
இது எனது 2வது ப்ளாக். சினிமா பற்றி நான் எழுதும் முதலாவது!!! பொதுவாக ஆங்கில/ஹிந்திப்படங்களே இதில் இடம்பெறும். (தமிழ்ப்படங்கள் பற்றி எழுதத் தான் எக்கச்சக்கமான ப்ளாக்கர்ஸ் இருக்கிறார்களே..) படம் வெளிவந்தவுடன் உடனுக்குடன் விமர்சனம் வரும் என இப்போது என்னால் உறுதியாக சொல்ல இயலாது. (2,3 மாதங்கள் கூட ஆகலாம்.). இவை பட விமர்சனங்கள் என்பதை விட "நான் பார்த்த படங்கள்-என் பார்வையில்" எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.
படங்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள ரேட்டிங்ஸ் இதோ! (40க்கு குறையக்கூடிய படங்களை எல்லாம் நான் படங்களாகவே கருதுவதில்லை.. ஹி..ஹி....)
தயவு செய்து விமர்சனங்களை வாசிப்பவர்கள் என் விமர்சனம் பற்றிய கருத்துக்களை எழுதிச் செல்லவும். அதுவும் ஒரு வகையில் நீங்கள் எனக்களிக்கும் ஊக்கமாக இருக்கும்.
40-50 பார்க்கலாம்
50-60 பரவாயில்லை
60-70 நன்று
70-80 மிக நன்று
80-90 சூப்பர்
90-100 அசத்தல்
im waiting for future posts... all the best
ReplyDelete