இத்தனைக்கும் அவன் முக்கியமான இறுதிக்கட்டப்போரில் தனியாளாக நின்று எதிரிகளை ஜெயித்து, ரோம் நகரத்தையே காப்பாற்றி விட்டு வந்திருக்கிறான்... முகமெல்லாம் ஆறாத் தழும்புகள்!
விளைவு..."நீ இத்துடன் இந்த நகரத்தை விட்டே ஒதுக்கி வைக்கப் படுகிறாய்!"
அவன் பெயர் Caius Martius Coriolanus!சில மாதங்களுக்கு முன்பு, அதாவது ரோமில் யுத்தகாலம் நிலவிய பொழுது.. மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரிசி, தானிய மூட்டைகள் ராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்படுகிறது... பட்டினியால் வாடிய மக்கள் புரட்சிக்காரர்களாய் உருமாறுகிறார்கள்.. எல்லார் கோபமும் ராணுவத் தலைவனான இவன் மீதே!
தனது அதிகாரத்தை உபயோகித்து கலகத்தை அடக்குகிறான்!
பின்பு யுத்தக் காட்சிகள்... ரத்தம் தெறிக்கும் வன்முறை... இறுதியில் ஒரு மெகா "நேருக்கு நேர்" மோதல்.. கொரியோலேனஸ் தனியாளாக யுத்தத்தை வெற்றி கொள்கிறான்!
ஆனால் அவனது தன்னிச்சையான போக்கும், சுருக்கென்று கோவப்படும் சுபாவமும் காரணமாக சபை உறுப்பினர்களிடமே தன் நன்மதிப்பை இழக்கிறான்.. பற்றாக்குறைக்கு மக்களும் தங்கள் வெறுப்பைக் கொட்டித் தீர்க்க நகரை விட்டே துரத்தப் படுகிறான்..
தன்னை அவமானப்படுத்தும் ஒரு நாட்டிற்கு பற்றோடு இருந்து என்ன பயன்?.. போரில் யாரைத் தோற்கடித்தானோ அவர்களிடமே வந்து சேர்கிறான்.. ரோம் நகரைப் பழிதீர்ப்பதாக சத்தியம் செய்துகொள்கிறான்!
இனி நடப்பது மீதிக்கதை.. (அது ஒரு சிறிய பகுதியே.. 30 நிமிடங்களுக்கும் குறைவானதுதான்.. ஆனால் ரசிக்கும் படியாக இருக்கும்)
Coriolanus வில்லியம் ஷேக்ஸ்பியரால் எழுதப்பட்ட கதை.. இவரு கதைகளையெல்லாம் கூட இந்தக் காலத்துக்கு செட்டாகிற மாதிரி படமாக்க முடியுமாங்கறதே பெரிய ஆச்சரியம்தான்! கொரியோலேனஸ் மட்டும் எப்படி??... "ஒரு நாடகத்தில் அரங்கேற்றியிருக்க வேண்டிய கதையா இது?"ன்னு உங்களை நீங்களே கேட்டுப்பீங்க! என்னா ஒரு Adaptation? வாவ்!
Merchant of Venis, Midsummer Nights dream எல்லாம் இப்போ படமாக்கியிருந்தா spoof படமாக்கூட எவனும் ஏத்துக்கொள்ள மாட்டான்..
இவரு முதன்முறையாக இயக்கும் படம் இதுதான்! படம் முதல் அட்டெம்டு மாதிரியே தெரியாது.. அதுக்கு நான் கியாரண்டி! தானே டைரக்டர்ங்கறதால தான் முழு சுதந்திரத்துடன், தன்னிடமிருந்தே டன்கணக்கில் நடிப்பை வாங்கியிருக்கிறார்! ஹீரோயிசமும், வில்லத்தனமும், கர்ஜனையும், அழுகையும் ஒருங்கே காட்டக்கூடிய ரோல் அது!! உலக நாயகன் பார்த்ததால் அள்ளிக்கொண்டு போவார்!
Kings Speechக்காக கொலின் ஃபர்த் காட்டியதை விடவும், The Artistக்காக டுஜார்தீன் காட்டியதை விடவும், அட்டகாசமான நடிப்பை அள்ளித் தெளித்திருப்பார்.. ரால்ஃப்! நேற்று முதல் உன் ரசிகர்களுல் ஒருவனானேன்! இதைப் பார்த்த பின்னால் "டிகாப்ரியோவிடமிருந்தும் இன்னும் எதிர்பார்க்கலாமோ?"ன்னு வேற தோணுது..
படத்தின் இன்னொரு ஹீரோ Gerard Butler.. ரோமின் எதிரிப் படைக்கு தலையை தாங்குபவனாய் நடித்துள்ள இவரும் சண்டைக் காட்சிகளிலும், க்ளைமேக்ஸிலும் நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார்..
படம் போன வருஷத்துக்கானது.. ஆனாலும் UK, USAல இந்த வருஷம்தான் ரிலீசாகியிருக்கு.. இன்னமும் விருது எதுவும் வாங்காதது புதிராகவே உள்ளது..
அதிகளவிலான ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளுக்காக R ரேட்டிங் போடப்பட்டுள்ளது.. ஆக்சன் பட விரும்பிகள் முதல்பாதி வரை பார்த்துவிட்டு நிறுத்திக்கொள்ளலாம்.. நேர்த்தியான நடிப்பின் விசிறிகள் முழுப்படமும் பார்த்து ரசிக்கலாம்.. உங்கள் பார்வை எதுவாயிருந்தாலும் வந்து கருத்திட்டுச் செல்லவும்!
ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 19
இசை = 07
கதை+திரைக்கதை = 14
கலை+ஒளிப்பதிவு =16
இயக்கம் = 16
மொத்தம் = 72% மிக நன்று!

படத்திற்கான ரேட்டிங்ஸ் நல்லாத் தான் கொடுத்திருக்காங்க. Russel Crowe வேற இருக்காருன்றீங்க.
ReplyDeleteசீக்கிரம் பார்க்க ட்ரை பண்ணுறேன். நம்மள மாதிரி கதையை இழுக்காம மற்ற விடயங்களை அலசியிருக்கீங்க. குட்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!
Delete*Russel Crowe?.. நான் ஃபியன்னஸும், பட்லரும் பத்திதானே சொல்லியிருக்கேன்!
நீங்க பட்லரோட முகத்தை பார்த்து ரசல்னு நினைச்சுக்கிட்டீங்களோ?
ஆகா ... சாரி சாரி ... கெரால்ட் பட்லர் தானே. ஹையோ .. அது அடிக்கடி குழப்பி விடும் ஒரு மேட்டர். இது போலத்தான் கொஞ்ச காலத்துக்கு முன் கிட்டத்தட்ட மேட் டீமனும், டீகாப்ரியோவும் ஒரே மாதிரி இருக்கிறாப் போல தோணிட்டிருந்துச்சு. ஹி ஹி
Deleteநண்பரே, Ralph Fiennes ஒரு அற்ப்புதமான நடிகர்..ஸிண்ட்லர்ஸ் லிஸ்டு பார்த்துவிட்டு இவருக்கு ஆஸ்கர் கிடைக்காமல் தவறியதை நினைத்து ரொம்பவும் ஏமாந்தேன்..அவரது ரசிகனும் ஆனேன்..இது அவரே இயக்கிய படமென சொல்கிறீர்கள்.கட்டாயம் பார்க்க வேண்டும்.ஒரு சிறந்த நடிகன் படம் இயக்கும் போது அப்படத்தில் நடிப்புக்கு பஞ்சமிருக்காது என்றே நம்புகிறேன்.
ReplyDeleteஅழகானதொரு விமர்சனம்..இப்படி ஒரு படம் வெளிவந்ததே எனக்கு தெரியாது..அறிமுகத்துக்கும், சிறப்பான எழுத்து பகிர்வுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் நண்பா..பார்க்கலாம்..வருகிறேன்.
//இப்படி ஒரு படம் வெளிவந்ததே எனக்கு தெரியாது..//
ReplyDeleteUK புரொடக்ஷன்ஸ் நண்பா! அதுனால படத்துக்கு மார்க்கெட்டிங் மிகக் குறைவு.. நான் இந்தப் படத்தை அறிந்து கொண்டது ரொட்டன் டொமேடோஸில் தான்.. ரொம்ப நாட்களாக 100% ரேட்டிங்குடன் டாப்-லிஸ்டில் இருந்தது.. இப்போது 83ஆக குறைந்திருக்கிறது!
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!
அருமையான விமர்சனம் .. தொடரட்டும்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
Deleteஇதையும் படித்து பாருங்கள்
ReplyDeleteஅஜித் : தல போல வருமா ?
அடங்கொய்யாலே.... அன்னிக்கு வெள்ளவத்தைல படம் எடுக்க போனன் மச்சி, இந்த படத்தோட டிவிடி இருந்திச்சு ஆனா ஏனோ எடுக்க மனசு வரல. நாளிக்கே போறேன்
ReplyDeleteஎடுங்க பாஸ்.. (கலெக்ஷனாக எடுக்க முடிந்தால் நல்லது. எப்படியும் கிளியரான ப்ரிண்டாத்தான் இருக்கும். படம் உங்களுக்கு பெரிசா ஃபீலாகட்டிக்கும் ஏனையவை உதவும்ல!)
Deleteபடத்தை பாருங்க பாஸ்.. புடிச்சா சொல்லுங்க பாஸ்!
வெள்ளவத்தையில எங்க?
நான் எப்பவும் கலக்க்ஷன் டிவிடி எடுக்கிறது கிடையாது மச்சி. அது என்ன குவாலிடியா இருந்தாலும் சரி. ஒரு டிவிடியில் ஒரு படம் இருக்கிறாப்ல வாங்கிறது எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. அது சாம் ஆண்டர்சன் படமாக இருந்தாலும் சரி.
Deleteகொழும்பில் நான் படம் எடுக்கும் ஒரே இடம் வெள்ளவத்தை சிடி வேர்ல்ட்.! விலயும் கம்மி, குவாலிடியும் சட்டப்படி இருக்கும்.! எனக்கு திருப்தியான ஒரே இடம். (சில நேரம் எம்.சி யில் எடுக்கும் சிடிக்கள் சொதப்பிய வரலாறுகள் உண்டு. ஆனால் இதுவரை சிடி வேர்ல்ட் அந்தமாதிரி கசப்பான அனுபவங்களை தரவில்லை)
அப்பாடா.. உங்கள் 56 பதிவுகளையும் சில மணி நேரத்தில் படித்து விட்டேன்.. உடனடியாகவே 10 பட டோர்றேன்ட் link எடுத்து டவுன்லோட் பண்ண தொடங்கிட்டன்.. என் வாழ்க்கையில் இந்த வலைப்பூவைஇன்று வரை காணாதது பெறும் இழப்பாகும்.. ஆனால் இனி .........
ReplyDeleteயாரு தலைவா நீங்க? வருகைக்கு ரொம்பவே நன்றி!!
Deleteஎல்லாப்பதிவையுமே வாசிச்சிட்டீங்களா?! படம் வேற டவுண்லோட் பண்ணுறீங்க.. Thank u Very Much!!
//இந்த வலைப்பூவைஇன்று வரை காணாதது பெறும் இழப்பாகும்//
இந்தளவு பாராட்டுக்கு நான் தகுதியானவனான்னு சத்தியமா கன்பியூஸாவே இருக்கு.. இருந்தாலும் உங்க ஊக்கத்துக்காகவே இனி சிறப்பா எழுத முயற்சிக்கிறேன்!
* அப்படியே டச்சிலேயே இருங்க நண்பா!
விமர்சனம் எப்போது போல் அருமை. வித்தியாசமான படம் என்று நினைக்கிறன். எனக்கு பிடிக்குமா என்று தெரிய வில்லை.....படம் பார்த்து பிறகு உங்களுக்கு சொல்கிறேன்.
ReplyDeleteஅப்பவே உங்க இந்த திரைபடத்தின் விமர்சனம் படித்து விட்டேன்.....ஆனால் அப்போ எனக்கு நேரம் கிடைக்க வில்லை comment செய்வதற்கு.
எப்ப comment பண்ணா என்ன? வந்து வாசிப்பதே பூரண மகிழ்ச்சி..
Delete