அரசதுறை அதிகாரியொருவர் தனது டிபார்ட்மென்டில் புது ஆட்களை எடுப்பதற்காக 3 இளைஞர்களிடம் நேர்காணல் போல கேள்விகளைக் கேட்கிறார்..
"20ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான நபர் யார்?"
1வது இளைஞன் - "ஜோன் மெக்கார்த்தி"
"மெக்கார்த்தி ஒரு சந்தர்ப்பவாதி, தேசாபிமானி அல்ல!"
அடுத்த நபரிடமும் இதே கேள்வி,
2வது இளைஞன் - "நீங்கதான் சார்.."
*உதடுவழி எட்டிப்பார்க்கும் புன்முறுவலை அடக்கிக் கொண்டு இருமுகிறார்.*
3வது இளைஞன் - "அவர் என்ன துறையைச் சேர்ந்தவர் என தெரிந்து கொள்ளலாமா?"
"அவரது துறை மேகங்களினிடையே..."
3வது இளைஞன் - "சார்ல்ஸ் லின்ட்பேர்க்"
*சிறிய புன்னகையுடன் 'ஆம்' எனத் தலையசைக்கிறார்*
என்னிடம் இதே கேள்வியைக் கேட்டிருந்தால், "ஐன்ஸ்டைன்" என்றுதான் பதிலளித்திருப்பேன்.. ஆனால் இந்த நேர்காணல் நடந்த நேரத்தில் ஐன்ஸ்டைன் அவ்வளவு பிரபலமாக இருந்திருக்க முடியாது (2ம் உலகப் போர் காரணமாக) என்பதைக் கருத்தில் கொள்ளவும்..
அது சரி, இவர்கள் இவ்வளவு பிரபலமாக நினைக்கும் இந்த லின்ட்பேர்க் எனும் 2 வயதுக் குழந்தையைப் பற்றி நீங்களும் என்னைப் போலவே அறிந்திருக்காவிட்டால், உலக (அல்லது குறிப்பாக அமெரிக்காவின்) வரலாற்றின் முக்கியமான ஒரு கட்டத்தை நாம் ஸ்கிப் செய்து வந்திருக்கிறோம் என்பதையே அது எடுத்துக்காட்டுகிறது..
கடத்தலை அதிகாரபூர்வமாக தண்டனைக்குரிய குற்றமாக்கிய முதல் நாடு அமெரிக்கா என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அதற்கு அவசியம் ஏற்பட வைத்திருந்த நிகழ்வு இந்தப் பச்சிளம் பிள்ளையின் கொலைச் சம்பவம்.. "யேசு கிறிஸ்துவின் மீள்எழுச்சிக்கு அடுத்து மிகப்பெரிய நிகழ்வு" எனவும் "நூற்றாண்டின் குற்றம்" எனவும் வர்ணிக்கப் பட்ட நிகழ்வு இது என்றால் பார்த்துக்கோங்களேன்!!
மனதை உருகவைக்கும் இந்த வரலாற்றை விக்கியில் சென்று படித்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்..
மேலே குறிப்பிட்ட டிபார்ட்மென்ட் Federal Bureau of Investigation. குறிப்பிடப்பட்ட அதிகாரி அந்த டிபார்ட்மென்டையே உருவாக்கித் தந்த ஜோன் எட்கார் ஹுவர். 40 வருடங்களுக்கும் மேலாக, 6 வேறு அமெரிக்க ஜனாதிபதிகளின் காலகட்டங்களில் சட்டத்துறையின் அசைக்கமுடியாத தனிப்பெருஞ் சக்தியாக திகழ்ந்த நபர்.
இவரது மலைக்கவைக்கும் பிம்பமெனும் வெளிச்சத்தின் பின்னால் முடிய கதவுகளுக்கிடையில் மறைந்து கிடக்கும் இருண்ட உண்மைகளைப் பற்றியதே இந்தப் படம்..
இவரைப் பத்தி ஏற்கெனவே சிறிதாக Public Enemies பதிவில் பார்த்தோம். ஹுவரோட உண்மைகள், FBIயின் ஆரம்பகால கேஸ் ஃபைல்கள் எல்லாம் (ஹுவரின் கட்டளையின் பேரில்?) அழிக்கப்பட்டு விட்டதால், அங்கங்கு கிடைத்த தகவல்களின் பிரகாரமே இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. (உண்மைகள் சிக்கியிருந்தால் டாகுமென்டரிப் படமாக எடுத்திருக்க முடியும்.)
லின்ட்பேர்க் கொலைவழக்கில் குற்றவாளி ஹொப்கின்ஸை ஹுவர் கைது செய்யவில்லை என்பது தொடக்கம் அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பது வரை படத்தில் காட்டப்படும் தகவல்கள் பலவும் அவரது வாழ்க்கை வரலாற்றுக்கு முரணானதாகவே காட்டப்படுவதால், பார்த்துக் கொண்டிருக்கும் போதே "நம்பலாமா? நம்பப்படாதா?" கேள்விகள் வந்து கொண்டிருக்கின்றன..
லின்ட்பேர்க் சம்பவம் மட்டுமன்றி டிலிங்கரின் கேஸ், கென்னடியின் கொலை போல பல சமகால வரலாற்றுச் சம்பவங்களுன் படம் பயணிக்கிறது..
லியனார்டோ டிகாப்ரியோவின் நடிப்பைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளே இல்லை. பேசும் டோன் தொடக்கம் ஹுவரின் மேனரிசங்கள் வரை ஊறுகாய் போலத் தொட்டு விளையாடுகிறார்.. கையைக் காலைத்தூக்கி அசைக்காமல் நடப்பதும், பேசுவதுமே பிரதான வேலையாக உள்ளவொரு பாத்திரத்துக்கு டிகாப்ரியோ பொருந்தவே மாட்டாரெனக் கூறிய அனைவருக்கும் முகத்திலேயே ஒரு பதிலடி!! முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த மாதிரிக் காட்டும் அந்த மேக்கப்பைத் தூக்கிவிட்டால் கிழட்டு ஹுவரையும் இன்னும் முழுமையாக ரசித்திருக்க முடியும்.. கடைசி 30 நிமிடங்களும் டிகாப்ரியோ ரசிகர்களுக்கு (என்னையும் சேர்த்துதாம்பா!) நடிப்பிலேயே தீனி போட்டிருக்கிறார்!
இதுல என்ன பிழையை கண்டுபிடிச்சு, ஆஸ்கர் கொடுக்காம வுட்டானுங்களோ??
படத்தோட டிம்-லைட்டிங்.. வெளியிடங்களுக்கு செல்லும் சீன்களில் பழைய, ராயலான ஃபீலைக் கொடுப்பதற்கு நன்றாக உதவுகிறது... ஆனால் ரூமுக்குள் இருக்கும் சீன்களிலெல்லாம் எரிச்சல்தான் மிஞ்சுகிறது!
படத்தை இயக்கியிருப்பது Millian Dollar Baby-ஐ இயக்கி நடித்த "க்ளின்ட் ஈஸ்ட்வுட்". படத்தோட பிரதான கதாப்பாத்திரம் என்பதால் ஹுவரை ஹீரோ மாதிரியோ, வில்லன் மாதிரியோ காட்டாமல் முன்கோபக்காரனாக, தற்பெருமைக்காரனாக, சிறிது சுயநலக்காரனாக... மொத்தத்தில் ஹுவராகவே காட்டியிருப்பது இவரது பிளஸ்.. மீதியெல்லாம் சுமார் ரகம்தான்..
படத்தில் அழுத்தமான சீன்கள் குறைவு என்பதால் சிலவேளைகளில் சுவாரஸ்யம் குறைவதற்கு நான் கியாரண்டி.. மைனஸ்கள் இருந்தாலும் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக, டிகாப்ரியோவுக்காக, எனக்காக இந்தப் படத்தை பார்க்க மாட்டீர்களா என்ன?..
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 12
கதை+திரைக்கதை = 13
கலை+ஒளிப்பதிவு =10
இயக்கம் = 14
மொத்தம் = 66% நன்று!
//மைனஸ்கள் இருந்தாலும் வரலாற்றை அறிந்து கொள்வதற்காக, டிகாப்ரியோவுக்காக, எனக்காக இந்தப் படத்தை பார்க்க மாட்டீர்களா என்ன?..//
ReplyDeleteஅதானே. நிச்சயமாக பார்ப்பேன் பாஸ். விமர்சனத்தின் ஸ்டார்ட் அழகாக எழுதியிருக்கீங்க. நீங்க Public Enemies பற்றி எழுதியவுடனே பார்க்கணும்னு நினைச்சேன். ஆனா வேலைகள், அது இதுன்னு தள்ளிப் போய்ட்டுது. Monster in Paris கூட இன்னும் அரைவாசி தான் பார்த்திருக்கேன்.
இது எப்பவோ தெரியல.
இப்படத்தின் ப்ளு ரே காப்பி திங்கள் கிழமை வந்து விடும்.
ReplyDeleteவந்தவுடன் பார்த்து விடுகிறேன்.
விமர்சனம் வழக்கத்தை விட சற்று ஸ்பெசலாக இருக்கிறது.
டிக்காப்ரியா கிக்கில் எழுதியதா!
@ ஹாலிவுட்ரசிகன் - எவ்வளவு லேட்டானாலும் பார்க்குறதுதான் நம்மளுக்கு முக்கியம் பாஸ்... அப்புறம் உங்க ரெக்கமெண்டேஷன்ல நேற்று முதல்நாள் The Help படம் பார்த்தேன். படம் சூப்பர். அதுக்கு உங்களுக்கு ஸ்பெஷலாக ஒரு நன்றி!!
ReplyDelete@ உலக சினிமா ரசிகன் - //டிக்காப்ரியா கிக்கில் எழுதியதா!//
ம்.. இருக்கலாம் சார். படத்துல 80% டிகாப்ரியோதான் நிறைஞ்சிருக்காரு.. அது பார்க்கும் போதே உங்களுக்கும் ஃபீல் ஆகும்!
// டிகாப்ரியோவுக்காக, எனக்காக இந்தப் படத்தை பார்க்க மாட்டீர்களா என்ன?..///
ReplyDeleteபாஸ், உங்க public enemies பதிவ படிச்சு FBI வரலாறை தேடி படிச்சேன். 2 வாரத்துக்கு முன்னாடி தான் J. Edgar & Public Enemies ரெண்டையும் பார்த்தேன். ரொம்ப நல்ல படங்கள்.
ஆனா நீங்க சொன்ன மாதிரி சில இடங்களில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் படம் எனக்கு பிடித்து இருந்தது.
அப்புறம் பாஸ்,
ReplyDeleteநீங்க ரொம்ப நாளா எழுதுறேங்க, ரொம்ப அருமையாவும் எழுதுறேங்க. உங்களுக்கு கண்டிப்பா திரட்டிகள் பத்தி தெரிஞ்சு இருக்கும். பதிவுகளை திரட்டிகளில் இனைச்சா நமக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்.
உங்க சாய்ஸ்.. தப்பா நினைக்காதேங்க.. கருத்து சொல்லறேன்னு...
என்னோட அனுபவத்தால சொல்லுறேன், நான் பார்த்த வரைக்கும் தமிழ்மணம் ரொம்ப நல்ல திரட்டி. ட்ரை பண்ணி பாருங்க...
http://tamilmanam.net
@ ராஜ் - படம் இரண்டையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. திரட்டிகள் பற்றித் தெரியாமல் இல்லை நண்பா. போன வருடமே தமிழ் மணத்தில் இணைப்பதற்கு ட்ரை பண்ணி, feedburner லிங்க் பிழைத்துப்போய், 2,3 அக்கவுண்ட் ஆரம்பித்து எல்லாம் சொதப்பலாகவே போனது.. ஒரு பதிவும் அப்டேட் ஆகல..
ReplyDeleteஅப்புறம் வெறுத்துப்போய் வந்துட்டேன்.. தற்போதைய அளவில் indli, tamil 10 என்பவற்றில் தொடர்ச்சியாக இணைத்து வருகிறேன். தமிழ்மணத்தை திருப்பி ட்ரை பண்ணுவோம்..
* எனக்கும் நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் கருத்து சொல்லியிருக்கீங்க.. நன்றி பாஸ்!!
@ JZ..
ReplyDeleteநன்றி எல்லாம் எதுக்கு பாஸ்... :)
இப்ப தான் பார்த்தேன் உங்க பதிவு தமிழ்மணத்தில் இணைக்க பட்டு விட்டது...
உங்க browser -ல "cinemajz.blogspot.com/ncr" டைப் பண்ணி பாருங்க.
இணைக்க பட்ட விவரம் தெரியும்...
உங்களுக்கு "blogspot.in" "blogspot.com" பத்தி கேள்வி பட்டு இருப்பீங்கன்னு நினைக்குறேன்..
"blogspot.com" ல ஓபன் பண்ணுனா தான் பதிவு இணைக்க பட்டது தெரியும்...
எப்பவுமே .com ல ப்ளாக் ஓபன் ஆக இந்த முறைய ட்ரை பண்ணி பாருங்க..
http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html
தங்களது எழுத்துக்களுக்காகவே கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும்..சில நாட்களில் பார்த்துவிடுகிறேன்.மிக்க நன்றி.
ReplyDelete@ குமரன் - பார்த்துவிட்டு உங்கள் கருத்தையும் சொல்லுங்க, நண்பா!
ReplyDeleteதொடர்ந்து நல்ல உலக சினிமாக்களை அறிமுகப்படுத்தி வருவதற்கு மிக்க நன்றி !
ReplyDelete@ ananthu - தொடர்ந்து தங்கள் பின்னூட்டத்தால் ஆதரவளித்து வருவதற்கு இன்னும் பெரிய நன்றி அண்ணா!!
ReplyDeleteகுட்.. இது மாதிரி புது விசயத்தோட அடிக்கடி வாங்க.. இந்த படத்த பத்தி யாரவது எழுத மாட்டாங்களானு நெனச்சிட்டேன் இருதேன்.. உங்க மற்ற பதிவுக்கும் இந்த பதிவுக்கும் நல்ல முன்னேற்றம் தெரியுது.. வாழ்த்துக்கள்..
ReplyDelete@ Castro Karthi - நன்றி நண்பா! இந்த முன்னேற்றம் நிரந்தரமா? தற்காலிகமா?ன்னு எனக்கே தெரியல..
ReplyDeleteசனியன்..இந்த படத்துக்கு இன்னிய வர நல்ல பிரிண்ட் எனக்கு கெடைக்கல.....முக்கி முக்கி டவுன்லோட் செஞ்சதும்....தியேட்டர் பிரிண்ட்டா போச்சு...
ReplyDelete-----
அவர் கே ன்னு ஒரு பேச்சு இருந்து - அதுக்காக FBI ஆட்கள் எல்லாம் ரொம்ப எரிச்சல் அடைஞ்சதா போன வருடம் ஒரு நியுஸ் வந்துச்சு..அதுகுறித்து படத்துல எதுவும் இருக்கா ??
@ கொழந்த - இருக்கு நண்பா.. தெளிவாவே இருக்கு. இவரோட அஸிஸ்டெண்டா இருந்த Clyde Tolson உடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக படத்தில் கூறப்படுவதுடன், ரெண்டு பேரும் வன்முறையுடன் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி படத்தில் காட்டப்படுகிறது..
ReplyDeleteபடம் பார்க்கமுடியுமானு தெரியாது ஆனா சுவாரசியமான விமர்சன நடை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவிமர்சனம் கலக்கல், அறியப்படாத நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன்.
ReplyDeleteJ. Edgar (2011) படம் பார்க்கச் சென்று எதுக்கு திரை அரங்கத்துல டிராமா வகை படம் பார்கனம் என்று நினைத்து adventure படம் John Carter சென்று நொந்து போய் வந்தேன்.
@ தக்குடு - ரொம்ப நன்றி! அடிக்கடி விசிட் பண்ணுங்க!
ReplyDelete@ MuratuSingam - ரொம்ப நன்றி நண்பா! John Carter எனது நண்பர்களும் செட்டாக முதல்நாள் போய் பார்த்து வந்து அழுதார்கள்!