Friday, December 7, 2012

Breaking Dawn - Part 2 (2012)


இதே என் ஃபிரெண்டு யார்கிட்டயாவது போய், "மச்சான், நான் நேத்து பிரேக்கிங் டான் பார்ட்-2 பார்த்தேன்டா!"னு சொன்னா 'இப்பவாடா போய் பார்க்குற?'னு எகத்தாளமா ஒரு பார்வை பார்ப்பான். ஆனா உங்க எல்லார்கிட்டயும் இந்த நியூஸ் சொல்லும்போது ஒரு element of surprise-ஐ எதிர்பார்க்கலாம். ஏன்னா நீங்க பதிவுலகத்தில் இருக்கீங்க.. ஒரு படம் பத்தி நிறைய பேரோட கருத்துக்களை வாசிச்சிருப்பீங்க.. இதெல்லாம் 'பார்த்தேயாகக் கூடாத படங்கள்' லிஸ்ட்ல வரும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்.. நானும் அதே பதிவுலகத்தின் ஒரு மூலையில தானே குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன்.. எனக்கு எங்க போச்சு புத்தி??

சத்தியமா சொல்றேன்.. இதுவரைக்கும் ஒரு படம் "மொக்கையாத்தான் இருக்கும்"னு தெரிஞ்சே தியேட்டர் போய்ப் பார்த்ததில்லை.. மரண அடி வாங்கிய Transformers 2 உட்பட எல்லாப் படங்களிலும், இதுல ஏதாவது பெட்டரா இருக்கலாமேனு நம்பித்தான் போய்ப் பார்த்திருக்கேன்! ஆனா இந்தப் படம் ரிலீசாக முன்னமே ரிசல்ட்டு என்னன்னு தெரிஞ்சிருந்தது!
திரும்பவும் ஒரு புது இயக்குனர்.. அதே கிறிஸ்டன் ஸ்டுவர்ட்.. அதே செத்துப் போன எக்ஸ்பிரஷன்.. வாட் ஒஃப் த சிட் ஒஃப் த?.... விடுங்க, 'நாமெல்லாம் Breaking Dawn- part 1ஏ பார்த்துட்டோம். அத விட கொடூரமாவா ஒரு படம் இருந்திரப் போவுது?'ன்னு இனம்புரியாத ஒரு நம்பிக்கை!

அதையும் விட கடமைன்னு ஒண்ணு இருக்கில்லியா?.. ஹாரி பாட்டர் எனக்கு மிகவும் புடிச்ச, மனதுக்கு நெருக்கமான நாவல் தொடர்.. படங்களும் ரொம்ப புடிக்கும். ஆனாலும் அதை தியேட்டரில் கண்டுகளிக்கலையேன்னு ஒரு ஏக்கம் ரொம்ப நாளா இருந்திச்சு.. அதுனாலேயே கடைசிப் பாகம் ரிலீசுக்கு காத்திருந்து தியேட்டர் போய் end titles முடியும் வரை பார்த்துட்டு வந்தேன். ஏதோ ரொம்ப நாள் பழகின நண்பனுக்கு பிரியாவிடை கொடுத்துட்டு வந்த மாதிரி இருந்திச்சு!! அவ்வளவு சந்தோஷம்!
ட்வைலைட் சீரீஸ்லயும் எல்லா புத்தகத்தையும் வாசிச்சிருக்கேன்.. புடிச்சிருந்திச்சு! முதல் பாகத்தை தவிர மீதி மூணையும் நாவலை வாசிச்சிட்டுத் தான் படத்தை பார்த்திருக்கேன்.. அது ஒரு பெரிய கடுப்பான அனுபவம். கதையிலிருந்து நாம என்ன எதிர்பார்த்தோமோ அதெல்லாம் படத்துல தவிடு பொடியாகியிருக்கும்!!

பலரும் நினைக்குறது மாதிரி ட்வைலைட் படங்கள் சரியில்லாததுக்கு காரணம் கதை சரியில்லாததுதான்னு இல்லை. கதை படத்தை விட நாவலில் படு ஸ்லோவா மூவாகும்! காரணம் டீனேஜ் பெண்ணின் காதலையும், மனநிலையையும் மையப்படுத்திய ஒரு கதையென்பதான் உணர்ச்சிகளின் விபரிப்பு அதிகம்.. என்னைக் கேட்டால் அதை உணர்ந்து படமாக்கும் அனுபவமோ, திறமையோ கொண்ட இயக்குனர்களிடம் வழங்கப்படவில்லைனு தான் சொல்லுவேன்! (முதல் பாகம்-twilight இயக்கியது ஒரு பெண்ணென்பதால் அவரது பிரசன்டேஷனில் படம் மற்றைய நான்கையும் விட பரவால்லையாக வந்திருந்தது.) ஏன் ஒரே இயக்குனரிடமே அடுத்தடுத்த கதை வழங்கப்படவில்லை!! இப்படியிருக்க எப்படி ஒரு நல்ல சீரீஸை எதிர்பார்க்க முடியும்?
சரி, பழசையெல்லாம் மறந்துட்டு இந்த சீரீஸுக்கும் கடைமைக்கேன்னு ஒரு பிரியாவிடை போட்டுட்டு வந்துருவோம்னு தான் போனேன்!

கதையின் லைனை இப்பவே சொல்லி வைச்சிடுறேன்.. காட்டேரிகளின் உலகத்துல காட்டேரிக் குழந்தைகளை (immortal children) உருவாக்கக்கூடாதுங்கறது ஒரு விதி. மீறினால் கொன்றே விடுவார்கள்..
எட்டுப்பட்டி கள்ளனுக்கும், இசபெல்லா சுவானுக்கும் இனப்பெருக்கமுறையால் பிறந்த குழந்தையை காட்டேரி என ஒருத்தி நம்பி அதை காட்டேரித் தலைவர்களிடம் (வோல்டுரி) போட்டுக்கொடுக்க வெடிக்கிறது பிரச்சனை.. கள்ளன் குடும்பத்தினரால் குழந்தையை காக்க முடிந்ததா என்பதே கதை!

வழக்கத்துக்கு மாறாக ஓப்பனிங் சீனுக்கு பனிமலைக் காட்சிகளுடன் வெள்ளை-சிவப்பு எஃபெக்டில் டைட்டில் கார்டெல்லாம் போட்டு ஏதோ பேய்ப்படம் போல பில்டப் கொடுக்கிறார்கள். பெலா காட்டேரியாகிக் கண்ணைத் திறக்கும் தருணத்தில் தொடங்கி, முதல் வேட்டை, குழந்தை, பிரச்சனை, விருந்தினர்கள், போர்க்கால பயிற்சிகள்னு வேகவேகமாக கொண்டு போய் mega battle மட்டுமே மீதியிருக்க ஒருமணி நேரத்தில் இன்டர்வெல் வைக்கிறார்கள்!
முதல் பாதி... தாங்கலை! ஏன்டா இந்தப் படத்துக்கு வந்தோம்ங்கற மாதிரி ஆயிடுச்சு!
நடிப்பை பத்தி எதுவும் சொல்லத் தேவையில்லை.. ஆக்சுவலி நடிப்பே இருக்கான்னு தெரியலை!! பல்லோடு இரு உதடுகளையும் அழுத்திக்கிட்டு, கழுத்தை இறுக்கி கத்துறதுக்கு பேருதான் 'கோபம்'னு நமது நடிப்பு நாயகியிடம் டைரக்டர் சொல்லி வைத்திருப்பார் போல.. கற்பூரம் மாதிரி 'கப்'புனு பத்தியிருக்கிறார்! ஏனையவர்களோடு ஒப்பிடும் போது பெலாவின் தந்தை 'சார்ளி' மட்டும் நடிகனாய் கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார்.

2ம், 3ம் பாகத்திலெல்லாம் டெரராக காட்டப்பட்ட ஜேக்கப், எம்மட், ஏரோ எல்லாரையும் காமெடிப்பீஸுகளாக காட்டிவிட்டு, பெலாவை மட்டும் டெரர் பீஸாக காட்ட முயற்சி செய்து பரிதாபகரமாகத் தோற்றிருக்கிறார் இயக்குனர்! படம் நல்லா வரலைன்னு தெரிஞ்சு கொண்டதாலோ என்னவோ நிறைய பாடல்களைப் போட்டு அதைப் பூசி மெழுகப் பார்த்திருக்கிறார்! பிற்பாதியில் அடுத்தடுத்து வரும் சின்னத் திருப்பங்கள், எல்லாம் முடியவிட்டு எட்வர்ட்-பெலா காதல் பிளாஷ்பேக்குகளின் தொகுப்பாக வரும் அசத்தலான எடிட்டிங் சீக்வென்ஸ் எல்லாத்தையும் பார்த்து முடிக்கும் போது மனசு நிரம்பினா மாதிரி ஒரு ஃபீலிங். 'ட்வைலைட் படங்களிலேயே பெஸ்டு இதாண்டா!'னு மைண்டுலேயே சின்ன அப்ளாஸ்!
வெளியே வந்து சூரிய வெளிச்சத்தில் தியேட்டர் போதை இறங்கவும்தான் உறைக்கிறது, "That's like saying a simple head cold is preferable to swine flu." -Peter Travers. தேவுடா!

படத்தைப் பத்தி என்னதான் எல்லாரும் குறைகூறினாலும், வழக்கம்போல தன் போக்கில் சிலபல சாதனைகளை தகர்த்துவிட்டுத்தான் போயிருக்கிறது. ஸ்கைஃபால், லைஃப் ஒஃப் பை எல்லாவற்றையும் சர்வசாதாரணமாகப் பின்தள்ளிவிட்டு பாக்ஸ் ஆஃபீஸை கடித்துக் குதறிக்கொண்டிருக்கிறது படம்! இந்த வருஷத்தின் மெகா overseas ஓப்பனிங்காக 200 மில்லியன்களுடன் தன்னைப் பதிந்து கொண்டிருக்கிறது! Hobbit வந்தா போட்டி போடலாம்!
அதைவிட காமடியான ரெக்கார்ட் என்னவென்றால் இந்தப் படத்துக்குத்தான் ட்வைலைட் சீரீஸிலேயே average male theatre occupancy கூடவாம்! அதுவும் 21% !!!! இந்தப் பொண்ணுங்க கூட்டமெல்லாம் midnight in paris மாதிரி ஒரு ஒழுங்கான ரொமான்ஸ் படத்துக்கு போயிருந்தா அதுக்கு வசூல் அரை பில்லியனையாவது தாண்டியிருக்கும்.. யாரு கண்டா?, மாயன்கள் வாக்கிலும் உண்மை இருக்கலாம்!

'தயவுசெய்து தியேட்டர் பக்கம் தலைவைச்சுக்கூட படுத்துராதீங்க.. கடைசி 20 நிமிட சீன்களை வேணும்னா நல்ல டி.வி.டியாப் பார்த்து பார்த்துக்கோங்க..'
அடடே இப்படியெல்லாம் சொல்லி பைரசியை வளர்க்கக்கூடாதே! 'தியேட்டரிலேயே பார்த்துக்கோங்க. குடும்பத்துடன் வேணாம். தலைவிதியை நொந்துகொள்ள இந்தப் பக்கம் வரவேண்டாம்!'

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 06
இசை = 11
கதை+திரைக்கதை = 09
கலை+ஒளிப்பதிவு =12
இயக்கம் = 07

மொத்தம் = 45% பார்க்கலாம்!

The Twilight Saga: Breaking Dawn - Part 2 (2012) on IMDb

8 comments:

  1. இந்த படத்தை டவுன்லோட் பண்ணி கூட பாக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் இப்ப

    ReplyDelete
    Replies
    1. புத்திசாலிப் பய.. தப்பிச்சுக்கோங்கோ!

      Delete
  2. கிணத்து தவளைகளின் ஹாலிவுட் மொக்கைகள்

    http://multistarwilu.blogspot.in/2012/10/blog-post_31.html

    ReplyDelete
  3. நண்பர் என்னை மன்னிக்கனும்..கடந்த சில நாளாகவே அடியேன் வேறொரு வேலையில் இருந்ததால் பிளாக் பக்கம் வர முடியவில்லை.
    இப்போதுதான் இந்த விமர்சனம் படிச்சேன்.இன்னும் உங்க எழுத்துல இருக்குற சுவாரஸ்யம் கொஞ்சமும் போகல..இந்த படம் பார்ப்பேனானு தெரிலங்கோ..(நான் எல்லாத்துலயும் லேட்டு)..45 மார்க் கொடுத்து இருக்கீங்க வேற..அப்புறம் ஒன்னு..

    @@ நானும் அதே பதிவுலகத்தின் ஒரு மூலையில தானே குப்பை கொட்டிக்கிட்டிருக்கேன்..@@
    பதிவுலகில் ரொம்பனும் சிறப்பான இடத்தில் இருப்பவராயிற்றே நீங்க..இப்படி சொல்லலாமா ?

    பதிவுக்கு ரொம்ப நன்றி நண்பரே..தொடர்ந்து எழுதுங்க..குட்டிக்குட்டி விமர்சனம் என்றாலும் பரவால..என்ன மாதிரி அப்பப்ப லீவு போடாம எழுதுங்க.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாட் ஈஸ் தீஸ்! பார்க்க வேணாங்கறதுக்காகத்தான் 45 மார்க் போட்டுருக்கேன்.. (நீங்க தீவிர ட்வைலைட் ரசிகராய் இருக்காத பட்சத்தில்)
      //பதிவுலகில் ரொம்பனும் சிறப்பான இடத்தில் இருப்பவராயிற்றே நீங்க..// சரி. உலகம் அழிஞ்சிடும்!

      நம்மளுக்கும் லீவுக்கும் தான் திக் ப்ரெண்ட்ஷிப் ஆச்சே! பதிவு போடக்கூடாதுன்னு இல்லை. அந்தளவுக்கு ஈர்க்கும் படங்களை பார்க்கலை.. அதவிடுங்க, உங்க அடுத்த பதிவு எங்க??

      Delete
    2. பதிவெல்லாம் அப்புறம் வரும் பாஸ்..

      Delete
  4. பாஸ், உலகமே இந்த படத்தை மொக்கை என்று தான் சொல்லுது...ஆனா படத்தோட வசூல் மட்டும் குறையவே மாட்டேங்குது. வெள்ளைக்காரன் ரசனையே ரசனை..

    ReplyDelete
    Replies
    1. வேற வழி.. Twilight புக்ஸை படிச்சா அதை விஷுவலாப் பார்க்குறதுக்கு போய்த்தானே ஆகனும்.. அது எவ்வளவு மொக்கையான படமாருந்தாலும்!
      எப்படியோ சனியன் இதோட முடிஞ்சுது! ஆனா எவ்வளவு வாங்கினாலும் திருந்தாம, இன்னொரு பார்ட் வராதான்னு காத்துக்கிட்டேயிருப்பாங்க... குனியக் குனியக் குட்டின கதையா அவனுங்களும் பணத்தை கறந்துக்கிட்டேதான் இருப்பாங்க :)

      Delete

Related Posts with Thumbnails