உலகளவில் பிரபலமான fairy tale கதைகளை ஹாலிவுட்டில் அவ்வப்போது படமாக்கி காசு பார்க்கும் வழக்கம் வருடா வருடம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. சின்னப்புள்ளத்தனமான கதைன்னே தெரிஞ்சும் அதை தேடிப்போய் தியேட்டரில் ரசிக்கும் கூட்டமும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது...
ஆனால் அவர்கள் கரியாக்கும் காசுக்காகவாவது, படத்துல சின்னதா மாற்றங்கள் செய்வோமேன்னு நெனைச்ச நல்ல உள்ளங்கள் இப்போதான் வந்திருக்கு! இந்தப் படத்துல Snow White and the seven dwarfs-ங்கற அரதப் பழசான கதையை தூசு தட்டி எடுத்து அதுக்கு மேல ஆக்ஷன் சாயம் பூசி திரையில விட்டிருக்காங்க!
டெபோர் நாட்டை ஆண்டு வரும் அரசன் மக்னஸுக்கும், அவரது மனைவி எலியனோருக்கும் அழகிய பெண் குழந்தையொன்று பிறக்கிறது.. குழந்தை ரோஸ் வெள்ளைக் கலரில் டாப்பாக இருக்கவே, சிம்பாலிக்காக 'வெள்ளைப்பனி' (ஸ்நோ வைட்)ன்னு அவங்க அம்மா பெயர் வைச்சாங்க.. குழந்தை பிறந்த சில வருடங்களிலேயே அரசி இறந்து விட, அரசனும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறாரு.. வரும் அரசி தீய மந்திரங்களில் பயின்ற பெரிய வில்லியாக இருக்கிறாள்.. மக்னஸைக் கொன்று விட்டு, நாட்டை தனது சர்வாதிகாரப்பிடியின் கீழ் கொண்டு வருகிறாள்.. நம்ம வெள்ளைப்பனியை அரண்மனையின் உயர்ந்த கோபுரத்தில் சிறை வைக்கிறாள்.. நாட்டு மக்களுக்கு யாரு இளவரசியென்றே தெரியாத வண்ணம் இருட்டறையில் அவள் வளர்க்கப்பட்டு வருகிறாள்..
அட தெரிஞ்ச கதையை ஏன் திரும்ப சொல்லிக்கிட்டிருக்கேன்னு பார்க்குறீங்களா.. இப்போ இறக்குவோம்ல ட்விஸ்டு மேல ட்விஸ்டா...
* இந்த அரசி தான் எப்போதும் இளமையா, அழகா இருக்கனுங்கறதுக்காக டெபோரிலுள்ள இளம்பெண்களை சிறைப்பிடித்து, அவர்களது இளமையை உறிஞ்சிக்கொள்வாள்..
* இந்த அரசியிடமுள்ள மந்திரக் கண்ணாடி இவளிடம், "ஸ்நோ வைட் உயிருடன் இருப்பது உனது அரசாட்சிக்கு பெரிய ஆபத்து.. அவளைக் கொன்று இதயத்தை எடுத்துக்கொண்டால் உனக்கு சாகாவரம் கிடைக்கும்" என்று எச்சரிக்கை + ஆருடம் கலந்த சேதியை இவளிடம் கூறுகின்றது..
இந்த சேதியை அறியும் வெள்ளைப்பனி மிகுந்த போராட்டத்துக்கு மத்தியில் அரண்மனையை விட்டு காட்டுக்கு தப்பியோடுகிறாள்... அரசிக்கு எப்படியாவது வெள்ளைப்பனியை மீளப் பிடித்தாகவேண்டிய நிலை.. ஆனால் எல்லாரும் அந்தக்காட்டுக்குள் போகவே பயப்படுகறார்கள்.. காரணம் அது பல மந்திரங்கள், விநோத மிருகங்கள் உலவும் பயங்கரமான காடு!
அப்போதான் அந்த ஊரில் 'வேட்டைக்காரன்' என்ற பெயரால் அறியப்படும் எரிக் உள்ளே வர்றாரு.. Thor, Avengers படங்களின் மூலமாக புகழுக்கு தள்ளப்பட்ட கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்.. அதே தாடி, அதே ஹேர்ஸ்டைல்.. சின்ன வித்தியாசம் என்னன்னா, அந்தப் படத்துல சுத்தி வைச்சுகிட்டு சண்டை போட்டவரு, இந்தப் படத்துல கோடாரி வைச்சுக்கிட்டு சண்டை போடுறாரு... (கேரக்டரை மாத்தினாலும் கெட்டப்பை மாத்த மாட்டேங்கறான்ப்பா!!)
இவரு அந்தக் காட்டுக்குள் ஒரு தடவை போய் வந்த அனுபவம் உள்ளவரு.. எரிக்கிடம் 'ஸ்நோ வைட்டை உயிருடன் பிடித்துத்தந்தால், இறந்து போன அவனது மனைவியை உயிர்ப்பிப்பதாக' பீலா கட்டி, ஒருவழியாக அவனுடன் ஒரு படையை காட்டுக்குள் அனுப்புகிறார்கள்..
வெள்ளைப்பனியும், வேட்டைக்காரனும் சந்திச்சுக்கிட்டாங்களா? அப்புறம் என்ன ஆச்சு? ங்கறதையெல்லாம் படம் கண்டு அறிக..
ஸ்நோ வைட்னு சொல்லிட்டு படத்துல அந்த ஏழு குள்ளர்களைப்பற்றி காட்டாமல் விட்டுட முடியுமா?? ஸ்நோவைட் கதையை கலகலப்பாக்குறதே அந்த அழகான, குறும்புத்தனமான ஏழு குள்ளர்கள்தானே..
இதுலயும் காட்டுறாங்க.. எப்போதும் தண்ணி மயக்கத்திலும், கையில் ஆயுதங்களுடனும் ரவுடித்தனமான ஒரு குள்ளர் கூட்டம் படத்துல வருது... அப்படியே இந்த ரெண்டு படத்தையும் காம்ப்பேர் பண்ணிக்கிட்டீங்கன்னா, படத்தை எந்த லெவல்ல சீரியஸா காட்ட முயற்சிக்கிறாங்க என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்! (படத்துல நடிச்சவங்க யாரும் நிஜத்துல குள்ளர்கள் கிடையாது.. ஆனா உங்களுக்கு டவுட்டும் வராது.. எல்லாம் எஃபெக்ட்ஸ் மயம்!)
நடிப்பை பத்தி என்ன சொல்ல..? கிறி்ஸ் ஹெம்ஸ்வொர்த்தும், கிறிஸ்டன் ஸ்டூவர்ட்டும் இருக்கற படம் நடிப்புக் காவியமாவா இருக்க முடியும்? பத்தாக்குறைக்கு அந்த வில்லியை வேற நடிப்பு கம்மின்னு தெரிஞ்சே, அதை ஈடு கட்டுறதுக்காக டயலாக் பேசும் போதெல்லாம் காது கிழியும்படி சவுண்டாக கத்த விட்டிருக்கிறார்கள்... படம் பார்க்கப் போகிறவர்கள் நடிப்பு பகுதியில் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்வதே உடம்புக்கு நல்லது..
படத்தின் பக்க பலம் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்!... முதல் பாதி சண்டையின் போது ஸ்லோ மோஷன் சீன்களாக இருக்கட்டும், மந்திரக் காட்டின் விநோதத்தை காட்டுவதாயிருக்கட்டும், கிளைமேக்ஸ் சீனாயிருக்கட்டும், 117 நிமிஷப் படத்தையே "ரொம்ப நீளமாயிருக்கோ" என வரும் எண்ணத்தை கன்ட்ரோல் பண்ணுவது சி.ஜி.தான்!
காதுல பூ சுத்துற கதையை முடிந்தளவு மெனக்கெட்டு, அரை அங்குலம் ரியாலிட்டிக்கு கிட்டே கொண்டு போய் நிறுத்துவது இயக்குனர்தான்.. இது இவரோட முதல் படம்னு நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.. தொடர்ந்தும் இதே genre கதைகளில் இவர் தைரியமாக இறங்கலாம்!
பெரிதாக சரித்திரப்படம், ஃபேன்டஸி படம்னுல்லாம் நினைக்காம, நார்னியா மாதிரி யோசிச்சுக்கிட்டு படத்தைப் பார்க்கலாம்...
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 08
இசை = 10
கதை+திரைக்கதை = 11
கலை+ஒளிப்பதிவு =15
இயக்கம் = 14
மொத்தம் = 58% பார்க்கலாம்!
விமர்சனம் அருமை.
ReplyDeleteகண்டிப்பாக படம் பார்கிறேன்.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க.
http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html
நன்றி நண்பா.. வந்து பார்க்கிறேன்!
Deleteஎன்னா தல கொஞ்ச நாளா ஆள காணோம்..
ReplyDelete/*படத்துல நடிச்சவங்க யாரும் நிஜத்துல குள்ளர்கள் கிடையாது.. ஆனா உங்களுக்கு டவுட்டும் வராது.. எல்லாம் எஃபெக்ட்ஸ் மயம்!*/
ReplyDeleteஅட சூப்பர்...இதுக்காகவே படத்த பாக்க போறேன்..
பாருங்க பாஸ்.. ஆனா அந்த சின்ன எஃபெக்ட்ஸுக்காக முழுப்படத்துக்குகும் அதிகமா expect பண்ணிராதீங்க!
Deleteகொஞ்ச நாள் சென்று நல்ல விமர்சனம் தந்திருக்கீங்க நண்பா..நல்லா இருக்கு..முன்பு போல இல்லாமல் இப்பெல்லாம் படங்கள் பார்ப்பது குறைந்துவிட்டது..இதை பார்க்க முயற்சி செய்கிறேன்..தொடர்ந்து பல நல்ல விமர்சனங்களை தரும் உங்களுக்கு என் நன்றிகளோடு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகுறைவாகவே படம் பார்த்து வரும் வேளையில், இந்தப் படம் பார்க்க முடிவு செய்வது உங்கள் போதாத காலமாகத்தான் இருக்கும். அதை விட்டுவிடுங்கள்! எங்கே வேறு பதிவுகளைக் காணோம்! (ஒரு மாசம் வேற ஆயிருச்சு)...
Deleteஇன்னும் ரெண்டு நாட்களில் போடுறேன் பாஸ்..வந்து படிப்பீங்களா ?
Deleteகண்டிப்பா நண்பா.. அப்படியே தொடர்ந்து பல பதிவுகள் வேணும்!
Deleteபாஸ்,
ReplyDeleteவெள்ளைப்பனினா "ஸ்நோ வைட்" தானே ?? தெரிஞ்ச கதையா இருந்தாலும் படத்தை சுவாரிசியமா எடுக்க வேண்டும்..இதுல மிஸ் பண்ணிடாங்கன்னு நினைக்கிறன்...காசை கரி ஆகுறதுல ஹாலிவுட்காரனை மிஞ்ச முடியாது...
அப்புறம் நோலனின் "BATMAN" EPIC CONCLUSION வருது...தயார் ஆகுங்க....
அடிக்கடி எழுதுங்க நண்பரே...
//வெள்ளைப்பனினா "ஸ்நோ வைட்" தானே ?? //
Deleteயெஸ் பாஸ்!
//காசை கரி ஆகுறதுல ஹாலிவுட்காரனை மிஞ்ச முடியாது... // கரீக்டு!
//அப்புறம் நோலனின் "BATMAN" EPIC CONCLUSION வருது...தயார் ஆகுங்க....//
ஆகுறோம் நண்பா, ஆகுறோம்! கண்டிப்பா தியேட்டர்லதான்.. ஆனா என்ன, இங்க படம் வர லேட்டாகும்.. (இப்பதான் ஸ்பைடர்மேனே வந்திருக்கு)
மச்சி ... இங்க ஆகஸ்ட் 10 தான் ரிலீஸ் ஆகுதாம். :(
Deleteஇதே கதைய வேற எங்கயோ படிச்ச அல்ல பார்த்த ஞாபகம். சரியாய் தெரியல....... ஆனால் படம் கொழந்தைங்க பார்க்குற படம் என்று தெரிஞ்சும் எப்படி தான் பார்த்திங்களோ...!!!! (நான் கூட இப்படித் தான் மொக்க படம் என்று தெரிஞ்சும் சில நேரத்துல வேண்டும் என்ற படத்தை பார்பேன்).
ReplyDeleteஎப்பயும் போல உங்க விமரசனம் நன்று.
எல்லாம் சி.ஜிக்காக பார்க்குறது நண்பா.. அனிமேஷன் அடிக்கடி பார்த்து ஊறிட்டதால கொழந்தைகளுக்குன்னே ரிலீசாவுற படங்களையும் பார்ப்பதில் சின்ன இஷ்டம்!
Deleteதல,
ReplyDeleteஉங்க பதிவுக்கு label குடுக்கும் போது "சினிமா" & "திரைவிமர்சனம்" என்று குடுக்கவும்.. இந்த ரெண்டு label கூட நீங்க என்ன வேண்ணா சேர்த்துக்காங்க... அப்ப தான் "திரைமணம்" பகுதியில் உங்க பதிவு வரும்.
ரொம்ப நாள் கழிச்சு சொன்னமாதிரி பில்லா 2க்கு அப்புறம் விமர்சனம் போட்டிட்டிங்களே? :) :)
ReplyDeleteபோனவாரம் அவெஞ்சர்ஸ் பார்க்க MCல நின்னுட்டிருக்கும்போது இந்தப் படம் ஓடிட்டு இருந்துச்சு. இன்னும் போகுதோ தெரியல. தியேட்டர்ல 400-500ரூவா கொடுத்து பார்க்குற அளவுக்கு வொர்த்து பீஸா இது? இல்ல டவுன்லோடே போதுமா?
ரிஸ்க் எடுக்க வேணாம்.. டவுண்லோடுங்க, அது போதும்!
Deleteவாங்கய்யா! வாங்க ! ரொம்ப நாளுக்கு அப்புறம்!
ReplyDeleteயாருப்பா அது? அண்ணன் திருப்பி வரும் போது இந்த மேள தாளம், கரகோஷம்லாம் வேணாம்னு சொல்லியிருக்கேன்ல!!
Deleteஇந்த கதைய எங்க ஆயா நான் மூணாம் வகுப்பு படிக்கிறப்பவே சொல்லிடிச்சி! ஆனாலும் சப்ப கதைய கூட "சுப்பர்" படமா ஆக்கிறதுக்கு ஒரு வெள்ளக்காரன் வேணும்பா! கொழும்பு MC'ல போட்டிருக்கானுக , டிக்கட் விலை 400/- உன்னய நம்பி குடுத்து உள்ள போகலாமா மச்சி?
ReplyDeleteவேணாம் பாஸு.. அவ்ளோ.. வொர்த்துல்லாம் படம் இல்லை! எதுக்கும் ட்ரெயிலரை பார்த்துட்டு உன் டேஸ்டுக்கு ஒத்து வருதான்னு பார்த்துக்க..
Deleteஅப்போ 'சுப்பர்' கதையை கூட 'சப்ப' படமாக்குறதுக்கு???
///எதுக்கும் ட்ரெயிலரை பார்த்துட்டு உன் டேஸ்டுக்கு ஒத்து வருதான்னு பார்த்துக்க..////
DeleteDOT
////அப்போ 'சுப்பர்' கதையை கூட 'சப்ப' படமாக்குறதுக்கு???/////
அதுக்கு உன்னோட விமர்சனமே போதாதா?
வணக்கம் நண்பா என்னுடைய பதிவில் தெளிவான தங்கள் கருத்துக்களக் கண்டு மகிழ்ந்தேன், உண்டெனி என்னால் பதில் அளிக்க முடியவில்லை, அதனால் தான் தங்கள் தளத்திற்கே நன்றி கூற வந்துள்ளேன், மேலும் என்னை தங்கள் நண்டபக ஏற்றது குறித்து மகிழ்கிறேன், உகள் மனத்தில் சொன்னதை அப்படியே சொல்லிச் சென்றீர்கள் மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள், தன்கள் பதிவுகள் அனைத்தையும் இமாததிற்க்குள் படித்து கருது இடுகிறேன் (ஏன் என்று கேட்காதீர்கள்! ஒரு வலைப்பூவில் நான் இணைகிறேன் என்றால் அவர்களின் பெரும்பால்;அனா பத்துகளை படித்தாக வேண்டும் என்று நினைப்பவன், அதனால் தான்)
ReplyDeleteதங்கள் 79 நட்பாக இணைந்தில் மகிழ்கிறேன்
என் பதிவுலக நண்பர்களில் ஒருவர்களாக நீங்கள் கிடைத்ததில் சந்தோஷம்.. உங்களது தளத்தை அறிந்து கொள்ள உதவிய நண்பர் ராஜுற்கும் நன்றி!
Deleteதொடர்ந்து கண்டிப்பாக வருகிறேன் நண்பா!!
//தன்கள் பதிவுகள் அனைத்தையும் இம்மாததிற்க்குள் படித்து கருது இடுகிறேன்//
நல்ல கொள்கை தான் பாஸ்!.. ஆனா என் எழுத்து பெருசா ஏதும் சுவாரஷ்யமா இருக்காது..
தாமதமாக வந்ததற்கு மன்னிச்சுக்குங்க பாஸ். விமர்சனத்தையும் படித்தேன் கீழுள்ள கருத்துரைகளையும் படித்தேன். படம் அவ்ளோ பெருசா எதிர்பார்க்க ஏலாது போல இருக்கே
ReplyDeleteஎதிர்பார்த்தீங்கன்னா நொந்தபோக சான்ஸ் இருக்கு.. ப்ரீயா வுடுங்க!
Deleteஎதிர்பார்த்து வெற்றி கண்ட படம் நான் ஈ
Deleteஇத பாக்கும்போது என்னமாதிரி சினிமாவ ரசிக்குறவங்க நிறைய இருக்குரங்கனு தெரியுது நன்றி
ReplyDeleteஎன்னையும் இந்த ஆட்டத்துக்கு செதுக்கோகளேன்
http://multistarwilu.blogspot.in/
வருகைக்கு நன்றி நண்பா..
Delete