கடந்த சில வருடங்களாக தனது தனித்துவப் பாணியை கைவிட்டு CG அனிமேஷன் போட்டுக்கொட்டிருந்த இக் கம்பனி, இந்தப் படத்தின் மூலமாக மீண்டும் பழைய ஆயுதத்தையே கையிலெடுத்திருக்கிறது!
அதுவும் கடைசியாக Arthur Christmas படத்தில் கூட்டுச் சேர்ந்திருந்த சோனி அனிமேஷன், இதிலும் கூட்டு சேர்ந்திருக்கிறது..
கதை நடப்பது 1800களில்.. "பைரேட் கேப்டன்"னு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளும் ஒரு கடல் கொள்ளைக்காரன். அவனுக்கு கீழே கடல் கொள்ளையில சுத்தமும் அனுபவமில்லாத ஒரு கொள்ளைக்கூட்டம்.. எப்படியாவது தாங்களும் ஒரு பெரிய பைரேட்ஸ்தான்னு வெளியுலகத்துக்கு காட்டனும்னு தவிச்சுக்கிட்டிருக்காங்க.. அதற்கு வசதியாக ஒரு சந்தர்ப்பமும் அமைகிறது!
வருடா வருடம் நடத்தப்படும் "வருடத்தின் சிறந்த கடல் கொள்ளைக்காரன்" போட்டிக்கு தன்னுடைய பெயரையும் இணைத்துக் கொள்கிறார் கேப்டன்! யாரு அதிகளவில் செல்வங்களை கொள்ளையடித்து வருகிறாரோ அவரே போட்டியின் வெற்றியாளன்.. ஏனைய போட்டியாளர்கள் கொண்டுவந்திருக்கும் தங்கங்களையும், வைரங்களையும் பார்த்து அப்படியே வெலவெலத்துப்போகிறார்.. காரணம் இவரு டப்பா காலி!
சரி, இனியாவது அடிச்சு சேர்ப்போமேன்னு முயற்சி செஞ்சா எல்லா அட்டெம்டும் ஃப்ளாப்பு!! அந்தக் கப்பலை அடிச்சு, இந்தக் கப்பலை அடிச்சு.. கடைசியில சார்ள்ஸ் டார்வின் போய்க்கிட்டிருந்த கப்பலையே அடிக்கப் போகிறார்கள்.. கையில காசில்லாமல் இவர்களிடம் மாட்டிக்கிடக்கும் டார்வின், அப்போதான் நம்ம கேப்டனின் தோளிலிருக்கும் செல்லப் பறவையைப் பார்க்கிறார்.. வழக்கமான "பைரேட் கிளி" போலில்லை.. அது ஒரு டோடோ! அதாவது உலகத்தின் கடைசி டோடோ நம்ம கேப்டன் தோளுல தான் உட்கார்ந்திருக்கு!!
டார்வின் உடனே ஒரு ஐடியா சொல்றாரு... பிரிட்டிஷ் அரசால நடாத்தப்படும் "வருடத்தின் தலைசிறந்த விஞ்ஞானி" போட்டிக்கு இந்த டேடோவை எடுத்துகிட்டு போ.. அங்கே நீ ஜெயிச்சா உனக்கு எக்கச்சக்கமான பரிசு கிடைக்கும்.. ஆனா அதுல ஒரு சின்ன சிக்கல்! பிரிட்டிஷ் மகாராணிக்கு கடற்கொள்ளையர்கள்னாலே புடிக்காது!!
அதையும் தாண்டி ரிஸ்க் எடுக்கலாம்னு, அந்த கொள்ளைக் கோஷ்டி விஞ்ஞானிகள் போல வேடமிட்டு போட்டிக்கு புறப்படுதுங்க...
இவங்க ஜெயிச்சாங்களா? மகா ராணி உண்மையை கண்டுபுடிச்சாங்களா? கேப்டனுக்கு வருடத்தின் சிறந்த கடல் கொள்ளைக்காரனாக முடிந்ததா? என்பதை பார்த்தறிக!
படத்தோட கதை "கிடியன் டிஃபோ" என்பவால் எழுதப்பட்டு வரும் 5 பாக 'Pirates! புத்தகத் தொடரின்', முதலிரண்டு பாகங்களோட காம்பினேஷன்.. ஏனைய பாகங்களையும் எடுப்பதற்காக இன்னோரு படமும் எடுக்கப் படலாமாம்!
பெரும்பாலான அனிமேஷன் படங்களைப் போலவே காமெடியை மாத்திரமே நம்பி படத்தை கட்டவிழ்க்கிறார்கள்.. படத்தின் கதைதொய்வில்லாமல் சென்று கொண்டிருந்தாலும் பாத்திரங்கள் எதுவும் மனதில் அழுத்தமாக பதிய மறுக்கின்றன.. விதிவிலக்கு அந்த பிரிட்டிஷ் மகாராணி...கடைசி சீனில் குங்ஃபு ரேஞ்சுக்கு தாவி்த்தாவி சண்டைபோடும் சீன் இருக்கே.. சிரிப்பை அடக்கவே முடியாது!
வழக்கமாக ஸ்டாப்-மோஷன் சீன்களில் (குறிப்பாக Shaun the sheepல்..) பிரச்சனையாக இருப்பது தண்ணீர்தான்.. என்னதான் பார்க்க தண்ணி மாதிரி இருந்தாலும், தெறித்து விழும்போது ஏதோ பசை ஒட்டுற மாதிரி இருக்கும்.. இந்தப் படத்துக்குத்தான் கடலையே காட்ட வேண்டுமே! அதனால் சந்தேகம் வராதமாதிரி CGயில் தண்ணி காட்டியிருக்கிறார்கள்!
பேருக்குத்தான் சோனி இருக்தேவிர, படத்துல அங்களோட பங்களிப்பு எங்க இருக்குன்னே புரியலை.. முழுக்க முழுக்க ஒரு Aardman படம் பார்த்த மாதிரி இருக்கு... சோனி திருப்ப ஃபார்முக்கு வந்தா நல்லது!
அவங்களோட அடுத்த படம் Hotel Transylvania இந்த வருஷத்துல நான் எதிர்பார்க்கும் மூணாவது முக்கிய அனிமேஷன் படம் வேற..
(மற்றையவை நம்ம பிக்சாரின் Braveம், ப்ளூ ஸ்கை Ice Age 4ம் தான்... Madagascar வந்தாலும் போனாலும் எனக்கு கவலையில்லை!) நம்பாவிட்டால் இங்க க்ளிக்கி ட்ரெயிலரை பாருங்க.. அமர்க்களப்படுத்தி வைச்சிருக்காங்க!
(நான் ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய படம் டர்ஸாகிப் போனதாக சேதி! இங்க தியேட்டர்ல இன்னும் வராததால் படம் பார்க்க முடியலை..)
அந்தப்படங்களெல்லாம் ரிலீசாகும் வரையில் அனிமேஷன் வெறியர்கள் இந்தப் படத்தைப் பார்த்து பசியாற்றும் படி இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 12
அனிமேஷன்-14
பின்னணித் தரவுகள்- 15
கதை+திரைக்கதை- 14
இயக்கம்-15
மொத்தம்- 70% மிக நன்று!!
அனிமேசன் படங்களுக்கு தொடர்ந்து பதிவு போட்டு விடுகிறீர்கள்.
ReplyDeleteபடம் பார்க்காத...என்னுள் படத்தை பற்றி ஒரு நேர்மையான பிம்பத்தை உருவாக்கி விடுகிறீர்கள்.
தொடருங்கள்....நற்பணியை.
@ உலகசினிமா ரசிகன் - வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!
ReplyDeleteஅனிமேஷன் படங்கள் மட்டும்தான் பார்த்து முடிக்கும் வரை ஒரு குறையுமே தெரியாமல் என்னை கட்டிப்போட்டு வைக்கின்றன.. அனிமேஷனுடனான என் அலாதி பிரியம் என்றென்றும் தொடரும்!!
இதுவரை Chicken Run மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். இந்தப் படம் வந்ததே தெரியாது. இப்போத் தான் R5 காப்பி வந்திருக்கு. Bluray ப்ரிண்ட் அல்லது dvdrip வந்ததும் டவுன்லோட் செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteதொடர்ந்து நல்ல அனிமேஷன் படங்களாக அறிமுகப்படுத்துங்க. மற்றப் படங்கள் பார்க்க ஒரு மூட் வரமாட்டேங்குது.
நன்றி நண்பா!... ஜுன், ஜுலை வரட்டும்.. அனிமேஷன் திருவிழாவே ரிலீசாக காத்துக்கிட்டு இருக்கு! அப்போ போட்டுத் தாக்குவோம்!!
Deleteஇப்போதான் என்னோட பிளாகில உன்னோட பின்னூட்டத்துக்கு "என்ன தல உனக்கு இன்னும் வேற பதிவு சிக்கலயான்னு " பதில் போட்டுபுட்டு உன்னோட பிளாக்குக்கு வாறேன், தக்காளி நீ இங்க அமர்க்களப்படுத்தி வச்சிருக்க! செம சூப்பர் மாமா! எனக்கு ஆங்கில படங்கள்ளயே புடிச்சது அனிமேஷனும் கௌபாய் படங்களும் தான்.
ReplyDeleteஆங்கில படம் எதுவானாலும் பார்பேன், ஆனான் என்னோட பேர்வரைட் இந்த ரெண்டும் தான். என்ன மச்சி டொரண்டுல போட்டுடலாமா? படம் என்ன வேர்த்தா? ( நீ 70 மார்க்கு போட்டு இருக்க . படம் செமயா தான் இருக்கும். சந்தேகம் வேணாம்)
என்னா ஒரு நம்பிக்கை.. படம் நல்லாத்தான் இருக்கும்! ஆனா அதுக்கு நீ பார்க்குற காப்பி சரியா இருக்கனும். அது மட்டுமல்லாம நீ இதுக்கு முதல்ல ஸ்டாப்-மோஷன் படங்கள் பார்த்திருக்கியான்னு தெரியலை.. அப்படி இல்லாட்டி கஷ்டம்தான்!
Deleteஎதுக்கும் ஒருவாட்டி ட்ரெயிலரை பார்த்து முடிவெடு தல!
எனக்கு நல்ல அனிமேஷன் படங்களா சொல்லேன்! ( பிரபலமானவைகள் பெரும்பாலும் பாத்துட்டேன்) IMDb ரேடிங்ல உள்ள முதல் பதினஞ்சு படங்ளும் பாத்துட்டேன். என்ன சொல்ல வாறேன்னா உன்னய ஒரு பெரிய மனுஷனா மதிச்சு கேக்குறேன், நல்லட்தா நாலு படம் சொல்லு மங்காத்தா....
ReplyDeleteஅனிமேஷன் விசிறின்னா நீ ஏற்கெனவே நெறைய பார்த்திருப்பியே.. நீ என்ன பார்க்கலைன்னு எனக்கு எப்படி பாஸு தெரியும்!
Deleteநல்லதா அனிமேஷன் படம்னா எல்லாப் Pixar படத்தையும் போய் பாரு!
பிக்சார் தவிர்ந்து எனக்கு புடிச்சவைகள் -
How to train a dragon, Rio, Meet the robinsons, Despicable Me, The illusionist, Polar Express, Arthur Christmas, Megamind, Monster House, Mary and Max
பழைய டிஸ்னி ஃபேவரிட்ஸ்-
Mulan, Lady and the Tramp, Beauty and the Beast, Lion King, Pinocchio, Robin Hood, Tarzan
சைனீஸா இருந்தாலும் இவுங்க தான் பெஸ்டு -
Secret World of Arriety, Spirited Away, Princess Monoke
நீயி சொன்ன பிக்ஸார் படங்கள்ள Meet the robinsons,The illusionist மட்டும் தான் பாக்கல, அதே மாதிரி டிஸ்னி படங்கள்ள Lion King மட்டும் தான் பாத்திருக்கேன். சைனீஸ்???????? ஒரு வாட்டி முயற்சி பண்ணிட வேண்டியது தான்.
Deleteஉனக்கு நான் சொல்ல வேண்டியதில்ல தல ஆனாலும் எனக்கு பிடிச்ச சில அனிமேஷன் படங்கள் சொல்றேன். நீ சொன்ன பிக்ஸார் படங்கள் எல்லாம் பிடிக்கும். அது போக எனது சில தெரிவுகள். (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கலாம்) wall-E (இந்த படம் பாக்கலன்னா கட்டாயம் பாத்திரு மச்சி, என்னோட பெஸ்ட் அனிமேஷன் எவர்!) planet 56, bee movie, bug life, mars needs moms, chicken little , Ratatouille , 9, animals united,robots , finding nemo, cars அப்புறம் இன்னும் கொஞ்சம். இதெல்லாம் என்னோட ஃபேவரிட் நண்பா, அனேகமா இதெல்லாம் நீயி பாத்திருப்பன்னு நம்புறன்.
//நீயி சொன்ன பிக்ஸார் படங்கள்ள Meet the robinsons,The illusionist மட்டும் தான் பாக்கல//
Deleteமேல, பிக்சார் தவிர்ந்து எனக்கு புடிச்சவைகள்னு எழுதியிருக்கிறேனே.. வாசிக்கலையா?
Meet the robinsons டிஸ்னி தயாரிப்பு ,The illusionist பிரெஞ்சு தயாரிப்பு...
"பிக்சார் போக, எனது தெரிவுகள்"ன்னுட்டு 5 பிக்சார் படத்தயே எழுதியிருக்கே?
* Ratatouille என்னோட மோஸ்டு பேவரிட்டு!
* 9 கேள்விப்பட்டிருக்கேன்.. பார்க்கலை!
* அதுபோக planet 56, animals united ரெண்டும் கேள்வியே படலை!
திருப்பி வந்து ரிப்ளை பண்ணதுக்கு நன்றி, நண்பா!
////மேல, பிக்சார் தவிர்ந்து எனக்கு புடிச்சவைகள்னு எழுதியிருக்கிறேனே.. வாசிக்கலையா?/////
Deleteசாரி பாஸ், கவனிக்கல!
//// "பிக்சார் போக, எனது தெரிவுகள்"ன்னுட்டு 5 பிக்சார் படத்தயே எழுதியிருக்கே?//////
நான் அதுபோகன்னு சொன்னது பிக்ஸார் படங்கள் தவிர என்று அர்த்தம் கொள்ள அல்ல, நீயி சொன்னது போக எனக்கு பிடிச்ச படங்கள்ன்னு எழுதியிருக்கணும், சாரி... சின்ன மிஸ்டேக் ஆகி போச்சு.
/////அதுபோக planet 56, animals united ரெண்டும் கேள்வியே படலை!/////
என்னது !JZகு ஹலிவுட் படங்கள்ள சிலது தெரியாதா? சத்தியம்டா மாயன் சொன்னது போலவே இந்த வருஷம் உலகம் அழிஞ்சுடும்.
////திருப்பி வந்து ரிப்ளை பண்ணதுக்கு நன்றி, நண்பா!////
நாமெல்லாம் ஒரே கன்றி, நமக்குள்ள எதுக்கு நன்றி நண்பா....
நான் Chicken Run பார்த்து இருக்கிறேன்.. இந்த படம் இபொழுது தான் கேள்விப்படுகிறேன்..கதை நல்ல காமெடியா இருக்கு.. கண்டிப்பா பார்க்கிறேன்.... இவங்க பிக்ஸ்ர் அளவுக்கு விளம்பரம் எல்லாம் பண்ண மாட்டாங்க போல..படம் வந்ததே தெரியல பாஸ்...
ReplyDelete@ ராஜ்- பிக்சார் படங்களுக்கு எல்லாம் மார்கெட்டிங் வேலை டிஸ்னிதானே நண்பா.. அதுனால வசூல் பிச்சு உதறும்!!
ReplyDeleteஇந்தப் படத்துக்குன்னு இல்லை.. பொதுவாவே ஸ்டாப்-மோஷன் படங்களுக்கு விளம்பரம் குறைவாத்தான் வருது!
எனக்கு Chicken Run மிகவும் பிடித்த படம். இந்த படத்தை பற்றி நானும் இப்போது தான் கேள்வி படுகிறேன். நல்ல பிரிண்ட் வந்து விட்டது...பாத்துற வேண்டியதுதான்.
ReplyDeleteபார்த்துட்டு சொல்லுங்க பாஸ்!
DeleteIndivula release aagalayaa boss?
ReplyDeleteIndivula release aagalayaa boss?
ReplyDeleteIndivula release aagalayaa boss?
ReplyDelete@ மெளனகுரு - இந்தியாவுல போன மாசம் 27ந் திகதியே ரிலீசாயிட்டதா IMDB சொல்லுது.. எந்த தியேட்டருன்னுதான் தெரியலை!
ReplyDeleteஒவ்வொரு படத்தையும் மிகவும் சிறப்பாக விமர்சனம் செய்வதில் வல்லவர் ஆகிக்கொண்டே போகிறீர்கள் நண்பா..வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த படம்...பார்க்க முயற்சிக்கிறேன்.பகிவுக்கு மிக்க நன்றி.
@ குமரன்- தேங்க்யூ நண்பா!
ReplyDeleteஇந்த படத்தோட ட்ரைலர் பார்த்து, அனிமேஷன் அந்த அளவு சரி இல்லாதது போல் தெரிந்ததனால் இந்த படத்தை நான் பார்கவில்லை (எனக்கு இந்த ஸ்டாப்-மோஷன் அனிமேஷன் தொழில்நுட்ப்பம் பற்றி எல்லாம் தெரியாது). இப்போ நீங்க சொன்னதினால் தான் இது எனக்கு தெரிகிறது.
ReplyDeleteநீங்கள் நல்ல இருக்குனு சொல்றதுனால பார்க்கப்போகிறேன்.
விமர்சனம் எப்போதும் போல அருமை.
@ முரட்டுசிங்கம் - வருகைக்கு நன்றி நண்பா! படம் உங்களுக்கும் பிடித்துக்கொண்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி!
ReplyDelete* எங்கே புதுப் பதிவு எதையும் காணோம்?
கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் என்று தான் நினைக்கிறன், நிங்களே நன்றாக இருக்கு என்று சொல்லி இருக்கீங்க.
ReplyDeleteஎப்படியும் இந்த மாதத்தில் ஒரு பதிவாவது எழுதிவிடுவேன் பாஸ்..........