்கு நன்றி நண்பா!!

      Delete
  6. //ரொமான்ஸ் ரசிகர்களும்// நான் இந்த ஏரியாகுள்ள வரமாட்டேன்னாலும் ஒரு மாதிரி கோக்கு மாக்கான கதியாக இருப்பதால் பாக்கலாம்ன்னு இருக்கென்...


    படம் 90 நிமிஷம் தானா இல்ல அத விட பெருஷா ??

    ReplyDelete
    Replies
    1. 100 நிமிஷம் கிட்ட ஓடும்.. முன் பாதி வித்தியாசமான கான்செப்டுங்கறதால வேகமாவும், பின்பாதி காதலில் சலிச்சு ஸ்லோவாவும் ஓடும்! :)

      Delete
  7. சமகால விஞ்ஞான புனைவு படங்கள் எல்லாமே மூளைய குழப்புறது என்கிற முடிவோடதான் எடுக்குறாங்க - ஆனா சிலது மேக்கிங் மற்றும் கதையிலும் இன்டெலிஜன்ஸ் தெரியும் உதாரணம் இன்ஷெப்ஷன், லூப்பர் (ஓரளவு) சிலது ஏதாவது ஒரு சைட்ல கோட்ட விட்டுரும். I hope this will be alright.

    ReplyDelete
    Replies
    1. பாருங்கோ.. ஆனா நீங்க எதிர்பார்க்குற அளவு கிடைக்காதுன்னுதான் நினைக்குறேன் :)

      Delete
  8. எனக்கு கதை விளங்கிடித்து.. அதுவே இந்த பதிவுக்கு பெரிய வெற்றி இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. தல நீ திரும்பி வந்ததே பதிவுக்கு மெகா வெற்றி!

      Delete
    2. எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் தல!

      Delete
  9. ஆங்.. அப்புறம் இந்த காதல் மேட்டர் பத்தி நீயி எழுதும் போது "இன் டைம்' படத்தோட காதல் மாதிரியே இருக்குது நண்பா.. "பணக்கார பொண்ணு + பிச்சக்கார பையன்" படம் பார்க்கும் போது வித்தியாசம் தெரியலாமோ என்னமோ?

    ReplyDelete
    Replies
    1. In time-க்கும் இதுக்கும் வித்தியாசம் நெறைய இருக்கு நண்பா! அதுக்காக அதிகமான எக்ஸ்பெக்டேஷனோட படத்தை பார்க்கத் தொடங்காதே..

      Delete
    2. இல்ல பாஸ்.. நான் ஒத்துமை இருக்கு என்ற கோணத்தில் சொல்லவில்லை, "இன் டைம்" படம் கூட கிட்டத்தட்ட இந்த மாதிரியான ஒரு கன்செப்ட் தான் , ஆனால் களம் வேறு. அது போல் அந்த காதல் கூட பணக்கார+பிச்சக்காரத்தனத்தை தான் சார்ந்திருக்கும். வேறு ஒன்றுமில்லை..

      இன் டைம் அளவுக்காவது இருக்காதா படம்?

      Delete
  10. மதிவாணன்December 28, 2012 at 6:40 AM

    நானும் படத்தை பார்த்து ஒன்னும் புரியாமல் குழம்பி இருதேன்.உங்கள் விமர்சனம் தெளிய வைத்தது.

    ReplyDelete

Related Posts with Thumbnails