Federal Bureau of Investigation (சுருக்கமா FBI).... குற்றம் நடந்த இடத்துக்கு ஒரு மணித்தியாலம் தாமதமா வந்து, குற்றவாளியை தப்பிக்கவிட்டு "அம்போ"ன்னு பார்த்துக்கிட்டிருந்த ட்ரென்டை மாத்தி, குற்றவாளியோட அடுத்த நகர்வு என்னான்னு முன்னமே கண்டுபிடிச்சு, "டான்"னு அங்க போயி நின்னு துப்பாக்கியை அவன் முகத்துக்கு நேரா நீட்டுற ட்ரென்டை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. கைவிரல் ரேகை எடுக்குறதுலயிருந்து, டெலிபோன் காலை"டேப்" பண்னுறது, ஒருத்தன் எந்தெந்த கெட்டப்புகள்லயெல்லாம் உலாவலாம்னு போட்டோ எடுத்து காட்டுறது வரைக்கும் எல்லாமே இந்த FBI தந்த டெக்னீக்குகள்தான்..
இதை வச்சுக்கிட்டுத்தான் ஏராளமான க்ரைம்-திரில்லர் நாவல்களும், படங்களும் வெளியாகின என்பதைக்கொண்டே இதன் உலகளாவிய தாக்கத்தை அளவிட்டுக்கொள்ளலாம்.. (இப்படியொரு முயற்சி வந்திருக்காவிட்டால் கேப்டனுக்கு பாதிப் படங்கள் குறைந்திருக்கும்! ஹும்..)
இதை ஆரம்பித்த பெருமை J. Edgar Hoover அப்படீங்கற சட்டத்தரணியையே சாரும்.. அவரோட வாழ்க்கை வரலாறுதான் போனவருடம் டிகாப்ரியோ நடிப்பில் "J.Edgar" எனும் படமாக வெளிவந்தது..
பிரையன் பர்ரோ என்பவர் எழுதிய Public Enemies: America's Greatest Crime Wave and the Birth of the FBI எனும் வரலாற்று நாவலின் தழுவலாகத்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.. 1930களில் அமெரிக்காவையே பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்த குற்றச் சக்கரவர்த்திகளையும், FBI உருவானதன் பின்னணியையும், அவர்களது முதலாவது "குற்றத்திற்கெதிரான போரை"யும் (War on Crime) மையப்படுத்தியுள்ளதால் இது ஆக்ஷன் படமா? இல்லை வரலாற்று படமா?ங்கிற குழப்பத்திலேயே படம் நகர்கிறது!
உலகத்தோட ஆல்-டைம் பெஸ்டு வங்கிக் கொள்ளைக்காரர்களை பட்டியல்படுத்தினால் அதுல பெரும்பாலும் முதலாமிடத்தில், அல்லது அதுக்கு ரொம்பக்கிட்ட வரக்கூடிய பெயர் - John Dillingher!! இவனது காலகட்டத்துல இருந்த சக பிரபல கொள்ளைக்காரர்களான ஹோமர்வான் மீட்டர்> Baby Face நெல்சன், Pretty Boy ஃப்ளொயிட் (என்னா அழகா பட்டப்பெயர் வைச்சிருக்கானுக!) போன்றவர்களாலேயே "தல"ன்னு கூப்பிடுமளவுக்கு மெகா வில்லனா இருந்தான்..
The Terror Gang என்கிற பெயரில் டீம் ஒன்றை உருவாக்கிக் கொண்டு, மொத்தமாக 24 பாங்க்குகளையும், 4 பொலீஸ் ஸ்டேஷன்களையும் கொள்ளையடித்திருக்கிறான் என்றால் பார்த்துக்கோங்கள்! ஒவ்வொரு முறையும் எவ்வளவுத்த ஆட்டைய போட்டான்னு தெரிஞ்சுக்க இங்க க்ளிக்குங்க.. இந்த சாதனைகளுக்கு மணிமகுடமாக ரெண்டு தடவை பிடிபட்டு, சிறையிலிருந்து எஸ்கேப் ஆயிருக்கான்! (அந்த ரெண்டு சீனுமே படத்தில் அழகாக காட்டப்பட்டிருக்கும்..)
டிலிங்கரோட (ஜொனி டெப்) அல்லக்கையான Pretty Boy ஃப்ளொயிட்டை, மெல்வின் பர்வீஸ் (க்றிஸ்டியன் பேல்) எனும் பொலீஸ்காரன் ஆப்பிள் தோட்டமொன்றில் வைத்து மடக்கி கொல்கிறான். இதனால் புதிதாக ஆரம்பிக்கப்படவிருந்த FBI-க்கு தலைமை தாங்கிச் செல்லும் பதவி அவனுக்கு கிடைக்கிறது. இவனோட முதல் மிஷன், ஜோன் டிலிங்கரை கண்டுபிடிச்சு போட்டுத் தள்ளனும். இதற்கிடையில் டிலிங்கர், ரெஸ்டாரண்ட் ஒன்றில் பணியாளாக இருக்கும் பில்லி எனும் பெண்ணுடன் நெருக்கமாகி, இருவரும் காதல் கொள்கின்றனர்.. (வில்லனுக்குத்தான் இங்க ரொமான்ஸ் சீன்.. ஹீரோ பாவம்!) இதை தொடர்ந்து, டிலிங்கரும், பர்வீஸும் மாறிமாறி ஒருவருக்கொருவர் ஆப்பு வைக்கப் பார்க்கின்றனர்!
"இந்த சண்டையின் இறுதியில் டிலிங்கரை கொன்னாங்களா, இல்லையாங்கறதை படத்துல பார்த்து தெரிஞ்சுக்கோங்க.."ன்னுல்லாம் வழக்கம்போல சீன் போட முடியாது. ஏன்னா இது வரலாறு.. கொன்னுட்டாங்க!! "அதை எப்படி பண்ணாங்க?"ன்னாவது படத்தை பார்த்து தெரிஞ்சுக்கோங்க..
FBI-யோட ஆரம்பகாலம்-ங்கறதால, நமக்கு பார்த்து பார்த்து சலிச்ச சீனையெல்லாம், புதுசா செய்யுறமாதிரி காட்டுறானுங்க.. (இதுக்கு நண்பன் படத்துல என்னமோ சொல்லுவாங்களே.. ஆங்.. ஜமாய்வூ!!) படத்தோட மோஸ்டு சுவாரஸ்யமான சீனில், டிலிங்கர் FBI headquartersக்குள்ளேயே (அந்த காலத்துல அது ஒரு சின்ன ரூம் மட்டும்தான்..) போயி, தன்னோட கைரேகை, ஆல்பம் போட்டோஸையெல்லாம் அவனுங்க சின்சியரா சேகரிச்சு வைச்சிருக்கறதை பார்த்து ஒரு லுக்கு விடுவானே... ஜானி டெப், ஜானி டெப்தான்!!
ஜொனி டெப், க்றிஸ்டியன் பேல், மேரியன் கொடில்லார்ட் போன்ற அட்டகாசமான நடிகர் குழாத்தை வைத்துக்கொண்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூரணமாக நிறைவேற்ற இயக்குனருக்கு முடியாது போயுள்ளது.. ஒருவேளை இதை வரலாற்று படமாகவும் எடுக்கப் போனதால், ஓரளவுக்கு மீறி ஆக்ஷனை காட்ட முடியாது போனதுதான் காரணமோ??
இந்தபடம் எனக்கு முழுசா பிடிக்கலைன்னாலும், இது கொடுத்த இன்ஸ்பிரேஷனால இந்த FBI பின்னணி பத்தி பல இடங்கள்ல வாசிச்சுதெரிஞ்சுகிட்டேன்.. அப்புறம் J.Edgar படத்தையும் டவுன்லோடு போட்டு பார்த்துடலாம்னு இருக்கேன்! ஏன்னா, நாளைக்கு நம்மள விட சின்னப் பையன் ஒருத்தன்வந்து உங்களுக்கு ஹுவரைத் தெரியுமா? டிலிங்கரைத் தெரியுமா?ன்னு கேட்டுகிட்டிருந்தான்னா "தேமே"ன்னு முழிச்சுக்கிட்டிருக்க கூடாதில்லையா??
"வரலாறு மிக முக்கியம், அமைச்சரே!!"
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 16
இசை = 15
கதை+திரைக்கதை = 15
கலை+ஒளிப்பதிவு = 14
இயக்கம் = 14
மொத்தம் = 74% மிக நன்று!
//"வரலாறு மிக முக்கியம், அமைச்சரே!!"//
ReplyDeleteஉண்மைதான் பாஸ்..சீக்கிரமா அந்த படத்தையும் பார்த்துட்டு விமர்சனம் பண்ணி விருந்து கொடுத்துருங்க.
விமர்சனம் வழக்கம் போல கலக்கல் நண்பரே..இந்த படத்தை சில மாதங்களாக பார்க்க நினைத்து மனசே வெறுத்து போய்விட்டது..பார்க்கலாம் என டிவிடியை போட்டால், கூடாதுன்னு ஏதோ தடுக்குது நண்பரே,,என்ன செய்யுறதுனு தெரில..எப்படியாயினும் இன்னும் மூன்று மாசத்துக்கு பார்க்க முடியாது.காரணம், பார்க்க வேண்டியவற்றை லிஸ்ட்டே போட்டுவிட்டேன்.இதையும் சேர்த்துவிடுகிறேன்.
தங்களது இனிய பணி தொடரட்டும்..மிக்க நன்றி.
@ Kumaran - //பார்க்கலாம் என டிவிடியை போட்டால், கூடாதுன்னு ஏதோ தடுக்குது நண்பரே//
ReplyDeleteஎல்லாம் மாயா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதை விடுங்க, எனக்கு இந்த மாதிரி சங்கடங்கள் வந்திச்சுன்னா, எல்லாத்தையும் விட்டுட்டு கேம்ஸுக்கு போயிடுவேன், இல்லைன்னா அனிமேஷன் படம் ஏதாவது பார்ப்பேன்..
anyway, கமென்டிட்டு ஊக்குவிப்பதற்கு நன்றி நண்பா!
தங்களது வருகைக்கு பிறகு, சில அனிமேஷன் படங்களை டவுன்லோடு செய்து வருகிறேன் நண்பரே..நேரம் கிடைக்கையில் கண்டிப்பாக பார்க்க முயற்சி செய்கிறேன்..தங்களது ரெக்கமெண்டுக்கு மிக்க நன்றிகள்,
ReplyDeleteஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஹார்ட் டிஸ்கில் வைத்திருக்கும் படம். ஒருமுறை பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்பம் ப்ரிசன் எஸ்கேப், பேங்க் கொள்ளை என இன்ட்ரஸ்டிங்கா போனாலும், பின்னர் வளவளன்னு பேசி ஸ்பீட் குறைந்தமாதிரி ஃபீல் ஆச்சு. க்ளோஸ் பண்ணி வச்சிட்டேன். ஞாபகப்படுத்திட்டீங்க. சீக்கிரம் மிச்சத்தையும் பார்க்கிறேன்.
ReplyDelete//அப்புறம் J.Edgar படத்தையும் டவுன்லோடு போட்டு பார்த்துடலாம்னு இருக்கேன்! //
நான் டவுன்லோட் பண்ணிட்டேன். இன்னும் பார்க்கல. பார்த்துவிட்டு நீங்க எழுதுவீங்களா? அப்படின்னா வெயிட் பண்றேன்.
@ ஹாலிவுட்ரசிகன் - நான் இன்னும் டவுண்லோடே பண்ணத் தொடங்கலை.. நீங்க பார்த்துட்டு விமர்சனம் எழுதுறதா இருந்தா தாராளமா எழுதுங்க! (நானு கொஞ்ச நாளு ரெஸ்டுக்கு போயிட்டுதான் வருவேன்..)
ReplyDeleteபாஸ்,
ReplyDeleteபடம் என் கிட்டையும் இருக்கு, நான் தான் இன்னும் பார்க்காம இருக்கேன்.
உங்க விமர்சனத்தை படிச்ச அப்புறம் படம் பார்க்கணும் போல இருக்கு. இந்த வீக் என்டு பார்துற வேண்டியது தான்.
ஜொனி டெப் & க்றிஸ்டியன் பேல் சேர்ந்து நடிச்ச படமா ??
அடடா தெரியாம போச்சே...
அப்ப கண்டிப்பா பார்க்க வேண்டியது தான்.
நானும் பல தடவ இந்த படத்த பாக்க ட்ரை பண்ணிட்டேன். முடியல..யப்பா பேசிகிட்டே இருக்கானுக...இந்த வாரம் பாத்தேதீருவதுன்னு முடிவு பண்ணிட்டேன்
ReplyDelete@ ராஜ் , லக்கி - படத்தை பார்த்துட்டு உங்க கருத்துக்களையும் சொல்லுங்க.. ஏன்னா எல்லா இடத்துலயும் இதுக்கு mixed critical responses தான் வந்துகிட்டிருக்கு. (எனக்கு இது நல்ல படம் மாதிரி தெரிஞ்சுது.. உங்களுக்கு எப்படியோ?)
ReplyDeleteஎல்லாரும் என்ன மாதிரியே இருக்கிங்க நானும் ரொம்ப நாளா டி.வீ.டி வைக்கிட்டு இருக்கேன் ஆனா பாக்க தான் இல்ல...
ReplyDelete@ ..anand.. - என்னை மாதிரி யாருமே இல்லை போல?! என்கிட்ட டிகாப்ரியோ, ஜானி டெப், மாட் டேமன் இவங்களோட பட டி.வி.டி இருந்திச்சுன்னா அது மொக்கையோ, சப்பையோ ஒரு வாரத்துக்குள்ள பார்த்திடுவேன்..
ReplyDeleteநானும் பாதி படம் பார்த்தேன் பாஸ், அதுக்கு மேல முடியல. ஒரு வேல இந்த J. Edgar Hoover பற்றி முன்பே தெரிந்திருந்தால் பார்த்து இருப்பேன்.
ReplyDelete////அப்புறம் J.Edgar படத்தையும் டவுன்லோடு போட்டு பார்த்துடலாம்னு இருக்கேன்! ஏன்னா, நாளைக்கு நம்மள விட சின்னப் பையன் ஒருத்தன்வந்து உங்களுக்கு ஹுவரைத் தெரியுமா? டிலிங்கரைத் தெரியுமா?ன்னு கேட்டுகிட்டிருந்தான்னா "தேமே"ன்னு முழிச்சுக்கிட்டிருக்க கூடாதில்லையா??
"வரலாறு மிக முக்கியம், அமைச்சரே!!"////
பாஸ் என்னை குத்தி காட்டுற மாதிரி இருக்கு.
@ MuratuSingam -படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் ரேஞ்சுல இல்லை நண்பா.. ஸோ, திருப்பி பார்க்க கிடைச்சா மட்டும் பார்க்க ட்ரை பண்ணுங்க..
ReplyDeleteகண்டிப்பாக யாரையுமே குத்திக்காட்டலை.. இதுஎனக்கு நானே போட்டுக்கிட்ட அலார்ட்டு!!