மேரி ஷாங்கிறவ ரொம்ப கொடூரமானவள். அவளுக்கு குழந்தைகளே கிடையாது. பொம்மைகளைத்தான் அவ குழந்தையா வைச்சு பாவிப்பாள். அவளை யாராவது கனவில் பார்த்துக் கத்தினால் பார்த்தவங்களை கொன்று விடுவாள்.
இந்த சின்ன fairy tale மாதிரியான பழங்காலத்து கதையை (படத்தில் மட்டும் தான்.. நிஜத்தில் அப்பிடியொன்னும் கதை கிடையாது) வைச்சுத் தான் முழு படத்தையும் செட் பண்ணியிருக்காங்க. படம் திகில் ரசிகர்களுக்கு நிச்சயம் இன்னொரு விருந்து. மேரி ஷா செய்யும் பொம்மைகள் எல்லாமே கீழ்க்கண்ட படத்திலுள்ள குள்ளர்கள் மாதிரித்தான் இருக்கும்.
கதை அமெரிக்காவில்... ஹீரோ ஜிம்மியும் ஹீரோயினும் சமீபத்தில் தான் திருமணமாகி அபார்ட்மென்ட் ஒன்றில் வீடு எடுத்து தனியாக வாழ்கிறார்கள். திடீரென ஒருநாள் அவர்களுக்கு மர்மமான முறையில் அனுப்பியவர் பெயர் குறிப்பிடப்படாமல் பில்லி எனும் பெயர் கொண்ட பொம்மை பார்சலில் அனுப்பப்படுகிறது.
ஜிம்மி பொம்மை அனுப்பப்பட்டதற்கும் தனது மனைவியின் இறப்புக்கும் தொடர்பிருக்கலாம் என எண்ணி அனுப்பியவரை தேடுகிறான். பொம்மை வந்த பெட்டியின் கீழத்துணியை கிழித்து பார்க்கும் போது Mary Shaw, Ravens Alley என பலகையில் எழுதப்பட்டுள்ளது.(ரேவன்ஸ் அலேதான் ஹீரோ பிறந்த இடமும்..) எனவே போலீஸின் எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தி விட்டு ரேவன்ஸ் அலேயிலுள்ள அவனது அப்பாவின் வீட்டிற்கு செல்கிறான். அவனது அப்பா சிறுவயதிலேயே அம்மா இறந்தவுடன் அவனை வெளியூருக்கு அனுப்பி வைத்திருந்தார். இதனால் அவனுக்கு தந்தை பேரில் கொஞ்சம்கூட மதிப்பு இல்லை. இவ்வளவு வருட கால இடைவெளியில் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததோ பேசிக்கொண்டதோ இல்லை. அங்கு சென்று பார்க்கும் போது அப்பா எலா என்ற பெயருடைய இன்னொரு பெண்ணை மணமுடித்திருக்கிறார். அரைமனதோடு தந்தையிடம் மேரி ஷா பற்றிக் கேள்விகளைக் கேட்கிறான். தந்தையிடமிருந்து சரியான பதில் ஏதும் கிடைக்காததால் விரக்தியுடன் வீட்டிலிருந்து வெளியேறி அதே ஊரிலுள்ள விடுதி ஒன்றில் தங்குகிறான்.
பின்னர் அவ் ஊரின் பிரேத இடுகாட்டுக்குச் சொந்தக்காரரான ஹென்றி எனும் வயோதிபரைச் சந்திக்கிறான். ஹென்றியின் மனைவி மேரியன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவள். எப்போதும் தனியாக காக்கைகளுடனேயே இருப்பாள்.
பில்லியின் கல்லறைக்குள்ளிருந்துதான் யாரோ அப் பொம்மையை எடுத்து அனுப்பியிருக்க வேண்டும் என யூகித்து அன்றிரவு பொம்மையுடன் காட்டிற்கு சென்று கல்லறையைத் தோண்டிப் பார்க்க பிரேதப் பெட்டி வெற்றிடமாக இருக்கிறது. எனவே பில்லியை அதில் புதைத்து விட்டு ஹோட்டலுக்கு திரும்புகிறான். ஜிம்மியை அவனுக்கே தெரியாமல் லிப்டன் எனும் உளவுத்துறை அதிகாரி பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அவர் அவனது மனைவி கொலை தொடர்பான வழக்கை விசாரிப்பவர்.
மறுநாள் லிப்டன் வைத்திருந்த பொம்மையை, ஜிம்மி அவருடைய ரூமிலிருந்து திருடிக் கொண்டு ஹென்றியிடம் சென்று மேரி ஷா பற்றி அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் மறைக்காமல் கூறும்படி கேட்டுக் கொள்கிறான். அவரும் கூற ஆரம்பிக்கிறார்.
"ஹென்றிக்கு 10 வயது இருந்த சமயம் மேரி ஷா ஒரு திரையரங்கு வைத்து பொழுதுபோக்கு காட்சிகள் செய்து கொண்டிருந்தாள். அவள் குரல் மாற்றிப் பேசும் வித்தையில் சிறந்தவள். அவளது பொம்மைகள் எந்தவித உதவியும் இல்லாமல் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் கேட்கவே கூட்டம் திரளும். அவள் வைத்திருந்த பொம்மைகளைக் காட்டிலும் நேர்த்தியான பொம்மைகளை செய்ய வேண்டும் என்பது அவளது நீண்ட கால ஆசை.
அவள் தனது கடைசி ஆசையாக கேட்டுக் கொண்டது தன்னையும் பொம்மையாக மாற்றவேண்டும் என்பது தான். கொல்லப்பட்ட அவளது பிணம் அப்போதைய பிரேத பரிசோதனையாளரான ஹென்றியின் அப்பாவிடம் பெட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது. ஹென்றி ஒருநாள் அப்பெட்டியை எதேச்சையாக தட்டிவிட உள்ளிருந்த மேரி ஷாவின் பிணம் உயிர்பெற்றெழுகிறது.
மறுநாள் ஜிம்மி மேரி ஷாவின் திரையரங்குக்குச் சென்று அங்கு அவளது ஒப்பனை அறையை பார்வையிடுகிறான். அங்கே இருந்த ஆல்பம் ஒன்றில் மேரி ஷாவால் கொல்லப்பட்டவர்களில் புகைப்படங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று இவனது கொள்ளுத் தாத்தாவின் படம். அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான காரணத்தை அறிய தனது தந்தையின் வீட்டிற்குச் செல்கிறான். அப்பொழுது தந்தை, மேரி ஷா கொல்லப்பட்ட போது அவனது கொள்ளுத்தாத்தா தான் ஊர்த் தலைவர் என்றும், அவரது வம்சத்தில் வந்த ஜிம்மியாவது உயிருடன் இருக்கட்டுமே என்றுதான் இவ்வளவு நாளும் தன்னிடமிருந்து விலகி வெளியூரில் வைத்திருந்ததாகவும் கூறுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது லிப்டன் வந்து மேரி ஷாவின் பொம்மைகள் புதைக்கப்பட்டிருந்த கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த பொம்மைகளைக் காணவில்லை எனவும் கூறுகிறார். கூறி முடிக்க சரியாக வீட்டுக்கு ஒரு போன் கால் வருகிறது. போனில் ஹென்றி ஜிம்மியை திரையரங்குக்கு வருமாறும், தனக்கு முக்கியமன ஆதாரமென்று கிடைத்திருப்தாகவும் தெரிவிக்கிறார். அங்கே...
இனி க்ளைமேக்ஸ்................
முக்கியமான பாத்திரங்கள் ஒவ்வொருவரும் (ஜிம்மி, ஹென்றி, எலா, மேரி ஷா) நடிப்பில் தேறுகிறார்கள். கிளைமேக்ஸ் காட்சிக்கான ஒளிப்பதிவையும் நுணுக்கமாக செய்திருக்கிறார்கள். என்றாலும் தனி பொம்மையாக பில்லி ஏற்படுத்தும் பயத்தை நூற்றுக்கணக்கான பொம்மைகள் சேர்ந்தும் ஏற்படுத்த முடியவில்லை...
எது எப்படியோ castlevania ஐயும் திகிலாக கொடுத்து ரசிகர்கள் இருக்கையை ஈரப்படுத்த இயக்குனர் James Wanக்கு வாழ்த்துக்கள்!!!
நடிப்பு = 14
இசை = 14
கதை + திரைக்கதை = 13
இயக்கம் = 11
கலை + ஒளிப்பதிவு = 10
மொத்தம் = 62% நன்று
கேள்விப் பட்டதில்லைங்க. ஆனா இவரோட இன்னொரு திராபை Death Sentence பார்த்திருக்கேன்.
ReplyDelete//எது எப்படியோ saw 7 ஐயும் திகிலாக கொடுத்து //
Saw சீரிஸில் ஜேம்ஸ் இயக்கிய ஒரே படம் அதன் முதல் பகுதிதான். மீதிப் படத்தில் exe producer மட்டும்தான்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா..
ReplyDeleteநான் இந்த படத்தை பார்த்தேங்க பராவயில்லை நல்லாதான் இருந்துச்சு! எங்கூட பார்த்தவன் தூங்கிட்டான்!
ReplyDeleteதல.. வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்க.
ReplyDeleteஎடுத்தாச்சு..
ReplyDeleteபார்த்து இருக்கிறேன்
ReplyDelete