"நைட்மேர் ஒப் த எல்ம் ஸ்டரீட்"ல் அறிமுகமாகி, பின் அதைப்போன்ற வேறொரு வெற்றிப் படமின்றி திக்குமுக்காடிக்கொண்டிருந்த ஜானி டெப்புக்கு மைல்கல் படமொன்றை வழங்கி டாப் ஹீரோக்களுல் ஒருவராகவும், most versatile நடிகராகவும் மாற்றித் தந்தவர் டிம் பேர்ட்டன்தான்.. அந்த மைல்கல் படம்தான் எட்வர்ட் சிசர்ஹான்ட்ஸ்!!!
ஒரு சின்னப் பொண்ணு தனது பாட்டியிடம் "பனி எப்படி வருகிறது?" எனக் கேட்பதாகவும், அதற்குப் பதிலாக பாட்டி ஒரு கதை சொல்வதாகவும் படம் ஆரம்பிக்கிறது.
ஒரு ஊர் எல்லையில் இருக்கும் மலையொன்றிலுள்ள பங்களாவில், சயின்டிஸ்ட் ஒருவர் செயற்கை மனிதனை உருவாக்கிக் கொண்டிருந்தார்... எட்வர்ட் எனப்படும் அந்த செயற்கை மனிதனை (ஜானி டெப்) கிட்டத்தட்ட முடித்தாகி விட்டது. இன்னும் கைகளை மட்டும் பொருத்தவில்லை. ஆனால் இந்த சயின்டிஸ்ட் எதிர்பாராவிதமாக 'ஹார்ட் அட்டாக்' வந்து இறந்து போக, எட்வர்ட் கைகளுக்குப் பதிலாக கத்திரிக்கோல்களைக் கொண்ட மனிதனாக அந்த பங்களாவில் தனித்து வாழ்கிறான்.
பல வருடங்கள் கழித்து இந்த பங்களாவுக்கு வரும் ஒரு சேல்ஸ்வுமனான "பெக்", எட்வர்டைக் கண்டு அவன்மீது பரிதாபப்பட்டு, அவனை தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போய் அங்கேயே வாழச்செய்கிறாள்.. எட்வர்ட் தன்னையறியாமலேயே பெக்கின் மகளான கிம்மை காதலிக்கத்தொடங்குகிறான். கிம்மின் பாய்ஃப்ரென்ட் ஜிம்மிற்கு எட்வர்டை அவ்வளவாக பிடிக்கவில்லை. இதற்கிடையே எட்வர்ட் தனது கத்திரிக்கோல்களைக்கொண்டு அயல்வீட்டுப் பெண்களுக்கு டிசைன் டிசைனாக முடி கத்தரித்துவிட்டு, அந்த ஊரில் மிகவும் பிரபலமாகிறான்!!
எட்வர்டின் கத்தரிக்கோல்களைக் கொண்டு எந்த வித பூட்டையும் இலகுவில் திறந்துவிடலாம் என்பதை அறியும் ஜிம், தான் van வாங்குவதற்கு தேவையான பணத்தை பெற்றோர் தர மறுத்ததால் கிம், எட்வர்ட்டின் உதவியுடன், தன் சொந்த விட்டிலேயே திருட முயல்கிறான்! அப்போது அலாரம் ஒலிக்கவே, கிம்மும் ஜிம்மும் எட்வர்டை விட்டு தப்பித்து ஓடுகிறார்கள். எட்வர்ட் தனியாக பொலிஸிடம் பிடிபடுகிறான்.. பொலிஸார் எவ்வளவு விசாரித்தபோதும் தனது காதலி கிம்மினதும், ஜிம்மினதும் பெயர்களை கூறாமல் மறைக்கிறான். இந்த சம்பவத்தால் கிம், எட்வர்ட் மீது பாசம் காட்டத் தொடங்குவதோடு ஜிம்மை வெறுத்து ஒதுக்குகிறாள். ஆனால் சுற்றுவட்டாரத்தில் எட்வர்ட்டின் புகழ் சரியத்தொடங்குகிறது.
கிறிஸ்துமஸிற்கு முதல்நாள் எட்வர்ட் அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது தவறுதலாகப் பட்டு அவனது கத்தரிக்கோல், கிம்மின் கையில் காயமொன்றை ஏற்படுத்துகிறது. இதை அவதானிக்கும் ஜிம் இதுதான் சரியான தருணமென்பதை அறிந்து எட்வர்டை தாக்கத்தொடங்குகிறான். ஊர்மக்கள் அதைப்பார்த்து எட்வர்டை காட்டுமிராண்டியெனக்கூறி அவனைப் பிடிப்பதற்கு போலீசை அனுப்புகின்றனர். எட்வர்ட் தப்பித்து தான் முன்பு இருந்த பங்களாவிற்கே ஓடி ஒளிகிறான்! அங்கு சென்று எட்வர்டை சந்திக்கும் கிம் எட்வர்டினதைப் போன்ற கத்தரிக்கோல்-கையொன்றை எடுத்து வந்து மக்களிடம் காட்டி, எட்வர்ட் துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டதாகக் கூறி நம்ப வைக்கிறாள்!!
இப்பொழுது முன்னர் வந்த பாட்டி (வயதான கிம்) தனது பேத்தியிடம் "தான் எட்வர்டை பிறகு சந்திக்கவேயில்லையென்றும், எட்வர்ட் மலையுச்சியிலிருந்து பனிச் செதுக்கல்கள் வடிவமைப்பதால்தான் இங்கு பனிமழை பொழிவதாகவும்" கூறி படத்தை முடிக்கிறாள்.
இந்தப் படம் வெளிவந்த காலத்தில் எந்தளவு தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் என்பதை இப்போது யூ-ட்யூப் கமென்ட்களில் பார்க்கும் போதே தெரிகிறது. எல்லோரும் விம்மி விம்மி அழுததை நினைவு கூறுகிறார்கள்! ரோமியோ -ஜுலியட், ஜாக்-ரோஸ் போன்று எட்வர்ட்-கிம் ஜோடியும் காலத்தைக் கடந்து மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கின்றனர்.. இந்தக்காலத்து வியூவர்ஸுக்கு படத்தில் உறுத்தல்களை பார்க்கவே டைம் போகிறது. ஆனால் ஃபேரி டேல் கதையென்பதால் அதைத் தவிர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. ஜானி டெப் ஒற்றை ஆளாக நின்று படத்துக்கு வலுவூட்டுகிறார்!!
படத்தின் இசை கச்சிதமாக பொருந்துகிறது. இதற்குப் பின் வந்த பல சோக முடிவுகளைக் கொண்ட காதல் படங்களுக்கு இந்தப்படம் இன்ஸ்பிரேஷனாக அமைந்திருக்கும் என்பதை உறுதிபடக் கூறலாம்! கிறிஸ்துமஸ் சீசனில் பொழுது போக்குக்காக பார்க்கவும், ஜானி டெப்பின் இளமைப் பருவ பெர்ஃபாமன்ஸை கண்டு களிக்கவும் உகந்த படம்...
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 17
இசை = 18
கதை+திரைக்கதை = 16
கலை+ஒளிப்பதிவு = 16
இயக்கம் = 17
மொத்தம் = 84% மிக நன்று
நல்ல விமர்சனம்.
ReplyDeleteபாராட்டுகள்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
வருகைக்கு நன்றி கண்ணன்!!
ReplyDelete// கே.எஸ் ரவிக்குமார்-கமலஹாசன்" மாதிரி //
ReplyDeleteநண்பா...........
ஒருநிமிஷம் ஆடிபோயிட்டேன்
Ed Wood எனக்கு ரொம்ப புடிச்ச படம். Z Studioவுல அடிக்கடி போடுவான்.....
Fairy டைப் கதைகள் எடுப்பதும் அதில் நடிப்பதும் அவ்வளவு சுலபம் இல்லை...........அதை perfectடா செய்யுறதுல ரெண்டு பேருமே கில்லாடிகள்
Corpse Bride - animation படம் கூட எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.....................Deppப வுடாம அதுக்கும் வாய்ஸ் குடுக்க வெச்சிருப்பாருள டிம் பர்டன்...............
அப்பறம் என்ன இவ்வளவு வெகுளியா இருக்கீங்க, இந்த கண்ணன் யாரு தெரியுங்களா ??
ReplyDeleteஇன்னொரு பதிவுல - "அங்கதான்"
- உங்க கமென்ட் - செமயா இருந்தது......................கேக்க வேண்டியத தெளிவா நச்சுனு கேட்டிருந்தீங்க..........
இவங்களோட லேட்டஸ்ட் கூட்டணி "அலிஸ் இன் வொண்டர்லேன்ட்" போன வருஷம் வெளிவந்து வசூலை வாரிக்குவித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்//
ReplyDeleteஅப்படியா படம் சரியா ஓடலைனு நினைக்குறேன்,
பாக்ஸ் ஆபிஸ் வசூல்: $1,024,299,904
Deleteவிகடன் மாதிரி மார்க்கெல்லாம் போட்டு இருக்கீங்க
ReplyDeleteஉங்கள் அனிமேஷன் பட விமர்சனங்களுக்கு நான் ரசிகன்
ReplyDelete@ கொழந்த - கண்ணன் யாருன்னு எனக்கு தெரியாது நண்பா..
ReplyDelete//இன்னொரு பதிவுல - "அங்கதான்"
- உங்க கமென்ட் - செமயா இருந்தது//
அங்கயும் போய்ப் பார்த்துட்டீங்களா? அந்த விஷயத்துல என்னாலஒத்துப் போக முடியலை..
கருந்தேள் பதிவுலயே எழுதலாம்னு தான் நினைச்சேன். ஆனா 2 நாள் கழிச்சு வந்த படியா கன்வர்சேஷன்ல join பண்ணிக்க முடியலை!
@ டெனிம் - Alice in Wonderland டாப் grossing filmsல 9வதா இருக்கே!
//விகடன் மாதிரி மார்க்கெல்லாம் போட்டு இருக்கீங்க//
இந்த உவமையில் ஏதும் உள்ளர்த்தம் உண்டோ??
//உங்கள் அனிமேஷன் பட விமர்சனங்களுக்கு நான் ரசிகன்//
என்ன இருந்தாலும் உங்களை மாதிரி அனிமேஷனையே பிரிச்சு மேய்ஞ்சு என்னால எழுத முடியாது!
ரொம்ப நல்ல விமர்சனம்.தொடர்ந்து உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.நன்றி
ReplyDelete