Wednesday, March 7, 2012

Woman in Black (2012)


மூன்று சின்ன பெண் பிள்ளைகள், தங்கள் பொம்மைகளுடன் டீ கொடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.. திடீரென முன்று பேரும் திரும்பி ஒரே திசையில் அறையின் கதவைப் பார்க்கின்றனர்.. அவர்களது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.. ஏதோ நினைத்தவர்களாய், இயந்திரம் போல நடந்து சென்று அந்த அறையின் ஜன்னல்களுக்கு நேராக நிற்கின்றனர்... மூன்று பேரின் அளவில் முன்று ஜன்னல்கள்.. அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கின்றனர்!!! அப்படி அவர்கள் என்னதான் பார்த்தார்கள்??

Woman in Black-ஐப் போல எதிர்பார்ப்பைக் கிளப்பிய பேய்ப் படமெதுவும் சமீபத்தில் வந்ததாக ஞாபகம் இல்லை.. (Paranormal Activity 3ஐயும் சேர்த்துதான்..)
"Radcliffe பேய்ப் படம் நடிக்கறானாம்...." நண்பர்களெல்லாம் "ட்ரெயிலரை பார்த்தியா? அந்த கடைசி சீன்?"னு கேட்டு கேட்டே என்னையும் பார்க்க வைத்து விட்டார்கள்! "ஆ.. ஓ..ன்னு கடைசியில் திடீர்னு வரும் மயிர்க்கூச்செறியும் சத்தங்களில்லாமல் ஒரு அமைதியான ட்ரெயிலர்! அதை பார்த்ததிலிருந்து படத்துக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.. அதுக்கும் மேலாக whatdidtheysee.com!! ஒரு பேய்ப்படத்துக்கு வித்தியாசமான முயற்சிதான்! (பார்க்காதவர்கள் போய் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். உங்கள் webcamமை ஆன் செய்து கொள்ளுங்கள்..)
இவ்வளவு பில்டப் கொடுத்த படம், பார்ப்பதற்கு எப்படியென்றால்?.... முக்கால்வாசிதான்!

ஒரு தசாப்த காலமாக ஹாரிபாட்டராக கலக்கிக் கொண்டிருந்த Daniel Radcliffe ஆர்த்தர் எனும் சொலிசிட்டராக.. மனைவி இறந்து போயுள்ள நிலையில், தனது ஒரே மகனைப் பாசத்துடன் வளர்த்து வருகிறான். நிதிப் பிரச்சனைகள் காரணமாக, கண்டிப்பாக செய்தே ஆகவேண்டுமென்ற கட்டாயத்துடன் ஒரு கேஸ் இவனுக்கு தரப்படுகிறது...

ஒரு சிறு கிராமத்தில் உள்ள சிறுவர்கள் எல்லோரும் உயிரபாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.. காரணம் கறுப்பு உடையணிந்த ஒரு பெண் பேய்!! அப்பேயை யாராவது பார்த்தால், வெகுவிரைவில் அந்த கிராமத்தில் ஒரு பிள்ளையின் மரணம் சம்பவிக்கும்!

அந்தப் பேய் Eel Marsh House எனும் வீட்டில் அடிக்கடி நடமாடுவதாக தகவல் கிடைக்கிறது.. அந்த வீட்டிற்கு சொந்தக்காரர்கள் ட்ராப்லோவ்-அலிஸ் எனும் தம்பதி.. இவர்களது மகனான நதானியல் என்பவனும் பல வருடங்களுக்கு முன்பு சகதியில் மூழ்கி இறந்திருக்கிறான்!
யார் அந்த Woman in Black? ஏன் சின்னப் பிள்ளைகளை அவள் கொல்ல வேண்டும்? எனும் கேள்விக்கான விடை சில ட்விஸ்டுகளுடன் படத்தில் உங்களை வந்து சந்திக்கும்..

இந்தப் படம் Susan Hill என்பவரால் 1983ல் இதே தலைப்பில் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை 1989ல் டி.வி சீரீஸாகவும் வெளிவந்திருக்கிறது. அப்போ பார்ப்பதற்கு எப்படி இருந்திருக்குமென்று தெரியாது.. ஆனால் இந்தப் படம் பார்க்கும் போது ரொம்பவே பழைய பேய்ப்படத்திற்கான அறிகுறிகள் அங்கங்கு தென்படுகின்றன..

இன்னும் டானியலை ஹாரிபாட்டர் என்னும் விம்பத்திலிருந்து வெளியே கொண்டு வந்து பார்க்க முடியவில்லை.. பேனையைக் கையில் உருட்டிக்கொண்டு இருக்கும் சீனில் கூட, கையில் மந்திரக்கோல் இருப்பது போலவே தோன்றுகிறது. (இது எவ்வளவு வருஷத்துக்குத்தான் கன்டினியூ ஆகுமோ?). டானியல் மற்ற எல்லாரையும் விட கட்டையாக இருப்பது ரொம்பவே உறுத்துகிறது!. இருந்தாலும் டானியல் இல்லாவிட்டால் படம் 89 மில்லியன் வசூலித்திருக்குமா என்பது சந்தேகமே! டானியலின் மகனாக நடித்திருப்பது உண்மையில் டானியலின் godsonஆன Misha Handly..  பையனுக்கு இப்பவே ரசிகர் பட்டாளம் உருவாகிக் கொண்டிருக்கிறது!

ஒரு பக்கம் பச்சைப் பசேலென்ற மலைப்பாங்கான தரையில் ஒரு கிராமம், இன்னொருபக்கம் மண்ணும் சகதியுமாக பரந்து செல்லும் சமதரையின் நடுவில் ஒரு குன்று.. அழகழகாக லான்ட்ஸ்கேப்புகள் கிடைக்கும் போது ஒளிப்பதிவைப் பற்றி கேட்கவும் வேண்டுமா? கண்ணுக்கு விருந்தளிக்கிறது..
வழக்கமான பேய்ப்படங்களைப் போலவே இதிலும் இசை நன்கு வலுவூட்டுகிறது. அதுவும் ஆத்தர் Eel Marsh House ல் இருக்கும் போது சவுண்ட் எபெக்ட்ஸெல்லாம் தூக்கலாக இருக்கிறது.. ஸ்பீக்கர் சத்தத்தை கூட்டி வைத்துக் கேளுங்கள்.. உங்களது வீட்டிற்குள்ளிருந்தே காற்று, சத்தங்கள் வருவது போலிருக்கும்! (நல்லவேளை நான் பகலில் பார்த்தேன்... ரிஸ்க் எடுப்பவர்கள் கதி என்னவோ??)

க்ளைமாக்ஸ் சீன் நெருங்க, நெருங்க பயமுறுத்தும் டெக்குனீக்குகள் அளவுக்கு அதிகமாவே அதிகரிக்கின்றது.. அப்பப்போ "ஆ..ஓ.." சவுண்டைப்போட்டு நிம்மதியைக் கெடுக்கிறார்கள்.. ஆனா சுவாரஸியம் எகிற மாட்டேங்குது..(ட்ரெயிலருக்கு அப்படியே நேர்மாறு!!) முதல்பாதியில் திரைக்கதை பேய்ப்படங்களின் தரத்துக்கு குறைவாகவே தென்படுகிறது.. வசனம் எதுவுமே அழுத்தமா இல்லை... இயக்குனர் பாதிவேலையை மட்டும் செய்துட்டு படத்தை முடிச்சிருக்கிறார்!! இருந்தாலும் ஹாரர் ரசிகர்களுக்கு இன்னொரு "ட்ரீட்"டாகவே இந்தப் படம் அமையும்.

யாராவது ரிஸ்க் எடுத்து ராத்திரி தனியாக பார்த்துவிட்டு, எப்படி அனுபவம்னு சொல்லுங்களேன்..?

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 11
இசை = 15
கதை+திரைக்கதை = 11
கலை+ஒளிப்பதிவு = 15
இயக்கம் = 10

மொத்தம் = 62% நன்று!

The Woman in Black (2012) on IMDb

14 comments:

 1. இந்த படத்தை ஐஎம்டிபியில் பார்த்தேன்..அப்பொழுதே டவுன்லோடு போட வேண்டும் என்று நினைத்தேன்.நல்ல பிரிண்டுக்காக காத்திருக்கிறேன்.வந்துவிட்டதா என்று தெரியவில்லை..

  தங்களது விமர்சனங்களை பற்றி சொல்ல என்ன இருக்கிறது..வழக்கம் போலவே புதிய தகவல்களோடு சுவாரஸ்யமாக தந்துள்ளீர்கள்.மிக்க நன்றி..

  இப்போது படங்கள் பார்ப்பது அதிகரித்துவிட்டதோ நண்பரே ?? வாரம் தவறாத நல்ல படங்களை எழுதுகிறீர்கள்..தொடரட்டும் தங்களது இனிய பணி.வாழ்த்துக்கள்/

  ReplyDelete
 2. @ Kumaran - நான் ஆன்லைனில் பார்த்தேன். அது நல்ல ப்ரின்ட் தான் ..
  படங்கள் பார்ப்பது அதிகரிக்கலை நண்பா.. எழுதுவதுதான் அதிகரிக்கிறது. இப்போதெல்லாம் கேம்ஸிலிருந்து முடிந்தவரை விலகிருக்கிறேன்.

  ReplyDelete
 3. பாஸ்,
  நல்ல அறிமுகம் மற்றும் நல்ல எழுத்து நடை. கடைசி வரைக்கும் சஸ்பென்சை நீங்க சொல்லவே இல்ல. நான் இன்னும் படம் பார்க்க வில்லை. இந்த படம் தமிழ்ல வேற டப் பண்ணிஇருகாங்கன்னு நினைக்குறேன். ஏதோ டிவில ட்ரைலர் பார்த்ததாக ஞபாகம்.
  அப்புறம் இந்த படத்துல Danniel Radcliffe நடிச்சு இருக்கறது எனக்கு புது தகவல்.

  ReplyDelete
 4. @ ராஜ் - சஸ்பென்சுக்காகவாவது படம் பார்க்கனும் இல்லையா?? தமிழ்ல "தி உமன் இன் பிளாக்"னு டப் பண்ணியிருக்காங்க. ஆனா அதுல பார்த்தா சுவாரஸ்யம் குறைஞ்சுடும்!

  ReplyDelete
 5. ஹோலி ஷிட் ... ஏன்பா அந்த வெப்சைட் லிங்க் கொடுத்தீங்க? இன்னிக்கு இரவு தூங்கின மாதிரி தான் .... ஹார்ட் டப்புன்னு நின்னு ரிடர்ன் வந்துது. நல்ல முயற்சி.

  நானும் BRRIPக்கு தான் வெயிட்டிங். இன்னும் வரவில்லை. விமர்சனம் நல்லாயிருக்கு. ஆனால் போட்டோக்களில் கூட டானியலை ஒரு அப்பா கேரக்டராக நினைக்க முடியவில்லையே.

  ReplyDelete
 6. @ ஹாலிவுட்ரசிகன் -
  //இன்னிக்கு இரவு தூங்கின மாதிரி தான்//
  ராத்திரி தூங்க முடியாம இருந்தா, இந்த படத்தை டி.வில போட்டு பார்க்கலாமே.. பொழுது போகும்!

  பாவம் டானியல். என்னதான் தாடி, மீசையெல்லாம் வளர்த்துக்கிட்டு வந்து நின்னாலும் சின்னப்புள்ள சின்னப்புள்ளதான்!!

  ReplyDelete
  Replies
  1. பொழுது போகுதோ இல்லையோ ... உசிரு போயிரும். ஹி ஹி ... எனக்கு கொஞ்சம் பயந்த சுபாவம்.

   Delete
 7. One of the mokkaiest so - called ghost movie i have ever seen...

  IMHO, utter waste.....

  ReplyDelete
 8. அட இந்த படம் ரிலீஸ் ஆகிருச்சா .. நான் எடுத்துகிட்டு இருக்காங்கனு நினைச்சேன். நமக்கும் பயந்த சுபாவம் தான்... இருந்தாலும் பாப்போம்..விமர்சனம் அருமை இம்முறை...

  ReplyDelete
 9. @ கொழந்த - பார்த்து நொந்து போயிட்டீங்களா? ஐயோ பாவம்..

  @ லக்கி லிமட் - நன்றி லக்கி, பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க..

  ReplyDelete
 10. விமர்சனம் நல்ல இருக்கு...விமர்சனம் படத்தை பார்க்க அவளை ஏற்படுத்தினாலும் ....கொழந்த சொல்றத பார்த்தா இது நம்ம படம் கிடையாது போல...........

  அது என்ன IMHO ???

  ReplyDelete
 11. @ Muratusingam - தொடர்ந்து வாசிச்சு கமென்டிட்டுக்கிட்டே இருக்கீங்க.. ரொம்ப நன்றி நண்பா! உங்க டைப் இல்லைன்னா ஃப்ரீயா வுடுங்க.. இத விட செமத்தியான பேய்ப்படங்கள் 2012ல் இன்னும் ரிலீசாகக் காத்திருக்கு!!
  * IMHO = In My Humble Opinion

  ReplyDelete

Related Posts with Thumbnails