Wednesday, August 22, 2012

The Millionaire Tour (2012)

 ஒரு சில படங்கள் பெரிய பட்ஜெட்டில், ரொம்ப நீளமாக எடுப்பார்கள்.. கதை எவ்வளவு க்ரிப்பிங்காக இருந்தாலும், திரைக்கதை லூஸாகப்போய் படத்தை ஸ்கிப் பண்ணி ஸ்கிப் பண்ணி பார்க்க வேண்டியதாயிரும். சில படங்களை லோ பட்ஜெட்டில், சின்னதா எடுப்பார்கள்! கதை தெரிஞ்ச கதையாவே இருக்கும், ஆனா திரைக்கதை செம ஸ்பீடாகப் போய் பார்வையாளனை இருக்கையிலேயே கட்டிப் போட்டுரும்.. Exam படம் அதுக்கு நல்ல உதாரணம். இதுவும் கிட்டத்தட்ட அதே வகைப் படம்தாங்கோ!


க்ரெய்க் அப்படீங்கிறவர்தான் நம்ம ஹீரோ.. விமான நிலையத்துல வந்து இறங்கிய இவர் ஒரு cab carஐ எடுத்துக்கொள்கிறார். கார் புறப்பட ஆரம்பிக்கும்போது எதிர்பாராதவிதமா பில்லி என்கிற ஒரு இளம்பெண்ணின் மீது மோதுகிறது. அவர் விழுந்து கால் வலியால் துடித்துக்கொண்டிருக்கிறார்.. உடனே அந்தப் பெண்ணுடன் வந்த காஸ்பர் என்பவன் தாறுமாறாக கத்துகிறான். டிரைவர் விடயத்தை பெரிது படுத்த வேண்டாமெனக் கேட்டுக் கொள்ளவும், காஸ்பர் தாங்கள் செல்லவேண்டிய இடமும் அந்த கார் செல்லும் வழியிலேயேதான் இருப்பதாகவும் தங்களை ட்ராப் பண்ணும் படியும் கேட்கிறான்.. டிரைவரும், கிரெய்க்கும் உதவிக்குத்தானே என ஒத்துக் கொள்கிறார்கள்.

ஏறிய பின்னர் தான் தெரிகிறது (உங்களுக்கு நான் சொல்ற நேரமே தெரிந்திருக்கும்) அவர்கள் இருவரும் கடத்தல்காரர்கள் என்று.. கிரெய்க்கின் கையிலிருந்த நோட்டுக்களை எடுத்துக்கொள்வதோடு, அவனது செல்போனையும் இரண்டு துண்டுகளாக உடைத்துவிடுகின்றனர்.. அத்துடன் நில்லாது, கார் டிரைவரை துப்பாக்கி முனையில் மிரட்டி ஒவ்வொரு ATMலும் நிறுத்தச்சொல்வதோடு, க்ரெய்க்கை கொண்டு அவனது கணக்கிலிருந்து பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டுகிறார்கள்!

கிரெய்க் இந்த நயவஞ்சகர்களிடமிருந்து தப்பிக்க சில தடவைகள் முயற்சி செய்து, மாட்டுப்பட்டு அடி, உதைகளை வாங்கிக் கொள்கிறான்.. தனக்கு உதவும்படி கேட்கும் போது டிரைவரோ தான் ஒரு குடும்பஸ்தன் என்பதைக் காரணம் காட்டி, அவர்களுடன் ஒத்துழைப்பதே நல்லது என பின்வாங்குகிறான். அவர்களுடன் கதைத்துக்கொண்டு வரும்போது, அவர்கள் அவனைக் குறிவைத்து கடத்தியதற்கான உண்மை தெரியவருகிறது.. அதாவது அவர்கள் இருவரும் 'ரோமன்' எனும் லோக்கல் தாதாவின் கீழ் வேலை செய்கிறார்கள்.. ரோமனின் கட்டளையின் பேரில் அவனால் எதிரியாக கருதப்படும் 'ஜுலியஸ்' என்பவன்தான் கிரெய்க் என தவறாக எண்ணிக் கடத்தி வந்திருக்கிறார்கள்.. கிரெய்க் "நான் அவன் இல்லை"ன்னு பலவாட்டி வாக்குமூலம் கொடுத்தும் வேலையில்லை..
Destination= ரோமனின் ஏரியா! அங்க போனா திரும்ப வருவதே கஷ்டம்!!
இதுவரை நான் சொன்னது வெறும் 20 நிமிஷத்துக்குத்தான்.. ஆட்டமே இனித்தான் ஆரம்பம்.. இந்தச் சிக்கலிலிருந்து க்ரெய்க்கால் மீண்டுகொள்ள முடிகிறதா என்பதே மீதிக்கதை!

ஆக்சுவலி இந்தப் படத்துக்கெல்லாம் கதையே சொல்லாம விட்டால்தான் செம்ம சுவாரசியமா இருக்கும்.. ஆனால் இந்த படத்தோட ஹைலைட்டே இதுதான் அடுத்துன்னு தெரிஞ்சுக்கிட்டாலும் உங்களால சுவாரசியத்தை தடுத்து நிறுத்த முடியாது.. படத்துல சில சில ட்விஸ்டுகள் உண்டு.. ஆனால் கிளைமேக்ஸ்தான் என்னை "வாவ்" போட வைத்துவிட்டது!!

படத்துல தெரிஞ்ச ஒரே முகம் காஸ்பராக நடிக்கும் Dominic Monaghanதான்.. லார்ட் ஒஃப் த ரிங்ஸில் ஃப்ரோடோவுடன் துணைசெல்லும் சின்னப் பயல் மெரி தான் இந்தப் படத்தில் லோக்கல் அடியாளாக மிரட்டியிருக்கிறார்.. குறைந்தளவு கதாப்பாத்திரங்கள் என்பதால் கிட்டத்தட்ட எல்லோருமே தங்கள் பாத்திரங்களை தேவையான அளவுக்கு செய்து கொடுத்திருக்கிறார்கள்!

Express Kidnapping அப்படீன்னா ஒருத்தரைக் கடத்தி, அவரையும் அழைத்துக் கொண்டு தொலைவில் உள்ள ஒரு ஏரியாவுக்குச் சென்று அவரோட credit card ஐ உபயோகித்து, ATMமிலிருந்து தேவையான சிறு தொகைப் பணத்தை எடுத்துக்கிட்டு அவரை பிடிச்ச இடத்துலயே கொண்டு போய் விடுறது.. (சில நேரம் ரொம்ப மரியாதையாய் வீட்டுலேயே கொண்டு போய் விட்டுருவாங்க!) இதனால அவர் காணாமப் போனது நெறைய பேருக்கு தெரியவோ, போலீஸ் பெரிதாக மூக்கை நுளைக்கவோ வாய்ப்பில்லை.. நாம காலங்காலமா தமிழ்சினிமாவுல பார்த்துட்டு வர்றதுக்கு பேரு Virtual Kidnapping.. அதுலதான் கடத்தியவரை ஒளிச்சு வைச்சுட்டு, அவரோட குடும்பத்துக்கு ஃபோன் போட்டு மிரட்டுவாங்க.. போலீஸும் குற்றவாளிகளை வலைவீசித் தேடும்..கிளைமேக்ஸ்ல நம்ம அர்ஜுனோ, நரேனோ வந்து காப்பாத்திருவாங்க!
சரி நாம பார்த்தோமே Express Kidnapping.. அதுல ஒரு டைப்புதான் இந்த Millionaire Tour அல்லது Paseo Millionario என்கிற வகைக் கடத்தல்.. அதாவது டாக்சிக்கு வெயிட் பண்ணுற ஒரு அப்பாவியை அந்த ட்ரைவர் கடத்திட்டு வருவாரு.. வழியில அவரோட கூட்டாளிங்களும் ஏறிக்கிட்டு, ஒவ்வொரு ATMமா பார்த்து இறங்கி காசைக் கறந்துக்குவாங்க.. இந்த வேலைகள்லாம் தென்னமெரிக்க நாடுகளில், குறிப்பாக ஆர்ஜென்டீனாவில் (கிசோகரு, மெஸியோட பூர்வீக தொழிலாம்..) சர்வ சாதாரணமா நடந்துக்கிட்டிருக்கு. அங்கத்தைய போலீஸும் நம்ம போலீஸுக்கு முன்னுதாரணமா வாழ்ந்துகிட்டிருக்கு! எல்லாம் மாஃபியா யுனிவர்சிட்டியில 3 மாச கோர்ஸ் செய்யும் போது படிச்சதுங்கோ!
சரி,இந்தக் கடத்தலை தெளிவாக் காட்டுற படம் எனக்குத் தெரிஞ்சு இதுதான்.. முன்பு எப்பயோ பார்த்த ஒரு படத்திலும் யாரையோ taxiல வைச்சு கடத்தியதா தோணுது.. சரியா ஞாபகம் இல்லை!

படத்தோட இயக்குனர் பத்தி கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும்.. Inon Shampanier.. புதுமுகம் தான்.. இதுக்கு முதல்ல 8 ballsனு ஒரு குறும்படம் வெளியிட்டிருக்காரு.. க்ரிட்டிக்கலா பாராட்டப்பட்டிருக்கு.. படம்தான் எங்க தேடியுயும் கிடைக்கலை! :(
எடுத்த விஷயத்தை நேர்த்தியாக செய்து முடிக்கனும்.. பார்வையாளனுக்கு தேவையான விதத்துல சினிமாவை வழங்கனும்ங்கிறதுல ரொம்ப குறிக்கோளோட இருக்கார் போல.. இந்த சீனைத் தவிர்க்கலாம், இங்க இப்படியொரு சீனை வைக்கலாம்னு சொல்றதுக்கு என்கிட்ட எதுவுமே இல்லை. கதையை வேணும்னா அங்க இங்க மாத்த எத்தணிக்கலாம்.. ஆனா அவர் எடுத்த விதத்துல படம் முழுமையாகவே இருக்கு!

படத்தின் பாதிப்பங்குக்கு மேல் காட்சிகள் காருக்குள்ளேயே எடுக்கப்படுவதால் கேமேரா மேனேஜ்மன்ட் பெரும் சிக்கலாக இருந்திருக்க வேண்டும்.. 'பையா' படத்தில் 3 விதமா ஆங்கிள் வைக்கிறதுக்கே பாடுபட்டிருப்பார்கள்.. இதில் 7 டைப் ஆங்கிள்கள் 'ஜஸ்ட் லைக் தட்' வைத்து கவர்கிறார்கள்.. பின்னணி இசையும் பல சயன்டிஃபிக், ஸாஃப்ட் ஆக்ஷன் படங்களில் கேட்ட தீம்தான் என்றாலும் படத்தோடு ஒன்றவைக்கிறது!

இந்தப் படம் எந்த தியேட்டரிலும் ஓடினதா ஞாபகம் இல்லையேன்னு நீங்க யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை.. அட கடையில போய் தேடிக்கலாம்னு நெனைச்சா இது direct-to-dvd ரிலீஸ் கூட இல்லை.. இதுக்குப் பெயருதான் இன்டர்நெட் ரிலீஸ்! தெரியாத பசங்களுக்கு - அதாவது நீங்க அவங்களோட youtube கணக்குடன் தொடர்பு கொண்டு குறித்த தொகையை செலுத்தினால், அவர்களால் பதிவேற்றப்பட்டிருக்கும் அந்த 'பிரைவேட்' வீடியோவை பார்க்கும் அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.. நமக்கேன் வம்பு, டவுண்லோட் இல்லைன்னா ஒன்லைன்தான்!

லோ பட்ஜெட், இன்டர்நெட் ரிலீஸ்னு நினைச்சு யாரும் படத்தை மட்டம்னு பார்க்க முதல்லயே எடை போட்டுவிட வேண்டாம்.. நீங்கள் பரபர த்ரில்லர்களை ரசிப்பவரானால், உடனே சென்று பாருங்கள்.. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு சர்ப்பிரைஸாக இருக்கும்!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 15
இசை =11
கதை+திரைக்கதை = 15
கலை+ஒளிப்பதிவு =12
இயக்கம் = 17

மொத்தம் = 70% மிக நன்று!
The Millionaire Tour (2012) on IMDb

31 comments:

  1. பதிவு போடுற நேரமாய்யா இது? போங்கய்யா ... போய் இழுத்து போத்திட்டு தூங்குங்க.

    ReplyDelete
    Replies
    1. கண்ணக்கட்டிக்கிட்டு வருது தான்.. என்ன பண்ண? எதுனாவது எழுதினா அப்பவே பப்ளிஷ் பண்ணிரனும்னு ஒரு கொள்கை!

      நீங்க ஏன் இன்னும் இழுத்து போர்த்திட்டு தூங்கலை?? #டவுட்டு

      Delete
  2. ஆன்லைன்ல லிங்க் தேடியாச்சு. ஆனா சப்டைட்டிலுக்கு என்ன பண்றது? ஜஸ்ட் லைக் தட்னு பார்த்திடலாம். கதையை தெளிவா தெரிஞ்சுக்க சைப்டைட்டில் ரொம்ப முக்கியமாச்சே?

    ReplyDelete
    Replies
    1. சப் டைட்டில்லாம் தேவையில்லை தல.. எல்லாப் பயலுங்களும் தெளிவாத்தான் கதைக்கிறாங்க..
      என்னா படத்துல கொஞ்ச நேரத்துக்கு ஒருத்தன் Christianity பத்தி பேசத்தொடங்குவான்.. அங்க சில பிட்டு மிஸ் பண்ணிட்டேன்.. அதுல்லாம் கதைக்கு அவ்வளவு தேவையில்லை!

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
  4. pathivu arumai.email mulam padikkum vasathiyai earpaduththavum.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.. கீழே விட்ஜெட்டை போட்டுட்டேனுங்கோ!

      Delete
  5. பலநாள் கழித்து ஒரு பரபர படத்தை அறிமுகபடுத்தியதற்க்கு நன்றி தல. Dominic Monaghan Lord of the rings படத்தை விட Lost டிவி சீரீஸில் மிக பிரபலம்

    ReplyDelete
    Replies
    1. நான் lost பார்த்ததில்லை தல.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  6. ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் .

    ReplyDelete
  7. //லோ பட்ஜெட், இன்டர்நெட் ரிலீஸ்னு நினைச்சு யாரும் படத்தை மட்டம்னு பார்க்க முதல்லயே எடை போட்டுவிட வேண்டாம்//
    அப்படி எல்லாம் நினைக்க மாட்டோம் தல. நீங்க அறிமுக படுத்திற படங்கள் எல்லாமே நல்ல படங்கள் என்கிற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருக்கு.
    போன வாரம் தான் "The Pirates! Band of Misfits" படம் பார்த்தேன்..ரொம்பவே நல்லா இருந்திச்சு. கண்டிப்பா இந்த படத்தையும் பார்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் போன்றோரின் நம்பி்க்கை தான் எனக்கு உதவும் படிக்கட்டு!
      //போன வாரம் தான் "The Pirates! Band of Misfits" படம் பார்த்தேன்.. ரொம்பவே நல்லா இருந்திச்சு.//
      ஒரு பதிவுக்கு ஹிட்ஸ் வர்றதை விட, கமெண்ட்ஸ் வர்றதை விட, யாராவது அந்தப் படத்தை பார்த்தாத்தான் மனதுக்கு நிறைவா இருக்கு!
      இந்தப் படத்தையும் பார்த்துருங்க..

      * by the way, உங்க தயவுல சிட்டி ஆஃப் காட், அப்புறம் குமரன் முன்பு சொல்லியிருந்த falling down ரெண்டையும் செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து பார்த்தேன்.. செமையா என்ஜாய் பண்ணேன்.. நன்றி!

      Delete
  8. விமர்சனம் கலக்கல்...~

    ReplyDelete
    Replies
    1. நன்றி! உங்கள் வரவு என்னை மேலும் எழுதத் தூண்டி ஊக்கமளிக்கிறது..

      Delete
  9. என்ன பின்னூட்டம் போடலாம்னு யோசிச்சு அப்புறம் போடுறேன்.

    *அப்புறம் இன்னிக்கு சுப்பர் கப் மேட்சு மச்சி!

    ReplyDelete
    Replies
    1. * இன்னிக்கு உங்களுக்கு சங்கு மச்சி!

      Delete
    2. நெனப்பு தான் மச்சி பொழப்ப கெடுக்கிறது!

      Delete
    3. நீ misunderstand பண்ணிட்டேன்னு நினைக்குறேன்.. நெனப்பு வேற.. நெஜம் வேற..
      நான் சொன்னது நிஜம்!

      Delete
    4. இப்போ எது நெஜம்? எது நெனப்பு மச்சி?

      Delete
    5. .... ஜஸ்டு மிஸ்ஸு!

      சூப்பர் கப்ப மட்ரிட் ஜெயிக்கும்ங்கறது நெனப்பு... லாலீகா மட்ரிட் ஜெயிக்குங்கறது நெஜம்! ஒ.கே.யா?

      Delete
    6. ஆனாலும் நீயெல்லாம் இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும்கட்சி அஸிஸ்டென்ட் மினிஸ்டரா இருக்க வேண்டியவன்டா! நல்லா வாங்குறடா ஜகா!

      Delete
  10. விமர்சனம் வழமை போல கலக்கல் இந்த மாதிரியான படங்கள் பிடிக்கும் ஆனால் எங்கிருந்து தான் அதை எடுகிரீர்களோ தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. நிறைய imdb list, top-ten list, critic reviewகளில் சுத்திக்கிட்டிருப்பேன்! அப்பப்போ இந்த மாதிரி பார்த்திராத நல்ல படங்கள் சிக்கும்..

      Delete
  11. எனக்கு இந்த வகைப்படங்கள் பிடிக்கும்.
    டிவிடி கிடைத்தால் பார்த்து விடுவேன்.
    தொடர்ந்து இது போன்ற படங்களை அறிமுகப்படுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக.. தொடர்ந்தும் தங்கள் ஊக்கம் தேவை!

      Delete
  12. நண்பர் நீங்க சொல்லீடீங்க டவுன்லோட் போட்டு விடவேண்டியது தான்..
    அருமையான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா!

      Delete
  13. Express Kidnapping, Virtual Kidnapping, இப்படி எல்லாம் இருக்குது என்று இப்ப தான் கேள்வி படுறேன், விமர்சனம் மிக அருமை..... கண்டிப்பா பார்த்துடுவேன் படத்தை.

    ReplyDelete
    Replies
    1. //Express Kidnapping, Virtual Kidnapping, இப்படி எல்லாம் இருக்குது என்று இப்ப தான் கேள்வி படுறேன்//
      இதுக்குத்தான் மாஃபியா யுனிவர்சிட்டியில சேர்ந்திருக்கனும்! ஹி..ஹி..

      Delete

Related Posts with Thumbnails