Saturday, February 11, 2012

Primer (2004)- 1

வெறும் 7000டாலரைக் கையில வைச்சுகிட்டு, CG உதவியே இல்லாம, உங்களால ஒரு சயின்ஸ் -பிக்ஷன் படம் எடுக்க முடியமா?  கண்டிப்பாக முடியாதுதான்.. ஆனால் இந்த primer... யப்பா! ஹாலிவுட் சயின்ஸ் படங்களுக்கே ராஜான்னு சொல்லிக்கற மாதிரி ஒரு படம்.

சும்மா கதை இல்லீங்க.. நான் இதுவரைக்கும் பார்த்த படங்கள்லயே புரிஞ்சுக்கறதுக்கு ரொம்பவும் கஷ்டப்படக்கூடிய சிக்கலான கதை உள்ள படம். (நான் இன்னும் memento பார்க்கலை. ஸோ அந்தப் படத்தோட காம்ப்பேர் பண்ணி, எவ்வளவு குழப்பமான படம்னுல்லாம் சொல்ல முடியாது..)
ஆனா, ஒண்ணு மட்டும் சொல்றேன்.. சப்-டைட்டில் இல்லாம படத்தை பார்த்த முதல் தடைவையிலேயே என்ன நடந்திருக்குன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னு வையுங்க.. உங்களுக்கு தாராளமாக என்ஜினியரிங் டிகிரியே கொடுத்துடலாம்..

படத்தோட ஹீரோ, இயக்குனர், கதையாசிரியர், தயாரிப்பாளர், எடிட்டர், இசையமைப்பாளர் எல்லாமே Shane Carruth தான்!
(தமிழ்லயும் இந்த மாதிரி சகல -கலா அட்டெம்டுகள் நடந்ததாக ஞாபகம்.. ஆனா இது ஒரு world-class attempt!)
பார்க்குறதுக்கு முதல் படம் மாதிரியே இருக்காது. இவரோட அடுத்த படம் Upstream Color. இந்த வருஷம்தான் வெளியாகுது. அதுவும் ஹிட்டாயிருச்சுன்னா, இவரு அடுத்த நோலனாக் கூட ஆயிடலாம்!!

இந்த வருஷம் தொடங்கினவுடன் நான் முதல்ல பார்த்த படம் இதுதான். ஜனவரி 2ந்-தேதி பார்த்தேன். அப்பவே இதை பத்தி ஒரு பதிவு எழுதலாம்னுதான் இருந்தேன்! ஆனா எனக்கே கதையை ஒழுங்கா புரிஞ்சுக்க முடியாம இருக்கும் போது, ஏன் விமர்சனம் எழுதி மற்றவர்களையும் பார்க்க ரெகமன்ட் பண்ணி, அவங்களையும் குழம்ப வைக்கனும்னு யோசிச்சுட்டு, அந்த ஐடியாவ அத்தோட விட்டுட்டேன்.
அன்னையில இருந்து இன்டர்நெட் முழுக்க தேடி பல பேரோட விளக்கங்களையும் வாசிச்சு, படத்தையும் 3வது தடவை பார்த்துட்டு ஒரு வழியா இதுதான் நடந்திருக்கும்-ங்கற தெளிவுக்கு வந்துட்டேன்! இப்போ primer படத்துக்கு வெறும் விமர்சனம் எழுதாம, இன்செப்ஷன் மாதிரி ஒரு விளக்கத் தொடர்பதிவு எழுதிடலாம்-ங்கற வரைக்கும் ரிஸ்க் எடுக்கவும் தயாராயிட்டேன்...

கதை என்னன்னா.. ஆரன்(Shane Carruth) , அபே, ஃபிலிப், ராபர்ட் என்கிற நான்கு என்ஜினீர்களும், வேலை நேரம் போக, பார்ட்-டைமா ஆரனோட garageல இருந்து JTAG கார்டுகள் செய்து விற்கிறார்கள். இந்த பணியோட நோக்கமே, அதுல இருந்து கிடைக்கற காசு மூலமா வருங்காலத்துக்கு பயன்படுற மாதிரி ஏதாவது ப்ரொஜெக்டை கண்டுபிடிச்சு பப்ளிஷ் பண்ணி, வாழ்க்கையில முன்னேறனுங்கறதுதான்.. படத்தோட ஓப்பனிங் சீன்ல நாலு பேரும் ஆரனோட வீட்ல உட்கார்ந்திருந்து, அடுத்ததா என்ன ப்ராஜெக்டு செய்யலாம்னு தீவிரமா கலந்தாலோசிக்கிறார்கள்.

அந்த உரையாடல் முடிஞ்சதுக்கப்புறம் ஆரனும், அபேயும் மாத்திரம் இருந்து "பொருட்களோட எடையை குறைக்கற மாதிரியான ஒரு மெஷினை" உருவாக்க பிளான் பண்ணி, அதற்கான வேலைகளில் இறங்குகிறார்கள்.. காசு பற்றாக்குறையால் வீட்டில் கிடைக்கும் உபகரணங்களில் இருந்தும் தேவையான பாகங்களை பிரித்து எடுத்துக் கொள்கின்றனர்.

அபே காதலிக்கும் பணக்கார பெண்ணான "ரேச்சல்"-இன் அப்பா, இவர்களது இந்த ஆராய்ச்சியில் முதலிட சம்மதிக்கிறார். (ஆரனுக்கு ஏற்கெனவே "காரா" என்ற பெண்ணுடன் திருமணமாகி, "லாரன்ட்" என்ற சிறு பெண்குழந்தையும் உள்ளது.)

இவர்கள் உருவாக்கும் உபகரணத்தில், பல வித்தியாசமான side-effects இவர்களால் கண்டுபிடிக்கப்படுகின்றன.
1 - இவர்களது உபகரணத்தினுள் camcorder-ஐ வைத்து அவதானித்த போது, on செய்த சில செக்கன்களில் எதையும் camcorder மூலம் அவதானிக்க முடியாது போனது..
2 - அந்த உபகரணம் பயன்படுத்தும் வலுவை விட வெளிவிடும் வலு அதிகமாக உள்ளது.
3 - power off செய்த பின்பும், அந்த உபகரணம் சில நிமிடங்கள் இயங்குகிறது.

4 - அபே சில நாட்களுக்கு ஒருமுறை அந்த உபகரணத்துள் வித்தியாசமான பங்கஸ் படர்வதை அவதானிக்கிறான். அதை பற்றி நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டபோது அவர்கள் சொன்னது இதுதான்,
"இந்த பங்கஸ் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த அளவு வளர்ச்சியை அடைவதற்கு அதற்கு பல வருடங்கள் ஆகும்.."

அபே அவ்-உபகரணத்துள் தனது நிறுத்தற்கடிகாரத்தை சில நிமிடங்கள் வைத்துவிட்டு பின் எடுத்துப் பார்க்கும் போது, அதில் 1300க்கும் மேற்பட்ட நிமிடங்கள் கடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்!! நடந்தவற்றை ஆரனிடம் கூற, இருவரும் தாங்கள் கண்டுபிடித்திருப்பது சாதாரண உபகரணமல்ல.. ஒரு டைம் மெஷின் என உணர்கிறார்கள்...

இதுதாங்க.. இந்த படத்தோட ப்ரீவியூ! இதுவரைக்கும் எந்தவொரு ட்விஸ்டும் வந்து இடிக்கலை.. அடுத்த பதிவுல இருந்துதான் நாம விளக்கத்துக்குள்ளயே போகப் போறோம். அதனால அந்தப் பதிவை வாசிக்கறதுக்கு, நீங்க படத்தை பார்த்திருக்க வேண்டும் என்கிற கட்டாயமும் இருக்கிறது..
எல்லாரும் கண்டிப்பா படத்தை பாருங்க.. (சப்-டைட்டிலோட.. இல்லைன்னா நீங்க இங்கிலாந்துலயே பொறந்து வளர்ந்திருந்தாலும் என்ன பேசுறாங்கன்று புரியாது! அவ்வளவு scientific -terms இருக்கு). நீங்களும் என்னை மாதிரியே ஆச்சரியத்துல சில நிமிடங்கள் மூழ்கிக் கிடப்பீங்க!

அடுத்த பதிவுல உங்களை சந்திக்கிறேன்.. (ரேட்டிங்க்ஸ் தொடர்பதிவின் இறுதியில் வெளியாகும்.)

15 comments:

 1. முதல் சில வரிகளிலேயே படத்தோட லெவெல் தெரிஞ்சிருச்சி...நீங்க வேற தொடர்னு சொல்றீங்க..படம் பார்த்தே தீர வேண்டும் போல..பார்க்குறேன்.எதற்கும் அடுத்த பதிவ கேப் விட்டு போடுங்க படத்த பார்த்துக்குறேன்..

  விமர்சனம் அருமை..இந்த தொடர் ரொம்ப சுவாரஸ்யங்களோடு சிறப்பாக வரும் என்பதை படித்தாலே தெரிகிறது.நன்று..நன்றிகள் நண்பரே.தொடருங்கள்.

  ReplyDelete
 2. இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க.. நன்றி குமரன்!
  படம் டவுன்லோடு பண்ணிப் பாருங்க. நீங்க ஒன்-லைனில் பார்க்கப் போவதாக இருந்தால் யூ -ட்யூபில் பாகம், பாகமாக பிரித்துப் போட்டிருக்கிறார்கள்(சப்-டைட்டிலுடன்)... இந்த லிங்கை யூஸ் பண்ணிக்கோங்க-
  http://www.youtube.com/watch?v=tb_kX-30AGE

  //அடுத்த பதிவ கேப் விட்டு போடுங்க// கண்டிப்பாக..

  ReplyDelete
 3. கண்டிப்பாக பார்க்கிறேன்..லிங்க் கொடுத்தமைக்கு நன்றிகள் நண்பரே..

  ReplyDelete
 4. நல்ல படம் போல...... கண்டிப்பா இன்னைக்கே படத்த பார்த்துடுவேன்.........இதன் தொடர்சிக்காக எதிர்ப்பார்கிறேன்.

  ReplyDelete
 5. Kumaran
  //////////// .படம் பார்த்தே தீர வேண்டும் போல..பார்க்குறேன்.எதற்கும் அடுத்த பதிவ கேப் விட்டு போடுங்க படத்த பார்த்துக்குறேன்../////////////
  என்னங்க குமரன் சொதப்பிடிங்களே........ நான் உடனே தொடர்ச்சியை எதிர் பார்த்தேன்.....

  ReplyDelete
 6. JZ
  //அடுத்த பதிவ கேப் விட்டு போடுங்க// கண்டிப்பாக..
  நீங்க வேற அவசர பட்டு வாக்கு எல்லாம் குடுத்துடிங்க....

  ReplyDelete
 7. @ MuratuSingam - என்ன நண்பா! ரெண்டு பேரும் சேர்ந்து என்ன இக்கட்டான நிலையில தள்ளி விடுறீங்களே!!
  இருந்தாலும் பதிவை 4,5 நாளுக்கு அப்புறமாத்தான் போட முடியும்.. அது போட்டதுக்கப்புறம் அதற்கடுத்த பதிவுல்லாம் கொஞ்சம் வேகமா வரும்!

  ReplyDelete
 8. நிச்சயமாக உடனே பார்க்க முயற்சிக்கிறேன். இப்போ வீட்டில் இருக்கிறதால படத்தை ஹாலில் தைரியமாக போட்டு பார்க்கலாமா?

  ReplyDelete
 9. @ ஹாலிவுட்ரசிகன் - கண்டிப்பாக! முழுக்க முழுக்க சயன்ஸை மட்டுமே நோக்காக கொண்ட படம் இது!!

  ReplyDelete
 10. டவுன்லோட் பண்ணியாச்சு. இப்பொழுது ஷேர்லொக் ஹோம்ஸ் நாடகம் பார்ப்பதால் நாளை அல்லது நாளை மறுதினம் பார்க்க முயற்சிக்கிறேன். உங்கள் அடுத்த பதிவு வருவதற்குள் பார்த்துவிடுவேன். வாசித்தால் சுவாரஸ்யம் குறைந்துவிடும்.

  ReplyDelete
 11. பாஸ் இந்த படத்த போன வருடமே டவுன்லோட் பண்ணி பாத்து பாதியிலே மண்டைய பிச்சிகிட்டு விட்டுடேன். இன்னொரு விஷயம் குறைந்த செலவில் எடுத்தால் ரொம்ப டாகுமெண்டரி பார்ப்பது போல் இருந்தது. சரி உங்க தொடர் பதிவை முழுசா படிச்சிட்டு அப்பறம் திரும்பவும் பார்கிறேன்

  ReplyDelete
 12. @ ஹாலிவுட்ரசிகன் - //வாசித்தால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். கரெக்டு//

  @ லக்கி லிமட் -//இன்னொரு விஷயம் குறைந்த செலவில் எடுத்தால் ரொம்ப டாகுமெண்டரி பார்ப்பது போல் இருந்தது//
  ம்.. படம் அப்படித்தான். வசனங்கள், காட்சிகள்லாம் சின்னதுங்கறதால சில வேளைகளில் என்ன நடக்குதுன்னு நாமதான் யூகிக்க வேண்டியிருக்கும்!

  ReplyDelete
 13. நல்ல பதிவு ... தொடர்ந்து உலக சினிமாக்களை அறிமுகம் செய்யவும் .. வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 14. இன்றுதான் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே நீங்கள் எழுதியது சரிதான். அசர வைத்த படம்.

  சாவியின் தமிழ் சினிமா உலகம்

  ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்

  ReplyDelete
 15. @ ananthu - வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்தும் வாங்க..

  @ சாவி - வருகைக்கு நன்றி நண்பா. உங்களுக்கும் படம் பிடித்திருப்பதில் சந்தோஷம்!

  ReplyDelete

Related Posts with Thumbnails