Sunday, May 8, 2011

Lady and the Tramp (1955)

 
நாம இப்ப பார்க்கிற ஹை-டெக் 3D அனிமேட்டட் படத்துக்கெல்லாம் முன்னோடியா, அனிமேஷன் படங்களுக்குன்னு ஒரு அடித்தளத்தை நிறுவினது டிஸ்னி தான்... டிஸ்னிக்கு போட்டியா படம் எடுக்கவே பயந்துக்கிட்டிருந்த காலம் போய், பிக்ஸாரா பார்த்து படம் எடுத்தா தான் உண்டு-ங்கற நிலைமைக்கும் தள்ளப்பட்டிச்சு..
 

ஆனாலும் இன்னைக்கு வரைக்கும் வந்த 2D படங்கள்லயே பெஸ்ட் எதுன்னு கேட்டா தாராளமா டிஸ்னியை கைகாட்டலாம். லயன்கிங், ஸ்நோ வைட், ஜங்கிள் புக், பியூட்டி அன்ட் த பீஸ்ட்,  அலாவுதீன்-னு வசூலை வாரிக் குவித்த டிஸ்னியோட golden era வின் ஆரம்ப காலத்துல தான் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு கார்ட்டுன் காதல் காவியம் வெளியானது!!!

வெறும் 4 மில்லியன் செலவுல உருவாக்கி 90 மில்லியனை 1950-களிலேயே வசூலித்த பெருமை இதற்கு உண்டு. இந்த படம் எடுத்த 1950-60 காலத்துல இதுக்கு கிட்ட வந்தது பென்-ஹர் மட்டும் தானாம்... ஆனா அதோட தயாரிப்புச் செலவு 15 மில்லியன்!!!
அப்படி என்ன விசேஷம் படத்துல?? நாய்களுக்கு நடுவுல நடக்குற காதல்தானே..ன்னு அலட்சியப் படுத்த முடியாது. படத்துல ஹீரோ, ஹீரோயினைத்தவிர ஏனைய பாத்திரங்களுக்கும் மதிப்பளித்து, வித்தியாசம் காட்டி, ரேக்டர் டெவலப்மென்ட் (படத்தோட ஆரம்பத்துல பார்க்குற பாத்திரம் கடைசி வரை அப்படியே இருக்க கூடாது..) எல்லாம் பண்ணுறது டிஸ்னியோட அந்தக்காலத்து ட்ரேட்மார்க்.. இந்த காலத்துல அப்படி உழைக்கறது பிக்ஸார் மட்டும்தான்! (ட்ரீம்வொர்க்ஸ்-கிட்ட அவ்வளவு சின்சியாரிட்டி இல்லை..)

அந்தக் காலத்து அனிமேஷனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஏன் இப்ப 2D-ஐ இவ்வளவு கேவலப்படுத்திட்டாங்கன்னு தோணுது.. ரொம்ப பிரைட்டா இல்லாம எல்லாமே மைல்ட் வர்ணங்கள்... படத்தோட நம்மள ஒன்றிக்க வைக்குது.

படம் முழுக்க வெவ்வேறு வகை நாய்கள் வருவது மேலும் சிறப்பு.. கொக்கர் ஸ்பானியல் பப்பியாக வரும் ஹீரோயின் "லேடி"யைப் பார்த்தவுடன் தோன்றாத அழகு, போகப்போக வெளிப்படுகிறது.. அதுக்கு பக்கத்து வீட்டுக்காரர்களாக வரும் "ஜொக்"உம் (ஸ்கொட்டிஷ் டெரியர்), "ட்ரஸ்டி"யும் (ப்ளட்ஹெளன்ட்) ஹீரோவை மட்டந்தட்டுவதும், ஹீரோயினுக்கு அட்வைஸ் செய்வதுமாக வந்து பின்னர் கதையின் திருப்பத்துக்கே காரணமாக அமையும்போது நிமிர்ந்து பார்க்க வைக்கின்றனர்!
அதிலும் குறிப்பாக அந்த "ட்ரஸ்டி" முன்பு பேசும் காட்சிகளெல்லாம் சலிப்பாக இருக்கும். அவ்வளவு இழுத்து..... இழுத்து... பேசும். ஆனால்பிறகு ஹீரோ "ட்ராம்ப்"ற்காக தனது காலை இழக்கும் சீனில்... ச்சோ ஸ்வீட்!!

படம் முழுக்க ஏராளமான சீன்கள், கதை முடிந்த பிறகும் அசைபோட வைக்கின்றன..
ட்ராம்ப், லேடியின் முகத்தில் மாட்டியிருந்த பட்டியை அறுப்பதற்காக, பீவரிடம் லேடியைப்பற்றி 'விளம்பரத்தனமாக' புகழ்ந்து பேசுவது செம சுவாரஸ்யமான சீன்..

ரென்டு பேரும் ரெஸ்டோரண்டுக்கு வெளியே இருந்து ராஜ மரியாதையுடன் (கூடவே மியூசிக் வேறு!!) டின்னர் சாப்பிடும் சீன் உலகப் புகழ்பெற்ற அனிமேஷன் சீன்களில் ஒன்று!

லேடி, ட்ராம்ப் தேடிவரும் போது முகத்தை திருப்பிவைத்துக் கொள்வதும், போனபின்பு திரும்பி வரமாட்டானா என ஏங்கிப் பார்ப்பதும், எலியைப் பிடிப்பதற்காக ரென்டு பேரும் கோபத்தை விட்டு சேர்ந்து செயற்படுவதும்..... எப்படித்தான் டிஸ்னி சமாளித்தார்களோ தெரியவில்லை... அவ்வளவு யதார்த்தம்!!

பொதுவாக அனிமேஷன் படங்கள் எல்லாமே ஒரு மகிழ்ச்சியான இறுதிக் கட்டத்துடன்தான் முடியும்.. ஆனால் இந்தப் படம் முடியும் போது நிஜமாகவே மனத்தில் ஒரு பூரிப்பு எழுகிறது.. எத்தனை தடவை நீங்கள் படம் பார்த்திருந்தாலும் முடியும் போது "மீண்டும் ஒரு தடவை பார்க்கத்தான் போகிறேன்!!" என்று உங்களுக்கு நீங்களே ஒரு சபதம் போட்டுக்கொள்வீர்கள்!!!

காலத்தால் அழியாத காதல் ஜோடிகள் பற்றி ஏதாவது லிஸ்டு போடுறதா இருந்தா டொப்-டென்னுல இவங்களை சேர்த்துக்கனும்... இது எழுதப்படாத விதி!!

ஆமா 55 வருஷம் ஆனதுக்கப்புறம் நான் ஏன் இந்தப் படத்தைப் பத்தி ஒரு பதிவை எழுதனும்?? காரணம் இருக்கு.. சமீபத்தில் இதே போல விலங்குகளின் காதலை மையமாக கொண்டு எடுத்த அனிமேஷன் படம் பார்த்தேன். அதைப் பார்த்தபின்பு ஏற்பட்ட கடுப்பாலேயோ என்னவோ இதைப் பார்க்கச் சொல்லி மனது உறுத்தியது... அந்தப் படம் பத்தி அடுத்த பதிவுல சொல்றேன்!

எழுதிட்டோம்.. இதுக்கும் போட்டுருவோமே,

பாத்திரங்கள்- 19
அனிமேஷன்- 18
பின்னணித் தரவுகள்- 18
கதை+திரைக்கதை- 18
இயக்கம்- 18

மொத்தம்- 91% அசத்தல்!

3 comments:

  1. //சமீபத்தில் இதே போல விலங்குகளின் காதலை மையமாக கொண்டு எடுத்த அனிமேஷன் படம் பார்த்தேன்.//நீங்கள் குறிப்பிட்ட படம் ரியோதானே!

    ReplyDelete
  2. ரியோ படம் ரசிக்கத்தக்கது நண்பா... நான் பார்த்தது "அல்பா அன்ட் ஒமேகா". படம் 2010ல் வெளிவந்தது, ஆனால் எனக்கு சமீபத்தில்தான் பார்க்கக் கிடைத்தது..

    ReplyDelete
  3. இதென்னா பிரமாதம், எங்கள் தானைத் தலைவர் இராமநாராயணன் நிஜமாகவே இதை எடுத்துள்ளார், நாய் மட்டுமின்றி, பூனை, வாத்து,எலி,யானைன்னு அவுரு எடுக்காத காதைக் காவியமே இல்லை...

    ReplyDelete

Related Posts with Thumbnails