
ஆனா இந்த திட்டம் ரொம்ப காஸ்ட்லி-ங்கறதால 'தீய நடவடிக்கைகளுக்கு உதவும்' வங்கில கடன் வாங்க போறான். வங்கி முகாமையாளரோ, "நிலவை சிறிதாக்கி கடத்துவதற்கு தேவையான கதிர் வீச்சியை நீ திருடிக்கிட்டு வந்தாதான், உன்னை நம்பி பணம் தரலாம்..."னு திருப்பி அனுப்புகிறார். க்ரூ பக்காவா பிளான் பண்ணி கதிர்வீச்சியையும் திருடிவிடுகிறான்.

கோபத்துடன் கதிர்வீச்சியை திரும்பப்பெற போகும் க்ருவுக்கு அதிர்ச்சி.. அவனால் வெக்டரின் ஆய்வுகூடத்துக்கு உள்ளே நுழையவே முடியவில்லை.. அவ்வளவு பாதுகாப்பு!!
ஒருநாள் அனாதையில்லத்திலிருந்து வந்த 3 சிறுமிகள் (மார்கோ, எடித், ஆக்னஸ்) சுலபமாக ஆய்வகத்துக்குள் நுழைந்து, வெக்டரிடம் குக்கீஸ் விற்றுச் செல்வதை மறைந்திருந்து அவதானிக்கிறான் க்ரூ..

க்ரூ நினைச்ச மாதிரி அவங்கள வைச்சு திருட முடியாம போகுது. இதுக்கு தடையா இருக்கது 3 காரணிகள்-
1. மூன்று சிறுமிகளோடயும் விளையாட்டுத்தனம்
2. அவங்களுக்கு பலே டான்ஸ் க்ளாஸுக்கு அடிக்கடி போக வேண்டியிருந்தமை
3. க்ரூவுக்கு அவங்களுக்கு அப்பாவா இருப்பதில் சுத்தமும் விருப்பமில்லை..
என்றாலும் நாளாக, நாளாக மார்கோ, எடித், ஆக்னஸுடன் பழகும் க்ரூவின் வில்லத்தனம் குறைந்து பாசம் அதிகரிக்கிறது....
அவர்களுக்கு கதை வாசித்து விடுகிறான், விருப்பமானவற்றை வாங்கிக்கொடுக்கிறான், அவர்களுடன் விளையாடுகிறான். இப்படியாக 3 சிறுமிகளையும் தன் பிள்ளைகள் போலவே பார்த்துக்கொள்கிறான்.
மறுபடி திட்டத்தில் முழுக்கவனத்தையும் செலுத்தி, திரும்பி வங்கிக்கு செல்லும் க்ரூவுக்கு பணம் தர மறுக்கிறார் வங்கி மேனேஜர். கவலையோடு உட்கார்ந்திருந்த க்ரூவிடம் உண்டியலை நீட்டுகிறார்கள் மூன்று சிறுமிகளும்... புது உற்சாகம் பிறக்கவே சொந்த செலவில் திட்டத்தை செயற்படுத்த முடிவெடுக்கிறான் க்ரூ..
அவனது திட்டம் வெற்றியளித்ததா.. நிலவை கடத்துவானா?ங்கறத படம் சொல்லும்.. யூகிக்க கூடிய க்ளைமேக்ஸ்தான்.. பிக்ஸார், ட்ரீம்வொர்க்ஸ் அளவு கதாப்பாத்திரங்கள் "கிராபிக்கலா" இல்லைன்னாலும் "அனிமேட்டப்பட்ட" விதம் அருமை! படத் தலைப்பும், கேப்ஷனும் (superbad. superdad) செம பொருத்தம்!!
படம் யுனிவேர்சல் பிக்சர்ஸ் மற்றும் இல்லுமினேஷன் என்டர்டெயின்மன்ட்-இன் கூட்டுத் தயாரிப்பு. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகளை எடுத்தது "மாக் கஃப்" எனும் பிரெஞ்சுக் கம்பனி... (உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய படம் எதிர்பார்க்கறோம் பாஸ்!!)
ரேட்டிங்ஸ்,
பாத்திரங்கள்- 16
அனிமேஷன்- 18
பின்னணித் தரவுகள்- 16
கதை+திரைக்கதை- 19
இயக்கம்- 17
மொத்தம்- 86% சூப்பர்!
நண்பா...
ReplyDeleteஇந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை..
நானறிந்த வரையில் பரவலாக யாரும் விமர்சனம் எழுதிய மாதிரியும் தெரியவில்லை....
உங்களுக்கு பிடித்த அனிமேசன் படங்கள் என்னனென்ன...ஒரு லிஸ்ட் போடுங்க தல....
ReplyDeleteஎனக்கு பிடித்தது குறித்து எங்க குறிப்பிட்டிருக்கேன்...
http://ciniversal.blogspot.com/2011/01/ratatouille.html
நண்பரும்(http://aadav.blogspot.com) நம்மை போல அனிமேசன் படங்களின் பால் அலாதி பிரியம் கொண்டவர் தான்...
Pixar படங்கள்ல அத்தனையுமே பிடிக்கும். Toy Story Series தான் எப்பவும் என் favourite!!!!
ReplyDeleteட்ரீம்வொர்க்ஸ்ல,
1)Shrek 1 ஆக்சுவலா இதுதான் நான் முதல்ல பார்த்த முழு நீள அனிமேஷன் படம்!! இதுக்கப்புறம் தான் அவ்வகை படங்கள் மீது ஆசையே வந்திச்சு...
2)Kung Fu Panda
3)How to Train your Dragon
4)Madagascar 1&2
Ice Age- full series
(Robots என் பிரென்ட்ஸ் எல்லோருக்கும் புடிச்சிருந்திச்சு. எனக்கு அவ்வளவா பிடிக்கல..)
அத தவிர Despicable Me & Meet the Robinsons
இந்தப் படத்துக்கு 86% போதாது பாஸ். படம் செம கலக்கல்..
ReplyDeleteகருத்துக்கு நன்றி Faaique!
ReplyDelete//இந்தப் படத்துக்கு 86% போதாது//
ஆமா.. வித்தியாசமான ஒரு கதையை ரொம்பவே நகைச்சுவையோட எடுத்திருக்கதால அப்படித்தான் தோணும்!
boss saw padathoda kathaiya sollunga 1-7 onnume purilla ...
ReplyDelete