Friday, February 17, 2012

Primer (2004)- 3

நண்பர்களே, திங்கட்கிழமை ஒரே நேரத்தில் இரண்டு அபேக்கள் உலவியதால் அபே:0,  அபே:1 எனும் குறியீட்டுப் பெயர்களின் உபயோகம் அவசியமாக இருந்ததது. எனினும் அவை தற்காலிகமானவையே. 2.45ற்குப் பிறகு உலகத்தில் இருக்கப்போவது ஒரேயொரு அபேதான்.. அப்போ இந்த எண்களைப்போடுவதில் அவசியம் இருக்காது அல்லவா?

அது மட்டுமன்றி இனி இருவரும், ஒவ்வொருநாளும் ஒரு தடவை வீதம் காலப் பயணம் செய்யப் போகிறார்கள். அவர்களை அபே:2, அபே:3, அபே:4 என சுட்டுவது தேவையில்லாதது.
(அபே:2ம், அபே:4ம் சந்திக்க வாய்ப்பே இல்லை என்பதால்...) அதனால், ஒவ்வொரு தினத்திலும் பாக்ஸிற்குள நுழைய முன் இருப்பவர்களை 0 என்ற எண்ணாலும், பாக்ஸிற்குள் நுழைந்து காலப்பயணம் செய்து வருபவர்களை 1 என்ற எண்ணாலும் சுட்டப்போகிறேன்..

செவ்வாய்க்கிழமை

தனது காலப்பயணத்தேவைக்காக ஆரன் தனக்கென ஒரு பாக்ஸை உருவாக்கி கொள்கிறான்.
அபே:0வும், ஆரன்:0வும் மு.ப 8.30ற்கு பாக்ஸை ஸ்விட்ச் ஆன் செய்து, ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி பி.ப 2.45ற்கு பாக்ஸினுள் புகுகிறார்கள். 6 மணித்தியாலங்கள் கழித்து அபே:1 சரியாக மு.ப 8.45ற்கு பாக்ஸிலிருந்து வெளியேறுகிறான்.. ஆனால் ஆரன்:1 ஆறு மணித்தியாலத்திற்கு சிறிது நேரத்திற்கு முன்பே வெளியேறுகிறான். (நிஜ உலகில் சில நிமிடங்கள் தாமதமாக!) இதனால் ஆரன்:1 உடல்ரீதியாக சிறு தாக்கத்திற்கு உள்ளாகிறான்!
இதன்முலம் இருவரும் இந்த காலப்பயணம் எவ்வளவு சீரியஸான மேட்டர் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள்.. பின்பு பங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.

அன்று மாலை இருவரும் ஆரனின் வீட்டிலிருந்து, அவனது மனைவி காராவுடன், அளவுக்கதிகமாக பணம் இருந்தால் என்ன செய்யலாம் என்று ஜாலியாக கலந்துரையாடுகிறார்கள். அப்போது காரா மேல் அறையில்(attic) எலிகளின் சத்தம் அதிகமாக இருப்பதாக ஆரன்:1இடம் முறையிடுகிறாள். ஆரன்:1 அவை எலிகளல்ல, பறவைகளே எனவும் அவற்றை தொந்தரவு செய்யவேண்டாமெனவும் அலட்சியமாக கூறுகிறான்..
ஆரன்:1 இவர்களுக்கு துரோகம் செய்த "ஜோசப் பிளாட்ஸ் என்பவனை (அனேகமாக இவர்களது பொருட்களுக்கான காப்புரிமையை முன்பு திருடியவனாக இருக்கவேண்டும்..) சந்தித்து முகத்தில் குத்திவிட்டு, காலப்பயணம் செய்து தங்களது அசலிடமே அவனைக் குத்தவேண்டாமென்று கூறி சமாதானப்படுத்தினால் எப்படியிருக்கும்?" என அபேயிடம் ஒரு ஜடியாவைக் கூறுகிறான்.. இதன்மூலம் பிளாட்ஸை முகத்தில் குத்திய ஆனால் குத்தாத ஒரு நிலையை உருவாக்க முடியுமே என்பது அவனது கருத்து!

ஆனால் அபேயோ இந்த மாதிரியான பரிசோதனைகளெல்லாம் விபரீதமானது எனக் கூறி மறுக்கிறான். காரணம் இவர்களே இவர்களது அசல்களிடம் "பிளாட்ஸை குத்த வேண்டாம்" என்று சமாதானப்படுத்துவது மட்டுமன்றி, அவர்களை திரும்ப பாக்ஸிற்குள் போகும்படியும் வலியுறுத்தவேண்டும்.. இல்லாவிடில் நிரந்தரமாகவே ஒன்றுக்கு மேற்பட்ட அபே,ஆரன்கள் உலகத்தில் இருக்க வேண்டியதாய் ஆகிவிடும்..
அதுமட்டுமன்றி நடந்த ஒன்றை (வரலாற்றை) யாராலுமே மாற்ற முடியாது என்பது அபேயின் வாதம்!


புதன்கிழமை

பாக்ஸை காலையில் ஆன்செய்துவிட்டு இருவரும் ஹோட்டலுக்கு செல்லும் வழியில், நேற்றைய ஜடியாவால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை விவாதிக்கின்றனர்...
பின்னர் ஹோட்டலில் வைத்து ஆரன்:0 காராவிடம், இந்த டைம் மெஷின் பற்றிய உண்மையை மறைப்பதன் விளைவுகளையும், பிலிப்,ரொபர்ட்டிடம் இதை மறைப்பதன் விளைவுகளையும் பற்றி விவாதிக்கின்றனர்.. ஆரன்:0, அபே:0இடம் "ரொபர்ட், பிலிப்பிடம் பாக்ஸைப் பற்றி குறிப்பிடவே வேண்டாமென்றும், அதற்கு நட்டஈடாக தாங்கள் இதுவரை கண்டுபிடித்த பொருட்கள் அனைத்திற்கான காப்புரிமைகளையும், மேலதிகமாக பணத்தையும் கொடுத்துவிடுவோம்" என்கிறான்.. சிறிது யோசனைக்குப் பின்பு அபே:0 இதற்கு உடன்படுகிறான்!
அன்றைய காலப்பயணத்திற்குப்பின் பாக்ஸிலிருந்து வெளியே வரும்போது ஆரன்:1-இன் காதிலிருந்து இரத்தம் வழியத்தொடங்குகிறது..

அன்று மாலை அபே:1 garageல் இருக்கும் போது, ரொபர்ட்டும், பிலிப்பும் அங்கே வருகிறார்கள். இவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின்போது அபே:1ற்கு முக்கியமான கதை ஒன்று தெரிய வருகிறது..
"திங்கட்கிழமை இரவு, ரொபர்ட்டின் பிறந்தநாள் விழா இருந்திருக்கிறது.. அபே அங்கு போகவில்லை. ஆனால் அபேயின் காதலியான ரேச்சல் வந்திருக்கிறாள்... இதை எப்படியோ அறிந்து கொண்ட ரேச்சலின் முன்னாள் காதலன் அங்கு துப்பாக்கியுடன் வந்து கலவரப்படுத்தியிருக்கிறான். அப்போது அங்கு வந்த ஆரன், தனது உயிரைப் பணயம் வைத்து நிலைமையை சரியாக்கியிருக்கிறான்!"

திங்கட்கிழமைதானே ஆபே, ஆரனுக்கு பாக்ஸின் பிரயோகம் பற்றி விவரித்த நாள்? அன்று இரவு பார்ட்டிக்கு போவதாக ஆரன் தன்னிடம் குறிப்பிடவில்லையே. ஒரு குடும்பஸ்தனாக இருந்து கொண்டு, தனது குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் ஆரன் ஏன் அப்படியொரு ரிஸ்க் எடுத்தான்??
கேள்விகளால் குழம்பிப்போயிருந்த அபே:1 அன்றிரவு, ஆரன்:1-ஐ சந்தித்து விளக்கத்தை கேட்கும்போது, அவன் அதற்கு "டைம் மெஷின் கண்டுபிடித்ததிலிருந்து, தனக்கு உலகத்தையே வித்தியாசமாகப் பார்க்க முடிவதாக" சொல்லி மழுப்புகிறான்.

அபேக்கு ஆரனின் நடவடிக்கைகள் படிப்படியாக சந்தேகத்தை வரவழைக்கின்றன!!

(தொடரும்...)

8 comments:

  1. அடேங்கப்பா ... 7000டாலர் பட்ஜெட் படத்திற்கு ஒரு தொடரா ... இந்த வாரக் கடைசியில் பார்த்துவிட்டு சொல்கிறேன். நன்றி JZ :)

    ReplyDelete
  2. மிச்சத்தையும் எழுதி குழப்பத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வாங்க :)

    ReplyDelete
  3. @ ஹாலிவுட்ரசிகன் - பட்ஜெட்தான் கம்மி! தரம்.. ரொம்ப ரொம்ப அதிகம்!!

    @ MSK / Saravana - கண்டிப்பாக.. இன்னும் ரெண்டு பதிவுகளில் குழப்பங்கள் முடியும்!

    ReplyDelete
  4. என் இனிய வணக்கம் நண்பரே,
    படத்தை இரண்டாவது முறை பார்த்த போதுதான் கொஞ்சம் புரிந்தது..மிச்சம் மீதி புரியாத பல விஷயங்களை தங்களது பதிவுகளின் வழியே தெரிந்துக்கொண்டேன்..படம் நன்றாகவே இருந்தது..புதுமையாகவும் இருந்தது.தங்களது அறிமுகத்தில் எப்படியோ ஒரு வித்தியாசமான படத்தை கண்டு களித்ததில் மிக்க மகிழ்ச்சி..தங்களது பணி தொடரட்டும்..வாழ்த்துக்களோடு எனது நன்றிகள்..அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. @ Kumaran - படம் உங்களுக்கு பிடித்திருந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி நண்பா.. நானும் முதல், இரண்டாவது தடவைகளில் படத்தை புரிந்து கொள்ளவேயில்லை.. சில ஆங்கில வலைத்தளங்களின் உதவியுடனேயே படத்தை என்னால் முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது!

    ReplyDelete
  6. நீங்க எல்லா பாகத்தையும் எழுதி முடிச்ச பிறகு மொத்தமா படிச்சிகிறேன். ரொம்ப கொலப்புது

    ReplyDelete
  7. @ லக்கி - உங்கள் விருப்பம்போல நண்பா..
    (உங்க மனசுல பட்டத அப்படியே சொல்லிட்டீங்க. ரொம்ப நன்றி!)

    ReplyDelete
  8. சுத்தம்........ஒண்ணும் புரியல....முதல் பதிவுலயிருந்து படிக்கணம் போல..........அப்ப, படிச்சிட்டு சாவுகாசமா வரேன்.

    ReplyDelete

Related Posts with Thumbnails