8 நிமிடங்கள் முடிய, ஸ்டீவன்ஸ் இறந்து நிஜ உலகத்திற்குத் திரும்புகிறான். ஆனால் அருகில் கிறிஸ்டினா இல்லை.. எப்படி? குண்டு வெடிக்கும் போது அவர்கள் இருவரும் ரயிலை விட்டு வெகு தூரத்தில் இருந்தார்களே! என சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே குட்வின் விளக்குகிறாள்..
" சோர்ஸ் கோடில் நீ பார்க்கும் நிகழ்வுகள், மனிதர்கள் எல்லாம் எப்போதோ முடிந்து விட்டவை.. நீ என்னதான் முயற்சி செய்தாலும்அவர்கள் உயிருடன் திரும்ப மாட்டார்கள்.
எங்களுக்கு நேரம் வேறு இல்லை. இரண்டாவது பாம் வைத்து முடிப்பதற்குள் நீ வைத்தவனை மாத்திரம் அடையாளம் கண்டு வந்து சொல்லு.." என்கிறாள்.
ஸ்டீவன்ஸ் தனது தந்தையுடன் ஒரு தடவை தொலைபேசியில் பேசலாமா என கேட்கிறான்.. ஆனால் நிஜ உலகில் தான் அவன் இறந்து விட்டானே எனக் கூறி மறுக்கிறாள்..
அடுத்தடுத்த மிஷன்களில் அதிரடியாக செயற்பட்டு ஒருவழியாக குற்றவாளி யாரென்பதை குட்வினுக்கு அடையாளம் காண்பிக்கிறான். அங்கிருந்து பொலீஸுக்கு தகவலனுப்பி 2வது குண்டை வைக்க கிளம்பிக் கொண்டிருந்த தீவிரவாதியை மடக்கிப் பிடிக்கிறார்கள்!! சோர்ஸ் கோட் முறையின் ஆரம்ப முயற்சியே அமோக வெற்றியளித்துள்ளது!! டாக்டர். ரட்லெஜ்ஜுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன...
ஸ்டீவன்ஸ் நிதானித்து சிந்திக்கின்றான்.
ஸ்டீவன்ஸை பொறுத்தவரை இதுவரை சோர்ஸ் கோட்தான் நிஜ உலகம்.. அங்குதான் அவனால் சுதந்திரமாக நடக்கவும், சுவாசிக்கவும், காதலிக்கவும் முடிந்தது.. நிஜ உலகில் அவன் ஒரு வெற்று பொம்மை.. அவனை வைத்து காரியம் முடிந்தவுடன், எல்லா மெமரியையும் அழித்து வேறு சோர்ஸ் கோட் பயணத்திற்கு அனுப்பி விடுவார்கள்...
ஸ்டீவன்ஸ் குட்வினிடம், "தன்னை இறுதியாக ஒருமுறை சோர்ஸ் கோடிற்குள் அனுப்புமாறும், சோர்ஸ் கோடில் இருக்கும் போதே, 8 நிமிடங்கள் முடியும் முன்னரே.. பரிசோதனைகூடத்தில் அவனுக்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை உணர்வூட்டல் செயற்பாட்டை துண்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறான்.
சோர்ஸ் கோடுக்குச் செல்லும் ஸ்டீவன்ஸ் முதலில் குண்டை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்கிறான். பின் க்றிஸ்டினாவின் தொலைபேசியைக் கொண்டு தந்தைக்கு போன்கால் செய்கிறார். தான் ஸ்டீவன்ஸ் உடனிருந்த நண்பன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தந்தையுடன் மனம்விட்டுப் பேசுகிறான்.. க்றிஸ்டீனாவையும் கூட்டிக் கொண்டு ரயிலிலிருந்து வெளியேறிச் செல்கிறான்.
நிஜ உலகில் குட்வின் ண்டீவன்ஸின் செயற்கை உணர்வூட்டலை துண்டிக்கிறாள்.. விளைவு??
ஸ்டீவன்ஸின் மனது, சீன் வென்டரஸின் உடலில் நிலைகொள்கிறது.. உலகிற்கு சமாந்தரமான இன்னோர் மெய்நிகர் உலகில் அவன் கிறிஸ்டீனாவுடன் சேர்ந்து, அவன் தேடிய நிம்மதியான வாழ்க்கையை வாழ்கிறான்.
ஸ்டீவன்ஸின் உடல் ஆய்வுகூடத்தில் கத்திரமாக இருக்கிறது. மீள உணர்வூட்டப்படும் போது அது இன்னுமோர் சோர்ஸ் கோட் மிஷனுக்கு பயன்படுத்தப்படலாம்..
படம் என்னமோ இத்துடன் முடிந்துவிடும்.. ஆனால் எழும் லாஜிக் கேள்விகள் தான் குடைச்சல் கொடுக்கின்றன. எந்தவித சந்தேகமுமின்றி உங்களுக்கு படத்தை விளங்கிக்கொள்ள முடிந்திருந்தால் நீங்கள் சயின்ஸ் பிக்ஷனை கரைத்துக் குடித்த ஆசாமியாகத்தான் இருக்க முடியும்.
படத்தில் விறுவிறுப்புக்கு குறைவே இருக்காது.. டைரக்டர் Moon படத்தை இயக்கிய Duncan Jones தான். தாராளமாக இவரிடமிருந்து தரமான சயின்ஸ் படங்களை எதிர்பார்க்கலாம். நேரமிருந்தால் கண்டிப்பாக இந்தப் படத்தை பாருங்கள்!!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 15
இசை = 16
கதை+திரைக்கதை = 18
கலை+ஒளிப்பதிவு = 15
இயக்கம் = 16
மொத்தம் = 80% மிக நன்று
எப்படி நினைவுக்குள் இருந்து கொண்டு போன் பேச முடிகிறது? ஈமெயில் கூட அனுப்புறார்! கனவில் இருந்து SMS அனுப்பினாலும் வரும் போல இருக்கல்லவா?
ReplyDeleteலாஜிக் பார்த்தா எந்த சயின்ஸ் பிக்ஷன் படமுமே எடுபடாது :)
ReplyDeleteஎனிவே, சோர்ஸ் கோடுங்கறது சமாந்தர மெய்நிகர் உலகம்.. கனவுங்கறதையும் தாண்டி! அந்த 8 நிமிடங்களுக்கு நம் உலகத்தோடுடு சேர்ந்தே,விஞ்ஞான வழிகளால் அறிந்து கொள்ள முடியாத இன்னோர் உலகமும் தொழிற்படுகிறது.. ஒரே நேரத்தில் ஒரே ஜீவன் இரண்டு உலகிலும் இருக்க சாத்தியம் இருக்கிறது. ஆனால் ஒரு உலகத்திலிருந்து, இன்னோர் உலகத்துக்கு தாவுவதற்கு அது இரண்டில் ஒரு உலகத்தில் (படத்தின் படி நிஜ உலகில்) இறந்திருக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அது Paradox ஆயிடும்!
ஆனால் இந்த உலகில் இருந்து மத்த உலகிற்கு செல்போன் மூலம் கனெக்ட் செய்வதெல்லாம் timelineகளோடு விளையாடும் செயல்.. இதற்கு விளக்கமெல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்!