Friday, March 16, 2012

Hugo (2011)

 ஆஸ்கர் நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பிடித்த நாளிலிருந்து, தேடித்தேடி கடைசியில் ஒருவழியாக பார்த்தே விட்டேன் ஹியூகோ படத்தை.. ஆனால் பார்த்த பின்பு இதுக்கு இவ்வளவு எதிர்பார்த்திருக்கத் தேவையில்லையே என்ற ஓர் எண்ணம் மனதில் ஓடுகிறது!

பாரீஸில் வாழும் ஹுயூகோ கப்ரெட் எனும் சிறுவன், இறந்து போன தந்தை தனக்கு கடைசியாக கொடுத்த ஒரேயொரு க்ளூவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி, இறுதியில் உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பிரபலத்தை மீண்டும் புகழுக்கு கொண்டு வரச் செய்வதே கதை.

மார்ட்டின் ஸ்கார்சேஸி படம்னாலே கண்டிப்பாக எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்.. அதுவும் ஸ்கார்சேஸி குழந்தைகளுக்காக 3டி படம் எடுக்கப் போறார்னு கேள்விப் பட்டா சும்மாவா இருப்பாங்க?? உலகமெங்கும் சினிமா ஆர்வலர்களால் எதிர்பார்க்கப்பட்டு வெளியாகிருக்கிறது. படத்தை பார்த்த அனைவராலும் வாயாரப் புகழப்பட்டும் இருக்கிறது.. ஆனால் எனக்கு குழப்பமாகப் படும் மேட்டரே, பலர் இந்த படத்துக்கு கொடுத்த 5-ஸ்டார் ரேட்டிங்தான்..
5-ஸ்டார் ரேட்டிங்க்னா படத்துல எதிர்பார்க்கும் விடயம் perfection! ஒரு Shawshank Redemption, Godfather, Forrest Gump மாதிரி.. இந்தப் படம் ?? அந்த கேட்டகரிக்குள் வர முடியாது.

படத்தின் கதை இரு வேறு கான்செப்ட்டுக்களை ஒன்றிணைத்திருக்கும் முயற்சி போலப் படுகிறது. அதுவும் இடைவேளைக்கு முன்னும், பின்னுமாக தலா 5 நிமிட சீன்களை வெட்டிவிட்டால், முதல்பாதிக்கும் பிற்பாதிக்கும் சம்பந்தம் கண்டுபிடிப்பதே கஷ்டம்!
படம் என்னவோ ஏழாம் அறிவு மாதிரித்தான்.. திரையுலகத்தினரால் மறக்கப்பட்டிருக்கும், visual effects-இன் தந்தையெனக் கருதப்படும் ஜோர்ஜ் மெலியஸ் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணம்தான் படத்தோட மெயின்- கான்செப்ட்.. ஏழாம் அறிவைப் போலில்லாமல், முயற்சி எல்லாரிடமும் நன்கு போய் சேர்ந்திருக்கிறது..

ஜோர்ஜ் மெலியஸ் பற்றி படத்தில் கூறப்பட்டிருக்கும் பலவும் உண்மையே... (மெலியஸ் இறுதியில் காசுக்கு வழியில்லாமல் பொம்மைக்கடை நடத்தியது வரை!) இவரு வெளியிட்ட உலகின் முதலாவது சயின்டிஃபிக் படமான A Trip to the moon இன்னும் யூ-ட்யூபில் பத்திரமாக இருக்கிறது.. விரும்பினால் இங்கு க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்! இவரைப் பத்தி நான் முதலில் அறிந்து கொண்டது ஹாலி-பாலாவின் பதிவில் தான்.. ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.. அதையும் சென்று படித்துக் கொள்ளவும்!

ஆனால் இந்த சிறுவர்களின் கதை??... பேசாம ஒரு டாகுமென்டரி படம் எடுத்திருந்தால் ஜோர்ஜ் மெலியஸ் பற்றி இன்னும் அழகாக அறிந்திருக்க முடியும்.. அல்லது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான 3டி படமாக எடுத்திருந்தால் இன்னும் நல்ல பொழுதுபோக்காகவாவது அமைந்திருக்கும்.. இந்தப் படம் இரண்டிலும் 75% வரை வந்து அங்கேயே நின்றுவிடுகிறது!! ஒரு நாவலை தழுவி எடுக்கப்பட்ட படமென்பதால் இந்த குறையை தவிர்க்க முடியாதென்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது..

சாதாரணமாக, படத்தில் நடிக்கும் சிறு பிள்ளைகளின் நடிப்பை பற்றி நான் அலட்டிக் கொள்வதில்லை. ஆனாலும் படத்தின் பிரதான கதாப்பாத்திரமான ஹியூகோவாக நடித்திருக்கும் Asa Butterfield-இன் நடிப்பு சில இடங்களில் உறுத்துகிறது. Boy in the striped pyjamasல் காட்டிய நடிப்புக்கும், இதுக்கும் ரொம்ப வித்தியாசம்! தனது தந்தை இறந்துவிட்டதை கேள்விப்படும் சீனிலும், ஆட்டோமேட்டான் அரைவாசியில் நின்றுவிடும்போது கோபப்படும் சீனிலும் செயற்கைத்தனம் எட்டிப் பார்க்கிறது.. இந்த சின்ன குறையை தவிர்த்திருக்கலாம்!

படத்தின் 3டியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். படத்தில் முதலாவது சீனில், பாரீஸ் நகரத்தை மேலிலிருந்து, லோ ஆங்கிளில் காட்டிக் கொண்டே கீழிறங்கும் அந்தக் காட்சியிலேயே 3டியின் தரம் விளங்குகின்றது.. மெலியஸின் காட்சிகளை காட்டும் சீன்களுக்கு பக்க பலமாக 3டி அமைகின்றமை சிறப்பு! 170 மில்லியன் செலவு பண்ணி 3டியை முழு வீச்சில் உபயோகப்படுத்தி ஆஸ்கரும் வாங்கவைத்துவிட்டார் நம்ம ஸ்கார்சேஸி.. இருந்தாலும் ஹியூகோவுக்கு வரும் கனவு சீன்களெல்லாம் படத்துக்கு தேவையில்லாதது என்பது எனது கருத்து.. (படம் பார்க்கவரும் குழந்தைகளை உற்சாகப்படுத்த அதை வைத்திருந்தார் போலும்..)
நவம்பரில் வெளியான இந்தப் படம் இன்னும் போட்ட முதலை எடுக்கவில்லையென்பது சிறு அதிர்ச்சியே!

ரொம்ப நெகட்டிவான விமர்சனமாகத் தோன்றினால் மன்னித்துவிடவும்.. ஹியூகோ 5-ஸ்டார் போடுமளவுக்கு perfect ஆன படம் இல்லையெனக் கூறவே இந்த பாயின்டுகளை முன்வைக்க வேண்டிய அவசியம் வந்தது.. இந்தப் படம் எப்படியும் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு இப்போதிருக்கும் அளவுக்கு, ரசிகர்களால் கொண்டாடப்படாது என்பது எனது கணிப்பு..
இருந்தாலும் இது நல்ல படமில்லை என்று நான் சொல்லவேயில்லையே.. எல்லாரும் கண்டிப்பாக ஹியூகோ படத்தை பாருங்கள்.. 3டியை நன்கு அனுபவியுங்கள்! திரையுலகத்தின் தந்தையாகிய ஜோர்ஜ் மெலியஸுக்கு நீங்கள் செலுத்தும் சிறு நன்றியாக அது அமையும்!!

(கடைசியாக.. "நான் இந்தப் படத்தை வெறுக்கவில்லை...". நம்பாவிட்டால் என் ரேட்டிங்க்ஸ் இன்னும் பாஸிட்டிவ்வாகத்தான் இருக்கிறது, பாருங்கள்!)

ரேட்டிங்க்ஸ்,
நடிப்பு = 15
இசை = 16
கதை+திரைக்கதை = 14
கலை+ஒளிப்பதிவு = 18
இயக்கம் = 16

மொத்தம் = 79% மிக நன்று!

Hugo (2011) on IMDb

12 comments:

  1. என் விமர்சனத்தில் சொன்னது போல //படம் முடிந்த பின் அந்த “நெஞ்சைத் தொட்டுவிட்டது டச்” மனதில் வரவில்லை. மனதில் பாதிப்பை ஏற்படுத்தவும் இல்லை. வடிவேலு மாதிரி சொன்னா “இருக்கு ஆனா இல்லை”. ஆனால் பார்த்தால் மனதில் ஒரு திருப்தி வருவது நிச்சயம்.// அந்த திருப்தி 3டிக்காகவும் இருக்கலாம்.

    //நவம்பரில் வெளியான இந்தப் படம் இன்னும் போட்ட முதலை எடுக்கவில்லையென்பது சிறு அதிர்ச்சியே!//
    வாட்???? ஆனால் IMDBயில் உள்ள தகவலுக்கும் விக்கிபீடியாவில் உள்ள தகவலுக்கும் வேறுபாடு இருக்கே?

    விமர்சனம் பக்கா ... நீங்க ஃபீல் பண்ணினதை அழகா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  2. @ ஹாலிவுட்ரசிகன் -ரொம்ப நன்றி நண்பா!

    //அந்த திருப்தி 3டிக்காகவும் இருக்கலாம்.// இதையேதான் நானும் யோசிச்சேன்!

    பல இடங்களில் செக் பண்ணிட்டேன் பாஸ்! மார்ச் தொடக்கம் வரை 165 மில்லியன் சம்பாதிச்சிருக்கு..
    (5 மில்லியன் தான் குறைவுன்னாலும், ஸ்கோர்சீஸ் படத்துக்கு இது நடப்பது அதிர்ச்சிதான்!)

    ReplyDelete
  3. வர...வர...த்ரீ டி படம் என்றாலே வெறுப்பாகி விட்டது.
    டிவிடியில் பார்க்கலாம் என்றிருந்தேன்.
    தங்கள் விமர்சனத்தால் டிவிடியிலும் பார்க்கப்போவதில்லை.
    எச்சரித்ததற்க்கு நன்றி.
    ஷட்டர் ஐலேண்ட் மார்டின் ஸ்கார்சியின் மாஸ்டர் பீஸ் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    ReplyDelete
  4. @ உலக சினிமா ரசிகன் -
    //வர...வர...த்ரீ டி படம் என்றாலே வெறுப்பாகி விட்டது.//
    காரணம் என்னவோ?

    //தங்கள் விமர்சனத்தால் டிவிடியிலும் பார்க்கப்போவதில்லை.//
    என்ன சார்? ஏன் இந்த அதிரடி முடிவு? பார்க்கவேண்டாம்னு நான் சொல்லலையே.. உங்கள் பார்வை என் பர்வையிலிருந்து மாறுபடலாமில்லையா?

    //ஷட்டர் ஐலேண்ட் மார்டின் ஸ்கார்சியின் மாஸ்டர் பீஸ்//
    அதே தான்.. எல்லாருமே "டிபார்டட்" தான் ஸ்கோர்சீஸின் பெஸ்ட் என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். ஷட்டர் ஐலண்ட் பார்வையாளர்களுக்கு கொடுக்கும் ஃபீலே தனி! அது ஆஸ்கருக்கு நாமினேட் பண்ணப் படாததால் ஒன்றும் அதன் தரம் குறைவாக இல்லைங்கறத பலர் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்க!!

    ReplyDelete
  5. யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற்றுவிட்டீர்கள்....டாகுமெண்டரியா எடுக்க வேண்டியத எதுக்கு படமா எடுத்தான்களோ...

    ReplyDelete
  6. @ லக்கி - எல்லாருமே இந்த சைடு தானா? வெரிகுட்!

    ReplyDelete
  7. நான் மட்டும் ஏன் தப்பிக்கணும்.. நாளைக்கு இந்த படத்த பாக்க போறேன்.. :)

    ReplyDelete
  8. @ Castro Karthi - பார்த்துட்டு உங்க கோணத்தையும் சொல்லுங்க நண்பா!

    ReplyDelete
  9. நண்பரே என் மேல நிறைய கோபம் இருக்கும் தங்களுக்கு..என்னடா நான் விமர்சனங்கள் பண்ணியாச்சே..இந்த மலேசியாக்காரன் வந்து ஒரு வார்த்தக்கூட சொல்லலியே என்று..சில பிரச்சனைகள்.அதனால்தான் இணைப்பக்கம் வரவில்லை.மன்னிக்கவும்.
    நண்பரே, இந்த இப்பதான் பார்த்து ஆறு நாட்கள் ஆகுது.பதிவுக்கூட பண்ணிட்டு இருக்கேன்..இயக்குனரிடமிருந்து ரொம்ப நாட்கள் சென்று, ஒரு வித்தியாசமான படைப்பாக ஹூகோவை சொல்லலாம்.டெக்னிக்கல் அளவில் படம் மிக்க நன்று.இரண்டு மணி நேர பொழுதுப்போக்கு அம்சங்கள் நிறைந்த அழகான படம்..குறைகள் (நீங்கள் சொன்னதுப்போல) இருந்தாலும் பாசிட்டிவ் விஷயங்கள் இதனை மறைத்துவிட்டன.பலரும் மறந்துப்போன ஒரு ஆரம்பக்காலத்து சினிமா மேதையை முன்க்கொண்டு வந்து இன்றைய ரசிகர்களுக்கு சொல்ல முயற்சித்துள்ளார்கள்.
    தங்களது விமர்சனம் வழக்கம் போல அருமை..சரிப்பாதியாக விமர்சித்து உள்ளீர்கள்.நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. @ குமரன் - இப்பதான் உங்கமேல எனக்கு கோபம் வருது!! நான் என்னை உங்க ஸ்கூல் வாத்தியாரா பாஸ்?.. நீங்க ஆப்சன்ட் ஆவுறதுக்கு காரணம் கேட்க...
    எல்லாருக்கும் அவங்கவங்க பிரச்சனை தான் நண்பா.. (நானெல்லாம் ஆப்சன்ட் ஆனா திருப்பி வர 6 மாசத்துக்கும் மேல ஆவும்.. ஹி.. ஹி..)
    தொடர்ந்து பதிவுலகத்துல சுத்திகிட்டிருக்கும் நீங்க வேலைப்பளு காரணமாக ஓரேடியா ப்ளாக் எழுதுறதை விட்டுட்டீங்களோன்னுதான் கொஞ்சம் கவலைப்பட்டிருந்தேன்.. வெல்கம் BACK !!

    கருத்து சொன்னமைக்கு நன்றி நண்பா.. உங்க அடுத்த பதிவு உடனடியாக வரவேண்டி வெயிட்டிங்!!

    ReplyDelete
  11. நடு நிலை விமர்சனம், நான் கூட இந்த ரொம்ப சூப்பர் சொல்ற அளவு எல்லாம் இல்லை.

    ReplyDelete
  12. @ MuratuSingam - நீங்க நடுநிலைன்னு சொல்றீங்க.. நான் வாசித்து பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் நெகடிவ்வான விமர்சனம் மாதிரிதான் பட்டிச்சு! கருத்துக்கு நன்றி!!

    ReplyDelete

Related Posts with Thumbnails