Wednesday, August 15, 2012
Ted (2012)
"கடவுளே என்ன இந்த டெஸ்டுல பாஸாக்கிரு"ன்னு தொடங்கி, "இந்தப் பொண்ணுதான் நமக்கு லவ்வரா வரணும்" வரைக்கும் ஒரு வருஷத்துக்குள்ள எத்தனை வாட்டி wish பண்ணியிருப்போம்?.. இதுல ஏதாவது ஒண்ணு திடீர்னு பலிச்சுருச்சுன்னா?.. அதுவும் அந்த wish இயற்கைக்கு மாறான ஒண்ணா இருந்துச்சுன்னா??
அமெரிக்காவுல ஜான் பென்னட்னு ஒரு சின்னப் பையன், சக வயது பசங்களால் கிண்டல் பண்ணப்பட்டும், விளையாட்டுக்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டும் தனிமையுடன் பொழுதைக் கழிக்கிறான்.. இவனுக்கு கிறிஸ்துமஸன்று பரிசாக கிடைக்கும் Teddy Bear பொம்மையை தனது நண்பனாக கருதி அதன் மீது அன்பைப் பொழிகிறான்.. அன்றைய இரவு "இந்த பொம்மை உயிருடன் வந்தால் நல்லா இருக்குமே" என்று மனதில் வேண்டிக் கொண்டே தூங்கிவிடுகிறான்.. அந்த நேரம் பார்த்து வானிலிருந்து விண்கல் ஒன்று வீழ்ந்துவிடவும், அவனது வேண்டுதல் பலித்துவிடுகிறது!!
உயிருடன் வரும் அந்தப் பொம்மை (டெட்) வெகு விரைவில் ஒலக ஃபேமஸாகிறது.. டி.வி நியூஸ், பேட்டி என்று அமெரிக்கா முழுதும் தெரிந்த ஒரு பிரபலாமாகவே ஆகிவிடுகிறது டெட். ஆனாலும் தன் உயிர்த்தோழன் ஜானை மறவாமல் அவனுடனேயே சேர்ந்து வளர்கிறது..
வருடங்கள் 28 உருண்டு மறைகின்றன...
ஜானுக்கு இப்போ 34 வயசாவுது.. லோரி-எனும் பெண்ணுடன் 3 வருட காதல் வேறு.. ஆனாலும் இன்னும் இடி வந்தா பயந்து போய் டெடியைக் கட்டிப்பிடிக்கற டைப்பாகவே இருக்கான்! டெடியும், மனிதர்களோடு வளர்ந்து குடி, கெட்டவார்த்தைகள் எல்லாவற்றையும் கற்றுத் தேர்கிறது! காதலி லோரிக்கோ ஜான் டெடியுடனேயே சுற்றிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை.. ஃப்ரெண்ட்ஷிப்பை கட் பண்ணச் சொல்லி வற்புறுத்துகிறாள்.. இதே நேரம் டெடியைத் தூக்கிச் சென்று தனது மகனுக்கு பரிசளிப்பதற்காக ஒரு "டெரரான" அப்பன், டெடியைத் துரத்தித், துரத்திப் பின்தொடர்கிறான்!
டெடியை அவனால் பிடிக்க முடிந்ததா? 28 வருஷ நட்பு முறிந்ததா என்பதே மீதிக்கதை!
இந்தப் படம்தான் Family Guy அனிமேட்டட் சிட்-கொம் தொலைக்காட்சித் தொடரை இயக்கிய மெக்ஃபார்லேனின் முதலாவது திரையுலகப் பிரவேசம்.. எதிர்பார்த்தது போலவே படம் நான்-ஸ்டாப் காமடி! Family Guyல் பீட்டருக்கு (முதன்மைக் கதாப்பாத்திரம்) வாய்ஸ் கொடுத்திருப்பது போலவே, இந்தப் படத்திலும் டெட்டுக்கு இவர்தான் வாய்ஸ் கொடுத்திருக்கிறார்...
படம் கடைசியில் OKOK வரையிலும் பார்த்து சலிச்ச அதே "ஃப்ரெண்டு இருந்தா லவ்வர் லேதுடா" ஃபார்முலாவை மையமாகக் கொண்டு பின்னப்பட்டதால் சில இடங்களில் கொட்டாவி வரவைக்கிறது.. ஆனாலும் டெட் ஸ்க்ரீனில் இருக்கும் போதெல்லாம் அது பற்றி கவலைப் படவே தேவையில்லை! ஒரு கட்டத்துக்கு மேல இது அனிமேஷன் தான் என்பதையும் மறந்து ரசித்துக்கொண்டிருந்தேன்! அவ்வளவு லைவ்லியாக அந்த கதாப்பாத்திரத்தை படைத்ததற்காகவே இயக்குனருக்கு ஒரு சல்யூட்!
ஜான் பென்னட்டாக 'மார்க் வால்பேர்க்'.. Fighter, Shooter, Departed னு முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைகளில் தான் முன்பு பார்த்துருக்கேன்.. இவர்கிட்ட இருந்து இப்படியொரு குழந்தைத்தனமான நடிப்பை நான் எதிர்பார்க்கவேயில்லை! இவரும், டெடியும் சேர்ந்துக்கிட்டு மழைக்காலத்தில் இடியை விரட்டுறதுக்காக பாடும் rhyme கலக்கல் ரகம்.. ரீவைன்ட் பண்ணி, ரீவைன்ட் பண்ணி சிரித்தேன்! அப்புறம் இன்னொரு கட்டத்தில் டெட்டும், ஜானும் வீட்டிற்குள்ளேயே வைத்து அடித்துக் கொள்வார்கள்.. அந்த சீனுக்கு யாருக்காவது சிரிப்பு வராவிட்டால், அவர்கள் humor sense சுத்தமும் இல்லையென உறுதிபடக் கூறலாம்!
என்னதான் காமடிப்படமா இருந்தாலும், அதில் சீரியஸையும் சேர்த்துக்கலாம்னு க்ளைமேக்சில் காட்டி மெக்ஃபார்லேன் தன்னை முழுமையான மசாலா டைரக்டராக முத்திரை குத்தியிருப்பாரு! நீங்கள் பார்க்கும்போது ஒரு சில கண்ணீர்த்துளிகள் உதிர்ந்தாலும் உதிரலாம்..
போஸ்டரில் டெடி பெயார் இருக்கேன்னு, ஃபேமிலியோடு பார்க்கும் ஐடியாவை யாரும் தவறி எடுத்துவிடவேண்டாம்.. படம் பாலகர்களுக்கு அல்ல! ஆனாலும் ஒரு R- Rated காமடிப் படத்துக்கு நம்ப முடியாத அளவில் வசூல் செய்கிறது இந்தப் படம்.. ஜுனில் ரிலீசாகி நெடுநாட்களுக்கு பாக்ஸ் ஆபீஸின் சிம்மாசனத்தில் இருந்து, பின் Dark Knight Rises ன் வரவால் சிறிது இறங்கி இந்த வாரம் ஏழாம் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறது!
ஒண்ணே முக்கால் மணிநேரத்துக்கு சிரித்து பொழுதுபோக்க எண்ணுபவர்கள், சிட்-கொம் நாடக ரசிகர்கள் (குறிப்பாக Family Guy ரசிகர்கள்) பார்க்கலாம்!
இனி எந்த வேண்டுதலா இருந்தாலும் ஒருவாட்டிக்கு, நூறு வாட்டி கன்ஸிடர் பண்ணித்தான் வேண்டனும் நண்பர்களே.. எந்த நேரத்திலும் விண்கல் விழலாம்!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 11
இசை =10
கதை+திரைக்கதை = 12
கலை+ஒளிப்பதிவு =15
இயக்கம் = 14
மொத்தம் = 62% நன்று!
Labels:
6,
comedy,
mark wahlberg
Subscribe to:
Post Comments (Atom)
விளக்கமான விமர்சனம்...
ReplyDeleteதொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteமச்சி உண்மையிலே எனக்கு இப்படி படங்கள் மிகவும் பிடிக்கும்.. சூப்பர்.. கடைசியாக JUST GO WITH IT, FRIENDS WITH BENEFITS, 50 FIRST DATES போன்ற படங்கள் செம.. கண்டிப்பாக TED யும் பார்த்திடலாம்.. BUT MARKS கம்மியா இருக்கே..
ReplyDeleteகாமெடிதான் உங்க கேட்டகரின்னா கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் தல.. பார்த்து ரொம்ப நாளுக்கு மனசுல நிற்கக்கூடிய படங்களுக்குதான் நான் கூட மார்க்கஸ் போடுவது வழக்கம்..
Deleteஅது மட்டுமில்லாம என் ஃபேவரிட் கேட்டகரி order அனிமேஷன், சயின்ஸ், த்ரில்லர், லைஃப், ஃபேன்டஸி, ஹாரர், காமெடி, ஆக்ஷன், ஹிஸ்டரி, ரொமான்ஸ்... அப்படி போவுதா, அதுனால முன்னுக்கிருக்கும் படங்களுக்கே மார்க்ஸ் வாரி வழங்குவது என் இயல்பு.. :)
அதுனால மார்க்ஸை கண்டுக்காம தாராளமா படத்தை ரசிச்சுக்கோங்கோ!
மகா மொக்கை பதிவு, சகிக்கல! உவ்வே... எப்புடித்தான் இதெல்லாம் படிக்கிறய்ங்களோ? இத்த போயி டவுன்லோடு பண்ணி யாராச்சும் பாப்பனா? மக்களே எவனாவது எனக்கு பின்னாலா பின்னூட்டம் போடுறப்ப " அருமையான பதிவு, இப்பவே டவுன்லோட் போட்டுர்றேன்." , " உங்க விமர்சனம் படிக்கிறதே படத்த பாக்கணும் போல இருக்கே, இப்பவே டவுன்லோட் போட்டுர்றேன்", " டவுன்லோட் போட்டு வைத்திருக்கிறேன், இன்னும் பாக்கல, உடனே பாத்திட வேண்டியது தான்" அப்டீன்னு எவனாச்சும் பின்னூட்டம் போட்டிங்க? நான் செம காண்டாயிடுவேன்.
ReplyDeleteச்சே.. அந்த மூணு கமெண்டைத் தான் நான் எங்கயாவது யூஸ் பண்ணலாம்னு இருந்தேன்..
Deleteவெளங்கிரும்!
Deleteஎன்னமோ தெரியல இன்னிக்கு வாய தொறந்தா பொய் வருதில்ல மச்சி... ஆங் .. அப்புறம் விமர்சனம் டாப் கிளாஸ்! இப்பவே டவுன்லோடு போட்டு பாக்குறேன். # நம்ம மெல்கிப்ஸன் "பீவர்" அப்டீன்னு ஒரு படம் நடிச்சிருக்காரே அந்த பீவருக்கும் இந்த டெட்டுக்கும் ஏதுனாச்சும் சம்மந்தம் இருக்குமோ?
ReplyDelete//என்னமோ தெரியல இன்னிக்கு வாய தொறந்தா பொய் வருதில்ல மச்சி...//
Deleteஇது மட்டும் எப்படி வந்திச்சு??
//அப்புறம் விமர்சனம் டாப் கிளாஸ்! இப்பவே டவுன்லோடு போட்டு பாக்குறேன்//
#காண்டாயிட்டேன்...
மெல் கிப்ஸன்.. கடைசியா signs ல பார்த்தது.. long time no see.. செளக்கியமாருக்காரா??
அதுல பீவர் வெறும் puppet தானாம்.. அவரா ஆட்டுனாத்தான் உண்டு.. அதுவா ஆடாது.. ஆனா இந்த டெட் அப்படியில்லை!
அந்தப் படம் வேற சீரியஸானதுன்னு கேள்விப்பட்டேன்..
///அவரா ஆட்டுனாத்தான் உண்டு.. அதுவா ஆடாது.. ///
Deleteயாரு ஆட்னா என்னப்பா? ஆடுதில்ல ... அது தானே நமக்கு வேணும்!
பைதிபை .... அது சீரியஸான படம்னு தான் நானும் கேள்விப்பட்டேன். ஏது ரொம்ப சீரியசாகி , ஆஸ்பத்திரில படுக்கிறாப்ல ஆயிடுமோன்னு தான் எதுக்கும் உங்கிட்ட கேட்டுக்கலாம்னு பாத்தேன். # மில்கிப்சன் ரொம்ப கடிக்க மாட்டார்னு நெனைக்கிறேன்.
/// படம் பாலகர்களுக்கு அல்ல///
ReplyDeleteஆமா! நம்ம jZ சொல்லுற படம் எல்லாம் "பால்"அகர்களுக்கு தான் பொருந்தும்!
///ரீவைன்ட் பண்ணி, ரீவைன்ட் பண்ணி சிரித்தேன்! ///
வீட்டுக்கு பக்கத்தில் குடியிருந்த குடும்பம் இரவோடு இரவாக வெளியேறியது. "பக்கத்து வீட்டில் பைத்டியம் இருந்தா எவன்யா குடியிருப்பான்?" அந்த குடும்பஸ்தர் காட்டம்.
வெளியேறிய குடும்பம் கிஷோகர் ஏரியாவில் செட்டிலாகியது..
Delete#ஐய்யோபாவம்!
விட்ரா ! விட்ரா ! அந்த வீட்ல ஆன்ட்ரியா மாதிரி ஒரு ஃபிகரு இருக்கு, நான் வேற அனிருத் மாதிரி தாடி எல்லாம் வெட்டி இருக்கேன். அப்புறம் என்ன...... போட்டா .... ஃபேஸ்புக்... டுவிட்டர்.... ஒரே பிரபலம் தான் போ!
Delete“விமர்சனம் நல்லாயிருக்கு. படத்தை டவுன்லோட் பண்ணி வச்சிருக்கேன். இன்னும் பார்க்கல. சீக்கிரம் பார்க்கலாம்”...இப்படியெல்லாம் சொன்னா கிஷோகர் ப்ளாக்கிற்கு தேடி வந்து உதைப்பார் என்ற பயத்தில் எதுவும் சொல்லாமல் ஓடுறேன். பாய் !!!
ReplyDeleteஏய்யா உங்களுக்கு வேற பின்னூட்டமே கிடைக்காதா ? மனப்பாடம் பண்ணி வச்சிருப்பீங்க போல!!
Deleteஒழுங்கா வந்துக்கிட்டிருந்த பயலையும் துரத்தி விடுற.. கிசோகரு! உன்னைய டார்கெட் பண்ணித் தூக்காம வுடமாட்டேன்!
Deleteஎன்னப்பா பேட்ட ரவுடி ரேஞ்சுக்கு பேசுற?
Deleteசினிமாப் படத்திற்கு வேறு எப்படி பின்னூட்டம் போடலாம்னு க்ளாஸ் ஒன்னு எடய்யா. படம் பார்த்திருந்தா ஏதாச்சு அந்த சீன் சூப்பர், ஹீரோயின் மொக்கைன்னு பீலா விடலாம். பார்க்காம என்னாத்த சொல்றது?
Deleteஎப்பயும் போல உங்க விமர்சனம் படித்ததில்..., படத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறன்.
ReplyDelete