பதிவுக்குள் போவதற்கு முதல் என்னை இந்த படத்தை படத்தை பார்ப்பதற்கு தூண்டிய பேபி ஆனந்தனுக்கும், அவரது எழுத்துக்கும் நன்றி.. இந்தப் படத்தைப் பத்தி அவர் எழுதியதை வாசித்த பின்னமும், நான் எதுவும் அதற்கு மேலாக எழுதிக் கிழிக்கப் போவதில்லை.. இருந்தாலும் படம் இன்னும் பார்க்காதவர்களுக்கு அதை நினைவூட்ட முடியலாமெனும் நோக்குடனேயே படத்தைப் பற்றிய எனது கருத்தையும் பகிர்கிறேன்..
முதலில் நம்ம ஆனந்தனின் பதிவு!
முன்னோர்களின் ஆன்மாக்களைத் தெய்வமாக வழிபடும் 12 பிரதேசப் பழங்குடியினர்கள் (seediqs) தாய்வானில் கூட்டங்கூட்டமாக வசித்து வருகின்றனர்.. ஒவ்வாரு கூட்டத்திற்குள்ளும் வேட்டை நிலங்களைப் பாதுகாப்பதிலும், தங்களை உயர்வாக காட்டிக் கொள்வதிலும் சின்னச்சின்னப் பகைகள் இருநது வருகின்றன.. 1895ல் 'ஷிமொனோசெகி' உடன்படிக்கையின் பிரகாரம் தாய்வான் ஜப்பானின் மாநிலமாக அறிவிக்கப்படுகிறது.. பழங்குடியினத்தவர்களை நாகரிகப்படுத்துகிறோம் என்ற பெயரில் ஜப்பானியர்கள், அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கியொடுக்கி அடிமைப்படுத்துகிறார்கள்.. 30 ஆண்டுகளாக ஜப்பானிய காலனித்துவத்தின் கீழ் இன்னல் பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் 'மெஹெபு' பிரதேச பழங்குடிகளின் தலைமையில், ஒரு நாள் மீண்டும் சிலிர்த்தெழுகிறார்கள்.. சரமாரியாகத் தாக்குதல் நடத்தி ஜப்பானியர்களை கொன்று குவிக்கிறார்கள்.. அதன் விளைவு எத்தகையது என்பதே கதை!
ரூடோ லூஹே, அவரோட மகன் மோனா ருடோ, பேரன் டாடா மோனோ, பிறகு அதே பழங்குடி தொகுதியினைச் சேர்ந்த பள்ளிச் சிறுவன் பவான் நாவி.. என்று வெவ்வேறு ஜெனரேஷனில் போராட்டத்தை தாங்கிச் செல்லும் வீரர்கள்.. ஆனாலும் ஒருவர் போல் இன்னொருவர் இல்லை.. அவரவர் வளர்ந்த சூழ்நிலையும் வேறு.. அவரவர் கண்ட முடிவும் வேறு! ஆனால் எல்லாருக்கும் பொதுவாக இருக்கும் "உயிரிருக்கும் வரை எமது வேட்டை நிலங்களை அந்நியருக்கு ஒப்படைக்கமாட்டோம்" என்ற வெறி தான் பார்க்கும் நமக்குள்ளும் ஒரு அக்கினிவெறியை விதைத்துச் செல்கிறது..
இந்த நால்வரில் படத்தின் ஆரம்பம் முதல், இறுதி வரை தொடர்ந்து வருவது அல்லது கதையுடன் மிக நெருங்கியவர் மோனோ ரூடோ.. இவர்தான் ஜப்பானியர்களுக்கு எதிராக பழங்குடியின மக்களின் கிளர்ச்சியைத் தொடங்கி வழிநடத்துவார்.. படத்தின் ஆரம்பத்தில் ஏதோ ஒரு ரோல் போல இருக்கும் இந்தக் கேரக்டர், படிப்படியாக முன்னேறி படத்தின் இறுதியை நெருங்கும் போது கிட்டத்தட்ட ரஜினிகாந்த் போன்ற ஒரு screen presenceஐ திரையில்கொண்டு வரும்.. இந்தளவு கேரக்டர் டெவலப்மெனட் நான் பார்த்ததில் மிக அரிது! அதுக்கு முக்கியமான காரணம் வயசான மேனோ ரூடோவாக நடிக்கும் லின்-சிங்-டாய்.. பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு கிழட்டு சிங்கம் போலிருக்கும் இவர் வெறுமனே பார்வையிலேயே அதகளப் படுத்துகிறார்.. அவர் காட்சியில் வந்தாலே எங்கிருந்தோ பயத்துடன் கலந்த மரியாதை ஓடிவந்து மனதில் குடிகொள்கிறது!
வக்கிரம், வன்முறை, ரத்தம் காரணமாகபடத்துக்கு R ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.. இளகிய மனமுள்ளவர்கள் தவிர்க்கலாம்.. ஆனால் பார்க்கும் ஏனையவர்கள் இதில் வன்முறையை மிக வித்தியாசமாக உணர்வீர்கள்.. பழிவாங்குதலும், பலிகொடுத்தலும், தலையெடுத்தலும் கிட்டத்தட்ட பரிசுத்த உணர்வாகவே சித்தரிக்கப்பட்டிருக்கும்.. ரத்தம் சிந்தும் காட்சிகள் குரூரமாக அல்ல.. கலையாகத் தெரியும்!
படம் மேலோட்டமாக ஒரு வன்முறைப் படம் போலத் தோன்றினாலும், முழுமையாக விளங்கிக் கொண்டால் இது ஒரு சிறந்த வரலாற்றுப் படம்.. இதில் நீங்களாகவே கற்றுக் கொள்ளக்கூடிய பாடங்கள் ஏராளம்! அதிலும் ஒரு பழங்குடி இனத்தவர்களின் வாழ்க்கையை, பழக்கவழக்கங்களை, நம்பிக்கைகளை மிக நேர்த்தியாக காட்டிய படங்களில் ஒன்று.. என் நாட்டில் எத்தனை வகை பழங்குடியினத்தவர்கள் இருக்கிறார்கள் என்பதே எனக்குத் தெரியாது.. ஆனால் இந்த seediqs பற்றிக் கேள்வி கேட்டால் பக்கம் பக்கமாக விடையளிக்கும் அளவுக்கு தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது இந்தப்படத்தின் மூலம்.. கிட்டத்தட்ட நாமும் அந்த இனத்தவர்களில் ஒருவர் போலவே படம் முடியும் வரை உணர்ந்திருப்போம்..
படம் மொத்தம் நான்கரை மணித்தியாலங்களுக்கும் அதிகமாக ஓடும்.. அதற்காக "போரடிக்குமோ"ன்னு நீங்கள் கவலைப் படவே தேவையில்லை.. ஒன்ஸ் ஸ்டார்ட் பண்ணிட்டிங்கன்னா நிறுத்தவே மாட்டீங்க. பழங்குடி மொழியில் பாட்டுப் பாடி நடனமாடும் போதும், வெறிச்சோடிப் போன முகத்தையே ரெண்டு நிமிஷமா காட்டிக் கொண்டிருக்கும் போதும், மேலும் எந்தெந்த இடங்களில் "இதை ஸ்கிப் செய்து கொள்வதால் எதுவும் மிஸ் ஆகப் போவதில்லை" என உங்களுக்கு தோன்றுகிறதோ அங்கு கூட உங்கள் கண்களை திரையை விட்டு அகற்ற முடியாதிருக்கும்.. அதில் பெரும் பங்குக்கு ஒளிப்பதிவே காரணம்! ஆனந்தன் கூறிய அந்த "அழகியல்" நான் எதிர்பார்த்ததையும் விட அழகாகவே இருந்தது!
உங்களுக்கு நேரப்பிரச்சனையாக இருந்தால் படத்தின் இரண்டு பாகங்களையும், அடுத்தடுத்த நாட்கள் பார்த்துக்கலாம்.. (நான் அப்படித்தான் பார்த்தேன்..) கதையுடன் உங்களை ஒன்றவைத்து தொடர்ந்து செல்வதற்கு தேவையான எடிட்டிங் இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் அழகாக கொடுக்கப் பட்டிருக்கும்.. படத்தில் தாய்வானீஸ், ஜப்பானீஸ், சீடிக் (பழங்குடியின மொழி) என 3 மொழிகளில் மாறி மாறிக் கதைக்கிறார்கள்.. எந்த சீனில் எந்த லாங்குவேஜ் பேசுகிறார்கள் என்பதையே வித்தியாசப்படுத்திக் காட்ட முடியவில்லை.. ஆனாலும் ஒரு தமிழ்ப்படம் போல இன்வோல்வ் ஆகிப் பார்க்க முடிவது திரைக்கதையினதும், இயக்கத்தினதும் பெரும் பலம்!
மேலும் படம் தொடங்கி ஓரிரு நிமிடங்கள் வரைக்கும் தான் அது உங்களுக்கு படம் போல தெரியும்.. பின்பு அது வாழ்க்கையாக, வரலாறாக பரிணாமித்து, இறுதியில் வலியாக எமது மனதிலே தேங்கி நிற்கும்.. ஒரு கட்டத்தில், படத்தில் நடக்கும் காட்சிகளையெல்லாம் 'சில மனிதர்கள் காமிரா முன்னால் லாவகமாக, நிஜத்தில் எந்த வலியையும் அனுபவிக்காமல்தான் நின்று நடித்துக் கொண்டிருக்கிறார்கள்' என நினைப்பதற்கே கஷ்டமாயிருக்கிறது.. இதெல்லாம் நான் அனுபவித்தவை.. உங்கள் பார்வைகள் மாறலாம்.. ரசனைகள் வேறுபடலாம்!
ஆனாலும் அதற்காக நான் உங்களை இத்தோடு விட்டுவிடப்போவதில்லை.. நான் என்ன எழுதி, அதை நீங்க வாசிச்சா "அட.. இந்தப் படத்தை கண்டிப்பா பார்க்கனும்" என முடிவெடுக்க சான்ஸ் இருக்கிறதோ, அதையெல்லாம் போட்டுக் கேட்பதாக நினைத்துக்கொள்ளுங்கள் நண்பர்களே.. தயவு செய்து இந்தப் படத்தை பார்த்து விடுங்கள்.. தப்பித்தவறி படம் பிடிக்காமல் போனால் தாராளமாக இங்கு வந்து திட்டித் தீர்க்கலாம்!
இன்னும் நிறைய எழுதனும் போலிருக்கு.. ஆனால் இதுக்கு மேல சொல்ல வார்த்தைகள் இல்லை..
A real man can sacrifice his body. But he must win his own soul! (படத்தோட டாக்-லைன்)
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 18
இசை = 14
கதை+திரைக்கதை = 16
கலை+ஒளிப்பதிவு =19
இயக்கம் = 18
மொத்தம் = 85% சூப்பர்!
பக்கம் பக்கமா விமர்சனம் எழுதுறதுக்கு அப்போ கஷ்டப்பட்டேன், இப்போ சந்தோஷமாயிருக்கு... வழக்கம் போல அருமையான அலசல்... இன்னும் நிறைய பேர் இந்த படத்த பாக்கும்படி செஞ்சிட்டீங்க... நன்றி :-)
ReplyDeleteநான்தான் உங்களுக்கு மொதல்ல தேங்ஸ் சொல்லனும்.. நான் வேற்று மொழிப் படங்களை பார்ப்பதே குறைவு.. பார்த்தாலும் அது உங்களைப்போன்ற ப்ளாக்கர்கள் எழுதினால் தான்.. அதிலும் இந்தப்படம்.. மறக்கவே முடியாது! நன்றி!
ReplyDelete///"உயிரிருக்கும் வரை எமது வேட்டை நிலங்களை அந்நியருக்கு ஒப்படைக்கமாட்டோம்" என்ற வெறி தான் பார்க்கும் நமக்குள்ளும் ஒரு அக்கினிவெறியை விதைத்துச் செல்கிறது..///
ReplyDeleteஇது எனக்குள் வேறு எதையோ விதைக்கிறது!
விதைக்கப்பட்டது வளர வாழ்த்துக்கள்!
Deleteஆனா ரகசியமாவே வளக்கணும் மச்சி!
Delete///தயவு செய்து இந்தப் படத்தை பார்த்து விடுங்கள்.. ///
ReplyDeleteநீயி எத்தினையோ படங்களுக்கு விமர்சனம் எழுதியிருக்க, ஆனால் இப்படி ஒரு நாளும் எங்கள் காலை பிடித்து கெஞ்சியது கிடையாது. சோ... படம் மிரட்டலாக இருக்கும் என் நினைக்கிறேன், டவுன்லோடு ஸ்ராட்டு மச்சி!
ஹா..ஹா..ஹா.. நண்பேன்டா!
Deleteநண்பேன்டா!
Delete///நான் வேற்று மொழிப் படங்களை பார்ப்பதே குறைவு..///
ReplyDeleteஏன் மச்சி பொய் சொல்லுற? நீ எப்போ பாத்தலும் வேற்று மொழி படத்துக்கு தனே விமர்சனம் எழுதுற உன்னோட பிளாக்கில!
அந்த லைனை எழுதும் போதே எவனாவது கேட்ருவானோன்னு நினைச்சேன்.. கேட்டுட்ட..
Deleteஆக்சுவலி மீ இங்கிலீசு கம் தமிழு!
அடிங்க் கொய்யாலே! மொக்க தனமா ஏதாவது எழுதிடுறது, அப்புறமா பல்ல இழிச்சிக்கிட்டு சமாளிப்பிகேஷன், ராஸ்கல்!
Deleteஇந்த படத்தை பத்தி பிரதீப் பதிவுல ஏற்கனவே படிச்சேன் தல...டவுன்லோட் வேற பண்ணி வச்சேன்..உங்க பதிவ பார்த்த அப்புறம் உடனே பார்க்க தோணுது...
ReplyDelete//மேலும் படம் தொடங்கி ஓரிரு நிமிடங்கள் வரைக்கும் தான் அது உங்களுக்கு படம் போல தெரியும்.. பின்பு அது வாழ்க்கையாக, வரலாறாக பரிணாமித்து, இறுதியில் வலியாக எமது மனதிலே தேங்கி நிற்கும்.////
எனக்கு இந்த மாதிரி இருந்தா ரொம்ப பிடிக்கும்... :)
தவறாம பார்த்துடுங்க ராஜ்!
DeleteSLTல ஏதாச்சு பிரச்சினையான்னு தெரியல. .blogspot.com என்று வர்ற ப்ளாக்குகள் ஒன்றுமே ஓபன் ஆகுதில்ல. இப்ப கூட தேடிப்பிடிச்சு ஒரு ப்ரொக்சி சைட் ஊடாகத் தான் கமெண்ட் பண்றேன். :)
ReplyDeleteஇந்தப் பிரச்சனையைப் பத்தி நேக்கெதுவும் தெரியாது.. ஸோ :)
Deleteஆனந்தன் படத்தைப் பற்றி ரசிச்சு விமர்சனம் பண்ணியிருந்தப்பவே 720p copy ஒன்று டவுன்லோட் பண்ணி வச்சாச்சு. நேரப்பிரச்சினை காரணமாக இன்னும் பார்க்காமல் வைத்திருக்கு. நீங்க வேற கட்டாயம் பார்க்கணும்னு ரெகமண்ட் பண்ணிட்டீங்க. பார்த்துடுவோம்.
ReplyDeleteதைரியமா ஹாலில் பார்க்கலாமா? இல்ல ரூம்ல தனியாத் தான் பார்க்கணுமா?
ஆபாசம் கிடையாது.. ஆனா அதிகளவான ரத்தம், தலையெடுத்தல்.. தனியாத்தான் பார்க்க வேண்டி வரும்!
Deleteநல்ல திரைப்படத்தை அறிமுகப்படுத்தி இருக்கீங்க...... பார்க்க வேண்டும் என்று நினைக்கிறன். உங்க எழுத்திலே தெரியுது படம் எந்த அளவுக்கு நன்ற இருக்கும் என்று.
ReplyDeleteபார்த்துருங்க தல.. அடுத்த பதிவு எப்போ எழுதப்போறீங்க?
Deleteநானும் இப்படத்தை பார்த்து விடுவேன்.
ReplyDeleteஆனந்தன் எழுதியதும் பார்க்க நினைத்தேன்.
அப்போது டிவிடி கிடைக்கவில்லை.
நாளைதான்,இப்படத்தின் டிவிடி... எனது சப்ளையரிடமிருந்து விற்பனைக்கு வருகிறது.
காத்திருக்கிறேன்.
நீங்க இன்னும் பார்க்காத ஒரு உலகசினிமாவையா பார்த்திருக்கிறேன்??? #பெருமிதம்
Delete