Wednesday, April 20, 2011

The Orphanage (2007)

நான் உங்களுக்கு சொந்தமான சில பொருட்களை எடுத்து ஒளிச்சு வைச்சுருவேன். நீங்க அத கண்டுபிடிக்கனும். முதலாவதாக கண்டுபிடிக்கற பொருளில் அடுத்த பொருளுக்கான க்ளூ இருக்கும். எல்லா பொருட்களையும் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கும். நல்ல விளையாட்டுதான்.... ஆனா அதுல யாரோ ஒருத்தருடைய உயிரைப் பணயம் வைச்சா??
இதுதான் நான் பார்க்கிற முதலாவது ஸ்பானிஷ் படம். இதுவே எனக்கு ஸ்பானிஷ் படங்கள் மேல நல்ல நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு..

லாரா எனும் ஒரு சிறுமி அனாதை இல்லத்தில் வளர்ந்து 8 வயதில் ஒரு தம்பதியினரால் தத்தெடுக்கப்படுகிறாள். அவள் கார்லொஸ் என்பவரையும் திருமணம் செய்து கொள்கிறாள். இருவரும் சீமோன் எனும் ஒரு குழந்தையை தத்தெடுக்கின்றனர். 7 வயது மட்டுமே ஆகும் சீமோனுக்கு HIV+... ஸோ மிகவும் கண்கானிப்புடன் குழந்தையை வளர்க்கினறனர். லாராவின் கனவு அவள் வளர்ந்த, தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள அநாதை இல்லத்தை வாங்கி, அதை ஊனமுற்ற குழந்தைகள் பராமரிப்பு நிலையமாக மாற்ற வேண்டுமென்பதுதான்....
    
லாராவின் விருப்பம் போலவே, அவர்கள் அங்கு சென்று குடியேறுகின்றனர்... இன்னமும் ஊனமுற்றோர் காப்பகமாக மாற்றவில்லை... அங்கு சீமோன் கற்பனையில் அவ்வீட்டில் சில குழந்தைகள் இருப்பதாகவும், அவர்களுடன் தான் சந்தோஷமாக விளையாடுவதாகவும் பெற்றோரிடம் கூறுகின்றான். "சீமோன் தெரிந்து கொண்டே நடிக்கிறானா?" என்ற சந்தேகம் லாராவுக்கும் கார்லோஸுக்கும்.
சீமோன் தனது கற்பனை நண்பர்களை பேப்பரில் வரைந்து அம்மாவிடம் அறிமுகப்படுத்துகிறான். அதில் தோமஸ் என்ற பையன் மட்டும் சாக்கினால் செய்த முகமூடியை அணிந்து கொண்டு நிற்கிறான்.

ஒருநாள் பெனீன்யா எனும் சமூக சேவகி அனாதை இல்லத்துக்கு வந்து, லாராவை சந்தித்து, தன்னிடம் சீமோனின் மருத்துவ கோப்புகள் உள்ளதாகவும், அதில் சீமோனுக்கு HIV இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறுகிறாள். லாரா ஃபைலை வாங்கிக்கொண்டு பெனீன்யாவை துரத்துகிறாள். அன்று இரவு பெனீன்யா அவர்களது வீட்டின் பின்னாலுள்ள ஷெட்-இல் ஒளிந்திருப்பதை லாரா கண்டுபிடிக்கிறாள். பெனீன்யா எதுவும் பேசாமல் தப்பி ஓடிவிடுகிறாள்.

மறுநாள் சீமோன், தனது நண்பர்கள் சில பொருட்களை ஒளித்து வைத்திருப்பதாக கூறி அம்மாவுடன் சேர்ந்து "மேலே கூறப்பட்ட" விளையாட்டை விளையாடுகிறான். இறுதி பொருளாக சீமோனின் மருத்துவ கோப்பு வரவே, லாரா கோபமடைந்து, "நீயே ஒளிச்சு வைச்சுட்டு விளையாடுறியா??" எனத் திட்டிவிடுகிறாள். பதிலுக்கு சீமோன் கோபத்துடன், "நீ என் அம்மாவே இல்லை. நான் இன்னும் கொஞ்ச நாள்ல செத்துடுவேன்.. எல்லாத்தையும் என் பிரென்ட்ஸ் எங்கிட்ட சொல்லிட்டாங்க.." என கத்துகிறான்.

ஒருநாள் அனாதை இல்லத்தில் பார்ட்டி வைக்கிறார்கள். அதன்போது லாராவுக்கும் சீமோனுக்கும் வாக்குவாதம் வரவே சீமோன் கோபித்துக்கொண்டு போய்விடுகிறான். அவனைத் தேடி லாரா போகும் போது, சாக்கு முகமூடியணிந்த தோமஸ் பையன் நிஜமாகவே வந்து லாராவை பாத்ரூமில் வைத்துப் பூட்டி விடுகிறான். லாரா சமாளித்துக்கொண்டு தப்பி வரும்போது, சீமோனைக் காணோம்... முழு அனாதை இல்லத்திலும் தேடிப்பார்த்தும்.... பிரயோஜனம் இல்லை!!!
போலீஸ் சைக்கோலஜிஸ்ட் பெனீன்யாதான் சீமோனைக் கடத்திச் சென்று வைத்திருக்கலாம் என ஊகிக்கிறார். அன்று இரவு லாராவுக்கு சுவரில் யாரோ தட்டுவது போலக் கேட்கிறது.

ஆறு மாதத்திற்குப் பிறகு வேறு ஊரிற்கு காரில் சென்று கொண்டிருக்கும் போது லாரா, பெனீன்யா குழந்தையொன்றைத் தள்ளிச் செல்வதை பார்க்கிறாள். அவளைக் கூப்பிடப்போகும் போது பஸ்ஸில் அடிபட்டு பெனீன்யா சாகிறாள். அவள் தள்ளிச் சென்றது......... சாக்கு முகமூடியணிந்த ஒரு பொம்மை!!!
உஷாராகி பெனீன்யாவின் வீட்டை துருவும் போலீஸ், பெனீன்யா அந்த அனாதை இல்லத்தில் தான் முதலில் வேலை பார்த்ததாகவும், அவளது மகன் தோமஸின் முகம் சிதைவடைந்திருந்ததால் ஒரு சாக்கு முகமூடி அணிந்திருந்தான் எனவும் கண்டுபிடிக்கின்றனர். எனினும் பல வருடங்களுக்கு முன்பே அவன் இறந்து போயிருக்கிறான். அவனுடன் இருந்த சிறுவர்கள் அவனது முகமூடியை கடற்கரைக்கு அண்மையிலுள்ள குகையில் ஒளித்துவைக்கவே, அதை தேடிச் சென்ற தோமஸ் கடலலைககளால் அள்ளப்பட்டு இறந்துள்ளான்....

பெனீன்யா, தன் மகனைக் கொன்ற சிறுவர்களை உயிரோடு எரித்து அந்த சாம்பலை அனாதையில்லத்துக்கு பின்னாலுள்ள ஷெட்-இல் ஒளித்து வைத்திருந்தாள் என்பதையும் "மேலே கூறிய" விளையாட்டு மூலம் லாரா கண்டுபிடித்துக் கொள்கிறாள்.

சீமோன் காணாமல் போய் 9 மாதம் ஆனதால் கார்லோஸ் அவ்வீட்டை விட்டுச்செல்ல முடிவடுக்கிறார். ஆனால் லாரா அதற்கு உடன்படவில்லை. அவள் சீமோன் அவ்வீட்டில் தான் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக நம்புகிறாள். கார்லோஸிடம் 2 நாள் அவகாசம் வாங்கிக் கொண்டு அவ்வீட்டில் தனியாக வசிக்கிறாள்.
அவளால் சீமோனை கண்டுபிடிக்க முடிந்ததா? தோமஸ் ஆவியின் நோக்கம் தான் என்ன? என்பது மீதிக்கதை.. படம் தியேட்டரில் பார்த்திருக்கவேண்டிய அளவு உச்சகட்ட விறுவிறுப்பு!! துறுதுறுவென்று இருக்கும் சீமோனின் முகத்தை பாதிப்படத்துக்கு மேல் பார்க்கமுடியாது போனது மட்டும் சின்ன ஏமாற்றம்...

சமீபத்தில் வாங்கிய ஹாரர்/த்ரில்லர் படங்களில்இது மட்டும்தான் உருப்படியாக இருந்தது.. யாருக்காவது நல்ல படம் கொஞ்சம் தெரிஞ்சா சொல்லிட்டு போங்க...

ரேட்டிங்ஸ்,

 நடிப்பு = 17
இசை = 15
கதை + திரைக்கதை = 18
கலை = ஒளிப்பதிவு = 18
இயக்கம் = 17

மொத்தம் = 85% சூப்பர்

9 comments:

  1. நண்பா....
    இந்த படம் குறித்து நானும் எழுத நினைத்திருந்தேன்....

    ஆங்கிலத்தில் படு மொக்கையாக ரீமேக்கியிருப்பார்கள்......

    ReplyDelete
  2. உங்களுக்கு நல்ல த்ரில்லர் சினிமா பார்க்க தோன்றினால் Guillermo del Toro படங்களை பாருங்கள்....இந்த படத்தின் producerம் அவரே...

    அவரின் Devils backbone மிக அருமையான ஒரு படம்..

    Let the right one in...மற்றொரு அருமையான படம்

    ReplyDelete
  3. கொழந்த,
    நானும் யாராவது எழுதியிருக்காங்களான்னு தேடிப் பார்த்தேன். கிடைக்கல.. நீங்களாவது எழுதி அசத்துங்க!!

    சொன்ன ரெண்டு படத்தோட ட்ரெயிலரையும் பார்த்தேன்... சூப்பர்!! வாங்கிப் பார்ப்போம்

    ReplyDelete
  4. என் பெயர் குமரன்.ரொம்ப நல்ல விமர்சனம்.பார்க்க நேரம் இல்லாமல் திரைப்படத்தை கையில் வைத்துக்கொண்டே அலைகிறேன்.விரைவில் பார்த்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்.மேலும் உங்களது விமர்சனம் ரொம்ப பிடித்திருகிறது.தொடர்ந்து உங்கள் எழுத்துகளை படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.நன்றி

    ReplyDelete
  5. கருத்துக்கு நன்றி குமரன்!

    ReplyDelete
  6. try this movie ...different kind of Thriller The.Skin.I.Live.In.2011 and
    Orphan (2009)
    best thriller movie the shining 1980...

    ReplyDelete
  7. the shining 1980
    best thriller and horror movie ever seen....

    ReplyDelete
  8. @ Senthoor-
    I've watched orphan, but i didn't like itvery much..
    and i've heard about the shining.. thanx for introducing the other 2!! i'll try to watch 'em all!

    *And thanks for Coming 2.. Keep Visiting!

    ReplyDelete

Related Posts with Thumbnails