Saturday, August 27, 2011

Sweeney Todd (2007)


டிம் பர்ட்டன் - ஜானி டெப் கூட்டணியின் 6வது படம் தான் இந்த Sweeney Todd: Demon Barber of the Fleet Street. வித்தியாசமாவே படம் எடுக்கற ரெண்டு பேரோடயும் கூட்டணிப் படங்களிலேயே வித்தியாசமானது இந்தப்படம். காரணம் இது பக்கா Black-Horror Musical படம்!!

இந்தப் படத்தோட கதை முதன்முதலா 1973ல கிறிஸ்டோபர் பொன்ட் என்பவரால் நாடகமாக எழுதப்பட்டதாம். 1979ல ஸ்டீபன் சொன்டெயிம், ஹியூ வீலர் அப்படீங்கற ரெண்டு பேரும் இந்த நாடகம் மியூசிக்கலா இருந்தா ரொம்ப நல்லாயிருக்குமேன்னு எண்ணி ஸ்டீபன் பாட்டுக்களையும், ஹியூ வசனங்களையும் எழுதினராம்... சாதாரண நாடகத்தைவிட இந்த மியூசிக்கல் பிளே-க்கு பெருவாரியான வரவேற்பு கிடைச்சுதாம்..
(Uris தியேட்டர்ல முதன்முதலா வெளியிட்ட 1 மார்ச் 1979 திகதியிலேர்ந்து, மொத்தம் 557 தடவைகள் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டதுன்னா பார்த்துக்குங்களேன்!!!)

தன் பள்ளிப்பருவகாலங்களில் இந்தப் பிளேயை பலதடவை பார்த்து மகிழ்ந்த டிம் பர்டடன், தான் இயக்குனரான காலத்துலே இருந்து எப்படியாவது இத படமாக்கனும்னு நினைச்சு ட்ரை பண்ணிக்கிட்டிருந்தாராம். "சில்லறைக் காசுக்கு உட்கார்ந்து பாக்குற பிளேயை, செலவழிச்சு யாரும் சினிமாவா பார்க்க மாட்டாங்க"ன்னு நெனச்ச தயாரிப்பாளர்கள் கைவிரித்தனர். 2006ல்தான் ஒருவழியா "ட்ரீம்வொர்க்ஸ்" க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார்கள்!
தன்னோட ட்ரீம் ப்ரொஜெக்ட் என்பதால் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் பார்த்துப் பார்த்து ("நான் கடவுள்" ரேஞ்சுக்கெல்லாம் கஷ்டப்படாமல்...) நடிகர்களை தேர்வு செய்திருக்கிறார் டிம் பர்ட்டன்... ஆனால் ஜானி டெப் மட்டும் வழக்கம் போல Straight Purchase!!

சரி இப்போ கதையை சுருக்கமா பார்ப்போம்,
லண்டனில் உள்ள ஒரு barberஆன பெஞ்சமின் பார்க்கருக்கு (ஜானி) லூசின்னு அழகான மனைவி இருந்தாள். அவளது அழகில் மயங்கிய அவ்வூர் நீதிபதியான டர்பின் (அலன் ரிக்மேன்) பெஞ்சமின் மீது பொய்க்குற்றம் சாட்டி அவனை அவுஸ்திரேலியாவில் சில காலம் கடும் வேலை வாங்க உத்தரவிடுகிறான்!!
15 வருடம் கழித்து "ஸ்வீனி டொட்" என்ற பெயரில், வேறு கெட்டப்புடன் பெஞ்சமின் லண்டனுக்குத் கப்பலில் திரும்பிக் கொண்டிருக்கிறான். அதே கப்பலில் வரும் அந்தோனி எனும் இளைஞனிடம் தான் பழிக்குப் பழி வாங்கவே திரும்புவதாகவும் கூறுகிறான். தனது கடை தற்போது நெலீ லவட் எனும் பெண்மணியின் pie shop ஆக இருப்பதைக் கண்டு, அவளை சந்தித்து தான் யாரென்ற உண்மையைக் கூறுகிறான். அவள் அவனது பழைய razor கருவிகளைத் திருப்பித் தரவே, அதே கடையின் மேல்மாடியில் தனது சலூனை திரும்ப ஆரம்பிக்கிறான் ஸ்வீனி!!

லவட்டிம் மேலும் பேசியதிலிருந்து, 'தனது மனைவி லூசி டர்பினால் கற்பழிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், பெஞ்சமினின் மகளான ஜொஹான்னா தற்போது டர்பினால் வளர்க்கப்படுவதாகவும்' அறிந்து கொள்கிறான்.. செய்தியைக் கேட்டு ஆத்திரமடையும் ஸ்வீனி 'தன் ரேசர் கத்தியால் தான் டர்பினுக்கு சாவு' என முடிவு கட்டுகிறான்!!
நெலீ லவட் செய்யும் pies "லண்டனிலேயே மிகக் கேவலமான pies" என வெறுத்தொதுக்கப்பட்டவை.. இதனாலேயே லவட்டுக்கு கஸ்டமரும் கிடையாது; நண்பர்களும் கிடையாது.. ஸ்வீனி டொட்டின் வருகையால் மகிழ்ச்சியடையும் லவட் அவன் மீது காதல் கொள்கிறாள்..

லண்டனில் வேலையின்றி சுற்றித்திரியும் அந்தோனி ஜொஹன்னாவப் பார்த்து காதலிக்கத் தொடங்குகிறான். விளைவாக டர்பினின் அல்லக்கையான பியாடில் என்பவனால் மிரட்டி அனுப்பப்படுகிறான்...
ஊர்மக்களின் முன்னிலையில் நடத்தப்படும் ஒரு பார்பரிங் போட்டியில் வெற்றியீட்டும் ஸ்வீனி பியாடிலின் கவனத்தை தன்பக்கம் ஈர்க்கிறான்! அன்றிலிருந்து ஸ்வீனியின் சலூனுக்கு வரும் கூட்டம் அதிகரிக்கிறது!! அந்த வரிசையில் எப்போது டர்பின் வருவானென காத்துக் கொண்டிருக்கறான் ஸ்வீனி!!!

ஸ்வீனி டொட்டால் டர்பனை கொல்ல முடிந்ததா? அந்தோனியும், ஜொஹான்னாவும் ஒன்று சேர்வார்களா என்பது மீதிக்கதை? என்டிங்-ல நல்ல ட்விஸ்ட்..

ஜானி டெப்பின் நடிப்பு, ஹெலனா கார்ட்டரின் (லவட்) நடிப்பு, படம் முழுதும் தொடரும் ஹாரர் கலர், பீதியையும் மறக்கச் செய்யும் காமெடி,  கன்னா பின்னாவென பீறிட்டுத் தெறிக்கும் கிராபிக்ஸ் ரத்தம் என ப்ளஸ்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் அவற்றுக்கே மணிமகுடமாகத் திகழ்வது பின்னணி இசையும் பாடல்களும்தான்...
படத்துல மொத்தம் 13 பாடல்கள்.. அதில் ஓப்பனிங்கில் வரும் "No Place Like London"பாட்டும்,  ஜானி டெப் கொலை பண்ணி்க்கிட்டே முகத்துல சாந்தத்தையும், ஆக்ரோஷத்தையும் கலந்து பாடும் "Johanna.." பாட்டும் சூப்பர்!! Finishing Touchல் டிம் பர்ட்டன் தெரிகிறார்..
மியூசிக்கல் படம்னா என்னன்னு வரைவிலக்கணமே எழுதுவார்கள் போலும்.. அவ்வளவு perfection!!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை =19
கதை+திரைக்கதை = 14
கலை+ஒளிப்பதிவு = 17
இயக்கம் = 15

மொத்தம் = 82% மிக நன்று

Sweeney Todd: The Demon Barber of Fleet Street (2007) on IMDb

6 comments:

  1. இந்த படத்த எப்படித்தான் பொறுமையா பாத்தீங்களோ...நம்மளால முடியல

    ReplyDelete
  2. அடடே லக்கி.. ரொம்ப நாளா ஆளையே காணோம்!
    நான் இந்தப் படத்தை முதன் முதலா யூ ட்யூப்ல பாகம் பாகமாத்தான் பார்த்தேன்.
    அப்லோட் பண்ணவன் முழுப்படத்தையும் chipmunk வேர்ஷன்ல டபுள் ஃபாஸ்டாத்தான் அப்லோட் பண்ணியிருந்தான். அப்ப படத்தோட நீளம் பெருசா தெரியலை...
    போனவாரம்தான் நல்ல டிவிடி எடுத்து பார்த்தேன்.

    ReplyDelete
  3. நான் இந்தப்படம் பார்க்கவில்லை.உங்கள் பதிவின் மூலமாக இப்படத்தின் தரத்தை அறிந்து கொண்டேன்.நன்றி.

    ReplyDelete
  4. நன்றியா? நீங்கள் எத்தனை நல்ல படங்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.. அவற்றின் தரத்துக்கு முன்னால் இந்தப் படம் பெருசில்லையே அண்ணா!

    ReplyDelete
  5. நன்றி அண்ணா!

    ReplyDelete

Related Posts with Thumbnails