Tuesday, February 21, 2012

Primer (2004)- 4

வியாழக்கிழமை

வழக்கம்போல காலையில் பாக்ஸை ஸ்விட்ச்-ஆன் செய்துவிட்டு ஹோட்டலில் தங்கியிருக்கிறார்கள். அப்போது ஆரனுக்கு, காராவிடமிருந்து செல்போன் கால் வருகிறது.. ஆரன்:0 எடுத்துக் கதைத்தபின், அபே:0 அவனிடம், "இந்த செல்போனை எடுத்து வரவேண்டாமென"க் கூறுகிறான். ஆரன்:0 அதை கவனிக்காமல் எடுத்து வந்துவிடுகிறான்.

காலப்பயணம் செய்துவிட்டு இருவரும், டி.வியில் ஸ்போர்ட்ஸ் நேரடி-ஒளிபரப்பை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதை காலையிலேயே பார்த்துவிட்டதால் இருவருக்கும் முன்கூட்டியே அடுத்து என்ன நடக்கும் எனத் தெரிந்து கூறக்கூடியதாக உள்ளது!
இருவருக்கும் பசியெடுக்கவே, உணவுவிடுதிக்குச் செல்கிறார்கள். போகும் வழியில், மறுபடியும் காராவிடமிருந்து (காலையில் எடுத்த அதே நேரத்தில்) போன்-கால் வருகிறது!!
"ஒரேநேரத்தில் ஓரே எண்ணுள்ள இரு சிம்-கார்டுகளுக்கு போன்-கால் போக முடியாது. சமிக்ஞை கோபுரத்துக்கு கிட்டிய தூரத்திலுள்ள சிம்-கார்டுக்கே அழைப்பு போகும்!" என அபே:1 கூறுவதால், ஆரன்:1 எடுத்துக் கதைக்கிறான்... (எனக்கு இந்தமாதிரி செல்போன் பிரச்சனையின் போது என்ன நடைபெறும்னு தெரியாது.. ஆனால் National Treasure படத்தில் ஹீரேவோட அப்பாவுக்கும், வில்லனுக்கும் ஒரே நம்பர் இருக்கும் போதெல்லாம், அப்பாவுக்கு கால் செய்தால் வில்லன் எடுக்கிறமாதிரி காட்டுவார்கள்.. யாருக்காவது எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சா சொல்லிட்டு போங்க!! )

இப்போ ரெஸ்டாரன்டுக்கு போய்க்கிட்டிருந்த ஆரன்:1 போன்-காலை எடுத்ததால், ஹோட்டல் ரூமிலிருந்த ஆரன்:0-இற்கு போன்-கால் போகாது! ஸோ, வரலாற்றை மாற்ற முடியும்-ங்கற சின்ன ஐடியா இங்க "க்ளிக்" ஆயிருக்கு! இந்த ஐடியாவை பரீட்சித்துப் பார்க்கும் நேரம் வெகுவிரைவிலேயே இருவருக்கும் அமையப்போகிறது....


வெள்ளிக்கிழமை

மு.ப 2.00 மணிக்கு அபே:0 தூங்கிக்கொண்டிருக்கும்போது, அவனது தொடர்மாடிக்கு கீழே இரண்டு சிறுவர்கள் ஒரு காரைத் தட்டி, கார்-அலாரம் எழுப்பப்பட்டதால் தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு வித்தியாசமான ஐடியா உதிக்கிறது. அபே:0 ஆரன்:0ஐ அவசரமாக அழைத்து, அவனிடம் அந்த ஐடியாவை கூறுகிறான்..

அதாவது, தான் ஒவ்வொருநாளும் பி.ப 5 மணிக்கு பாக்ஸை ஸ்விட்ச்-ஆன் செய்துவிட்டு, மறுநாள் காலையில் அதை ஸ்விட்ச்-ஆஃப் செய்வதாக கூறுகிறான். இப்போ ரெண்டு பேரும் போய் மு.ப 3.00 மணியளவில் முன்பு கூறிய ஜோசப் பிளாட்ஸினது முகத்தில் ஓங்கி குத்திவிட்டு, அங்கிருந்து தப்பியோடி பாக்ஸிற்குள் புகுந்து (நேற்று) வியாழக்கிழமை பி்.ப5.00 மணிக்கு பாக்ஸிலிருந்து வெளியேறலாம். பின்பு வெள்ளிக்கிழமை மு.ப2.00 மணிக்கு கார் அலாரம் எழுப்பப்பட முன்பு, அதற்கு காரணமான இரு சிறுவர்களையும் அந்த இடத்திலிருந்தே விரட்டிவிடலாம்..

அப்படியானால் அவர்களது அசல்கள் நிம்மதியாக தொடர்ந்து தூங்குவார்கள். இப்படியொரு ஐடியாவே அபே:0ற்கு வந்திருக்காது. பிளாட்ஸை முகத்தில் குத்திய ஆனால் குத்தாத நிலையையும் உருவாக்கலாம்.. வரலாற்றை (கண்டிப்பாக..) மாற்றலாம்!!
ஆனால் பெரிய சிக்கலென்னவென்றால் 2 அபேக்கள், 2 ஆரன்கள் நிரந்தரமாகவே இருக்கவேண்டியதாய் ஆகிவிடும்..

இருவரும் பிளாட்ஸிடம் போவதற்காக காரில் ஏறியபோது ரேச்சலின் அப்பாவான கிறேஞ்சர் அவர்களை பின்தொடர்ந்து வருவதை அவதானிக்கின்றனர். சந்தேகப்பட்டு கிறேஞ்சரின் வீட்டுக்கு போன்-கால் செய்யும்போது, அவர் வீட்டிலேயே இருப்பது தெரிய வருகிறது.. அப்படியானால் அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பது எதிர்காலத்திலிருந்து வந்த கிறேஞ்சர்:1 !!
அபே அவரைத்துரத்திப் போகும்போது, கிறேஞ்சர்:1 இடறிவிழுந்து கோமா நிலைக்கு தள்ளப்படுகிறார்..(இதற்கான தெளிவான காரணமெதுவும் படத்தில் காட்டப்படவில்லை..)
கிறேஞ்சர்:0 வியாழக்கிழமை ஸ்விட்ச்-ஆன் செய்த பாக்ஸை பயன்படுத்தியே இங்கு வந்திருக்க வேண்டும். அப்படியானால் இருவரில் யாரோ ஒருவர் எதிர்காலத்தில், கிறேஞ்சரிடம் பாக்ஸைப் பற்றி கூறியிருக்கவேண்டும்! அப்படி அவசரமாக கூறவேண்டியதன் காரணம் என்னவாக இருக்கலாம் என இருவராலும் அடையாளப்படுத்த முடியவில்லை! இதனால் ஒருவருக்கொருவர்மேல் சந்தேகங்கள் அதிகரிக்கின்றன!!

நண்பர்களே, இரண்டாவது பதிவில் அபேயால் ஒரு Fail-Safe Box A உருவாக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டது ஞாபகமிருக்கிறதா? அது இப்போதுவரையிலும் (கிட்டத்தட்ட 3 நாட்கள் 22 மணித்தியாலங்களாக) ஓடிக்கொண்டேயிருக்கிறது!! அதனால் அபே:0 அதை உபயோகப்படுத்தி முடித்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடன் கொஞ்சம் உணவையும் எடுத்துக்கொண்டு, பாக்ஸிற்குள் போகிறான்!

திங்கட்கிழமை மு.ப 5.00 மணிக்கு பாக்ஸிலிருந்து வெளியே வந்து, தூங்கிக்கொண்டிருந்த அவனது அசலை (அபே:0)  வாயுவைச் செலுத்தி மயக்கமடையச்செய்கிறான்.. பின்னர் ஆரனை பார்க் Bench-ல் சந்திக்கச்செல்கிறான். 4 நாட்களாக பாக்ஸினுள் போதிய உணவு இல்லாமல் அடைபட்டுக் கிடந்திருந்ததால் அபே:2 (நிரந்தரமாகவே வந்துவிட்டதால் 2 எனும் எண்ணை பயன்படுத்துகிறேன்..) அங்கேயே மயங்கி விழுகிறான்.. அவனைத் ஆரன் தூக்கும்போது அவனது காதிலிருந்து இயர்போன் நழுவுகிறது.

அதில் ஆரன் கேட்டுக் கொண்டிருந்தது NCCA Basketball அல்ல... அவர்கள் ஒரிஜினலாக கதைத்த கலந்துரையடலின் ரெக்கார்டட் ஆடியோ!!!
"At this point there would have been some...discussion"
(குழப்பங்கள் தொடரும்..)

8 comments:

 1. இரவு வணக்கம் நண்பரே,
  தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு முதலில் மன்னியுங்கள்..சில வேலை காரணமாக முன்னமே வர முடியவில்லை..
  முதலில் நீங்கள் எத்தனை முறைகள் படம் பார்த்தீர்கள் என்றே தெரியவில்லை..அவ்வளவு தெளிவாக புதிராக இருந்த ஒவ்வொரு காட்சிகளையும் தங்களது எழுத்துக்களால் விவரிக்கிறீர்கள்..இந்த மாதிரி மூளைக்கு வேலை கொடுக்கும் படங்களை எத்தனை பேர்கள் தொடராக போடுவார்கள் என்று தெரியவில்லை..கண்டிப்பாக நான் போடவும் மாட்டேன்..போடுமளவுக்கு திறமையும் இல்லை..தங்களது பணி பாராட்டத்தக்கது..

  ReplyDelete
 2. திறமையான தொடர்..அதற்கு மகுடம் சூட்டும் விதத்தில் இந்த பதிவு..கடைசி பாகத்தோடு PDF போட்டு சேமித்து வைத்தால்தான் மோக்ஷம் கிடைக்கும்..நன்றி நண்பரே..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. படம் பார்த்தப் போதும் ஒன்னும் புரியல. தொடரை விட்டு விட்டுப் படிக்கும்போதும் ஒன்னும் புரியல. மொத்தமா ஒரு மின்னூல் போடுங்க. ஒரே முறையில் வாசித்துக் கொள்கிறேன். அப்புறம் மீண்டும் ஒருமுறை படத்தைப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 4. @ Kumaran -//தாமதமாக பின்னூட்டம் இடுவதற்கு முதலில் மன்னியுங்கள்// இப்பகூட நீங்கதானே ஃபர்ஸ்ட்டு!

  இப்படி விளக்கப்பதிவு போடுவது பதிவுலகத்தில் "பழைய டைப்" ஒன்றுதான் நண்பா! இதுல திறமையொண்ணும் இல்லை.. நமக்கு இதுமாதிரித்தான் வரும்.. இப்ப கதையே சொல்லாம ஒரு விமர்சனம் எழுத சொல்லுங்க? நமக்கு புட்டுக்கும்!!

  ReplyDelete
 5. @ ஹாலிவுட்ரசிகன் - ஒண்ணும் புரியலைன்னாலும் தொடர் முழுக்க தேடி வந்து உங்க கமென்டுகளால் ஆதரிக்குறீங்களே.. ஐ லைக் இட்!
  *மின்னூல் எப்படிப் போடுறதுன்னே நமக்கு தெரி்யாதே பாஸ்!

  ReplyDelete
 6. தொடரை முடிச்சவுடன் சொல்லுங்க பாஸ்... பாஸ்...மின்னூல் போடுறது எப்படின்னு நான் சொல்றேன் ....

  ReplyDelete
 7. லக்கி இருக்க பயமேன்?

  ReplyDelete
 8. சீக்கிரம் முடிங்க பாஸ்.. கொழப்பமாவே இருக்கு :))

  ReplyDelete

Related Posts with Thumbnails