Sunday, October 3, 2010

The Departed (2006)

லியனார்டோ டிகாப்ரியோ+மாட் டேமன் இணையும் பக்கா அதிரடி+திரில்லர் ஸ்டோரி, மார்ட்டின் ஸ்கார்சேஸிக்கே உரிய பாணியில்... இதைத் தவிர வேறென்ன வேணும்??


3 வருஷத்துக்கு முதல்ல படம் பார்த்தப்போ நானும் இப்படித்தான் நினைச்சேன்.. ஆனா படத்தோட திரைக்கதை அமைப்பு இருக்கே.. அது இன்னும் ஒருபடி மேல உயர்த்தி வைச்சிருக்கு!! சமீபத்தில் தான் மீண்டும் படம் பார்க்க கிடைத்தது. அப்போது இருந்த விறுவிறுப்பு கொஞ்சமும் குறையவில்லை! குறிப்பா சொல்லனும்னா படத்தை இன்னும் ரசிக்க முடிஞ்சுது!! அதான் அதுக்கு ஒரு பதிவை போடலாம்னு எழுதுறேன்..

ஏதாவது ஒரு குழுவில் இருப்பவர், எதிர்க்குழுவில் நுழைஞ்சு அவங்களுக்குள் ஒருத்தவாவே நடிச்சு, வேவு பார்த்து?, எதிர்க்குழுவின் பிளானையெல்லாம் முறியடிக்க தன் குழுவுக்கு உதவினால் அவரை "கறுப்பு ஆடு" என்று சொல்லுவோமில்லையா?? அப்படிப்பட்ட இரண்டு கறுப்பு ஆடுகளைச்சுற்றித் தான் கதை போகுது!!



அயர்லாந்து மாஃபியா குழுவின் தலைவர் பிராங் காஸ்டெல்லோ, ஸ்டேட் பொலிஸாக நடித்து வேவு பார்க்க தனக்கு ஒரு ஆள் தேவைப்பட்டதால் சுலிவானை(மாட் டேமன்) அனுப்புகிறார். அதே நேரம் குற்றவாளிகளால் நிறைந்து இருக்கும் ஒரு குடும்பத்திலிருந்து வரும் நல்லவராய் காஸ்டிகனும் (டிகாப்ரியோ) ஸ்டேட் பொலிஸில் சேர விண்ணப்பிக்கிறார்.. சுலிவானுக்கு விஷேட விசாரணைக்குழுவில் இடம் கிடைக்கும் அதே வேளையில், காஸ்டிகன் உயர் அதிகாரிகளான கேப்டன் குயினனாலும், சார்ஜன்ட் டிக்னமாலும் உளவு முகவராக்கப்படுகிறான். இந்த விஷயம் ரொம்ப ரகசியமாக இருக்க வேண்டுமென்பதால் காஸ்டிகனை பொய் கேஸில் போட்டு சிறைக்கு அனுப்புகின்றனர். காஸ்டிகன் போலீஸ்தான் என்ற விஷயம் டிக்னமுக்கும் குயினனுக்கு மட்டும்தான் தெரியும்..

சிறையிலிருந்து வெளியில் வரும் காஸ்டிகன் கொஞ்சம் கொஞ்சமாக காஸ்டெல்லோவின் மாஃபியாவில் இடம்பிடிக்கிறான் (குயினைனின் உத்தரவுப்படி). இருவரும் (காஸ்டிகன், சுலிவான்) தாங்கள் சேர்ந்த இடங்களில் நன்மதிப்பை பெறுவதோடு தங்களது உண்மையான க்ரூப்புக்கும் அவ்வப்போது தகவல்களைக் கூறி அவர்களை ஆபத்துக்களின் போது காப்பாற்றுகிறார்கள். "பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்பது போல இரு தரப்பினதும் பிளான்கள் சொதப்ப.. இரு தரப்பிலும் கறுப்பு ஆடுகள் இருப்பது வெளிச்சத்துக்கு வருகின்றது. மாஃபியாவிலிருக்கும் கறுப்பு ஆட்டை சுலிவானும், பொலீஸில் இருக்கும் கறுப்பு ஆட்டை காஸ்டிகனும் தேட ஆரம்பிக்க விறுவிறுப்பு அதிகரிக்கிறது..

இதற்கிடையே ரெண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பார்க்காமலிருந்தும், சொல்லி வைத்தாற் போல ஒரே பெண்ணைக் காதலிக்கிறார்கள்..(காதல் தேசம்??) மாபியாவிலிருக்கும் கறுப்பாட்டை கண்டுபிடிக்க சுலிவான் காஸ்டெல்லோவிடம் குழுவிலிருக்கும் ஆட்களின் பெயர், விபரங்களைத் தரச் சொல்லிக் கேட்கிறான். சுலிவானை தியேட்டரில் சென்று சந்திக்கும் போது காஸ்டெல்லோவுக்குத் தெரியாமல் காஸ்டிகன் அவனைப் பின் தொடர்கிறான். எவ்வளவுதான் முயன்றும் காஸ்டிகனால் சுலிவானைப் பார்க்க முடியாமல் போய் விடுகிறது.

காஸ்டிகன் மாஃபியாவில் காஸ்டெல்லோவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக வளரும் அதேவேளை சுலிவானுக்கு மாஃபியா கேஸை விசாரிக்கும் பொறுப்பு அளிக்கப்படுகிறது. குயினைன் காஸ்டிகனை ரகசியமாக சந்திக்கச் செல்லும் போது, சுலிவான் தனது அதிகாரத்தை பயன்படுத்தி போலீஸையே குயினைனை பின் தொடர ஏவுவதோடு, மாஃபியாவிடம் கறுப்பாட்டை பிடிக்கச் சொல்கிறான். மாஃபியா குயினைன் இருக்குமிடத்தை தேடி வரும் சேதியை அறியும் காஸ்டிகன் தப்பிக்கிறான். கறுப்பாட்டைப் பிடிக்க அதிரடியாக உள்ளே நுழையும் மாஃபியா கும்பல் குயினைன் மட்டும் இருப்பதைக் கண்டு விரக்தியால் அவரைக் கொலை செய்கிறது!!!

சுலிவானின் நடவடிக்கையால் தான் குயினைன் கொலை செய்யப்பட்டிருக்கிறார் என எண்ணும் டிக்னம் அவனைத் தாறுமாறாக தாக்கியதால் டிஸ்மிஸ் செய்யப்படுகிறார்.. தான் நல்லவன் எனத் தெரிந்தவர்களில் ஒருவர் இறந்து விட்டார், மற்றையவர் டிஸ்மிஸ், புதுதாக ஒரு அதிகாரி (வேறு யாருமல்ல சுலிவானே தான்!!), தான் யாரென்ற உண்மை தெரிஞ்சால் கண்டதுண்டமாக வெட்டிப் போடும் மாஃபியா கும்பலுக்கு நடுவில் மாட்டிக் கொள்கிறார் காஸ்டிகன்...(கொஞ்சமாக பில்லா சாயல் வருகிறதா??)

குயினைனின் டயரியிலிருந்து காஸ்டெல்லோ காசுக்காக தனக்குக் கீழ் வேலை செய்பவர்களையே காட்டிக் கொடுத்து விடுவான் என்ற உண்மையை அறிகிறான் சுலிவான்!! எங்கே தனது குட்டும் வெளிப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் காஸ்டெல்லோ வசமாகச் சிக்கும் ஒரு தருணத்தில் அவனைத் தீர்த்துக் கட்டி விடுகிறான். ரெண்டு சைடு பெரிய தலைகளும் (குயினைன், காஸ்டெல்லோ) குளோஸ்!! இனி கவனிக்க வேண்டியது தனது க்ரூப்பிலேயே இருந்த மற்ற கறுப்பாடைத் தான்... சுலிவானும், காஸ்டிகனும் one-on-one மோதும் சிச்சுவேஷன் வருகிறது..
எப்படி? என்ன நடக்கும்? காதல் கதைக்கு என்ன ஆச்சு?? இதெல்லாம் நீங்கதான் படத்தில் பார்க்கனும்..

கடைசி 5 நிமிடங்களில் தடபடவென (இது ஏன் என்று படம் பார்த்தவர்களுக்கு தெரியும்..) திரைக்கதை நகரும் விதம் முற்றிலும் எதிர்பாராதது !
நல்லவர்களுக்காக போராடும் காஸ்டிகன் மேலதிகாரிகளாலேயே அவமானப்படுத்தப்படுவதும் கெட்டவங்களுக்காக போராடும் சுலிவானுக்கு ராஜ மரியாதை கிடைப்பதும் நிஜத்தின் வேதனையான பிரதிபலிப்பு... மாட் டேமனை  நெகடிவ் ரோலில் ஏற்க முடியாது போகலாம் என்பதை அறிந்தே டைரெக்டர் அதற்காக மெனக்கெட்டிருக்கிறார்..

சுலிவான், காஸ்டிகன் பாத்திரங்களில் ஏதாவது ஒற்றுமை பார்ப்பீர்களோ இல்லையோ எக்கச்சக்கமான வேற்றுமைகள் பார்ப்பீர்கள். அவற்றுள் சில பட்டியல் படுத்தப்பட்டுள்ளது-

சுலிவான்
* வரும் காட்சிகளில் அனேகம் நல்ல லைட்டிங் போட்டிருப்பார்கள்.
* சுலிவான், குயினைன் என்ற பெயர்கள் "உ" உச்சரிப்பில் தொடங்கி "ன்"ல் முடிகிறது.
* போனில் கதைக்கும் காட்சிகள் அதிகம். (சோம்பேறித்தனம்??)
* டைம் பாஸாக ஹீரோயினை சந்திக்கிறான்.
* நல்ல குடும்பம், தீய நடவடிக்கைகள்.
* லட்சியத்துக்காக போராடவில்லை. (வழக்கறிஞர் ஆதல்)

காஸ்டிகன்
* வரும் காட்சிகள் பெரும்பாலும் dim லைட்டிங்.
* காஸ்டிகன், காஸ்டெல்லோ எனும் பெயர்கள் "காஸ்ட்" என தொடங்குகின்றன.
* சண்டைக் காட்சிகள் அதிகம். (சுறுசுறுப்பு)
* மன உளைச்சலில் இருந்த சமயத்தில் ஹீரோயினை சந்திக்கிறான்.
* தீய குடும்பம், நல்ல நடவடிக்கைகள்.
* லட்சியத்துக்காகத் தானே இவ்வளவு போராட்டமும். (ஸ்டேட் பொலீஸ் ஆதல்)

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 18
இசை = 17
கதை+திரைக்கதை = 18
கலை+ஒளிப்பதிவு = 16
இயக்கம் = 18

மொத்தம் = 87% சூப்பர்

7 comments:

  1. அருமையான விமர்சனம் படம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். பார்க்கிறேன்! நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு நன்றி எஸ்.கே

    ReplyDelete
  3. கஜாகரன்October 4, 2010 at 8:37 AM

    ஒவ்வொரு பந்திக்கும் போடும் பட சீன்கள் பிரமாதம்! nice work altogether!

    ReplyDelete
  4. கருத்துக்களுக்கு நன்றி கஜாகரன்!!

    ReplyDelete
  5. உங்களது பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். நீங்கள் கதை சொல்லும விதம் நன்றாக உள்ளது!

    ReplyDelete
  6. உங்கள் பதிவு என் லிஸ்டில் ஏன் அப்டேட் ஆகா மாட்டேங்குது...செக் பண்றேன்...

    போன பதிவிலயே சொன்ன மாதிரி நான் scorseseன் பெரிய ரசிகன் ஆனது இந்தப் படத்திலிருந்துதான்.என்ன படம்..என்ன நடிப்பு....நீங்க எழுதியிருப்பது மறுபடியும் பார்க்கத் தூண்டுது...

    ReplyDelete
  7. @ ந.கலைஞன் - தொடர்ந்தும் விசிட் பண்ணுவதற்கு நன்றி !!

    @கொழந்த - இந்தப்படம் இதோட ஒரிஜினலான infenal affairs ஐ விட நல்லா வரக் காரணமே ஸ்கோர்சீஸின் இயக்கத்திறமைதானே.. அதான் படம் பார்த்த எல்லாருக்குமே ஸ்கோர்சீஸை டக்கென்று பிடித்துக் கொண்டு விட்டது!!

    ReplyDelete

Related Posts with Thumbnails