Thursday, August 26, 2010

Kites (2010)

ஹ்ருத்திக் ரோஷனின் புது வரவு. தற்போது பாலிவுட்டைக் கலக்கும் காதல்காவியம். 30க்கும் மேற்பட்ட நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை படம் பரவயில்லை ரகம் தான்.



படம் லாஸ் வேகாஸில். காசு கிடைப்பதற்காக எதையும் செய்யத் தயங்காத டான்ஸராக ஹீரோ ஜே (ஹ்ருத்திக் ரோஷன்). பணம் சம்பாதிப்பதற்காக வெளிநாட்டிலிருந்து புலம்பயர்ந்து வரும் பெண்களை மணந்து அவர்களுக்கு கிறீன் கார்ட் பெற்றுக்கொடுக்கிறார்.




அவ்வாறே வறுமையில் இருக்கும் தனது குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி வரும் மெக்சிக்கரான லின்டாவை (பார்பரா மோரி) மணந்து கொள்கிறார். இதற்கிடையே இவரது நடனத்தில் மயங்கி விழும் (பார்க்க சகிக்காமல் அல்ல.!!) பணக்காரப் பெண்ணான ஜினாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து மெல்ல மெல்ல அவளது மனதிலும் அவளின் பணக்கார குடும்பத்திலும் நுழைகிறார்.

ஜினாவின் அப்பா பாப் ஒரு கஸினோவிற்கு சொந்தக்காரர். அவரது மகன் பெயர் டோனி. இருவருக்கும் துரோகம் செய்பவர்களைக் கண்டால் அறவே பிடிக்காது. தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்காக ஜேயை அழைக்கிறார். நிச்சயதார்த்தத்திற்கு வந்து பார்த்தால் லின்டா தான் நடாஷா என்ற பெயரில் மணமகளாக உட்கார்ந்திருக்கிறாள். அன்றைய பார்ட்டியில் டோனி நடாஸாவிடம் சிறிது முறைகேடாக நடந்து கொள்வதை அவதானிக்கிறான்.

பின்னர் ஜேயும் நடாஸாவும் யாருக்கும் தெரியாமல் அன்றிரவு சந்தித்து டைவர்ஸ் வாங்க முடிவெடுக்கிறார்கள். வந்தோமா.. டைவர்ஸ் வாங்கிட்டு போனோமா என்றில்லாமல் பார்ட்டி, டான்ஸ் என கூத்தடிக்கிறார்கள். இருவரையும் அறியாமல் காதல் மலர்கிறது. பின்பு டோனி நடாஷாவின் அபார்ட்மென்டுக்கு வந்து அவளை அடிக்க, ஜே அவளை காப்பாற்ற அங்கே வர இருவருக்கும் இடையில் மோதல் உண்டாகிறது. ஜேயைக் காப்பாற்ற நடாஷா டோனியின் தலையில் போத்தலால் அடித்து விட்டு ஜேயுடன் எஸ்கேப் ஆகிறாள். இதற்குப்பின் சண்டையும், ஓட்டமுமாக chase தொடங்குகிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

கதை இவ்வளவுதான் என்றாலும் லொகேஷனும் அதற்குத் தகுந்த ஒளிப்பதிவும் படம் முடிவு வரை ரசிகர்களைக் கட்டிப் போட்டு வைக்கின்றன.

ஹ்ருத்திக் ரோஷன் மிரட்டுகிறார். பாஷை தெரியாமல் லின்டாவும், அவரும் தள்ளாடும் காட்சிகளுக்காகவே இன்னொருமுறை படம் பார்க்கலாம். அவ்வளவு அருமையான நடிப்பு.

முற்பாதி ஹ்ருத்திக் ரோஷனாலும், அட்டகாசமான ஒளிப்பதிவாலும் பட்டையைக் கிளப்பினாலும், பிற்பாதி திரைக்கதை தொய்வால் வீழ்கிறது. பிற்பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை, முன்கூட்டியே யூகிக்கக் கூடிய க்ளைமேக்ஸ் என்பன படத்தின் பலவீனம்.

பின்னணி இசை படு சுமார். என்றாலும் ஒரு சில பாடல்களைக் காது கொடுத்து கேட்கலாம்.

பார்பரா மோரி நடிக்கிறாரா அல்லது இளிக்கிறாரா என்று தெரியவில்லை. வாங்கின காசுக்கு நடித்தார் என்றாலும் மதராசப்பட்டனம் எமி ஜாக்சன் அளவுக்கு நேர்த்தி இல்லை நடிப்பில்.

வில்லனாக வரும் டொனி தனது பாத்திரத்தை முழுமையாக செய்து காட்டி அப்ளாஸ் வாங்கிச் செல்கின்றார்.

படம் வெற்றிதான் என்றாலும் சிறந்த படங்களின் வரலாற்றில் நிலைத்து நிற்குமா என்பது சந்தேகமே..



நடிப்பு = 16
இசை = 9
இயக்கம் = 13
கதை + திரைக்கதை = 11
கலை +ஒளிப்பதிவு= 17

மொத்தம் = 66% நன்று

7 comments:

  1. விமர்சனம் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  2. கொஞ்ச நேரத்தில் திரும்ப வர்றேன் தல...

    ReplyDelete
  3. கலக்குங்க..!! :) ஆனா நான் பெண் சிங்கம் பார்த்தாலும் பார்ப்பேனே தவிர, ஹிந்தி மாதிரியான உலகப் படங்களை பார்க்க மாட்டேன்.

    ஒன்லி இங்கிலி பீஜு..!! :)

    ReplyDelete
  4. word verification -ஐ எடுத்து விடுங்க தல

    ReplyDelete
  5. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.. அடுத்த பதிவு கண்டிப்பாக ஆங்கிலப் படம் ஒன்றாகத் தான் இருக்கும்..

    ReplyDelete
  6. நளதமயந்தி பார்த்தீர்களா?

    ReplyDelete
  7. @ siddhadreams - நளதமயந்தி? எது மாதவன் நடிச்ச படமா?? அதுக்கும் கைட்ஸுக்கும் என்ன சம்பந்தம்..
    படம் பார்க்கவில்லை நண்பா!

    ReplyDelete

Related Posts with Thumbnails