ரொம்ப சின்ன பதிவுதான் ஆனால் படம் பார்த்தவர்களுக்கு இந்த பதிவில் உள்ள காரணியின் முக்கியத்துவம் தெரியும்.
இத்தொடரில் இன்செப்ஸனில் உபயோகிக்கப்பட்ட புதுமையான பொருட்கள் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சிறிது அலசுவோம்
இன்செப்ஷனில் ஏகப்பட்ட புதுமையான பொருட்கள் வருகின்றன. இருந்தாலும் அவற்றில் கதைக்கு மிக முக்கியமானவை டாட்டம்கள்(tottem). டாட்டம் எனப்படுவது நாம் இருப்பது கனவுலகத்திலா, நிஜ உலகத்திலா என அறிந்து கொள்ள எமக்கு உதவும் சிறு பொருளாகும். படத்தில் மொத்தம் 4 பேர் டாட்டம்கள் வைத்திருக்கினறனர்(மால் நீங்கலாக). ஒவ்வொருத்தரின் டாட்டமும் வித்தியாசமானது. அவரவர் டாட்டமை அவர்கள் மட்டுமே உபயோகப்படுத்துவர்.
1. பம்பரம்

ஹீரோ காப் உபயோகப்படுத்தும் டாட்டம் இதுதான். அவரது மனைவியான மாலினால் தான் இது டிசைன் பண்ணப்பட்டது. பம்பரத்தை சுற்றி விடும் போது அது சுற்றிக் கொண்டே இருந்தால் அது கனவுலகம். சிறிது நேரத்தில் அது கீழே விழுந்தால் அது நிஜ உலகம் என தெரிந்து கொள்வார்கள்.
2. தாயக்கட்டை

ஆர்த்தரால் உபயோகப்படுத்தப்படும் டாட்டம் தான் இந்த தாயக்கட்டை(loaded dice). இதை உருட்டிவிடும் போது ஆர்த்தர் மனதில் ஒரு எண்ணை நினைத்துக் கொள்வார். கனவுலகமாயிருந்தால் இவர் நினக்கும் எண்ணைத் தவிர எல்லாம் தாயக்கட்டையில் வரும். நிஜ உலகமாக இருந்தால் நினைத்த எண் வர வாய்ப்புண்டு.
3. பிஷப்

சதுரங்கத்தில் உபயேகப்படுத்தும் பிஷப் எனும் காயைத்தான் அட்ரியானியும் தனக்கென உருவாக்கிக் கொள்வாள். அதன் நிறையில் ஏற்படும் வித்தியாசத்தைக் கொண்டு அது கனவுலகமா? இல்லை நிஜ உலகமா? என்பதை அவளே யூகித்துக் கொள்வாள்.
4. போக்கர் சிப்ஸ்

இது ஏமஸின் டாட்டம். கனவுலமாக இருந்தால் இரண்டு சிப்ஸையும் உரசிக் கொண்டால் போலி சிப்ஸ்கள் உருவாகும். இதன் பயன் நேரடியாக எமக்குத் தெரியாது. ஆனால் ஆர்த்தருக்கும் காப்புக்குமான உரையாடலைக் கொண்டு இதன் பயனை யூகிக்க வேண்டியுள்ளது.
மீண்டும் அடுத்த எபிசோட் வரும்ரை காத்திருங்கள் அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது உங்கள் JZ...
கலக்குங்க. நான் உ.த அண்ணன் பதிவு மூடில் இருக்கேன். ஸோ நோ கும்மி எனிவேர்.
ReplyDeleteஇப்பவாவது வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்தீங்களா தல?
ரைட்டு... எடுத்திட்டீங்க! :)
ReplyDeletesuper thala
ReplyDeleteappadiye memntovukkum pathivu podunga boss
ReplyDeleteநல்லாயிருக்கு, இந்த படம் ரொம்ப பேரை பாதிச்சிருக்கு போல!
ReplyDeleteபார்ட் 3 எங்க வந்துட்டு காணாம போச்சு?
ReplyDeleteவெயிட் பண்றேன் யுவர் ஆனர்...
ஹையா... ரீடர்ல இருக்குதே... படிச்சுட்டு வர்றேன்...
ReplyDeleteஉலக வரலாற்றில் முதல்முறையாக, அடுத்த போஸ்ட்-க்கான கமெண்ட்டை போஸ்ட் வர்றதுக்கு முன்னயே போடுறவன் இந்த ஜெய்தான்...
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட் ஆஃப் த ஃபர்ஸ்ட்..
ஜெய் அவர்களை தொடர்ந்து நானும் அந்த போஸ்டை ரீடரில் படித்து கமெண்ட் போடுகிறேன்.
ReplyDeleteJZ அவர்களே ரொம்ப விளக்கமா எழுதியிருக்கீங்க வாழ்த்துக்கள்!
நிறைய பேர் இன்சப்னை பற்றி ஆராய்ச்சி பண்ணி எழுதுகிறார்கள். எல்லா பிளாக்கர்களுக்கு உள்ளேயும் ஒரு விஞ்ஞானி இருக்கிறார்.
@ஜெய்- சாதனை அண்ணன் லிஸ்ட்ல இன்னும் ஒரு சாதனையா?
ReplyDelete@எஸ்.கே- இன்செப்ஷன் மாதிரியான அருமையான படம் பற்றி ஆர்வமா இருக்க விஞ்ஞானியா இருக்க தேவையில்லை. ரசிகனாக இருந்தாலே போதும். இல்லையா?
உண்மைதான். ஆனால் ஒரு திரைப்படத்தை இந்த அளவிற்கு ஆய்வு செய்வது ஆச்சரியமூட்டுகிறது!
ReplyDeletetop is not cop's totum
ReplyDeleteபம்பரம் காப்பினால் உருவாக்கப்படவில்லை..
Deleteஅது மாலின் டாட்டம் தான்.. ஆனால் மால் இறந்த பின்புதான் காப் அதனை தனக்காக உபயோகப் படுத்துகிறான்.. அதனால் (மற்றும் படத்திலேயே காட்டப்படுவதால்) அது காப்பின் டாட்டமாக கொள்ளப்படுகிறது!