Saturday, August 28, 2010

Dead silence (2007)

புகழ்பெற்ற SAW படத்தின் இயக்குனர் James Wanடமிருந்து மற்றுமொரு utmost horror படம்

மேரி ஷாங்கிறவ ரொம்ப கொடூரமானவள். அவளுக்கு குழந்தைகளே கிடையாது. பொம்மைகளைத்தான் அவ குழந்தையா வைச்சு பாவிப்பாள். அவளை யாராவது கனவில் பார்த்துக் கத்தினால் பார்த்தவங்களை கொன்று விடுவாள்.

இந்த சின்ன fairy tale மாதிரியான பழங்காலத்து கதையை (படத்தில் மட்டும் தான்.. நிஜத்தில் அப்பிடியொன்னும் கதை கிடையாது) வைச்சுத் தான் முழு படத்தையும் செட் பண்ணியிருக்காங்க. படம் திகில் ரசிகர்களுக்கு நிச்சயம் இன்னொரு விருந்து. மேரி ஷா செய்யும் பொம்மைகள் எல்லாமே கீழ்க்கண்ட படத்திலுள்ள குள்ளர்கள் மாதிரித்தான் இருக்கும்.


கதை அமெரிக்காவில்... ஹீரோ ஜிம்மியும் ஹீரோயினும் சமீபத்தில் தான் திருமணமாகி அபார்ட்மென்ட் ஒன்றில் வீடு எடுத்து தனியாக வாழ்கிறார்கள். திடீரென ஒருநாள் அவர்களுக்கு மர்மமான முறையில் அனுப்பியவர் பெயர் குறிப்பிடப்படாமல் பில்லி எனும் பெயர் கொண்ட பொம்மை பார்சலில் அனுப்பப்படுகிறது. மறுநாள் ஜிம்மி வேலை முடிந்து திரும்பி வரும் போது அவரது மனைவி நாக்கு அறுபட்டு கொல்லப்பட்டிருக்கிறாள். போலீஸ் கணவனே மனைவியைக் கொன்றிருக்கலாம் என சந்தேகித்து அவனை விசாரணை முடியும் வரை ஊரை விட்டுச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கின்றனர்.


ஜிம்மி பொம்மை அனுப்பப்பட்டதற்கும் தனது மனைவியின் இறப்புக்கும் தொடர்பிருக்கலாம் என எண்ணி அனுப்பியவரை தேடுகிறான். பொம்மை வந்த பெட்டியின் கீழத்துணியை கிழித்து பார்க்கும் போது Mary Shaw, Ravens Alley என பலகையில் எழுதப்பட்டுள்ளது.(ரேவன்ஸ் அலேதான் ஹீரோ பிறந்த இடமும்..) எனவே போலீஸின் எச்சரிக்கையையும் அலட்சியப்படுத்தி விட்டு ரேவன்ஸ் அலேயிலுள்ள அவனது அப்பாவின் வீட்டிற்கு செல்கிறான். அவனது அப்பா சிறுவயதிலேயே அம்மா இறந்தவுடன் அவனை வெளியூருக்கு அனுப்பி வைத்திருந்தார். இதனால் அவனுக்கு தந்தை பேரில் கொஞ்சம்கூட மதிப்பு இல்லை. இவ்வளவு வருட கால இடைவெளியில் அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்ததோ பேசிக்கொண்டதோ இல்லை. அங்கு சென்று பார்க்கும் போது அப்பா எலா என்ற பெயருடைய இன்னொரு பெண்ணை மணமுடித்திருக்கிறார். அரைமனதோடு தந்தையிடம் மேரி ஷா பற்றிக் கேள்விகளைக் கேட்கிறான். தந்தையிடமிருந்து சரியான பதில் ஏதும் கிடைக்காததால் விரக்தியுடன் வீட்டிலிருந்து வெளியேறி அதே ஊரிலுள்ள விடுதி ஒன்றில் தங்குகிறான்.

பின்னர் அவ் ஊரின் பிரேத இடுகாட்டுக்குச் சொந்தக்காரரான ஹென்றி எனும் வயோதிபரைச் சந்திக்கிறான். ஹென்றியின் மனைவி மேரியன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவள். எப்போதும் தனியாக காக்கைகளுடனேயே இருப்பாள். மறுநாள் ஜிம்மி மனைவியின் சடங்கு முடிந்து வரும் போது மேரியன் காட்டுக்குள்ளே சுற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவளிடம் வருகிறாள். அவள் சில கல்லறைகளைக் காட்டி இங்குதான் மேரி ஷாவும் அவளுடன் நூறு பொம்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன எனக் கூறுகிறாள். அவற்றில் ஒரு கல்லறையில் பில்லி என எழுதப்பட்டிருக்கின்றது.


பில்லியின் கல்லறைக்குள்ளிருந்துதான் யாரோ அப் பொம்மையை எடுத்து அனுப்பியிருக்க வேண்டும் என யூகித்து அன்றிரவு பொம்மையுடன் காட்டிற்கு சென்று கல்லறையைத் தோண்டிப் பார்க்க பிரேதப் பெட்டி வெற்றிடமாக இருக்கிறது. எனவே பில்லியை அதில் புதைத்து விட்டு ஹோட்டலுக்கு திரும்புகிறான். ஜிம்மியை அவனுக்கே தெரியாமல் லிப்டன் எனும் உளவுத்துறை அதிகாரி பின் தொடர்ந்து வந்திருக்கிறார். அவர் அவனது மனைவி கொலை தொடர்பான வழக்கை விசாரிப்பவர். லிப்டன் புதைத்த பொம்மையை எடுத்துக்கொண்டு ஜிம்மியின் ரூமுக்கு வந்து மரியாதையாக தன்னுடன் நகரத்திற்கு வரும் படி கூறுகிறார். ஜிம்மி அவரிடம் ஒரு வாரம் டைம் தரும் படி கேட்டுக் கொள்கிறான்.

மறுநாள் லிப்டன் வைத்திருந்த பொம்மையை, ஜிம்மி அவருடைய ரூமிலிருந்து திருடிக் கொண்டு ஹென்றியிடம் சென்று மேரி ஷா பற்றி அவருக்கு தெரிந்த எல்லாவற்றையும் மறைக்காமல் கூறும்படி கேட்டுக் கொள்கிறான். அவரும் கூற ஆரம்பிக்கிறார்.

"ஹென்றிக்கு 10 வயது இருந்த சமயம் மேரி ஷா ஒரு திரையரங்கு வைத்து பொழுதுபோக்கு காட்சிகள் செய்து கொண்டிருந்தாள். அவள் குரல் மாற்றிப் பேசும் வித்தையில் சிறந்தவள். அவளது பொம்மைகள் எந்தவித உதவியும் இல்லாமல் அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதைக் கேட்கவே கூட்டம் திரளும். அவள் வைத்திருந்த பொம்மைகளைக் காட்டிலும் நேர்த்தியான பொம்மைகளை செய்ய வேண்டும் என்பது அவளது நீண்ட கால ஆசை. ஒரு நாள் அவளது காட்சியின் போது மைக்கல் எனும் சிறு பையன் மேரி ஷா பொம்மைகள் பேசும் போது வாயசைப்பதாக கத்தினான். தன் மீது கூறப்பட்டது பொய்யென நிரூபிக்க ஒரேநேரத்தில் அவளும் பேசி பொம்மையையும் பேசிக்காட்டினாள். எனினும் அவள் நெஞ்சில் ஆத்திரம் அடங்கவில்லை. அது நடந்து 3வது நாளே மைக்கல் காணாமல் போகிறான். ஊர் மக்கள் அவள் தான் காரணம் என எண்ணி அவளை நாக்கை அறுத்து கொலை செய்கிறார்கள்.


அவள் தனது கடைசி ஆசையாக கேட்டுக் கொண்டது தன்னையும் பொம்மையாக மாற்றவேண்டும் என்பது தான். கொல்லப்பட்ட அவளது பிணம் அப்போதைய பிரேத பரிசோதனையாளரான ஹென்றியின் அப்பாவிடம் பெட்டியில் வைத்து கொடுக்கப்படுகிறது. ஹென்றி ஒருநாள் அப்பெட்டியை எதேச்சையாக தட்டிவிட உள்ளிருந்த மேரி ஷாவின் பிணம் உயிர்பெற்றெழுகிறது. ஹென்றி கத்தாமல் தனது வாயை இறுகப் பொத்திக் கொள்கிறான். (மேரி ஷாவிற்கு ஒருவர் கத்தினால் மட்டுமே அவரை கொலை செய்ய இயலும்) அன்றிலிருந்து தொடர்ச்சியாக மேரி ஷாவின் கொலைக்கு காரணமானவர்களும் அவர்களது வம்சத்தை சேர்ந்தவர்களும் நாக்கு அறுபட்டு கொல்லப்படுகிறார்கள்."

மறுநாள் ஜிம்மி மேரி ஷாவின் திரையரங்குக்குச் சென்று அங்கு அவளது ஒப்பனை அறையை பார்வையிடுகிறான். அங்கே இருந்த ஆல்பம் ஒன்றில் மேரி ஷாவால் கொல்லப்பட்டவர்களில் புகைப்படங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று இவனது கொள்ளுத் தாத்தாவின் படம். அவர் ஏன் கொல்லப்பட்டார் என்பதற்கான காரணத்தை அறிய தனது தந்தையின் வீட்டிற்குச் செல்கிறான். அப்பொழுது தந்தை, மேரி ஷா கொல்லப்பட்ட போது அவனது கொள்ளுத்தாத்தா தான் ஊர்த் தலைவர் என்றும், அவரது வம்சத்தில் வந்த ஜிம்மியாவது உயிருடன் இருக்கட்டுமே என்றுதான் இவ்வளவு நாளும் தன்னிடமிருந்து விலகி வெளியூரில் வைத்திருந்ததாகவும் கூறுகிறார். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது லிப்டன் வந்து மேரி ஷாவின் பொம்மைகள் புதைக்கப்பட்டிருந்த கல்லறைகள் தோண்டப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த பொம்மைகளைக் காணவில்லை எனவும் கூறுகிறார். கூறி முடிக்க சரியாக வீட்டுக்கு ஒரு போன் கால் வருகிறது. போனில் ஹென்றி ஜிம்மியை திரையரங்குக்கு வருமாறும், தனக்கு முக்கியமன ஆதாரமென்று கிடைத்திருப்தாகவும் தெரிவிக்கிறார். அங்கே...

இனி க்ளைமேக்ஸ்................

படத்தின் ஹீரோவை பயம் அற்றவனாக சித்தரி்க்க இயக்குனர் எண்ணியிருந்தார் போலும், ஹீரோவாக நடித்திருக்கும் Ryan Kwanten முகத்தில் துணிச்சல் மிளிர்கிறது. படத்தின் கருவுக்கும், திகில் காட்சிகளுக்கும் பின்னணி இசை கைகொடுக்கிறது. ஆரம்பத்தில் அபார்ட்மென்டில் ஹீரோயின்னை கொலை செய்யும் காட்சிகளும், மேரி ஷா திரையரங்கில் பேசும் காட்சிகளும் மீண்டும் மீண்டும் பார்க்கத் துண்டும் காட்சிகள்.
முக்கியமான பாத்திரங்கள் ஒவ்வொருவரும் (ஜிம்மி, ஹென்றி, எலா, மேரி ஷா) நடிப்பில் தேறுகிறார்கள். கிளைமேக்ஸ் காட்சிக்கான ஒளிப்பதிவையும் நுணுக்கமாக செய்திருக்கிறார்கள். என்றாலும் தனி பொம்மையாக பில்லி ஏற்படுத்தும் பயத்தை நூற்றுக்கணக்கான பொம்மைகள் சேர்ந்தும் ஏற்படுத்த முடியவில்லை...

படத்தைப்பற்றி ஒரு சிறிய தகவல். 20 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு கிடைத்தது 22 மில்லியன் வருமானம். வெறும் 2 மில்லியன் மட்டுமே இலாபம்.. படம் வெளியிடப்பட்ட 16வது நாளிலேயே பல திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதாம்.
எது எப்படியோ castlevania ஐயும் திகிலாக கொடுத்து ரசிகர்கள் இருக்கையை ஈரப்படுத்த இயக்குனர் James Wanக்கு வாழ்த்துக்கள்!!!






நடிப்பு = 14
இசை = 14
கதை + திரைக்கதை = 13
இயக்கம் = 11
கலை + ஒளிப்பதிவு = 10

மொத்தம் = 62% நன்று

6 comments:

  1. கேள்விப் பட்டதில்லைங்க. ஆனா இவரோட இன்னொரு திராபை Death Sentence பார்த்திருக்கேன்.

    //எது எப்படியோ saw 7 ஐயும் திகிலாக கொடுத்து //

    Saw சீரிஸில் ஜேம்ஸ் இயக்கிய ஒரே படம் அதன் முதல் பகுதிதான். மீதிப் படத்தில் exe producer மட்டும்தான்.

    ReplyDelete
  2. சுட்டிக் காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா..

    ReplyDelete
  3. நான் இந்த படத்தை பார்த்தேங்க பராவயில்லை நல்லாதான் இருந்துச்சு! எங்கூட பார்த்தவன் தூங்கிட்டான்!

    ReplyDelete
  4. தல.. வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்து விடுங்க.

    ReplyDelete
  5. எடுத்தாச்சு..

    ReplyDelete
  6. பார்த்து இருக்கிறேன்

    ReplyDelete

Related Posts with Thumbnails