Friday, March 23, 2012

A Monster in Paris (2011)

2011 "in Paris" தலைப்பைக் கொண்ட படங்களின் வருஷம் போலும்! நீங்க ஹாலிவுட் படங்களின் ரசிகரா இருந்தால், உங்களுக்கு Midnight in Paris பத்தி தெரிஞ்சிருக்கும்.. இந்த முறை ஆஸ்கரில் 4 பிரிவுகளக்கு நாமினேட் செய்யப்பட்டு ஒரு விருதை தட்டிச் சென்றது... அனிமேஷன் படங்களின் ரசிகராயிருந்தால் A Cat in Paris பற்றி ஓரளவாவது தெரிந்திருக்க வாய்ப்புண்டு. காரணம் அது சிறந்த அனிமேஷன் படத்துக்காக நாமினேட் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த Monster in Paris?...

பாரீஸை மையமாகக் கொண்ட கதை என்பதாலோ என்னவோ படத்தின் ஆரம்பமே ரொமான்டிக் சீனாக இருக்கிறது!
படத்தின் பிரதான கதாப்பாத்திரங்கள் இரண்டு இளம் ஜோடிகள்.. முதலாவது தியேட்டரொன்றில் projectionistடாக வேலைபார்க்கும் எமில் - அதே தியேட்டரில் வேலை பார்க்கும் மவுட்.. ரெண்டாவது டெலிவரி டிரைவராக வேலைபார்க்கும் ராவோல் - அவனது பள்ளிப்பருவத் தோழியும், பிரபல "காபரே கிளப்" ஒன்றில் பாடகியுமான லுசீல்..

பாரீஸின் விஞ்ஞானி ஒருவரின் ஆய்வு கூடத்துக்கு, சாமான்களை டெலிவரி செய்யப் போகும் ராவோலும், அவனுக்கு உதவிக்காக வரும் எமிலும், ஆய்வுகூடத்தில் ஒரு குரங்கைத் தவிர யாருமில்லை என்பதை அறிந்து கொண்டு தங்கள் இஷ்டத்துக்கு கெமிக்கல்களை ஒன்றன்மீது ஒன்றாக ஊற்றி விளைவுகளைப் பார்த்து வியக்கின்றனர்.. இவர்களது விளையாட்டு விபரீதமாகிப் போனதில் ஆய்வு கூடத்தில் பெரு வெடிப்பொன்று ஏற்படுவதுடன் அங்கு மின்சாரம் இல்லாமல் போகிறது!
இருட்டில் தட்டுத் தடுமாறி நடக்கும்போது எமில், ராட்சதமான உருவமொன்றின் நிழல் அசைவதைப் பார்க்கிறான். அது அவன் கையில் வைத்திருந்த காமிராவிலும் பதிவாகிறது!

அடுத்த சில நாட்களில், பாரீஸின் வெவ்வேறு இடங்களில் இந்த ராட்சதனைப் பார்த்ததாக அடுத்தடுத்து செய்திகள் வருகின்றன. நகரத்தின் பொலீஸ் படைத் தலைவர் அதை தனது கையாலேயே கொன்றொழித்து பாரீஸுக்கு நிம்மதி தேடித் தருவாதாக உறுதியளிக்கிறார்!

இந்தக் குழப்பங்களின் நடுவே ஒருநாள் லுசீலும் இந்த ராட்சதனை காண்கிறாள். முதலில் பயப்படும் அவள் பின்பு, அது பயங்கரமற்றதெனவும், அதனால் நன்கு பாடவும், இசைக் கருவிகளை வாசிக்கவும் முடியுமென்பதை அறிந்து கொள்கிறாள். உடனே அந்த ராட்சதனுக்கு ஆடைகளை உடுத்தி, அதை "ஃப்ராங்கோர்" என்ற பெயரில் தனது காபரே க்ளப்பில் புதிய இசைக் கலைஞனாக அறிமுகப் படுத்துகிறாள். ராட்சதனது இசைத் திறமையால் அவளது கச்சேரிகள் பெரும் புகழடைகின்றன. அந்த ராட்சதனின் நல்ல குணம் பற்றி எமில், ராவோலுக்கும் தெரிய வருகிறது. மூவரும் சேர்ந்து போலீஸிடமிருந்து அதைக் காப்பாற்ற முடிவெடுக்கிறன்றனர்!! அந்த முயற்சி வெற்றியளித்ததா என்பதே கதை!

படத்தின் கதாப்பாத்திரங்களை வடிவமைத்தவருக்கு முதலில் ஒரு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும். அவ்வளவு ரியாலிட்டியாக இல்லாவிட்டாலும், பாத்திரங்கள் எல்லாம் ஒரே பாணியில் இல்லாதது மகிழ்ச்சியளிக்கிறது. அனிமேஷன் படங்களிலேயே இப்போதுதான் பல பாத்திரங்களுக்கு "கிருதா" வைத்துப் பார்க்கிறேன்!!

படத்தின் முதல் சில நிமிடங்கள் மொக்கையாக இருக்கிறது என்பதற்காக பாதியிலேயே நிறுத்தி விடாதீர்கள். போகப் போகத் தான் சுவாரஸ்யம் அதிகரிக்கும் படி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவும் அந்த ஈபில் டவரின் மீது நடக்கும் க்ளைமாக்ஸ் சீன்.. சான்ஸே இல்லை! என்னோட ஃபேவரிட் அனிமேஷன் கிளைமாக்ஸ்களில் ஒன்றாக மாறியிருக்கிறது அந்த சீன்!

ஹாலிவுட்டுக்கு அடுத்து அனிமேஷன்ல நாங்கதான்-னு சொல்வதுபோல ப்ரெஞ்சு அனிமேஷன் படங்களும் தங்கள் தரத்தை நிரூபித்துக் கொண்டே வருகின்றன.. தொடர்ந்து இரு வருடங்களாக ப்ரெஞ்ச் படமொன்று ஆஸ்கர் அனிமேஷன் பிரிவில் போட்டியிடுவது இதற்கு சான்று (Le' Illusioniste , A Cat in Paris).. இந்தப் படமும் அந்தக் கருத்துக்கு வலுவூட்டும்!

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் காட்டப்படும் சாதாரண / சொதப்பலான பொருட்கள் கூட, க்ளைமாக்ஸ் சீனில் ஹீரோவுக்கு பேருதவியாக அமைவதெல்லாம், பிக்சார் போன்ற டாப்-ரக அனிமேஷன் படங்களிலேயே எதிர்பார்க்கக்கூடியது.. இந்தப் படத்திலும் அவ்வாறான சீன்கள் இடம்பெறுவது சிறப்பு!
கதையில் மட்டுமல்ல.. படத்திலும் இசை சிறப்பாகவே இருக்கிறது. அதிலும் குறிப்பாக "லா செய்ன்" எனும் இந்தப் பாடல்.. படத்தை பார்ப்பதாக இல்லாவிட்டாலும் பாட்டையாவது ப்ளே பண்ணிக் கேட்கவும்..

பொழுது போக்குக்கு படம் தேடுபவர்கள் முழுப் படத்தையும் ட்ரை பண்ணிப் பார்க்கவும்..

ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 14
அனிமேஷன்-15
பின்னணித் தரவுகள்- 16
கதை+திரைக்கதை- 12
இயக்கம்-13

மொத்தம்- 70% மிக நன்று!!

A Monster in Paris (2011) on IMDb

14 comments:

  1. தொடர்ந்து நல்ல அனிமேசன் படங்களை விமர்சித்து வருவதால்... அப்படங்களை பார்க்க முடியாவிட்டாலும் தெரிந்து வைத்துக்கொள்ள ஏதுவாகிறது.
    நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பாஸ்,
    படத்தை இப்ப தான் கேள்விபடுறேன்...அறிமுகத்துக்கு மிக்க நன்றி...A Cat in Paris படம் அவ்வளவு ஆக என்னை கவர வில்லை...A Monster in Paris பார்க்க முயற்சி செய்கிறேன் பாஸ்...
    ////படத்தின் முதல் சில நிமிடங்கள் மொக்கையாக இருக்கிறது என்பதற்காக பாதியிலேயே நிறுத்தி விடாதீர்கள்.////
    எனக்கு அந்த பிரச்சனையே இல்லை.. எப்படி பட்ட படமாக இருந்தாலும் முழுசா பார்த்துடுவேன்.. :)

    ReplyDelete
  3. முந்தா நாள் தான் பாத்துட்டு டவுன்லோட் பண்ணினே். இன்றிரவுக்கு அல்லது நாளை பார்த்துவிடுகிறேன். புதிய தரமான படங்களாக அறிமுகப்படுத்திறீங்க. நன்றி.

    ReplyDelete
  4. @ உலக சினிமா ரசிகன் - நன்றி சார்!

    @ ராஜ் - //எப்படி பட்ட படமாக இருந்தாலும் முழுசா பார்த்துடுவேன்// நல்ல கொள்கைதான் பாஸ்! ஆனா Transformers 3- மாதிரி அறுவையெல்லாம் வந்திச்சுன்னா என்னால முழுசா பார்க்க முடியாது.. :(

    @ ஹாலிவுட்ரசிகன் - பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க நண்பா!

    ReplyDelete
  5. அட போங்க...எப்ப பாத்தாலும் பாக்காத படமா தான் எழுதுறீங்க..

    டெம்ப்ளேட்தனமாக சொல்வதானால், இதோ இன்றே தரவிறக்கி பார்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  6. http://www.screenjunkies.com/movies/genres-movies/animation/10-best-french-animated-movies/

    ReplyDelete
    Replies
    1. கொழந்த நீங்க குடுத்த லின்க்ல எதையோ பாக்க போய் இப்போ எதையோ பாத்துட்டு இருக்கேன் :) :)

      Delete
  7. @ கொழந்த - இந்த லிங்க்-ல இருக்க எந்தப் படமுமே நான் பார்த்ததில்லையே நண்பா.. 7 படங்கள் 2000த்துக்கு முதல்ல வெளியானவையா வேற இருக்கு..("பெர்சபொலிஸ்" பத்தி மட்டும் கேள்விப் பட்டிருக்கேன்)

    ReplyDelete
  8. அனிமேஷன் படங்களை பார்க்க தூண்டும் விமர்சனத்திற்கு நன்றி ...

    ReplyDelete
  9. @ ananthu - வருகைக்கும். கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  10. @JZ: ச்சால மன்சி.. 'ரொம்ப நல்லா இருக்கு'னு தெலுகுல சொன்னம்யா..

    ReplyDelete
  11. @ Castro Karthi - ச்சால தனியவதாலு... (சரியா சொல்லிட்டேனா??)

    ReplyDelete
  12. விமர்சனம் சூப்பர், படத்தை பார்க்கும் ஆவலை துண்டுகிறது படிக்கும் போதே.

    ReplyDelete
  13. @ MuratuSingam - ஆகா, உங்க கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையா.. விட்டுப்போன எல்லாப் பதிவுகளையும் வாசித்ததோடு கருத்தும் இட்டுச் செல்கிறீர்கள்..
    ரொம்ப.. ரொம்ப.. நன்றி நண்பா!

    ReplyDelete

Related Posts with Thumbnails