இன்செப்ஷன்..... இந்த படத்துக்கும் தமிழ் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் ஒண்ணுதான்... தமிழ் படங்கள்ல நடிகர்கள் நாங்க பார்க்கனுமேங்கறதுக்க முழிச்சுகிட்டு நடிப்பாங்க.. பார்க்கற நான் தூங்கிடுவேன். ஆனா இதுல நடிகர்கள்லாம் தூங்கறாங்க.. என்னாலதான் கண்ணை சிமிட்டக் கூட முடியல...
அவ்வளவு பரபரப்பு.. அவ்வளவு விறுவிறுப்பு... படம் முடிஞ்சு போகறப்போ நாம இருக்கது ரியல் உலகத்துலயா? இல்ல கனவுலகத்திலயான்னு நமக்கே சந்தேகம் வந்துரும்.. அது தான் கிறிஸ்டோபர் நோலனின் final touch!
இன்செப்ஷன் கதை பற்றி விளாவரியா பதிவு போட எனக்கு நேரம் இல்லை.. ஏன்னா வாசிக்க முதல்ல எல்லாருக்கும் கதையோட பின்னணி தெரிஞ்சுருக்கனும்.. அதனால படத்தோட முக்கியமான காரணிகளைப் பற்றி தொடர் எழுதலாம் என இருக்கிறேன். இதற்காக படத்தை இரண்டு முறை பார்த்ததுடன் பல ஆங்கில இணையத் தளங்களிலிருந்தும் தகவல்களைத் திரட்டி இருக்கிறேன்.
கதை கண்டிப்பா தேவையாருந்தா இங்க போய் பாருங்க... படத்தை பத்தின ட்ரெயிலர் வேணும்னா இங்க போய்ப் பாருங்க... நான் இதுல எழுதுவது படத்தில் சந்தேகம் இருக்கிறவர்களுக்கும் படமே புரியாதவர்களுக்கும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்.
ஸோ படத்தோட முக்கியமான காட்சிகள் எல்லாமே கனவுகளாத்தான் வருது!! இதுக்காக காப் கனவுலகம் பத்தி ஆராய்ச்சி பண்ணினாரோ, இல்லையோ இயக்குனர் நோலன் ஆராய்ச்சி பண்ணி சில தியரிகளை உருவாக்கியிருக்கார்.
ஒரு கனவுக்குள் இருந்து கொண்டே இன்னொரு கனவுக்கு செல்லும் போது எமது மனது+மூளை இன்னும் ஆழமான கனவு நிலைக்குச் செல்கிறது, கனவுக்கும் நிகர்த்தன்மை(reality) அதிகரிக்கிறது. அதாவது ஆழமான கனவு நிலையில் உள்ள ஒருவரை எழுப்புவது கடினம். சாதாரணமாக நாம் கனவில் விழுவது போன்று தோன்றினால், திடுக்கிட்டு எழுகிறோமல்லவா அதுகூட இங்கே முடியாது.
ஆனா லிம்போ யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. மிக அதிக ஆழமாக கனவு காணும் எல்லோரும் அங்கே இழுத்துச் செல்லப்படுவார்கள். ஆனால் ஒன்று. லிம்போ மற்ற எல்லாவற்றையும் விட நிகர்த்தன்மை கூடியது. அங்கு வந்துட்டம்னா எங்களுக்கு நிஜ உலகம்னு ஒண்ணு இருக்கதாக் கூட உணர முடியாது. அங்கு இருப்பவர்களைப் பொருத்த வரைக்கும் லிம்போதான் உலகமே... லிம்போ நிலையில் இருக்கும் ஒருவரை எழுப்புவதும் சுலபமல்ல. அதனால்தான் காப்பும் மாலும் அங்கேயே பல வருடங்களைக் கழித்தனர்.
ஆழமான கனவு ஒன்னுல இருந்துகிட்டு இறந்தாலும் லிம்போவுக்குத் தான் போவாங்க. ஆனால் லிம்போவுல செத்தா நிஜ உலகத்துக்கு திரும்பிடலாம்.
கனவுலகத்தில நேரமும் மிக முக்கியமானது. நிஜ உலகத்துல 5 நிமிஷம்னா, கனவுலகத்துல அது ஒரு மணிநேரம். அதுக்கு காரணம் நாம கனவுல இருக்கும் போது எமது மூளை மிக வேகமாக சிந்திக்கும். (இதனால்தான் விஞ்ஞானிகளே ஆழமாக தூங்கினால் படித்த பாடங்கள் எல்லாம் இலகுவில் நினைவில் இருக்கும்னு ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்திருக்கிறர்கள் போலும்). நாம ஆழமாக கனவுக்குள் கனவு மாதிரியான ரேஞ்சுக்கு போகும் போது மூளை சிந்திக்கும் வேகம் இன்னும் அதிகமாகும்.
கனவில் காட்சிகள் எல்லாம் மிக வேகமாக உருவாக்கப்படும். லிம்போ நிலையில் 5 நிமிடம் பல தசாப்தங்கள் வரை செல்லும்.
சாதாரணமாக நாம் தூங்கும் போது கனவு கண்டு, எழும்பும் போது கனவு சில வேளைகளில் ஞாபகமிருக்கும். ஆனால் கனவு நடந்த இடத்திற்கு நாம் எங்கிருந்து வந்தோம் என்பது கடைசி வரை ஞாபகத்திற்கு வராது. இதற்கு காரணம் கனவு எப்போதுமே பாதியிலிருந்து தொடங்கும்.
படத்தில் தான் வாழ்வது நிஜ உலகத்திலா அல்லது கனவுலகத்திலா என கண்டுபிடிக்க ஹீரோ காப் ஒரு பம்பரம்(tottem) வைத்திருப்பார். அது சீரான வேகத்தில் சுற்றிக்கொண்டே இருந்தால் அது கனவு. சுற்றுவதை நிறுத்திவிட்டால் அது நிஜம். பொதுவாக இதை வைத்துக் கொண்டு தான் அவர் தீர்மானம் எடுப்பார்.
கிக்
ஆனா கிக்கு வைக்க முதல்ல அலாரம் மாதிரி ஒரு french பாட்டு போட்டுவிட்டுடுவாங்க. கிக் வாங்கப்போறவங்க பாட்டு கேட்டவுடனேயே டக்குனு அவங்களோட மீதிமிருக்க வேலையெல்லாம் முடிச்சுகிட்டு நிஜ உலகத்துக்கு வர தயாராகிடனும்.
என் ரேட்டிங்ஸ்-ஐ தொடர் முடியும் போது சொல்கிறேன்...
நன்றாக உள்ளது!
ReplyDeleteதமிழ் படங்கள்ல நடிகர்கள் நாங்க பார்க்கனுமேங்கறதுக்க முழிச்சுகிட்டு நடிப்பாங்க.. பார்க்கற நான் தூங்கிடுவேன். ஆனா இதுல நடிகர்கள்லாம் தூங்கறாங்க
ReplyDeleteஅடேங்கப்பா.........
பாலா கோஷ்டியெல்லாம் பால் மணம் மாறாத பச்சப்புள்ளய்ங்க தானோ?
ரொம்ப ரசிச்சு எழுதி இருக்கீங்க.. நல்லா இருக்குங்க..
ReplyDelete@ எஸ்.கே- கருத்துக்களுக்கு நன்றி
ReplyDelete@ பாண்டியன்- நன்றி, அடிக்கடி விசிட் பண்ணுங்க
@ ஜோதிஜி- உண்மையைச் சொன்னாலும் நாட்டுல ஒத்துக்க மாட்டேங்கறாங்களே....
மெக் இணைப்பில் வந்தேன் அருமை
ReplyDelete