Saturday, December 22, 2012

Frankenweenie (2012)


Alice in Wonderland, Dark Shadowsனு அடுத்தடுத்து படு சுமாரான படங்களைக் கொடுத்து ரசிகர்களை ஏமாற்றி வந்த டிம் பர்ட்டன் மீண்டும் ஃபோர்முக்கு வந்திருக்கும் படம்தான் Frankenweenie!!
சமீப காலமாக ரீமேக்குளையும், அடாப்ஷன்களையுமே படமாக்கி வந்த இயக்குனருக்கு, பல வருடங்களுக்கு முன் பரீட்சித்துப் பார்த்த தனது ஒரிஜினல் கதையொன்றையே அனிமேஷனாக படமாக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது... சும்மா விடுவாரா??

நண்பர்கள் யாருமில்லாத விக்டர் எனும் பையன் பாசமாக வளர்த்து வந்த செல்லப்பிராணி நாய் ஒருநாள் விபத்தில் இறந்துவிடுகிறது. விஞ்ஞானத்தில் கில்லாடியான விக்டர் பிராங்ளினின் பரிசோதனை, கல்வானியின் பரிசோதனை ரெண்டையும் இணைச்சா மாதிரி ஒரு ஆராய்ச்சி பண்ணி அந்த நாயை உயிர்ப்பித்து விடுகிறான்.. ஸ்கூலில் நடக்கவிருக்கும் சயின்ஸ் போட்டிக்காக ஐடியா தேடிக்கொண்டிருக்கும் இவனது சக வகுப்பு மாணவர்களுக்கு எப்படியோ இந்த செய்தி லீக்காகிவிடுகிறது.. இதனால் ஏற்படும் பின்விளைவுகளே படத்தின் கதை!

1984ல், உலகப் புகழ் பெற்ற "பிராங்கன்ஸ்டைன்" படத்தின் இன்ஸ்பிரேஷனில் இந்தக் கதையை (அப்போது) வளரும் இயக்குனரான டிம் பர்ட்டன் கொஞ்சம் ஹாரர், கொஞ்சம் காமெடி கலந்த குறும்படமாக எடுத்திருந்தாரு.. அப்போதைய டிஸ்னி நிறுவனம் 'இந்தப் படம் குழந்தைகளுக்கு ஒத்துக்காது, ஃபேன்டஸி கதையை ஹாரர் தீமுல எடுத்ததே தப்பு'ன்னு பர்ட்டனைத் திட்டிவிட்டிருந்தது.. இப்போ அதே டிஸ்னி பர்ட்டன் கையில 39 மில்லியனைக் கொடுத்து அதே கதையை, அதே ஹாரர் தீமுல முழுநீள ஸ்டாப்-மோஷன் படமா எடுத்திருக்கு! இதுவே டிம் பர்ட்டனுக்கு கிடைத்த முதலாவது வெற்றி.

நான் பார்த்து இந்தப் படத்துல தான் ஸ்டாப் மோஷன், "ஸ்டாப்" மோஷன்னே தெரியாத அளவுக்கு ஸ்மூத்தா இருக்கு.. ஆனாலும் கேரக்டர்களின் முகத்தில் எக்ஸ்பிரஷன் மாத்துவதில் அதிகம் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார்கள்.. இதே வருஷம் வெளியான paranorman படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்துக்கு 800 வித்தியாசமான எக்ஸ்பிரஷன்களுடன் முகமூடிகளை செய்து அசத்தியிருப்பார்கள். (ஆனால் படம்தான் பெரிதாக கவரவில்லை..) இந்தப் படத்தில் கோபப்படும் போதும், அழும்போதும் ஒரே மாதிரி முகத்தை வைச்சிருப்பது நெருடலாக இருக்கிறது! பின்னணி இசை படத்துக்கு இன்னொரு ப்ளஸ் பாயின்ட்.

கறுப்பு -வெள்ளையில் படம், 16 வருடங்களுக்குப் பிறகு ஜானி டெப்போ, ஹெலனா கார்ட்டரோ இல்லாமல் வெளிவரும் படம், மியூசிக்கல் காட்சிகள் ஒன்றுகூட இல்லாமல் வரும் முதல் படம் என்று சமீபகாலத்து பர்ட்டனிஸ டிரேட் மார்க்குகளைத் தவிர்த்து ஆரவாரமில்லாமல் வெளியாகியிருக்கிறது படம்.. இவை இல்லாததாலோ என்னவோ தனது முழு ஆளுமையையும் பயன்படுத்த முனைந்திருக்கிறார் பர்ட்டன்.. 'ஆடியன்ஸை திருப்திப்படுத்த வேண்டுமே' என்ற எண்ணத்தை ஓரங்கட்டிவிட்டு, முழுக்க முழுக்க தனக்குத் திருப்தியான ஒரு படத்தை எடுத்திருக்கிறார்.
அதுக்காக பர்ட்டன் டச்சே காணோம்னு நினைக்க வேணாம்.. அகோரமான முகம் கொண்ட பாடசாலை மாணவர்களில் தொடங்கி, 'பூனை கக்கா போன ஸ்டைலைப் பார்த்து ஜோசியம் சொல்ற ஐடியா' வரைக்கும் எல்லாம் பர்ட்டனிஸம்தான்!

1984ல், அந்த குட்டி பட்ஜெட்டில், ஆக்டிங் வரைமுறைக்குள் எடுக்க முடியாமல் போன தனது ஆசைகளை பெரிய செலவில், தயாரிப்பாளர் இடையூறின்றி, ஸ்டாப்-மோஷன் உதவியுடன் நிறைவேற்றியருக்கிறார். அதுவும் அந்த சயின்ஸ் டீச்சர் மேடையில் பேசும் சீனை ஆடியன்ஸ் பக்கம் தாக்கி அதகளப்படுத்தியிருக்கிறார்.. படத்தின் படு 'கிக்'கான சீன் அது! அந்த டீச்சர் கதாப்பாத்திரம் கண்டிப்பாக பார்ப்பவர்கள் எல்லாரையும் கவரும்!!

அது போக படம் முழுக்க தான் ரசித்த, தான் செதுக்கிறய பல படங்களுக்கு tribute கொடுத்துக்கிட்டே வர்றாரு.. Edward Scissorhands, Corpse Brideனு பர்ட்டனின் பழைய படங்களும், 90களின் ஹாரர் பிளாக்பஸ்டர்களான மம்மி, டிராகுலா, ஜுராஸிக் பார்க் எல்லாவற்றையும் சின்னச்சின்னதாக ஞாபகமூட்டி நாஸ்டால்ஜிக் ஃபீலை ஏத்துகிறார்! கண்டிப்பாக இது டிம் பர்ட்டனுக்கு மனதுக்கு நெருக்கமான படம் என்பதை பார்க்கும் நண்பர்கள் அனைவரும் உணர்வீர்கள்..

மொத்தத்தில் இந்தப் படம் டிம் பர்ட்டன் தனக்குத்தானே செஞ்சுக்கிட்ட tribute! இத்தோட அடாப்ஷன்களுக்கெல்லாம் மூட்டை கட்டிட்டு டிம் திரும்பவும் ஒரிஜினாலிட்டியுள்ள படங்களுடன் வரவேண்டுமென்பதே எனது அவா! குழந்தைகளும், பெரியவர்களும் ஒன்றுசேர்ந்து ரசிக்கக்கூடிய ஃபேமிலி என்டர்டெயினர்.. அனிமேஷன் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவும்!

ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 15
அனிமேஷன்-16
பின்னணித் தரவுகள்- 13
கதை+திரைக்கதை- 16
இயக்கம்-17

மொத்தம்- 77% மிக நன்று!


Frankenweenie (2012) on IMDb

10 comments:

  1. Hi, Bro. Nice review. எங்க கதைய சொல்லிவிடுவிமோ என பயந்து பயந்து வாசிச்சேன் (ஒரு இடத்துல சொல்ல வர்றது மாதிரி இருந்திச்சு பட் கண்ணை மூடிகிட்டேன்) மீ ஆல்ஸோ டிம் பர்டன் Student

    ReplyDelete
    Replies
    1. சேம் பின்ச்.. பட் நோ ஸ்டூடன்ட்! :) நீங்க டைரக்டருக்கு ட்ரை பண்றீங்களா பாஸ்?
      * அடுத்தவாட்டி கதைக்கு இன்ட்ரொடக்ஷன் சொல்ல முதல்ல ஒரு வார்னிங் கொடுத்துர்றேன் :)

      Delete
    2. ஆமா ரொம்ப ஹார்டா தூங்கிக் கொண்டே ட்ரை பண்றேன் - ஆனாலும் ரீசன்டா இரண்டு வருடமா தான் உலக சினிமாவுக்கு தாவி இருக்கேன் so need to read more and more to improve my creative skills

      Delete
    3. Best of luck தல!! வாசிக்கறதோட சேர்த்து வீடியோஸ் அதிகமா பாருங்க நண்பா!!

      Delete
  2. இந்த மாதிரி அகோர மூஞ்சி + ஸ்டாப் மோஷன் படங்களை நான் விரும்புவதில்லை :( இருந்தாலும்... நீங்க மிக நன்று என்று போட்டிருப்பதால், பார்க்க முயற்கிக்கிறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. அகோரம் வேணாம்னா பர்ட்டன் படம் பார்க்கவே முடியாதே :) இருந்தாலும் இதுல ஒரு சில பாத்திரங்கள்தான் அப்படி. லீட் ஹீரோவும், நாயும் நல்லாத்தான் இருப்பாங்க.
      ஸ்டாப்மோஷனிலும் இது clay இல்லாமல் puppets என்பதால் சகிக்கும்படியே இருக்கும்! தைரியமா பாருங்க!!

      Delete
  3. உண்மையை சொல்லனும் என்றால் இந்த படம் வந்ததே எனக்கு தெரியாதுங்க...நண்பா..ஆனால், டிம் பார்ட்டனை தெரியும்.
    எனக்கு இன்னமும் அனிமேஷன் படங்களோடு ஒரு நெருக்கம் உருவானதா தெரியல.
    இந்த படம் வழக்கம் போல "வாட்ச்லிஸ்ட்டில்" போட்டு வைக்குறேன்..நேரம் கிடைத்தால் விரைவில் பார்க்க டிரை பண்றேன்.விமர்சனம் அருமை.தொடருங்கள்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. //அனிமேஷன் படங்களோடு ஒரு நெருக்கம் உருவானதா தெரியல.//
      இப்பதான் ஞாபகம் வருது.. அடிக்கடி கிளாசிக் ஹாரர் படங்கள் பத்தி எழுதுவீங்களே! ரொம்ப நாளா காணோம்! missing :(
      கருத்துகக்கு நன்றி நண்பா!

      Delete
  4. பார்த்தாகிவிட்டது நண்பா
    ஸ்டாப் மோஷன் படங்களிள் இது தான் நான் பார்த்த முதல் படம்
    வித்தியாசமாக இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. Chicken Run பார்த்ததில்லையா நண்பா.. என்னையும் உள்ளிட்ட நெறைய பேருக்கு முதல் ஸ்டாப் மோஷன் அனிமேஷன் அனுபவம் அதுதான்.. இந்த அனிமேஷன் வகை புடிச்சிருந்திச்சுன்னா அதையும் ட்ரை பண்ணிப் பாருங்க :)

      என்னையும் கன்ஸிடர் பண்ணி படம் பார்த்ததுக்கு ரொம்ப நன்றி!

      Delete

Related Posts with Thumbnails