Brave படத்தை தியேட்டரில் பார்த்துரனும்னு முடிவு பண்ணேன்னா, அதுக்கு முக்கியமான காரணம் பிக்சார் தான்.. தனது அடுத்தடுத்த படங்களில் மெருகேற்றி, வித்தியாசம் காட்டி, நூறு சதவீத சக்சஸ் கொடுத்த ஒரே அனிமேஷன் கம்பனி அது.. 2011ல் டாய் ஸ்டோரி-3 வரும்னு சொன்னப்போ இருந்த எதிர்பார்ப்புக்கள் கொஞ்ச நஞ்சமில்லை.. அதுபோக "ரொம்ப வருஷம் கழிச்சு சீக்வெல் எடுக்கப்போறாங்களே, அப்போ இருந்த டெக்னாலஜி வேறு, இப்போ இருக்கற டெக்னாலஜி வேறு.. எப்படி cope-up பண்ணுவாங்க"ங்கற பீதி வேறு இருந்ததால் பிக்சார் மண்டையில் பெரிய சுமை விழுந்திருந்தது.. ஆனால் அதையும் தாண்டி அவர்கள் படத்தை பெஸ்டாக எடுத்துக் காட்டிய விதம்தான் "அனிமேஷன்ல பிக்சார் நினைச்சா செய்ய முடியாதது எதுவுமேயில்லை"ங்கற மாய விம்பத்துக்குள் என்னையும், எண்ணிலடங்கா ரசிகர்களையும் விழுத்தியிருந்தது...
ஆனால் வெகு விரைவிலேயே எல்லாத்துக்கும் திருஷ்டி கழிச்சா மாதிரி பிக்சார் தனது முதல் தோல்வியை Cars 2 மூலமாக சந்தித்துக் கொண்டது.. ஊர்ல பத்துப்,பதினைஞ்சு தோல்வி கொடுத்தவனெல்லாம் சந்தோஷமா போக.. அந்த ஒரேயொரு தோல்வி பிக்சாருக்கு மிகப்பெரும் தாக்கத்தை பதித்துவிட்டுச் சென்றது.. ஒரு தசாப்த Domination காற்றில் கரைந்தது..
நான் தான் ஏதோ எதிர்பார்த்துக்கிடந்தேனே தவிர, உலகலாவிய எதிர்பார்ப்பு ஏனைய படங்களைக் காட்டிலும் பிரேவ்-வுக்கு மட்டமாகவே இருந்தது... ட்ரெயிலருக்கு பெரிய ரெஸ்பான்ஸ் எதுவும் இருக்கவில்லை.. அதுவும் லீட் ரோல் ஒரு இளவரசியாக இருந்ததால் 'பிக்சார் பேருல டிஸ்னி படமெடுக்கறாங்களா??', வைக்கிங் மாதிரி ட்ரெஸ் போட்டிருந்ததால் 'போட்டிக் கம்பெனி ட்ரீம்வொர்க்ஸையே (How to Train A Dragon) பார்த்து அடிக்கிறதா??'ன்னு கமெண்டுகள் வேற.. டிஸ்னியின் விளம்பர ராஜதந்திரங்களையே டி.வியில் காணமுடியவில்லை.. Toy Story, Incredibles, Cars படத்துக்கெல்லாம் பெட்டி பெட்டியாக விளையாட்டுப் பொம்மைகள் அடித்த, McDonalds கூட இம்முறை பிக்சாரைக் கண்டு கொள்ளவேயில்லை! ஒருவேளை பிக்சாரே 'அடக்கி வாசிப்போம்'னு யோசிச்சிருப்பாங்களோங்கற தயக்கத்துடனேயே படத்திற்குள் நுழைந்தேன்..
கரடி வேட்டைக்கு பேரு போன ஒரு மாமன்னர்.. அவருக்கு "நளினம்","அடக்க-ஒடுக்கம்" வார்த்தைகளுக்கு அர்த்தமே தெரியாத சாகசக்காரப் பெண்.. அந்த இளவரசியை கண்டிப்புடன் வளர்த்துவரும் அரசி.. இளமைப்பருவம் தொடங்கியவுடனே தனது மகளுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க எத்தனிக்கிறார்.. அதற்காக முன்று பட்டிகளிலிருந்து 3 இளவரசர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.. இந்த தெரிஞ்ச கதையில சில மேஜிக்கையும், பல காமெடிகளையும், ஒரு ட்விஸ்டையும் சேர்த்துவிட்டால் அதுதான் பிரேவ்..
பிக்சாரின் படங்களிலேயே கொஞ்சமாவது Dark Theme கொண்ட படம் இதுதான்.. படம் 3டிக்குன்னே எடுத்த மாதிரி இருக்கு.. தயவுசெஞ்சு சான்ஸ் கிடைச்சா 3டியிலேயே பாருங்க.. அப்பத்தான் படத்துக்கு தேவையான Darkness கிடைக்கும்.. ஓப்பனிங் பாடலுக்கும், தேவையான இடங்களில் ஒரு மர்ம உணர்வைக் கொண்டு வருவதற்கும் இசை அழகாகப் பயன்படுத்தப்பட்டிருக்கு..
அதிலும் முக்கியமாக கவனிக்கத்தக்கது படத்தின் பிண்ணனித் தரவுகள்.. படத்தோட லொக்கேஷன் காடும், மலைகளும், அருவியும் கலந்த ஏரியா.. இது ஏனைய பிக்சார் படங்களிலும் மிகக்..கடினமான பணி! ஆனாலும் பிக்சார் சாதித்திருக்கிறார்கள்.. எத்தனை பேர் இதற்காக உழைத்தார்களோ தெரியாது.. ஆனா அத்தனை பேரையும் தேடிப்புடிச்சு மோதிரம் வாங்கிப் போடனும்.. பெஸ்டுன்னா பெஸ்டு.. நிஜமாமாவே காட்டுக்குள்ள போன மாதிரி இருக்கும்.. படத்தில் கொஞ்சம் கூர்ந்து இலைகளையும், கற்களையும் அவதானித்துப் பாருங்கள்.. மிரண்டு போவீர்கள்!!
கிளைமேக்ஸ் மட்டும் கொஞ்சம் வித்தியாசமாக பண்ணியிருக்கலாமோன்னு தோணுது.. ட்விஸ்டு ஒண்ணு வரப்போகுதோன்னு நினைச்சுக்கிட்டிருக்க நேரமே டாட்டா, பாய் காட்டி படம் விடைபெறுகிறது..
படத்தோட மெயின் அட்ராக்ஷன் ஹீரோயின் "மெரீடா" தான்.. ஆரஞ்சு கலர் நூடுல்ஸ் போட்ட தலையாயிருக்கட்டும், அம்பு எய்யும் போது காட்டும் கெத்தாக இருக்கட்டும், அழகான தனித்துவமான குரலாயிருக்கட்டும், ஸ்கிரீனை நோக்கி நமது கண்ணை ஈர்த்தவண்ணமே இருக்கிறார்! பிக்சார் உருவாக்கிய கதாப்பாத்திரங்களை வரிசையிட்டால் மெரீடா கண்டிப்பாக பத்துக்குள் வருவாள்!
பிக்சாரின் வழக்கம் போலவே படம் முழுக்க காமெடி சீன்கள் உங்களை சீட்டிலிருந்து விழவைக்க ரெடியாய் உள்ளன.. அதிலும் மெரீடாவின் மூன்று குட்டித் தம்பிகள் செய்யும் லூட்டிகளிருக்கே.. பார்த்தே அறிக!
படம் நல்லா இருந்தும் அந்த தாக்கம் பாக்ஸ் ஆபீஸில் நன்கு தெரிகிறது.. பிரேவ் 180 மில்லியனில் உருவாகி 280 மில்லியன் வசூல் பெற மடகஸ்கார் 3-ம், ஐஸ் ஏஜ் 4-ம் 500-550 மில்லியன்களில் புரண்டு கொண்டிருக்கின்றன.. ஆனாலும் அந்த ரெண்டு படங்களை விட இது டச்சிங்கான, feel-good படமாக இருக்கும் என்பதற்கு நான் கேரண்டி!
சம்மர் ரேசில் பிக்சாரின் பந்தயக் குதிரை போட்டிக்குதிரைகளிடம் தோற்றுப் போய் நிற்கிறது.. ஆனாலும் ஆஸ்கர் ரேஸில் அவைகளை முந்தும் என நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறேன்!
Pixar is Back! Maybe not with a Bang... But They're BACK!!!!!
ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 17
அனிமேஷன்-16
பின்னணித் தரவுகள்- 20
கதை+திரைக்கதை- 13
இயக்கம்-15
மொத்தம்- 81% சூப்பர்!!
Apa paarthuduvom.. Inga kandipa download thaan panni paarkanum nanpaa..ilaty dvd..
ReplyDeleteReview also feel good keep it up...
ReplyDeleteநன்றி ஹாரி!
Deleteபடத்துக்கு உங்க விமர்சனம் அருமை.
ReplyDeleteபடம் இன்னும் பார்க்கவில்லை நண்பரே,
பார்த்துவிட்டு எனது கருத்தை பதிவு செய்கிறேன்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!
Deleteஎனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒரு டிஸ்னி படம் பார்த்தது போல் இருந்தது. $30 வேஸ்ட்!
ReplyDeleteபடம் எல்லாத் தரப்பினரையும் திருப்திப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவே.. எனக்கு பிடிச்சிருந்தது.. உங்களுக்கு பிடிக்கலை.
Deleteவருகைக்கு நன்றி பாஸ்.. தொடர்ந்தும் விசிட் பண்ணுங்க!
கார்ஸ் 2 படத்தின் தோல்வி இந்த படத்தின் எதிர்பார்ப்பை ரொம்பவே பாதித்து விட்டது எனலாம். அதுவும் பிக்ஸ்சர் இதுவரை எடுக்காத fairy tale கதை....fairy tale கதை என்றாலே டிஸ்னி என்பதால் , 'பிக்சார் பேருல டிஸ்னி படமெடுக்கறாங்களா என அனைவரையும் நினைத்து விட்டது. மேலும் ட்ரைலரும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
ReplyDeleteபடம் வேறு சுமார் தான் என விமர்சனம் பரவி விட்டதால் இந்த படத்திற்கு போகவே மனம் வரவில்லை.
படம் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை இது பிக்ஸ்சருக்கு அடுத்த அடி எனலாம்...
படத்துல 'டிஸ்னியிச' கிளிக்குகள் நெறையதான் நண்பா!.. பிக்சார் அடுத்த படம் Monsters University முலம் மரணஅடி கொடுத்து பழைய இடத்துக்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்ப்போம்..
Deleteஎன்னங்க டச்சு புச்சினு 81 மார்க் கொடுத்துட்டீங்க..பார்த்தே ஆகுனும் போலயே..என்னமோ நண்பா எனக்கு இந்த மாதிரி அனிமேஷன் சரக்குளை கண்டாலே போதை ஏற மாட்டுது (அட..பிடிக்கலனு சொன்னேங்க)..
ReplyDelete@ ஆனா அத்தனை பேரையும் தேடிப்புடிச்சு மோதிரம் வாங்கிப் போடனும்.@
ஏம்ப்பா..எல்லாத்துக்கும்..அங்க தங்க விலை கம்மியா இருக்கோ..??
படத்தை சீக்கிரமா டவுன்லோடு போடுறேன் நண்பா..அதுவும் உங்களுக்காகதான்..படம் பார்த்துட்டு சொல்றேன்..மற்றபடி விமர்சனம் சிறப்பா இருக்கு..வாழ்க வளமுடன்..தொடர்ந்து எழுதுக சிறப்புடன்..நன்றி...நன்றி.நன்றி.
//என்னங்க டச்சு புச்சினு 81 மார்க் கொடுத்துட்டீங்க..// இதுக்கு போய் இப்படி ரியாக்ட் பண்ணலாமா? பிக்சாருக்கு 81-ஏ கொறய மார்க்ஸுதான்.. பசங்க இன்னும நல்லா பண்ணனும்!
Deleteஅனிமேஷனில் உள்ள போதையை என்றாவது கண்டு கொள்வீங்க பாஸு!
////நான் புது வருஷம் தொடங்கினாலே அந்த வருடம் ரிலீசாகும் ஒரு சில படங்களை 'கண்டிப்பாக தியேட்டரில் பார்த்து விட வேண்டும்' என்று உறுதிமொழியெடுத்துக் கொள்வது வழக்கம்...///
ReplyDeleteஆ! இதுவல்லவா லட்சியங்களில் உயர்ந்த லட்சியம்!
பார்சிலோனாவுக்கு பம்மாத்துவாங்கும் உன் லட்சியத்தோடு பார்க்கும் போது இது கொஞ்சம் உயரம் கம்மிதான் நண்பா!
Deleteஎங்க வந்து எதடா கோத்து விடுற?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஆகா! அனிமேஷன், அதுவும் நம்ம MCல! 3D வேற !, நல்ல விருந்தா இருக்கும் போல! ஆனாலும் இந்த கம்பஸ் ஸ்ரைக்கால் வீட்ல நிக்கிறேன்பா, இதுக்காக இனி கொழும்பு வரணுமே! # அந்நிய சதி
ReplyDelete//ஆனாலும் இந்த கம்பஸ் ஸ்ரைக்கால் வீட்ல நிக்கிறேன்பா//
Deleteகதிரை வாங்கித் தரவா??
கொழும்பு வந்து பார்க்கலாம்தான் தல.. ஆனா கொடுக்கறது 600 ரூவா..கெடைக்கறது 1.30 மணித்தியால எண்டர்டெயின்மென்ட்!
அதுக்காக டி.விடி, டவுண்லோடுன்னு போனாலும் படத்தின் பவரை மிஸ் பண்ண வேண்டி வரும். உங்களள் முடிவு உங்கள் கையில்..
#பொருளாதாரநோபிள்பரிசு!
///கதிரை வாங்கித் தரவா??///
Deleteஎவன்டா சொன்னது காமடி பண்ண தெரியாத சிடுமூஞ்சின்னு?
///பொருளாதாரநோபிள்பரிசு!///
கன்ஃபர்ம்!
////ஆனா அத்தனை பேரையும் தேடிப்புடிச்சு மோதிரம் வாங்கிப் போடனும்..//
ReplyDeleteதல செழிப்பா இருக்கிறாப்ல தெரியுது!
அம்புட்டும் சரவணன்-மீனாட்சி கல்யாண ஹாலில் அடிச்சது!
Deleteநீயும் அடிச்சியா? எனக்கு ரெண்டு பழைய அண்டா தான் கிடச்சுது!
Delete/// படத்தில் கொஞ்சம் கூர்ந்து இலைகளையும், கற்களையும் அவதானித்துப் பாருங்கள்.. மிரண்டு போவீர்கள்!!///
ReplyDeleteபடம் பாக்க போயி படத்த பாக்காம, கல்லையும் மண்ணையும் பாத்திட்டு வந்து ஆகா ஓகேன்னு புழுகிட்டு இருக்க , நானும் கேனயன் மாதிரி உக்காந்து பின்னூட்டம் போட்டுக்கிட்டு இருக்கேன்! # கால கொடுமை
3டியில் பின்னணித் தரவுகளை அவதானிப்பது எனக்கு ரொம்ப புடிச்ச மேட்டரு தல! கேரக்டர், கதை, காமெடி வைச்சுக்கிட்டு கம்பெனியைப் பத்தித்தான் எடை போடலாம்..
Deleteபின்னணித் தரவுகளை வைச்சுக்கிட்டு அங்க வேலை செய்யுறவங்களோட திறமையை எடை போட்டுக்கலாம்!!
brave படம் முதன் முறையாக "dolby atmos "128 channel sound system ல வந்த படம், படம் வரும் 6 மாதம் முன்னரே புரோமோட் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க, உலகம் முழுக்க 16 தியேட்டரில் தான் அந்த ஒலி அமைப்பே இருக்காம், ஒவ்வொரு ஊரிலும் போய் தியேட்டரை திறந்து வச்சு சிறப்பு காட்சி எனப்போட்டு படம் வரும் முன்னர் நிறைய புரோமோ செய்துள்ளார்கள் தான்.
ReplyDeleteநம்ம பதிவில் அதைப்பற்றி:
வவ்வால்-தலை கீழ் விகிதங்கள்: vishwaroopam in barco auro- 11.1 3d audio.
ஆனா ஐஸ் ஏஜ், மடகஸ்கார் அளவுக்கு வசூல் எடுக்க திணறுதே தல!
Deleteரொம்ப நல்ல விமர்சனம் தல .....பிக்ஸார் படமா இது...?? நெசமா தெரியல தல. விளம்பரம் கூட எங்கேயும் நான் பார்க்கல, நீங்க சொல்லி தான் தெரியுது....இங்க கூட ரிலீஸ் ஆனா மாதிரி தெரியல ...
ReplyDeleteஎல்லாம் பிக்ஸாரோட நேரக்கொடுமை.. எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க!
Deleteவிமர்சனம் அருமை. பிக்ஸார் படம் வந்தது என்ற எனக்கு தெரியாது.
ReplyDelete////////பிக்சாரின் வழக்கம் போலவே படம் முழுக்க காமெடி சீன்கள் உங்களை சீட்டிலிருந்து விழவைக்க ரெடியாய் உள்ளன..////////
கண்டிப்பா படம் பார்கிறவங்களை ஏமாற்றாது. கண்டிப்பாய் பார்கிறேன்.
பார்த்தால் உங்கள் கருத்தையும் பதிவிடுங்க தல!
Deleteதெளிவான விமர்சனம். உங்களிடமிருந்தும் கத்துக்கிறேன் என் வலைத்தளத்தை மேன்படுத்த ...
ReplyDeleteதொடர்ந்த வருகைக்கு நன்றி நண்பா!
Deleteஅட ... நேத்து தான் கொழும்புக்கு போய்ட்டு வந்தேன். சே. தெரிஞ்சிருந்தா பார்த்திருக்கலாமே. மிஸ் ஆயிட்டுது. அடுத்த கிழமை நேரம் கிடைச்சா ட்ரை ஒன்று கொடுப்போம்.
ReplyDeleteஉங்கள நம்பித் தான் போறேன் JZ. 600 ரூவா ... சும்மா இல்ல. :)
படம் பார்க்கிறதுன்னா கண்டிப்பா 3டியில தான் பார்க்கனும். ஆனா கொடுக்கற காசுல 450 ரூவாக்குதான் வொர்த்தா இருக்கும்.. படம் ஓடுறது 87 நிமிஷம் தான் இல்லையா?..
Deleteயோசிச்சு முடிவெடுங்க பாஸு.. அப்புறம் என்னைய வந்து திட்டாதீங்க!
நம்பி போகலாமா பாஸ். வழக்கமாவே எனக்கு அனிமேஸன் பிடிக்கிறதில்ல ஆனாலும் உங்க வார்தைய மதிச்சு போகலாம்ன்னு பார்க்கிறன். சொதப்பிடாதே??????
ReplyDeleteவழக்கமாவே அனிமேஷன் பார்க்குறதில்லைன்னா இந்தப் படத்தை தவிர்க்கலாம் நண்பா! படம் பார்த்து உங்களுக்கு பிடிக்க நேர்ந்தால் மிக்க மகிழ்ச்சியடைவேன்..
Delete