வட துருவத்தில் தனது மனைவி, மக்களுடன் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சான்டா க்ளாஸ். ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்கு முதல்நாளும் இரவில் சான்டாவும், அவருக்கு பணியளாட்களாக இருக்கும் ஆயிரக்கணக்கான குள்ளர்களும்(elves) சேர்ந்து, உலகில் உள்ள சிறுபிள்ளைகள் எல்லாருக்கும் அவர்களுக்கு பிடித்தமான பரிசுப் பொருளை வீட்டில் தெரியாமல் வைத்துவிட்டு வந்துவிடுவர். இந்தக் கடினமான ஆப்பரேஷனை நவீன சாதனங்களின் உதவியுடன் வழிநடத்திச் செல்வதற்காக இன்னும்பல குள்ளர்கள் வடதுருவத்தில் தமது கணினிகளோடு அமர்ந்து அயராது செயற்படுவார்கள். இதை மேற்பார்வை செய்வது சான்டாவின் மூத்த மகனான ஸ்டீவ்.. (இவருதான் அடுத்த சான்டாவாகும் தகுதி படைத்தவர்!) சான்டாவுக்கு சின்னப் பிள்ளைகள் எழுதும் கடிதங்களை வாசித்து, அவற்றுக்கு பதில்கடிதம் எழுதும் பணியைச் செய்வது இரண்டாவது மகனான ஆர்த்தர்...(இவருதான் படத்தோட ஹீரோ!!)
தனது 70வது மிஷனை முடித்த சந்தோஷத்தில் சான்டாவும், அவரது குடும்பமும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் ஏதொ ஒரு பிள்ளைக்கு பரிசுப்பொருளாக கொடுக்கவிருந்த துவிச்சக்கரவண்டியொன்று இன்னும் கொடுக்கப்படாமலிருப்பது தெரிய வருகிறது. ஆர்த்தர், அது தனக்கு கடிதம் எழுதியிருந்த க்வென் எனும் இங்கிலாந்து சிறுமி ஆசையோடு வேண்டுகோள் விடுத்திருந்த பரிசு என அடையாளம் கண்டு கொள்கிறான்.. "ஒரேயொரு சிறுமிக்குத்தானே பரிசு கிடைக்கவில்லை" எனக்கூறி ஸ்டீவ் அதை கண்டுகொள்ளாமல் விடுகிறான். சான்டாவுக்கும் இந்த விடயம் பற்றி இன்னும் தெரியப்படுத்தவில்லை ஆனாலும் ஆர்த்தரினால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..
இறுதியில் அந்தப் பரிசை க்வென்னிடம் ஒப்படைப்பத்தே தீருவது எனக்கூறிக்கொண்டு ஸ்டீவின் எதிர்ப்பையும் மீறி, ஆர்த்தரும், ex-santa வாக இருந்த அவனது தாத்தாவும், ப்ரையோனி எனும் elf மூவரும் சேர்ந்து தாத்தாவின் பழைய reindeer sleighல் பயணமாகிறார்கள். கிறிஸ்துமஸ் தினம் விடிவதற்கு இன்னும் சில மணித்தியாலங்களே இருக்கும் நிலையில் அவர்கள் அந்தப் பரிசை கொண்டு போய் சேர்ப்பித்தார்களா என்பதுவும், இந்தப் பயணத்தில் ஏற்படும் கலாட்டாக்களுமே மீதிக்கதை!
அனிமேஷன் படம்னாலே கண்டிப்பா காமெடி இருக்கும்.. ஆனா இங்க காமெடியையே அனிமேஷனாக்கி இருக்காங்களா?ன்னு சந்தேகமா இருக்கு.. படம் தொடங்கியதிலிருந்து என்டு வரைக்கும் சிரிப்பு எட்டிப் பார்த்துகிட்டே இருக்கு.. பல இடங்களில் வசனங்கள் முக பாவனைகளையும் தாண்டி காமெடியை தூக்கி வைக்குது. பிரான்ஸுன்னு நினைச்சுகிட்டு, ஆப்பிரிக்காவில் தரையிறங்கியதும், ஆர்த்தர் "Are there elephants in France?"னு கேட்கும் கேள்வி்க்கு என்னால் சிரிப்பை அடக்கவே முடியலை.. எனக்கு இந்த படத்துல ரொம்ப புடிச்ச பாத்திரம் ப்ரையோனி.. தான் ஒரு gift-wrapping expertங்கறத அப்பப்போ ஞாபகப்படுத்திக்கிட்டே வருது.. சிங்கத்தோட முகத்தை கவரால் சுற்றி வாயை அடக்கும் சீனும், ஓடுற சைக்கிளுக்கு கவர் சுற்றும் சீனும் பிரமாதம்!
படத்தோட சில இடங்களில் கிராஃபிக்ஸ் உறுத்தலாகிறது.. பனியைக் காட்டும் சீன்கள் சில 1990களில் வந்திருக்கும் வீடியோ கேம்களைப் போலிருப்பது மைனஸ்.. கதை பிக்ஸார் அல்லது ட்ரீம்வொர்க்ஸ் கையில மாட்டியிருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்கும்ங்கறது என்னோட கருத்து! இருந்தாலும் பொழுதுபோக்காக ரசிச்சு பார்க்குறதுக்கு ஏற்ற படம்!
ரேட்டிங்க்ஸ்,
பாத்திரங்கள்- 16
அனிமேஷன்-17
பின்னணித் தரவுகள்- 14
கதை+திரைக்கதை- 16
இயக்கம்-15
மொத்தம்- 78% மிக நன்று!!
படம் நல்லா இருக்கும் போல இது வரைக்கும் பாக்கல இனிமே பாத்துட வேன்டியது தான்
ReplyDeleteஅனிமேஷனா? நல்ல ப்ரிண்ட் வந்துருச்சு போல. சீக்கிரம் டவுன்லோட் பண்ணிப் பார்க்கிறேன்.
ReplyDeleteபோலார் எக்ப்ரஸ் எனக்கும் மிகவும் பிடித்த அனிமேஷன்களில் ஒன்று.
@ anand , ஹாலிவுட்ரசிகன் - வருகைக்கு நன்றி நண்பர்களே! உங்களையும் இப்படம் மகிழ்வி்க்கட்டும்!
ReplyDeleteஉங்க விமர்சனத்தை படிச்சா படம் ரொம்ப இன்டரெஸ்டிங்-ஆ இருக்கும் போல, படத்தோட பிளாட் (Plot) ரொம்ப நல்லா இருக்கு பாஸ். அடுத்த வீக் எண்டு பார்துற வேண்டியது தான்.
ReplyDelete//கதை பிக்ஸார் அல்லது ட்ரீம்வொர்க்ஸ் கையில மாட்டியிருந்தா இன்னும் சிறப்பா வந்திருக்கும்ங்கறது என்னோட கருத்து//
உண்மை தான் பிக்ஸார், மொக்கை கதையே (கார்ஸ்-2)சூப்பரா எடுப்பாங்க..இந்த மாதிரி நல்ல கதை கிடைச்ச பின்னி இருப்பாங்க.
உங்க எழுத்து நடை அருமை பாஸ்..
@ ராஜ் - ரொம்ப நன்றி பாஸ், பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க!
ReplyDelete